Wednesday, June 13

10:48 AM
39

வீட்டு தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...

உருளை கிழங்கு

                                                              (photo courtesy - Siva)

உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு



 சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமா பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி


நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை 

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்...


தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு. 

பந்தல் முறை  

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை 

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.

 உரம்  

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடைல கொட்டாம, செடிகளுக்கு ஊற்றுங்கள்... 

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி  நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து  விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்... 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல்  ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர் 

விதைக்காக கடைகளை தேடி  வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான்   இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி  விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ்  !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க... 

உற்சாகமான வீட்டு தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
                                                               * * * * *
அப்புறம்...

வீட்டு தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்து பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காண கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...

* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html

* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in

நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!
                                                                   * * * * *


படங்கள் - நன்றி கூகுள் 
Tweet

39 comments:

  1. இந்தப் பதிவை நான் படிக்கும் பொழுது என் வீட்டில் மிளகாய் தக்காளி பாகற்காய் போன்றவற்றை பயிரிட்ட நியாபகம் வருகிறது, அவை பூத்து காய் காய்க்கும் பொழுது ஏதோ தேர்வில் பாஸ் ஆனது போல் இருக்கும். வலைப் பூவில் ஒரு பசுமை பூ. அருமை தொடருங்கள் தொடர்கிறோம்



    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
  2. கவுசல்யா,

    //தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ் //

    நீங்க சொல்லி இருக்கும் மற்ற விஷயங்கள் எல்லாம் அருமையான முறை, ஆனால் அமைக்க சொன்ன மேற்சொன்னது தான் சரியல்ல.

    நீங்க சொன்னது போல செய்தால் நீர்க்கசிவினால் நாளடைவில் மேற்குறையில் விரிசல், மற்றும் தளப்பூச்சு உற்புறமாக கொட்ட ஆரம்பித்துவிடும், மேலும் நீர் சுத்திகரிக்க எளிய வழியும் இருக்கு, பின்னூட்டத்தில் சொன்னால் பெரிதாக போகலாம், முடிந்தால் விரைவில் பதிவாக சொல்கிறேன்.

    ReplyDelete
  3. @@ வவ்வால் said...

    //நீங்க சொன்னது போல செய்தால் நீர்க்கசிவினால் நாளடைவில் மேற்குறையில் விரிசல், மற்றும் தளப்பூச்சு உற்புறமாக கொட்ட ஆரம்பித்துவிடும்,//

    இப்ப உள்ள கட்டிடங்கள் இவ்வளவு பலவீனமாவா இருக்கும் ?!! :)

    அப்படி ஆகாது என்பது என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது...சென்னையில் இரு வருடங்களுக்கும் மேலாக இந்த முறையில் நாங்கள் கீரை விதைத்து எடுத்திருக்கிறோம்...தளம் எந்தவித சேதமும் இதுவரை அடையவில்லை. அதுதான் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக் என்று போட்டு இருக்கிறேன்.

    பொதுவாக இது போன்று அமைக்க படும் கீரைக்கு தண்ணீர் அதிகம் ஊற்ற தேவையில்லை...தெளித்துவிட்டால் போதுமானது.

    முக்கியமாக வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த பதிவுகள் அனுபவத்தில் வீட்டில் நாங்கள் தோட்டம் போட்டு பெற்ற பயனை அடிப்படையாக வைத்து எழுதுகிறேன் என்ற சிறு தகவலை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

    //மேலும் நீர் சுத்திகரிக்க எளிய வழியும் இருக்கு, பின்னூட்டத்தில் சொன்னால் பெரிதாக போகலாம், முடிந்தால் விரைவில் பதிவாக சொல்கிறேன்.//

    அவசியம் அந்த வழிமுறையை பதிவிடுங்கள்...தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    தொடரும் வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. VERY USEFUL AND INTERSTING BLOG. i AM INTERESTED IN GARDENING. WAITING TO KNOW HOW TO GROW TULSI. HAVE SOME DIIFICULTY IN MAINTAIN IT.

    THANK YOU FOR THIS POST

    SELVI

    ReplyDelete
  5. நல்ல பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருக்கீங்க. சில எழுத்துப்பிழைகள் திருத்த வேண்டுகிறேன்.உ-ம்://ஈசியான வலியில் (வழியில்) சுத்திகரிக்கலாம்...//. நன்றி.

    ReplyDelete
  6. இதுவும் ஓர் பசுமைப்புரட்சி...வாழ்த்துக்கள் சொந்தமே

    ReplyDelete
  7. கவுசல்யா,

    நீர்க்கசிவினால் மேல் தளம் பாதிப்பது, அப்படியாகாமல் மாடித்தோட்டம் அமைக்கும் முறை ,இன்னும் கொஞ்சம் தகவல் சேர்த்து ஒரு பதிவிட்டுள்ளேன் ,நேரம் இருக்கும் போது பார்க்கவும்.
    நன்றி!

    link:
    பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்

    ReplyDelete
  8. சாப்பிடறதோட சரிங்க. படிக்கப் படிக்கப் பிரமிப்பா இருக்கு.

    ReplyDelete
  9. தோட்டத்தில் செம்மண் இருந்தால் அல்லது நாம் செம்மண் போட்டால் கரையான் வரும் என்பது உண்மையா???

    ReplyDelete
  10. நல்ல பதிவு. படிப்பவர்களை வீட்டு தோட்டம் அமைக்க நிச்சயம் ஊக்குவிக்கும்
    அமெரிக்காவில் தலைகீழாக வளர்க்கும் தக்காளி,மிளகாய் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றை கூட வீட்டு தோட்டத்திற்கு பயன் படுத்தலாம். அது பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படத்துடன் பதிவிட்டிருந்தேன்.
    http://marutam.blogspot.com/2010/08/blog-post.html

    அந்த பதிவில் உள்ளது போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய வெள்ளை சாக்கு கொண்டு, அதை தொங்க விட்டு கூட இலவசமாக தயாரிக்களாம். நான் முயற்சி செய்த போது நன்றாகவே வந்தது.அதே போல் தற்போது Square foot garden கூட பிரபலமாகி வருகிறது
    http://www.youtube.com/watch?v=N5Lu-7FIj_g

    ReplyDelete
  11. Superb post. You have detailed every point very well and made the gardening job sound very interesting!

    Thanks.
    Kindly visit my gardening blog too, and offer your comments. Thanks.

    http://www.gardenerat60.wordpress.com

    ReplyDelete
  12. Superb madam, naanum seithu parkkiren.

    romba nadri

    ReplyDelete
  13. கடந்த சில நாட்களாக இணையம் வர இயலவில்லை. உங்களின் பின்னூட்டத்துக்கு உடனே பதில் சொல்லாததுக்கு பொறுத்துக் கொள்ளவும். நன்றிகள்.

    ReplyDelete
  14. @@ சீனு said...

    //இந்தப் பதிவை நான் படிக்கும் பொழுது என் வீட்டில் மிளகாய் தக்காளி பாகற்காய் போன்றவற்றை பயிரிட்ட நியாபகம் வருகிறது, அவை பூத்து காய் காய்க்கும் பொழுது ஏதோ தேர்வில் பாஸ் ஆனது போல் இருக்கும். //

    உண்மைதான். இந்த சந்தோசத்துக்கு ஈடு இணை வேறு இருக்கானு தெரியல... :)

    உங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  15. @@ Anonymous said...

    //VERY USEFUL AND INTERSTING BLOG. i AM INTERESTED IN GARDENING. WAITING TO KNOW HOW TO GROW TULSI. HAVE SOME DIIFICULTY IN MAINTAIN IT//

    துளசி வளர்ப்பதில் சிரமம் எதுவும் இல்லையே...பிற செடிகளுக்கு கொடுக்கும் கவனம் கொடுத்தால் போதும். சிறந்த மூலிகை. எல்லோரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியது துளசி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    நன்றி செல்வி.

    ReplyDelete
  16. @@ FOOD NELLAI...

    அன்றே சரி பண்ணியாச்சு. :)

    பிழைகளை சொன்னதுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  17. @@ Athisaya...

    மகிழ்கிறேன். நன்றிகள்

    ReplyDelete
  18. @@ வவ்வால் said...

    //நீர்க்கசிவினால் மேல் தளம் பாதிப்பது, அப்படியாகாமல் மாடித்தோட்டம் அமைக்கும் முறை ,இன்னும் கொஞ்சம் தகவல் சேர்த்து ஒரு பதிவிட்டுள்ளேன் ,நேரம் இருக்கும் போது பார்க்கவும்.//

    ம்...ஒரு வாரம் கழித்து தான் எனக்கு நேரம் கிடைச்சிருக்கு. படித்தேன். உபயோகமான நல்ல தகவல்கள்.

    நன்றிகள்.

    ReplyDelete
  19. @@ அப்பாதுரை said...

    //சாப்பிடறதோட சரிங்க. படிக்கப் படிக்கப் பிரமிப்பா இருக்கு.//

    அது சரி. :)

    தோட்டம் போட்டு பார்த்தா இன்னும் பிரமிப்பா இருக்கும். முடிஞ்சா கொஞ்சமா டிரை பண்ணுங்க.

    நன்றிகள் :)

    ReplyDelete
  20. @@ அமுதா கிருஷ்ணா said...

    //தோட்டத்தில் செம்மண் இருந்தால் அல்லது நாம் செம்மண் போட்டால் கரையான் வரும் என்பது உண்மையா???//

    செம்மண் என்று இல்லை, எல்லா மண்ணிலும் வரும்...அந்த மண்ணில் இருக்கும் கார்பன்சத்தை பொறுத்தது...

    வந்தபின் அந்த இடத்தில் சிறிது கெரசின் தெளித்து கட்டுபடுத்தலாம்.

    ...

    நன்றிகள் அமுதா கிருஷ்ணா

    ReplyDelete
  21. @@ சதுக்க பூதம் said...

    // அமெரிக்காவில் தலைகீழாக வளர்க்கும் தக்காளி,மிளகாய் மிக வேகமாக பரவி வருகிறது. //

    தங்கள் தளம் சென்று பார்த்தேன், இத்தனை நாள் தெரிந்துகொள்ளவில்லை என வருந்துகிறேன்.

    தலைகீழாக வளர்க்கும் தக்காளி எங்கள் வீட்டிலும் வளர்த்து பார்க்கவேண்டும் என ஆவலை தூண்டிவிட்டது.

    விடியோ இணைப்பும் பார்த்தேன்...
    தோட்டத்தின் மீது இன்னும் அதிக ஆர்வம் வந்து விட்டது.

    தங்கள் வருகைக்கும், இங்கே இவற்றை பகிர்ந்ததுக்கு என் நன்றிகள் பல...

    ReplyDelete
  22. @@ gardenerat60 said...

    //Kindly visit my gardening blog too, and offer your comments. Thanks.//

    sure.

    thank u very much for visiting my blog...

    ReplyDelete
  23. ஆட்டத்துலே நம்மையும் சேர்த்துவிட்டதுக்கு நன்றி.

    எங்களுக்கு இடம் தாராளமா கொல்லைப்புறத்தில் இருக்குன்னாலும்....... குளிர் கொன்னுபோட்டுருது:(

    அப்படியும் விடாம எதையாவது நட்டுக்கிட்டே இருப்பேன்.

    வெய்யில் காலத்தில் கப்சுப்புன்னு இருந்துட்டு இப்ப கன்ஸர்வேட்டரியில் வச்சதும் போகெய்ன்வில்லா பூக்குது:-)

    அதுக்கும் மனம்போல வாழ்வுதான்!!!!

    ReplyDelete
  24. பதிவு நல்லா இருக்கு கௌசல்யா, செல்வி சொல்வது போல் துளசி வளர்க்கிறது கஷ்டமாத் தான் இருக்கு.. வெயில் நிறைந்த சென்னைவாசிகளுக்கு அந்தக் கஷ்டம் தெரியாது! நான் அமெரிக்காவில் சான் ஹோசேவில் இருக்கேன். ஒவ்வொரு ஏப்ரலும் துளசி வாங்கி வைப்போம், சொல்லி வச்ச‍ மாதிரி, டிசம்பரில் ரெண்டு ராத்திரி வெளியில் மறந்து வச்சிட்டு தூங்கிடுவோம், அவ்வ‍ளவு தான்.. எல்லாம் போச்சு! இதுக்கு ஏதாவது சுலப வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க...

    அப்புறம், இந்தப் பின்னூட்ட‍த்தில் வரும் பதில்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து உங்க பதிவை அப்டேட் பண்ணுங்களேன்! எங்களுக்கு உபயோகமா இருக்கும்...

    ReplyDelete
  25. பொன்ஸ்,

    'என்னை' இங்கே கன்ஸர்வேட்டரியில் வச்சே வளர்த்தாலும் குளிர் காலம் வந்துருச்சுன்னால்..... போச்:(

    என்னதான் காப்பாத்தி வச்சாலும் Aphids வந்து மொய்ச்சுருதே:(

    ReplyDelete
  26. @@ துளசி கோபால் said...

    //பொன்ஸ்,

    'என்னை' இங்கே கன்ஸர்வேட்டரியில் வச்சே வளர்த்தாலும் குளிர் காலம் வந்துருச்சுன்னால்..... போச்:(

    என்னதான் காப்பாத்தி வச்சாலும் Aphids வந்து மொய்ச்சுருதே:(//

    அது எப்படிங்க , கம்மென்ட் பப்ளிஷ் பண்ணிட்டு இதுக்கு பதில் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே, எப்படி உங்களை கேட்கிரதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். டக்குனு வந்துடீங்களே ?!!!

    ஆச்சர்யமாக இருக்கு :))

    நன்றிகள்

    ReplyDelete
  27. @@ பொன்ஸ்~~Poorna said...

    //இதுக்கு ஏதாவது சுலப வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க...//

    குளிர் காலத்துல எப்படி பாதுகாத்து வளர்கிரதுனு எனக்கு தெரியல, ஆனா நீங்க கேட்டதுக்கு பிறகு எனக்கும் மிக ஆர்வமாகிவிட்டது, இதை பற்றி இங்கே விசாரித்து சொல்கிறேன்...ஏதாவது வழி இல்லாமலா போய்டும்,அது என்னனு பார்த்துடுவோம் :)

    http://thulasidhalam.blogspot.in/
    நேரம் இருந்தா இவங்க தளம் சென்று பாருங்க...உங்களுக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய இருக்கு.

    //அப்புறம், இந்தப் பின்னூட்ட‍த்தில் வரும் பதில்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து உங்க பதிவை அப்டேட் பண்ணுங்களேன்! எங்களுக்கு உபயோகமா இருக்கும்...//

    கண்டிப்பாக செய்கிறேன்...

    உங்களின் ஆர்வத்தை எண்ணி மகிழ்கிறேன். முதல் வருகைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  28. மொட்டை மாடி தோட்டம் குறித்த அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் மேடம்.

    ReplyDelete
  29. அன்பின் கௌசல்யா

    ஆலோசனை நன்று - செய்து பார்த்து வெற்றி பெற வேண்டும் - ஆர்வம் வேண்டும் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  30. வணக்கம்...

    இந்தப் பகிர்வும்...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html

    நன்றி...

    ReplyDelete
  31. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  32. எனது வீட்டில் வெண்டைக்காய் வளர்க்கிறேன். சிட்டெரும்பு வந்து பூக்களை கடிக்கிறது, என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. செடியின் மீது மஞ்சள் தூள் தூவுங்கள் ...

      வேறு சந்தேகங்கள், தகவல்கள் தேவை என்றால் கேளுங்கள், சொல்கிறேன் .

      வருகைக்கு நன்றி .

      Delete
  33. ரோஜா செடியில் சங்கு போன்ற பூச்சி இருக்குதே. எப்படி அழிப்பது?

    ReplyDelete
  34. மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை வலைகளை சிறிய அளவில் பயன்படுத்தும்போது அதன் உற்பத்தி அதிகமாக கிடைக்கும்...

    ReplyDelete
  35. ஒரு அடி உயரமுள்ள 3×2 பிளாஸ்டிக் பேசன் இருந்தால் போதும் வீட்டிற்கு தேவையான இயற்கை முறை கீரை கிடைத்துவிடும்...

    ReplyDelete
  36. மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை வலைகளை சிறிய அளவில் பயன்படுத்தும்போது அதன் உற்பத்தி அதிகமாக கிடைக்கும்...

    ReplyDelete
  37. மாடிதோட்டத்திற்கி மண் மற்ற வேண்டியது அவசியமா..?

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை காய்கறி விளைச்சல் முடிந்ததும் பழைய மண்ணை முழுதாக அகற்றவேண்டும் என்று இல்லை, நன்றாக கிளறிவிட்டு இயற்கை உரத்தை கலந்தால் போதுமானது.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...