Thursday, November 3

9:59 AM
46பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.  பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. 

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.  

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள் 

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ   அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...!

* உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய் என்று. 

* சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி  வைத்துவிடுவாள். 

* அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம். 

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும். 

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள். 

=> இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய்விடுகிறாள்...!!
  
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும் 

ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில்  பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை  ஏற்படுத்திவிடுகிறது. 

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாக போய் சேரும். 

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. 

சூப்பர் பவர் 

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்கொண்டே இருப்பார்கள்...!  கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !! 

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள். 

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை  பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள். 

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.  

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட்  பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.) 

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!

படங்கள்- நன்றி கூகுள் 
Tweet

46 comments:

 1. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...!/

  பயனுள்ள புதிர் பகிர்வு! பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. பெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  ReplyDelete
 3. தங்களுக்கு பதிவர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா? பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். மேலும் விவரங்களுக்கு thambaramanbu@gmail.com
  thagavalmalar.blogspot,com

  ReplyDelete
 4. கிரேட்....! பெர்பக்ட் போஸ்ட்!!!!! :-))))

  ReplyDelete
 5. அன்பு சகோதரி..
  சில கேள்விகளும் வேறு அர்த்தங்களும்
  என நீங்கள் சொன்னவை நகையூட்டுவதாக இருந்தாலும்..
  நிதர்சனமான உண்மை..

  அதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்
  உண்மையான உண்மைகள்..

  ReplyDelete
 6. நீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.அதற்கு மேல் என்ன சொல்ல!

  ReplyDelete
 7. //ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும்/

  தவறு...
  இது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...
  எப்படி பெண் மனது ஆணுக்கு புரியாதோ, அதே போல் ஆண் மனது பெண்ணுக்கு புரியாது...
  மனதை புரிந்து கொள்வது ஆணோ பெண்ணோ கஷ்டம் தான்

  ReplyDelete
 8. @@ இராஜராஜேஸ்வரி...

  நன்றி தோழி.

  ReplyDelete
 9. கௌசல்யா, உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.
  பெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.

  ReplyDelete
 10. @@ Robin said...

  //பெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

  இருவரிடமும் இருக்கிறது, பெண்களிடம் கொஞ்சம் அதிகம்.ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.

  இதை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதணும். நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 11. @@ குடந்தை அன்புமணி said...

  //தங்களுக்கு பதிவர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா? பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். //

  இதுவரை தெரியாது. பிறகு ஒரு சமயம் இது சம்பந்தமாக பேசுகிறேன்.

  வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. @@ dheva said...

  //கிரேட்....! பெர்பக்ட் போஸ்ட்!!!!//

  இப்படி சொல்லியே இன்னும் அதிக போஸ்ட் எழுத வச்சிடுவீங்க :))

  நன்றி தேவா

  ReplyDelete
 13. @@ மகேந்திரன் said...

  //அதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்
  உண்மையான உண்மைகள்..//

  உண்மை உண்மை அன்றி வேறில்லை !! :))

  நன்றி மகேந்திரன்

  ReplyDelete
 14. @@ சென்னை பித்தன் said...

  //நீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.//

  ஒத்துகொண்டுதானே ஆகவேண்டும். :)

  நன்றிகள்

  ReplyDelete
 15. சூப்பருங்க....
  வாழ்த்துக்கள்...
  #ஏனுங்க... நாங்க போர்வை போத்திட்டு வந்து படிக்கலாம்னு பாத்தா, ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு... அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 16. ஓ! கமண்ட் மாடுரேசன் வேறையா?
  #சாரிங்க... கமண்ட் மாடுரேசன் வச்சு இருக்கவுங்க பதிவுல, கமண்ட் போடுறது கம்மி... அதேன்... ஹி ஹி ஹி...

  ReplyDelete
 17. @@ suryajeeva said...

  //தவறு...
  இது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...//

  புரிந்தும் ஏமாறுவது பெண்ணின் பலவீனம்.

  கண்ணை மூடிக்கொண்டு அதிக நம்பிக்கை வைப்பது ஒரு சில பெண்களின் குணம். அந்த நேரம் அறிவு அங்கே வேலை செய்வதில்லை மனது சொல்வதை கேட்டு விடுகிறாள்.

  கருதிட்டமைக்கு நன்றி சூர்யா

  ReplyDelete
 18. @@ rajpraba said...

  //பெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.//

  ஒரு சில பெண்கள் விதிவிலக்கு. உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றிங்க.

  ReplyDelete
 19. @@ வெளங்காதவன் said...

  //ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு...//

  அவங்க அவங்க சிஸ்டம்ல மட்டும்தாங்க தெரியும். வேற யாருக்கும் தெரியாதுங்க. :))

  //ஓ! கமண்ட் மாடுரேசன் வேறையா?//

  என்னங்க பண்றது ? வச்சிட்டேன். :) இருந்தும் படிச்சதுக்கும் கமெண்ட் போட்டதுக்கும் மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 20. பெண்கள் மனதைப் பற்றி பல விஷயங்களை புரிந்துகொள்ள வைத்துள்ளீர்கள் ...நன்றி!

  ReplyDelete
 21. என்ன ஒரு அழகான அலசல்! இன்னும் விரிவாக இதை எழுதி புத்தகமே போடலாம் நீங்கள். அவ்வளவு நன்றாக இருக்கிறது...

  ReplyDelete
 22. சூப்பர். பல இடங்களில் சிரித்துவிட்டேன். கௌசல்யா , ஆர் யூ ஃபார் ரியல்!!!
  அப்படியெ எமார் ஐ செய்துட்டீங்க பெண் மனசை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. Interesting Post.Frankly U analyzed the Topic.Luv it.

  ReplyDelete
 24. பெண் என்னும் புதிரைப்பற்றி ஓரளவுக்குப் புரிய வைத்துள்ளது வெகு அருமையாக உள்ளது.

  பெரும்பாலான பெண்களின் குணங்களைப்பற்றி, ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் சொல்வது போலவே ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு தான்.

  //எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். //

  ஆமாம். மிகவும் சரியான கூற்று தான்.

  மிகவும் அருமையான பதிவு தந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  ReplyDelete
 25. Good One...... :-)

  maxmail.blogspot.com

  ReplyDelete
 26. // பெண் ஒரு புதிர் !!//
  இத்துடன்" புரியாத" எனும் பதத்தையும் சேர்த்திருக்கலாம்.
  இப்புதிரை அவிழ்ப்பது எனும் சுவாரசியதுடன் எங்கள் காலமோடுகிறது.

  ReplyDelete
 27. இதை என்னிக்கோ படிச்சிருக்கணுமோ? ஹ்ம்ம்ம்.

  //பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும்.
  ரைட்டு

  //ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
  ஆ! அதெப்படி?

  ReplyDelete
 28. @@ koodal bala...

  நன்றி பாலா.  @@ கணேஷ்...

  நன்றிங்க.  @@ வல்லிசிம்ஹன்...

  மிக்க நன்றி.
  @@ MyKitchen Flavors-BonAppetit!...

  thank u mam.  @@ வை.கோபாலகிருஷ்ணன்...

  நன்றிகள்.
  @@ A.T.Mayuran...

  வருகைக்கு நன்றிகள்  @@ யோகன் பாரிஸ்(Johan-Paris)...

  நன்றிகள் :)
  @@ angelin...

  நன்றி தோழி.

  ReplyDelete
 29. @@ அப்பாதுரை said...

  //இதை என்னிக்கோ படிச்சிருக்கணுமோ? ஹ்ம்ம்ம்.//

  ஏன் ரொம்ப அவஸ்தை பட்டுடீங்களா ?! :))

  //ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
  ஆ! அதெப்படி?//

  அப்படியாவது ஆண்கள் சிந்திக்கட்டுமே என்றுதான் :))

  ReplyDelete
 30. இதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்............ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 31. எனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் ..)))

  //முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள்///

  ஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))

  ReplyDelete
 32. @@ தெய்வசுகந்தி said...

  //இதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்//

  படிக்க வச்சுடுங்க தோழி...! :))

  நன்றி

  ReplyDelete
 33. @@ கணேஷ் said...

  //எனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் //

  அக்காவ வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருபேனு தோணுது :))

  //ஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))//

  எதார்த்தமா அப்படினா ?!! :)

  அப்புறம் இதெல்லாம் புரியனும்னா நீ இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி...!! :))

  ReplyDelete
 34. பல இடங்களில் சரியாக சொல்லி இருக்கீங்க, சில இடங்களில் ச்றுக்கியிருக்கீங்க, ஆனாலும் நல்ல பதிவு!

  ஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தான்! இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை!

  ReplyDelete
 35. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 36. @@ நம்பிக்கைபாண்டியன் said..

  //சில இடங்களில் ச்றுக்கியிருக்கீங்க, !//

  சறுக்கல் இயல்புதானே ? :)

  //ஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தான்! இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை!//

  100% புரிந்து கொள்ள முடியும் என்றால் அடுத்து அவங்க மனநிலை எப்படி மாறும் என்பதும் புரிந்துவிடுமே ! :)

  கருதிட்டமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 37. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...!/

  பயனுள்ள புதிர் பகிர்வு! பாராட்டுக்கள்.//
  நானும் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 38. பெண்ணைப் புதிர் என்று சொல்வதற்குரிய அத்தனை ஆதாரங்களையும் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள். அருமையான பதிவு. உங்கள் அனுபவங்களும் பல இதில் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கின்றது இல்லையா? ஒவ்வொரு பெண்ணும் இவ் ஆக்கத்தினுள் அடங்கி இருக்கின்றார்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 39. பெண்களின் குண நலன்கள்-பெரியதொரு விளக்கம் நன்று.

  ReplyDelete
 40. அன்பின் கௌசல்யா

  அருமையான இடுகை - பெண்களின் மனதினை ஆராய்ந்து அவர்களின் குண நலன்களை விளக்கு ஒரு மனோ தத்துவ இடுகை. பெரும்பாலும் பெண்கள் இப்படிப்பட்டவர்கள் தான். நல்வாழ்த்துகள் கௌசல்யா = நட்புடன் சீனா

  ReplyDelete
 41. அருமையான தொகுப்பு, பகிர்வு..

  ReplyDelete
 42. என்னதான் நீங்க சொன்னாலும் நாங்க புரிஞ்சுக்கவே மாட்டோம், ஏன்னா புரிஞ்சுகிட்டா அப்புறம் இன்னொரு புரியாத விஷயம் சொல்லுவீங்க. ஸோ எப்பவும் அப்பீட்டு.

  ReplyDelete
 43. * பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)

  நன்றி தோழி

  ReplyDelete
 44. பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ?
  அந்த பெண்ணை பற்றி அறிந்து ஒரு உண்மையா ஆண்மகன் சுலபமாக கண்டு அறிந்து கொள்ள முடியும்......

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...