கடையில் இருந்து வந்த ஒரு பார்சலில் சுற்றி வந்த துண்டு பேப்பரில் ஒரு கவிதை இருந்தது. பெண்களிடம் இயல்பாய் இருக்கும் ஒரு குணம் தான் இந்த மாதிரி துண்டு காகிதத்தை கூட உடனே தூக்கி எறிந்து விடாமல் படித்து பார்ப்பது. நான் மட்டும் என்ன விதி விலக்கா ?
குப்பையில் தான் சில நேரம் மாணிக்கம் கிடைக்கும், ஆனால் எனக்கு கிடைத்ததோ மனதை பிசையும் ஒரு நிஜம்! ஆனால் நிஜத்தை ஜீரணிக்கத்தான் முடியவில்லை....! ஒரு இனமே நாளை புத்தகத்தில் மட்டும் படிக்ககூடிய வரலாறாய் மாறிவிடுமோ என்ற அச்சத்தை இந்த சில வரிகள் ஏற்படுத்திவிட்டதை என்னால் மறுக்கவும் முடியவில்லை, மறைக்கவும் முடியவில்லை.... அதனால் தான் உங்களிடமும் பகிர்கிறேன்.
" கவலை மட்டும் பட்டுகொண்டே
கல்லாய் சமைந்து விட்டோம்...?! "
வேதத்தில் ஒரு வரி உண்டு " கவலைபடுகிரதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் ? " . கவலை மட்டுமே படுவதால் ஒரு வழியும் பிறக்க போவதில்லை, அதனால் கவலை படாதீர்கள் என்பதை புரிய வைப்பதற்காக எழுத பட்ட ஒரு வசனம். கவலை படுவதால் தன் சரீர அளவோடு ஒரு அளவை கூட்ட முடியும் என்றால் கவலை படுங்கள், ஆனால் அப்படி முடியாது அல்லவா... அப்புறம் ஏன் கவலை படுகிறீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.
உண்மையில் நாம் என்ன செய்கிறோம் இப்படி நடக்கிறதே என்று கவலை பட்டு கொள்வதின் மூலமே நாம் மன நிறைவு பெற்றுகொள்கிறோம். அதனால் எந்த கொடுமைகளும், சித்திரவதைகளும் நின்று விட போவது இல்லை. இது நமக்கு நன்றாக தெரிந்து இருந்தும் செயல் அற்று இருக்கிறோம். நமக்கு நாமே 'எல்லாம் காலத்தின் கோலம்' என்று சமாதானம் வேறு சொல்லிகொள்கிறோம். கடைசியில் அந்த காலம் போடக்கூடிய இறுதி கோலம் தான் இந்த கவிதையின் இறுதி வரிகள்......!?
எனக்கு நிஜம் உணர்த்திய அந்த வரிகள் உங்களின் பார்வைக்காக....
" என் தாத்தா
பூமியைத் தோண்டியபோது
நிறையத் தங்கம் கிடைத்ததாம்....
என் அப்பா தோண்டியபோது
நிறைய தண்ணீர் கிடைத்ததாம்....
நான் தோண்டியபோது
நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தன....
என் மகன் தோண்டும்போது
அவனுக்கு
நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்......!?"
நன்றி- (குமுதம்) சிநேகிதி