செவ்வாய், நவம்பர் 1

9:11 AM
58




தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தி. இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி !

ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது ஏன்னு தெரியல. நன்றி, சாரி, பரவாயில்லை என்பது போன்ற (சம்பிராதய) வார்த்தைகள் மிக முக்கியம். இவையே உறவை வளர்க்க உதவும். இவற்றை உபயோகிக்காததால் நல்ல நட்பை/உறவை இழக்க நேரலாம்.

சின்ன வயசில என் அம்மா சொல்லி கொடுத்த பழக்கம் இது, யாருக்கும், எதற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பது, இப்ப என் பசங்களிடமும் இது தொடருகிறது. பெரிய விசயங்கள் என்று இல்லை, சின்ன சின்ன சந்தர்பங்களிலும் நன்றி என்ற சொல் தானாக வந்துவிடும். (ஒரு அனிச்சை செயல் போல )

சொல்லி பாருங்களேன் 

பஸ்ல கண்டக்டர் டிக்கெட் கொடுத்ததும் தேங்க்ஸ் சொல்வேன், இதை எதிர்பார்த்து இருக்காததால் நான் சொன்னதும் சட்னு திரும்பி பார்த்து லேசா சிரிப்பார்.வேலை நெருக்கடியில் இந்த நன்றி அவரது இறுக்கத்தை தளர்த்தி முகத்தில் புன்னகையை கொடுக்கிறது. ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுற செய்கிறது என்றால், ஒரு நன்றி அல்ல  ஆயிரம் நன்றி சொல்லி கொண்டே  இருக்கலாம். 

என் பசங்க எனக்கு குடிக்க தண்ணி எடுத்து கொடுத்தா வாங்கிட்டு உடனே நன்றினு சொல்லிடுவேன்...அவங்களும் அதை அப்படியே பாலோ பண்றாங்க...வீட்ல இப்படி சொல்லி பழகிட்டா வெளியிடங்களிலும் மத்தவங்ககிட்ட சொல்வாங்க... !!

எங்க வீட்டு சின்ன வாண்டு சிஸ்டம்ல கேம்ஸ் ஆர்வமாக விளையாட்டிட்டு இருக்கும்போது Avast! Antivirus , pop up message ல்  'your system is updated ' னு வாய்ஸ் வந்தா, அதே வேகத்தில் உடனே 'ஒ.கே ஒ.கே தேங்க்ஸ்' என்கிறானா  பார்த்துகோங்க...! எந்த அளவிற்கு அவன் மனதில் இந்த நல்ல பழக்கம் பதிந்திருக்கிறது என்று...! 

சிறியவர்கள் இவர்கள்  நாளை சமூகத்தில் பலருடன் பழக நேரும், அப்போது ரொம்ப இறுக்கமாக பேசினால் பிறரது நல்ல நட்பை, உறவை இழக்க நேரும். சிறு குழந்தைகளிடம் இது போன்றவற்றை பேச சொல்லி கற்றுகொடுங்கள். நீங்களும் முன் உதாரணமாக சொல்லி பழகுங்கள். 


நன்றி சொல்ல எதுக்கு ரொம்ப யோசிக்கணும் ? 

தமிழ் வலைதளங்கள் பல இருக்க நம்மை நினைவு வைத்து,மதித்து நேரம் செலவு பண்ணி நம் தளத்தை ஓபன் பண்றதே பெரிசு, தவிர வோட் போட்டு பின்னூட்டமும் போட்டுட்டு போறாங்க என்கிற போது ஒரு நன்றினு சொன்னா என்னங்க ? நிச்சயமா நன்றியை எதிர்பார்த்து அவங்க பின்னூட்டம் போடல...ஆனா நமக்கு நேரம் கிடைக்கும் போது குறைந்தபட்சம் பின்னூட்டதிற்கு பதில் அல்லது நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வது நல்ல பழக்கம். இதை சொல்லகூட பெரிசா யோசிக்கிற நாம், சகமனிதர்களை நேசிக்கிறோம் என்று சொல்வது எப்படி ஏற்புடையதாகும். அது பொய்...வெளிவேசம்...பெரிய சமாளிப்பு...!!

அதெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு பிடிக்காது, நேரமில்லை என்ற வீம்பில் இருப்பவர்களை விட்டு, நெருங்கிய நண்பர்களும் சற்று விலகியே நிற்பார்கள் என்பது நிதர்சனம். 
  
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?

மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!

மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன் கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல்  பிறரை வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது தெய்வீக தன்மை. ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. 

ஒரு சொல்லோ செயலோ நம் மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.

பகைவனுக்கும் அருளவேண்டும் என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே ?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று வரும்போது  தயங்கவே செய்கிறார்கள் !?

அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.

நெருங்கியவர்களிடம் 

தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய சென்று மன்னிப்பு கேட்கலாம். 

மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே நேரம் நண்பர்களுக்கிடையே என்றால் நட்பு இன்னும் இறுக்கமாகி விடும், இத்தகைய  நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.

மன்னிக்க முடியாது 

இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம்  உங்களுக்கு முக்கியம் என்றால் மன்னித்து பழகுங்கள்...

மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால், 

* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!

பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை  மன்னித்து மறந்து சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளி விடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திர உலகின் நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?! 

சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும் ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில் நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள், உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...

தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில்  நாம் மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம்.  நல்ல மாற்றங்களை நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...

பிரியங்களுடன்
கௌசல்யா



படம் - நன்றி கூகுள் 
Tweet

58 கருத்துகள்:

  1. நன்றி குறித்து ஒரு சிறுகதை படித்த நினைவு, நீங்கள் கூறுவது அனைத்தையும் அழகாக அடக்கி இருப்பார் ஆசிரியர்...

    பதிலளிநீக்கு
  2. மறப்போம் மன்னிப்போம் .நிட்சயமாக நான் அப்படித்தான் சகோ ஹி..ஹி ...ஹி ...வாழ்த்துக்கள் அருமையான விஷயத்தைக்கொஞ்சம் ஆணித்தரமாய் சொல்லியுள்ளீர்கள் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு ......

    பதிலளிநீக்கு
  3. எல்லா ஓட்டும் போட்டாச்சு .எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சகோ என்னோட ஓட்டுப்பட்டை வேல செய்யுதா செய்யவில்லையா.என்று ஹி ..ஹி ..ஹி ...காரணம் ரெண்டு நாளா ஆறு ,ஏளோட நிக்குதே என்னாச்சோ தெரியல .சனங்களுக்கு வெறுப்பு வந்திற்ரோ ஹி ..ஹி ..ஹி ..எதுக்கும் நீங்க குத்திப் பாருங்க சகோ பிளீஸ் ....

    பதிலளிநீக்கு
  4. P and Q ரெண்டும் ரொம்ப முக்கியம் விட்டுடக்கூடாதுன்னு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே சொல்லிக் கொடுக்கணும்.

    பதிலளிநீக்கு
  5. Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....Thnks...sorry....

    :))))

    பதிலளிநீக்கு
  6. \\\எங்க வீட்டு சின்ன வாண்டு சிஸ்டம்ல கேம்ஸ் ஆர்வமாக விளையாட்டிட்டு இருக்கும்போது Avast! Antivirus , pop up message ல் 'your system is updated ' னு வாய்ஸ் வந்தா, அதே வேகத்தில் உடனே 'ஒ.கே ஒ.கே தேங்க்ஸ்' என்கிறானா பார்த்துகோங்க...! \\\ நீங்கள் எட்டடி பாய்கிறீர்கள் ...அவர்கள் பதினாறு அடி பாய்கிறார்கள் ...

    பதிலளிநீக்கு
  7. சாரி ..சொல்ல மறந்துட்டேன் .நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும் ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில் நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள், உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...//

    அருமையாக சொல்லியிருக்கீங்க தோழி,மிக நல்ல பகிர்வு.ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டியது...

    பதிலளிநீக்கு
  9. //சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும் ஒரு அற்புதமான மந்திரம். //
    சந்தேகமின்றி.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நானும் எல்லாத்துக்கும் நன்றி சொல்லிவிடுவேன். மன்னிப்பு கேட்பதாலோ நன்றி சொல்வதாலோ நாம் குறைந்து விடுவதில்லை.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிற அனுபவங்கள் தங்கள் பதிவில் மிளிர்கிறது...


    சமூகத்திற்க்கு தேவையாக அழகியகருத்து..
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. "மன அழுத்தத்தில் விழுவேன்
    * மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்.."

    மன்னிக்க முடியாது என்பவர்களின் நிலையைமிக அருமையாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல தெளிவான கட்டுரை

    பதிலளிநீக்கு
  14. //ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுற செய்கிறது என்றால்..//

    உண்மைதாங்க. நிறைய கத்துக்கனும்.

    நன்றி சொல்லவும், மன்னிப்பு கேட்கவும் தயங்குவதில்லை நான்.

    பதிலளிநீக்கு
  15. சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும் ஒரு அற்புதமான மந்திரம்.//

    இங்கே ஆரம்ப பள்ளியில் இருந்து முதலில் கற்று கொடுப்பது please and thankyou தான் .இம்முறை ஊர் சென்றப்போ மகள் இளநீர்க்காரரிடம் நன்றி கூறினாள் .அவர் முகத்தில் பெரிய சந்தோசம் .
    எங்க வீட்டுக்கு ஒரு குடும்பம் வந்திருந்தாங்க அவங்களோட மூத்த மகள் உங்க வீட்டுக்கு எங்களை அழைதததுக்கு நன்றி என்று சொன்னாள்.she is 8 yrs old.
    .superb post about P and Q .

    பதிலளிநீக்கு
  16. அஆங் சொல்ல மறந்துட்டேன் அருமையான பகிர்வுக்கு நன்றி கௌசி

    பதிலளிநீக்கு
  17. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாத நன்றியும், கேட்கவேண்டிய நேரத்தில் கேட்காத மன்னிப்பும்
    பயனில்லாதவை. மிக அழகாகப் பிள்ளைகளையும் வளர்க்கிறீர்கள்.வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுற செய்கிறது என்றால், ஒரு நன்றி அல்ல ஆயிரம் நன்றி சொல்லி கொண்டே இருக்கலாம். //

    மிகவும் அழகான், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கூறும் நல்ல பதிவு. பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள், மேடம்.

    தாமதமாக பின்னூட்டம் இடும் படியாகி விட்டது. தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள், மேடம்.
    vgk

    பதிலளிநீக்கு
  19. மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? நிச்சயமாக குறையாது. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. nalla karuthai solla mattrum nandri enum sollai anaivarukkum ninaivupadithiyamaikku mikka NANDRI

    nalla muyarchi nalla thodakkam nalla samudhayam

    பதிலளிநீக்கு
  21. இத்தனை நாள் உங்க தளத்துக்கு வராமல் இருந்ததுக்கு மன்னிப்புக் கேட்கிறேன். நீங்கள் சொன்ன நல்ல விஷயங்களுக்காக மனம் நிறைந்து நன்றி சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  22. @@ suryajeeva said...

    //நன்றி குறித்து ஒரு சிறுகதை படித்த நினைவு, //

    அப்படியா ? படித்ததை இங்கே சிறிது சொல்லி இருக்கலாமே சூர்யா ?! இன்னும் நிறைய தெரிந்துகொண்டிருக்கலாம்.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  23. @@ அம்பாளடியாள் said...

    //என்னோட ஓட்டுப்பட்டை வேல செய்யுதா //

    இப்ப நான் வோட் பண்ணினேன். வேலை செய்யுதே.

    கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  24. @@ துளசி கோபால் said...

    //P and Q ரெண்டும் ரொம்ப முக்கியம் விட்டுடக்கூடாதுன்னு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே சொல்லிக் கொடுக்கணும்.//

    சொல்லி கொடுக்கும் அதே நேரம் நாமும் முன் மாதிரியாக நடந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன். சரிதானே ?

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. @@ Bala...

    புரிதலுக்கு நன்றிகள் பாலா.



    @@ சௌந்தர்...

    செம புரிதல் சௌந்தர். இப்படிதான் இருக்கணும். :))

    பதிலளிநீக்கு
  26. @@ koodal bala...

    நன்றி பாலா. :)))



    @@ asiya omar...

    நன்றி தோழி.



    @@ சென்னை பித்தன்...

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  27. @@ சே.குமார் said...

    //மன்னிப்பு கேட்பதாலோ நன்றி சொல்வதாலோ நாம் குறைந்து விடுவதில்லை.//

    உண்மை. நன்றி குமார்.



    @@ MyKitchen Flavors-BonAppetit!...

    thank u mam.



    @@ கவிதை வீதி... // சௌந்தர் //...

    நன்றிகள் சௌந்தர்.



    @@ வியபதி...

    நன்றிகள்.




    @@ VELU.G...

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  28. @@ சத்ரியன் said...

    //நன்றி சொல்லவும், மன்னிப்பு கேட்கவும் தயங்குவதில்லை நான்.//

    வணங்குகிறேன் உங்களை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. @@ angelin said...

    //இங்கே ஆரம்ப பள்ளியில் இருந்து முதலில் கற்று கொடுப்பது please and thankyou தான் .//

    பாராட்டக்கூடிய ஒன்று தோழி. நம்ம ஊர்லயும் கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும்.

    இளநீர்காரருக்கு சந்தோசத்தை கொடுத்த குட்டி பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள்.

    நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  30. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. @@ வல்லிசிம்ஹன் said...

    //சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாத நன்றியும், கேட்கவேண்டிய நேரத்தில் கேட்காத மன்னிப்பும்
    பயனில்லாதவை. //

    ஒரே வரியில் மிக சரியாக அழகாக சொல்லிடீங்க. மகிழ்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //தாமதமாக பின்னூட்டம் இடும் படியாகி விட்டது. தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்,//

    அச்சோ பெரியவங்க நீங்க இதுக்கு போய் சாரி கேட்டுட்டு...உங்கள் கருத்துக்கள் என்னை வழிநடத்தி வருகிறது குறித்து நான் எப்போதும் மகிழ்வேன்.

    தொடர்ந்து என்னை வழிநடத்தனும். மகிழ்வுடன் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  33. @@ Lingesh...

    உங்களின் முதல் வருகைக்கும், தொடருவதற்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  34. @@ எல் கே...

    நன்றி கார்த்திக். :))

    பதிலளிநீக்கு
  35. @@ கணேஷ் said...

    //இத்தனை நாள் உங்க தளத்துக்கு வராமல் இருந்ததுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.//

    இதுக்கு எல்லாம் மன்னிப்பா சரியா போச்சு. :))

    எப்படியோ வந்துடீங்க...அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். :)

    பதிலளிநீக்கு
  36. @@ அப்பாதுரை...

    வாங்க. :)

    உற்சாகபடுத்தும் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  37. நிச்சயம் எல்லோருமே மனதில் பதித்துக்கொள்ளவேண்டிய வாழ்வியல் பதிவு.வாழ்த்துகள் கௌசி !

    பதிலளிநீக்கு
  38. நன்றி, மன்னிப்பு ஏதோ ஒரு கடமைக்காக சொல்றதா இருக்க கூடாது. நன்றியை கூட கடமைக்கு சொல்றதா வைச்சிக்கலாம். ஆனா மன்னிப்பு கூடவே கூடாது.

    செய்த தவறையே திரும்ப திரும்ப செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் மன்னிக்க சொல்வதில் எந்த லாபமும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

    நல்ல பதிவு. நன்றிங்க. தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிகோங்க. :)

    பதிலளிநீக்கு
  39. @@V.Radhakrishnan said...

    //நன்றி, மன்னிப்பு ஏதோ ஒரு கடமைக்காக சொல்றதா இருக்க கூடாது. நன்றியை கூட கடமைக்கு சொல்றதா வைச்சிக்கலாம். ஆனா மன்னிப்பு கூடவே கூடாது. //

    மிக சரி ஏற்றுகொள்கிறேன்.

    //செய்த தவறையே திரும்ப திரும்ப செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் மன்னிக்க சொல்வதில் எந்த லாபமும் இல்லை//

    திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு நிற்க முயல்வதே அபத்தம். அது மன்னிப்பு என்ற ஒன்றையே அசிங்கபடுத்துவது போல் ஆகிவிடுமே.

    நீங்கள் சொன்ன கருத்து பதிவில் விடுபட்ட ஒன்றாகவே கருதுகிறேன்...அதை பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  40. @@ அன்புடன் அருணா...

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  41. நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவும் வார்த்தைகள்
    நன்றியும் மன்னித்துக்கொள்ளுங்கள் என்பதுவும்...
    ஆங்கிலத்தில் சாதரணமாக நாம் பயன்படுத்தும் இந்த
    வார்த்தைகளை தமிழில் சொல்வதில் மட்டும்
    மனம் ஒத்துக்கொள்வதில்லை பெரும்பாலானோரிடம்.

    செய் நன்றிக்கு நட்ரியுரைப்பதும் செய்த தவறுக்கு
    மன்னிப்பு கேட்பதுவும் நம்மை நாமே சீர்படுத்துவதற்கு
    என உணர்ந்துகொண்டாலே போதும்.

    அருமையான பதிவு சகோதரி.

    பதிலளிநீக்கு
  42. @@ மகேந்திரன் said...

    //செய் நன்றிக்கு நட்ரியுரைப்பதும் செய்த தவறுக்கு
    மன்னிப்பு கேட்பதுவும் நம்மை நாமே சீர்படுத்துவதற்கு
    என உணர்ந்துகொண்டாலே போதும்.//

    உண்மை. கருத்திற்கு நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  43. மனிதாபிமானம் எப்படி வளரும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அன்பு கருணை எல்லாம் மனிதாபிமானத்தின் வெளிப்பாடே தவிர மனிதாபிமானம் வளரக் காரணமாக இருப்பவை சகித்தலும் பரந்த மனப்பான்மையும் அங்கீகரிக்கும் குணமுமே என்பதை நல்ல உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  44. "தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்று சொல்லுபவர்கள் கூட, இத படிச்சவுடனே " அப்படி நினைச்சது தப்பு" என்று மன்னிப்பு கேட்பதாகவும், அதை உணர்த்தியதற்கு நன்றி எனவும் சொல்ல வாய்ப்பிருக்கு!

    எனது சமீபத்திய சிறுகதையில் மன்னிப்பு கேட்பதே மையக்கருத்தாக இருக்கும்!
    http://npandian.blogspot.com/2011/10/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  45. "தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்று சொல்லுபவர்கள் கூட, இத படிச்சவுடனே " அப்படி நினைச்சது தப்பு" என்று மன்னிப்பு கேட்பதாகவும், அதை உணர்த்தியதற்கு நன்றி எனவும் சொல்ல வாய்ப்பிருக்கு!

    எனது சமீபத்திய "நூடுல்ஸ்" சிறுகதையில் மன்னிப்பு கேட்பதே மையக்கருத்தாக இருக்கும்!
    http://npandian.blogspot.com/2011/10/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  46. அன்பின் கௌசல்யா - நல்ல செயல்களூக்கு நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு. அதே நேரம் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. இவை இரண்டுமே குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்தவையாக இருக்க வேண்டும். இரண்டுமே உதட்டின் நுனியில் இருந்து வரக்கூடாது. உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து உணர்ச்சி பூர்வமாக வர வேண்டும்.

    நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள் கௌசல்யா - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  47. ம்ம்...? எதேச்சையா இந்தபக்கம் வந்தேன்...அப்டியே என் நன்றியையும் சொல்லிக்கிறேன் ;-)

    பதிலளிநீக்கு
  48. நன்றியும் மன்னிப்பும் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை அழகாக அறிவுறுத்தும் படைப்பு....நடை அருமை. தாங்கள் சொல்லிய நடத்துனருக்கு நன்றி படிக்கும் போது, தெரியாமலே ஒரு செய்தி நினைவினில் நிழலாடியது... ஒரு உணவகத்தில், கேட்டதைக் கொண்டுவருபவரிடம் நன்றி சொல்லிப் பாருங்கள்....நம்மை அறியாமலே அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கிறோம். மனித நேயத்தை வளர்ப்பதில் இந்த இரெண்டு வார்த்தைகளும் பெரும் பங்கு வகிக்கிறது.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...