கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது. அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.
* * * * * * * * *
அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால் நடக்கிறது .
Statistics Related To The Road Accidents In India
• 93% of all accidents are caused due to human
factors.
• 80% crashes involve driver inattention within 3
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per
WHO.
• 20% of GDP covers the accidental portion.
முகப்பு விளக்குகள்
இதில் இரவில் நடக்கும் விபத்துக்கள் மிக அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...
முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....
இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???
"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ...
National Automotive Testing and R AND D Infrastructure Project.
Ministry of Road Transport & Highways.
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009.
Transport Secretaries OF Government of Tamil Nadu .
இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.
அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.
இந்திய அரசாங்கம்:-
* National Automotive Testing and R AND D Infrastructure Project:-
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in
அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...
நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!
நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.
நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.
நன்றி - J.நக்கீரன்
நன்றி - கழுகு இணையதளம்

