கள்ளகாதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளகாதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 10

கள்ளக்காதல் தவறில்லை இறுதி பாகம்

ழுத தூண்டிய பெண்கள்:

நான் இந்த தலைப்பை தேர்ந்துஎடுக்க இரண்டு பெண்கள் தான் காரணம், அவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் இதை எழுதவே தொடங்கினேன்.  அவர்கள் இருவரும் எனது சிறிய அளவு COUNSELLING மூலமாக தங்களது வாழ்வை திரும்ப மீட்டெடுத்தவர்கள்.  இப்போது இடையில் வந்த புது உறவை மறந்து சந்தோசமாக இருக்கிறார்கள். 

கவுன்செலிங்   :   

ஒருவேளை மனதளவில் சிறிது தடுமாற்றம் இருந்தாலோ ,  அல்லது கவுன்செல்லிங் தேவைப்படும் நிலையில் என் தோழிகள் இருந்தால் தயங்காமல் எனது இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.   உங்களுக்காக காத்திருக்கிறேன்.   மேலும் உங்களது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.  

வெளிவரமுடியாத ஒரு நிலை: 

சிலரின் விசயத்தில் இந்த உறவில் இருந்து வெளியில் வர முடியாத ஒரு நிலை ஏற்படும்
எப்போது என்றால் அந்த ஆண் அல்லது பெண் ஒருவர்மீது ஒருவர் முறையான கணவன் மனைவி மாதிரி பாசமாகவும், அன்பாகவும், விட்டு கொடுத்து வாழ்ந்தும்,  ஒருவர் மற்றவருக்காக உயிரை விட கூட தயாராக இருப்பார்கள்.   இவர்கள் விசயத்தில் மாற்றம் என்பது உடனே வராது ஆனால் இரண்டு  குடும்பங்களின் சூழ்நிலைகாகவும், குழந்தைகளுக்காகவும்,  மனசாட்சிகாகவும் விடுபட நினைத்தால் கண்டிப்பாக முடியும் .

அதே நேரம் மனம், உடல் இரண்டும் சேர்ந்து மாறவேண்டும்.  இதற்கும் ஒரு நல்ல தீர்வை என்னால் கொடுக்கமுடியும்.  ஆனால் இதை விளக்கமாக பதிவில் எழுத இயலாது மெயில் மூலமாக கேட்பவர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன்.

பெண் ஒரு மாபெரும் சக்தி:

பெண் ஒரு சக்தி, அந்த சக்திஐ ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கு பயன்படுதிவிடகூடாது.  இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை.  பலரும் ஒத்து கொண்ட உண்மை.  பெண்களின் திறமைக்கும், தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் எவ்வளவோ சாதிக்கமுடியும்.  

அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேண்டாத உறவில் ஈடுபட்டு காலம் முழுவதும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்வதை விட,  கிடைத்த வாழ்க்கையை மேன்மை படுத்தி நம்மை மற்றவர்கள் பெருமையாக பார்க்கும்படி, புகழும்படி வாழ்ந்து முடிக்க வேண்டும்.   இந்த உறவை பாவம் என்று சொல்லும் அதே நேரத்தில்  இந்த பாவம் நம் பிள்ளைகளை போய் சேரும் என்பதை தாய்மை உள்ளம் படைத்த நாம் மறக்ககூடாது.


எச்சரிக்கை :

மேலும் சிலர் சொல்லலாம் , " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, என் சந்தோசம் தான் முக்கியம் என்று " ,  அந்த மாதிரி ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது,  ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் என்னால் கொடுக்கமுடியும்.  

நவீன தொழில் நுட்பத்தில் வந்த கேமரா போன்,  இப்போது பெண்களை என்ன பாடுபடுத்தி கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்வதை விட மீடியாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும்.  இனி சிம்கார்ட் அளவிற்கு மைக்ரோ ரெகார்டிங் சிப் வரபோகிரதாம்.   


செல்போனில் பேசுவதை  கூட ரொம்ப யோசித்து பேசவேண்டிய காலநிலையில் இருக்கிறோம்.   எல்லோருமே நல்லவர்கள்தான் பணத்தேவை, மற்றும் இதர தேவைகள்  இல்லாதவரை.  உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியம் வெளியேறிவிடும்.  பிறகு பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் கதைதான்.    எதற்கு வம்பு உங்களை நீங்களே சந்தோஷ படுத்திக்கொள்ள  முடியும்,  அப்படி இருக்கும் போது மூன்றாம் நபர் எதற்கு?  

" பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை, இந்த உறவால் நான் திருப்தியாக இருக்கிறேன்" என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் கள்ளகாதல் தவறில்லை,  ஆனால் மற்றவர்களுக்கு?!




வியாழன், மார்ச் 25

கள்ளகாதல் தவறில்லை - 5

 ரகசிய சிநேகிதன்

தொடர்பு தவறாக இருந்தாலும் சில உறவுகளை  பார்த்தால் காதல் 
காவியங்கள் கூட  இவர்களிடம் தோற்றுவிடும்.   கவிதைகள் எழுதுவதும்,  PHONE   இல் மணிகணக்காக பேசுவதும், ஒருநாள் பார்க்கலைனாலும் பைத்தியம் பிடிக்கிற மாதிரியான   உணர்வுகள், நீ எனக்கு உயிர்  நீ இல்லனா எனக்கு வாழ்வே இல்லை 
என்பது மாதிரியான  விநோதங்களும் இருக்கத்தான் செய்கிறது.  

சொல்லப்போனால் முதல் காதலில் இருக்கும் தேடலும், அன்பும்,  possessiveness,       எல்லாம் அதைவிட கொஞ்சமும் 
குறையாமல் இந்த காதலிலும் சுவைமாறாமல்   இருக்கிறதா  சொல்கிறார்கள்.  

இந்த பெண்கள் தன் கணவன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பணிவிடையில் எந்த குறையும் வைப்பதில்லை.  அதே நேரம் தன் ரகசிய சிநேகிதனையும் கணவன் நிலையில் வைத்து கவனிக்க தவறுவது இல்லை.   ஒரு லாஜிக்  என்னனா வயது குறைந்த ஆணுடன் பழகும் பெண் இவர்களுக்குள் ஈகோ பிரச்னை வருவது இல்லை.  

அந்த பெண்ணின் சொல்லுக்கு அந்த ஆண் கட்டுபட்டே போகிறான், அவளுக்காக எதை செய்யவும் தயாராகவே இருக்கிறான்.   

ஒரு கட்டத்தில் தங்களது தவறை உணர்ந்தவர்கள்   அதில் இருந்து  விடுபட நினைத்துதான்  குற்ற உணர்ச்சியால் கோவில்,சாமியார் என்றும் 
படித்தவர்கள்  counselling  என்றும்   போக தொடங்குகிரார்கள்.  சிலர் விடுபட நினைத்தாலும் எதிர் பாலினம் விடுவதில்லை.  முதலில் அன்பாக முடியாது என்பார்கள்,  போக போக செத்துவிடுவேன் என்று சென்சிடிவா சொல்லி கடைசியில் கணவன் அல்லது மனைவிடம் 
சொல்லிவிடுவேன் என்று மிரட்டி அடிபணிய வைப்பார்கள்.  இப்படி இந்த உறவில் ஒரு முறை விழுந்தவர்கள் 
மறுபடி எழ முடியாமல் போய்விடுகிறது. 
Counselling 
    
கடைசியில் மனநல மருத்துவரிடமும்,  தன் நெருங்கிய நண்பர்களிடமும் 
ஆலோசனை கேட்கும் அளவிற்கு போய்விடுகிறது.  நானும்  எனக்கு
தெரிந்த இரண்டு பெண்களுக்கு  COUNSELLING  பண்ணி இருக்கிறேன்.   அவர்களின் நிலைதான் என்னை இந்த TOPIC  ஐ எழுத தூண்டியது.
ஒருவர் college  professor ,  அடுத்தவர் ஒரு AUDITOR  ரின் மனைவி   
இருவரின் விசயமும் ஓரளவிற்கு ஒன்றுதான் தங்களது கணவரின் பாராமுகதிற்கு தண்டனை தருவதாக நினைத்து ஒருவர் தன் வீட்டு கார் டிரைவருடனும் அடுத்தவர் பக்கத்துக்கு வீட்டு கல்லுரி மாணவரிடமும் இணைந்து விட்டவர்கள்.   இதில் professor க்கு கல்லூரி போகும் வயதில் இரண்டு பிள்ளைகள்.    பிள்ளைகள் இருவரும் வெளிஊரில் HOSTEL இல்,  கணவர் சொந்த தொழில் பார்ப்பதால் பாதி நாள் வெளிஊர்.   இருக்கும்போதும் மனைவியிடம்  பாராமுகம்.  இரண்டு குடும்பங்களிலும் பணத்திற்கு குறைவு இல்லை,  இருந்தும் தனிமை, வயதில் குறைந்த நபரிடம் மனதை பறிகொடுத்துவிட்டனர் .   

இந்த உறவு கிட்டத்தட்ட 5  வருடங்களுக்கு மேல் தொடர்ந்திருக்கிறது.   இப்போது மகளுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் தன் மனசாட்சி உறுத்த என்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்கள்.   "இதுவரை செய்தது பாவம், என்ன செய்வது, இதில் இருந்து எப்படி 
வெளியில் வருவது, என்னால் அவனை மறக்கவும் முடியாதே,  அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன் "  என்று கதறி அழும் 40 வயது பெண்மணி ஐ  பார்த்து எனக்கு கோபம் வரவில்லை,  மாறாக பரிதாபம் தான் வந்தது.  

இந்த அன்பை என்னவென்று சொல்வது.    இந்த அன்பிற்கு என்ன பெயர்? எனக்கு புரியவில்லை.    வெளியில் இருந்து பார்த்துவிட்டு இவர்களை குறை சொல்ல மட்டும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

கணவனிடம் வைக்கவேண்டிய அன்பு ஏன் இப்படி திசை மாறியது?  குறை யாரிடம் ?   ஆணிடமா, பெண்ணிடமா அல்லது இந்த சமூகத்திடமா?   வெளிநாட்டில் பரவாஇல்லை,  பிடிக்கவில்லை என்றால் DIVORCE ,  மறுபடி வேற கல்யாணம்,  அதுவும் பிடிக்கவில்லை என்றால் மறுபடி DIVORCE வேற கல்யாணம் இப்படி சமூககட்டுப்பாடு ஏதும் இல்லாமல் 
மனதிற்கு பிடித்தமாதிரி வாழ்கிறார்கள்.  

ஆனால் நம் நிலைமை பல பொருந்த திருமணங்கள்,  மனங்களை பார்க்காமல் வசதி வாய்ப்பு, கௌரவத்திற்காக நடக்கும் திருமணங்கள்.  தவிர    இப்ப நடக்கும் காதல் திருமணங்களின் ஆயுளே  அதிகபட்சம் ஒரு வருடம் தான்!    கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்னை,  விட்டு கொடுத்து போகாத மனப்பான்மை,  பொருளாதார நிலைமை,  பெண்களிடம்  பொறுமை இல்லாத தன்மை,  ஆண்களின் அலட்சியம் இந்த மாதிரி காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

கூட்டு குடும்பம் என்ற ஒன்றே இப்போது இல்லை,  இந்த குடும்பங்களில் பெரியவர்கள் எப்போதும் உடன் இருப்பதால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.   ஆனால் இப்போதுதான் திருமணம் முடிந்ததும் கல்யாண மண்டபத்தில் இருந்தே நேராக தனிக்குடித்தனம் போய்விடுகிறார்களே!  

சூழ்நிலை கைதி  

முக்கியமா தவறு செய்ய சூழ்நிலை அமையாதவரை  எல்லோருமே யோக்கியர்கள் தான்.  சூழ்நிலை அமைந்தும் தவறு செய்யாதவன் ஒன்று கடவுளுக்கு பயந்தவர்களாக இருக்கணும் அல்லது கோழையாக இருக்கணும்.  இதுதான் இன்றைய நிலைமை.  ஒருவகையில் நாம் எல்லோருமே சூழ்நிலை கைதிகள்தான்.   

மாட்டிகொள்ளாதவரை கணவன் நல்ல கணவன்தான்,   மனைவி நல்ல மனைவிதான்.    இதுதான் நிதர்சனமான உண்மை. 

மறுபடி தலைப்புக்கு வருகிறேன்.   இந்த உறவை தவறாக பார்க்காதீர்கள்.
அவர்கள் மேல் பரிதாபபடுங்கள்,  ஒருவகையில் அவர்கள் மனநோயின் பிடியில் முற்றிய நிலையில் இருக்கிறார்கள்.  நோயை குணபடுத்த பார்க்கணுமே ஒழிய மேலும் குத்தி கிழிக்க பார்க்ககூடாது,  அவர்கள் மன்னிக்கபட வேண்டியவர்கள்,  மன்னிப்பும் ஒருவிதத்தில் அவர்களுக்கு தண்டனைதான்.   அந்த மன்னிப்பு அவர்களை மறுபடி தவறு செய்ய தூண்டாது.    இதை  என்னுடைய  வேண்டுகோளாக எடுத்துகொள்ளுங்கள்.
                                  
                               கடைசி பகுதி அடுத்த பதிவில்!    காத்திருங்கள் !!  
      

       
         

திங்கள், மார்ச் 22

கள்ளக்காதல் தவறில்லை - 4

எதிர் பாலினம்:


திருமணம் தாண்டிய உறவுகளின் ஆரம்ப காலம் நட்பாக இருக்கும். ஆனால் நட்பு மட்டும் போதும் என்ற அளவில் இருந்தாலும் எதிர்பாலினத்தின் தேவை உடலை தேடுவதாக இருக்கும்போது அங்கே  உறவு தவறாக போய்விடுகிறது.  இதற்கு மறுத்தால் தன்னுடன் பேசுவதை எங்கே நிறுத்தி விடுவானோ என்ற ஐயத்தால் 'மண் தின்கிற உடம்பு தானே அவன் தின்றால் என்ன' என்று தனக்குள் சமாதானம் செய்து கொள்கிறாள். பின்னர் ஒரு கட்டத்தில் சமூகத்திற்கும், கணவனுக்கும் பயந்து விட்டுவிட நினைத்தாலும் வெளிவர முடியாமல் தவித்து பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறாள். இந்த  கட்டத்தில் தான் விஷயம் வெளிவரத்  தொடங்கும்,  முடிவு அவமானம், அசிங்கம், கொலை, தற்கொலை என்று முடிகிறது.

ஒரு பெண்ணால் தான் நினைப்பது எதையும் சாதிக்கமுடியும். அவளுக்கு வேண்டியது எல்லாம் சின்ன அங்கீகாரம், கொஞ்சம் அன்பு, கணவனின் ஆதரவு மட்டும்தான்.  ஆனால் இந்த ஆண்களின்  சமுதாயம் இதைப் பற்றி எல்லாம் எங்கே யோசிக்கிறது.  அதற்கு வேண்டியது 5 நிமிட சந்தோசம் கொடுக்க மனைவி போதும், ஆனால் அவளது விருப்பம் அத்துடன் முடியாது என்பதை ஆண்கள் உணருவதே இல்லை.  அதனால் தான் அவளுக்கு  ஒரு வடிகால் தேவைப்படுகிறது, தவறுகிறாள்.

இலைமறை காய்மறையாக:


இத்தகைய  தவறான உறவுகள்  பல குடும்பங்களில் நடந்துக்  கொண்டு தான் இருக்கின்றன.  ஆனால் வெளியில் தெரிவது இல்லை.  கிராமங்களில் யார் யாருடன் பேசுகிறார்கள் என்று தெளிவாக சொல்லிவிடலாம் என்பதால் அங்கே  நடப்பவை  குறுகிய காலத்திற்குள் தெரிந்துவிடும்.   ஆனால் நகரத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். 

தற்போது கூட்டுக்குடும்ப முறைகள் இல்லாததால் பெரியவர்கள் வழி நடத்துதல் இல்லாமல் தவறுகள் சுலபமாக நடக்கின்றன.  

இனி வருங்காலத்தில் இது அதிகரிக்குமே தவிர குறையாது.   
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருப்பது ஊருக்கே தெரியும்,  ஆனால் அந்த வீட்டிலும் ஒரு ரகசிய உறவு இருக்கத்தான் செய்கிறது.  இது உண்மையில் சத்தியமானதும் அதிர்ச்சியான விஷயம்தான்.   இருவருக்கும் இடையில் எந்த நிமிடம் 3  வது ஆள் வந்தான்,  ஏன், எப்படி என்று எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை...!                          

தொடரும்...



ஞாயிறு, மார்ச் 21

கள்ளகாதல் தவறில்லை - 3

  பெண்களின் இன்றைய நிலை:

இப்போது பெண்கள் குடும்பத்தில் சந்தோசமாக  வாழ்கிறார்கள் என்று தோணவில்லை. ஏதோ சந்தோசமாக  இருக்கிறமாதிரி நடிச்சிட்டு இருக்கிறாங்க என்றுதான் சொல்வேன்.  பலரின்  மனதிலும் ஏதோ வெறுமை இருக்கத்தான் செய்கிறது.  நான் சந்தித்த, பழகிய,    நெருங்கிய 
தோழிகள் என்று பலரிடம்  இருந்து தொகுத்த விசயங்களைத்தான் இங்கு எழுதுகிறேன்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் அதில் நிறைவாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் நிஜம்.    கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் தான் சுய விருப்பங்களை ஓரம் கட்டி விட்டு மற்றவர்களுக்காக வாழவேண்டிய நிர்பந்தம்.   காலம் செல்ல செல்ல அவர்களுக்கு ஏற்றார் போல் முரண்பாடாக இருந்தாலும் தனது சிந்தனையையும்  மாற்றிக் கொண்டு adjust செய்து கொள்கிறாள். பிறகு குழந்தை பிறந்ததும் அதற்கு ஏற்ப  மாறிவிடுகிறாள்.  இப்படி முதல் 10 , 12  வருடத்திற்கு தான் சுயத்தை தொலைத்துவிட்டு  அல்லது மறந்துவிட்டு குடும்பத்திற்காக பாடுபடுகிறாள்.     

இவளுடைய அன்பையும், ஆதரவையும் பிறர் எதிர்பார்க்கும் அதே நேரம் இவளும் சக மனுசிதானே என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள்.
முக்கியமாக கணவனின் புறகணிப்புதான் மிகவும் பரிதாபம்.

இந்த மாதிரி நிலையில்தான் அன்னியர் நுழையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது கணவனின் நண்பராகவோ, பக்கத்துக்கு வீட்டினராகவோ, கூட வேலை பார்பவராகவும்,  பஸ், ரயிலில் சந்திப்பவராகவும் 
எப்படியாவது இருக்கலாம்.  வசதியான  வீட்டு பெண்களின் நிலை பாவம்,  காரணம் கணவர் பணம், பணம் என்று தொழிலின் பின் ஓடுபவராக வீட்டில்    தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்பதையும் மறக்கும் நிலைக்கே போய்விடுகிறார்.  

இந்த மாதிரி பெண்கள் சில சின்ன சின்ன விசயங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மனசுக்காக தவிக்கிறார்கள்.  இவளுக்கு தேவை 
எல்லாம் தன்னையும் ஒரு ஜீவனாக மதித்து பேசக்கூடிய 
ஒரு துணையைத்தான்.  மனபாரத்தை கொட்டியதும்,  பதிலுக்கு
அன்பும் ஆதரவும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்,  பலநாள் 
இழந்த இன்பம் கிடைத்ததாக எண்ணி மனம்   உற்சாகமாக மாறிவிடுகிறது.   விளைவு  தன்  மன இறுக்கம் குறைய  குறைய தன்னை பற்றி 
யோசிக்கத் தொடங்குகிறாள். பருவ வயதில் தனக்குள் வந்து மறைந்து போன 
காதல் உணர்வுகள் மறுபடி உணர்வு பெற்றதாக ஆனந்தப்
 படுகிறாள்.    தனக்குள் மாற்றத்தை கொண்டுவந்த ஆடவனுக்கு 
தன்னையே கொடுக்க முன்வந்துவிடுகிறாள். இது ஒரு வகை என்றால்,

சிலர் பேசுவதுடன்  நிறுத்திவிடுவார்கள்.  ஆனால் எதிர் பாலின் தேடல் வேறுவிதமாக இருக்கும்.

   

வெள்ளி, மார்ச் 19

கள்ளகாதல் தவறில்லை - 2

          இந்த தலைப்பு இப்ப ரொம்ப முக்கியமானு நினைக்ககூடாது.    தொடர்ந்து படித்து பாருங்க  இந்த கால சூழ்நிலைக்கு இதை விவாதிப்பது சரிதான் என்று தோன்றும்.

அந்த காலம் தொட்டே:

            மாற்றான் மனையின் மீது மோஹம் என்பது எந்த காலத்தில் தான் இல்லை.  ஏன் கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை இந்திரன் மீது மோகம் கொள்ளவில்லையா?  அதையும்  எழுத்தாளர்களும் ,  கவிஞர்களும்  ஆளுக்கு ஆள் கற்பனை செய்து இன்றுவரை எழுதி கொண்டிருக்க வில்லையா ?  தவறு அகலிகை மீது மட்டும் இல்லை, அது ஒரு பொருந்தா திருமணம்.       சிறு வயது முதல் இந்திரனிடம் பழகி வந்தவள்  ,  பொருந்தா மணத்தால்  அவளது மனம் அவனை நாடியதில் தவறு என்ன?   பொருந்தா மணம் இப்படிப்பட்ட உறவுகளில் கொண்டுவந்து விட்டு விடும்.    

பத்தினி என்றால் என்ன?

காவியகதை  இப்ப  நமக்கு தேவையில்லை , நடைமுறைக்கு வருகிறேன்.  இந்த மாதிரி விசயத்தில்  ஏதோ பெண்ணே காரணம் என்கிறமாதிரி அந்த ஆணை பற்றியே விட்டுவிடுகிறார்கள் .  பெண்ணை பற்றி மட்டும் 2 குழந்தைக்கு  அம்மா ,  வயது 40 க்கு மேல  இந்த வயதில இப்படி 
இருக்கிறாளே என்று கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம் , இதில் 
வருத்தம் என்னவென்றால்  அந்த பெண்ணை அதிகமா  திட்டுவது  
பெண்கள்தான், அந்த பெண் மட்டும் தான் மோசம் என்ற மாதிரியும்  நாம எல்லோரும் பத்தினி பரம்பரை என்கிறமாதிரி பேசுவார்கள்.      

 என்னை கேட்டால் பத்தினி என்ற வார்த்தை இப்ப உள்ள பெண்களுக்கு
பொருந்துமா என்பதே சந்தேகம்தான்.   அடுத்த ஆண்களை ஏறிட்டு பார்க்காத,  பேசாத ,  வேற ஆண்ணையே மனதாலும் நினைக்காத பெண்கள் யாரும் இப்ப இருப்பார்களா  என்று எனக்கு தோணவில்லை.    காரணம் இப்ப நாம இருக்கிற சூழ்நிலை.   பெண்கள் வெளியில் வேலைக்கு போகிறார்கள், பலருடன் பேசியே ஆகவேண்டிய சூழல்   ,  இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி  என்னும் சாதனம்.  நாம் வாங்கவில்லை என்றாலும் அரசாங்கமே பார்த்து சந்தோசமா வாழ்க்கைய அனுபவியுங்க என்று கூப்பிட்டு கொடுக்கிறது.   அதை பார்க்கிற பாட்டி கூட  என்னமா நல்லா இருக்கிறான், எப்படி பேசறான் என்று நினைக்கமலா இருப்பாங்க?    என் பாட்டியே அந்த காலத்தில இருந்த பாகவதர்போல வருமானு சிலாகித்து சொல்றத கேட்டிருக்கிறேன்.

 இலக்கியம் தான் சொல்லி இருக்கே,  அடுத்த ஆணை மனதிற்குள் ஒரு கணம் நினைத்தாலே போதும், பெண் அவனுடன் மனத்தால் வாழ்ந்து விடுகிறாள் என்று.   பின் எப்படி பத்தினி என்று சொல்லமுடியும்.   வேண்டும் என்றால் பத்தினி என்ற வார்த்தைக்கு வேறு ஏதாவது நல்ல அர்த்தம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள், நானும் எனது எண்ணத்தை மாற்றி கொள்கிறேன்.
                                                                          தொடரும்..........

செவ்வாய், மார்ச் 16

கள்ளகாதல் தவறில்லை

தலைப்பை படித்ததும் என்ன ஒரு குடும்பப்பெண் இதை தவறில்லை என்று சொல்றாளே என்ற  சந்தேகம் எழுகிறதா? உங்கள் சந்தேகம் நியாயம் தான். ஆனால் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது என்னவென்றால், கள்ளகாதல் என்ற வார்த்தைதான் தவறு என்கின்றேன்.

ஆமாம் அது என்ன காதலில் நல்ல காதல், கள்ள காதல்!?. கல்யாணத்திற்கு முன் வரும் காதல் நல்ல காதல் என்றால் அதற்கு ஏன் அத்தனை எதிர்ப்பு, கொலைவெறி. நல்ல காதல்தானே என்று சேர்த்து வைக்கவேண்டியது தானே. நம் சமூகத்தை பொறுத்தவரை காதலே தவறு என்பதுதான் எழுதப்படாத சட்டம் அப்படியிருக்க கல்யாணத்திற்கு பின் வரும் காதலை மட்டும் கள்ளகாதல் என்று ஏன் கொச்சை படுத்தவேண்டும், பத்திரிக்கைகளும், media க்களும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.

முன்பு எவை எல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ அவை எல்லாம் இப்போது பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என்று சப்பைகட்டு கட்டப்பட்டு வரும்போது இது மட்டும் ஏன் இன்றுவரை தவறு என்றே சொல்லப்பட்டு வருகிறது.சொல்லப்போனால் 
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது சந்தோசம் என்கிறபோது மற்றவர்களுக்கு 
மட்டும் ஏன் வருத்தம்?  ஏன் நமக்கு இந்த மாதிரி 
சினேஹம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமா? அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்  நுழைவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.  

இந்த உறவு உடலை மட்டும் சார்ந்து  வருவது இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  குடும்ப வாழ்வில் இழந்த ஏதோ ஒன்றை பெறுவதற்காக தேடப்போய் இறுதியில் தவறான உறவில் வந்து நின்று விடுகிறது.  இந்த உறவும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு relaxation .  அவர்கள் பார்வையில் இது தவறில்லை.  ஏன் இந்த தலைப்பு வைத்தேன் என்பது தொடர்ந்து படிக்கும் போது புரியும் என்று நினைக்கிறேன்.சமூகத்தின் மேல் எனக்கும் அக்கறை உண்டு என்பதால் இதைப்  பற்றி அதிகமாக  எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த  வசதியான குடும்பங்களில் நடக்கும் இத்தகைய
விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலம் சில
மூடிய மன கதவுகளை திறக்கமுடியும் என்று நம்புகிறேன்.

மீண்டும் நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.