சேவை நிறுவனம் ஒன்றை இவ்வளவு சீக்கிரம் நாங்கள் தொடங்கியதற்கு பதிவுலகம் ஒரு மிக பெரிய காரணம் என்பதை நான் பெருமையாக சொல்வேன். இந்த பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த உறவுகள் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாக உதவி வருகிறார்கள் எனபதை இந்த தமிழ் மணம் நட்சத்திர சிறப்பு வாரத்தில் பகிர்ந்து கொண்டால் ஒரு நிறைவாக இருக்குமென உணருகிறேன்.
ஒரு இனிய மாற்றம்
வீடு, பாக்டரி, தொழில் என்று ஒரே விதமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை பதிவுலகம் ஏற்படுத்தியது.பல புது உறவுகளின் அறிமுகம் நல்ல நட்புகள், சகோதர உறவுகள் இங்கே கிடைத்தன.
அதில் முக்கியமான ஒருவர் உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன். ஒருநாள் அவரிடம் 'தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கணும் என்ற ஒரு கனவு பலவருடமாக இருக்கிறது' என்று பேச்சுவாக்கில் சொன்னேன். உடனே சிறிதும் தயங்காமல் இதனை பற்றி ஆலோசனை கூற எனது மாமா ஒருவர் இருக்கிறார் என்றார். சொன்னதுடன் நில்லாமல் திரு. சிதம்பரபாண்டியன் (Rtd.District Registrar) அவர்களிடம் என்னை அறிமுகபடுத்தி வைத்தார். உண்மையில் அதுவரை போனில் மட்டும் பேசிகொண்டிருந்த நான், அன்று தான் அண்ணனையும் நேரில் சந்தித்தேன். அந்த நாள், அந்த முதல் சந்திப்பு என் வாழ்வை எப்படி மாற்றிப்போட வைக்க போகிறது என்று கனவிலும் நான் எண்ணவில்லை.
சிதம்பரம் சார்
மூவரும் இரண்டு மணி நேரம் மேல் பேசினோம், பலகாலம் பழகியதை போன்று இருந்தது அந்த முதல் சந்திப்பு...! சிதம்பரம் சார் பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு தொடர் பதிவு போடலாம்...! அவ்வளவு விஷய ஞானம் இருக்கிறது அவரிடம்... மிக அற்புதமான மனிதர். திருக்குறளை நன்கு கற்று தேர்ந்தவர். குறளின் படியே பேசுகிறார், அதன் படியே வாழ்கிறார் என்று கூட சொல்லலாம். வாழ்வியலோடு தொடர்பு படுத்தி அவர் பேச பேச எனக்குள் இருந்த அறியாமைகள் சில, மெல்ல நழுவி அவர் பாதம் சென்று மண்டியிட்டுவிட்டது...!
வார்த்தைக்கு வார்த்தை மனித நேயம், சக மனிதரின் மீதான நேசம் பற்றியே அவரது பேச்சு இருந்தது. எதை தேடி சென்றேனோ அதையும் பெற்று, அதற்கு அதிகமாகவும் பெற்றேன். அதற்கு பிறகு எங்களின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, அரசாங்கத்தின் பதிவுக்கு பின் இனிதே சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.
எந்த ஒரு செயலும் பலரின் ஒத்துழைப்பு இல்லாமல் முழுமையாய் செயல் வடிவம் பெறாது. அதுபோல் எனது நல்லவைகளின் பின்னால் இப்போது இருக்கும் பதிவுலக மாமனிதர்கள் சிலரை இங்கே நினைவுகூறுகிறேன்...
பதிவுலகில் முதல் பின்னூட்டம் மூலம் அறிமுகமான இவர் இன்று எனது இனிய நண்பர். எழுத்தாளர், புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். சிறந்த அழகிய தமிழில் பேசுபவர்.. காக்கிசட்டை வேலை பளுவிற்கு நடுவிலும் பிற தொண்டு நிறுவனங்கள் பற்றி நிறைய ஆலோசனைகள் கொடுத்து கொண்டிருக்கிறார். எங்கள் நிறுவனத்தின் பெயரை செலக்ட் செய்யும் வேலையை இவரிடம் கொடுத்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் ஓகே செய்து கொடுத்தார்.
டிரஸ்டின் வேலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆர்வமாக கேட்டு தெரிந்துகொள்வார். அத்துடன் நில்லாமல் 'கௌசல்யா நீ இன்னும் நிறைய செய்வ' என்று பேசும் ஒவ்வொருமுறையும் என்னை தவறாது உற்சாகபடுத்தி கொண்டே இருப்பவர்.எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் போன் செய்தால் உடனே எடுத்து பேசுவார். நானும் எல்லாம் பேசிமுடித்துவிட்டு(?), 'அண்ணா இப்ப பிரீதானே நான் ஒன்றும் தொந்தரவு செய்யலையே (இத முதல்ல கேட்டு இருக்கணும்...!?) என்றால் 'படப்பிடிப்பில இருக்கிறேன்மா, என் பக்கத்தில் இருந்தவர்கள் பேச்சு நீடிப்பதை பார்த்து ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட்டார்கள்' என்று சிரித்துக்கொண்டே சொல்வார். 'அச்சோ அண்ணா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே' என்றால் 'நீ அனாவசியமா கால் பண்ண மாட்டே, அதான் எடுத்தேன் என்பார்...! (என்ன தவம் செய்தனை !!)
தேர்தல் முடிந்ததும் 'கருவேலமரம்' சம்பந்தமாக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவருடன் என்னை அறிமுகபடுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
தொடர்ந்து எனது பதிவுகளுக்கு தனது பின்னூட்டங்களின் மூலம் சிறப்பு சேர்க்கும் சகோதரன் இவர். என்னை அதிகம் சிந்திக்கவைக்கும் வலிமை இவரது சொற்களுக்கு இருக்கிறது. எனது சேவை குறித்து தெரிந்தபின் அதன் முழு விவரமும் மெயிலின் மூலம் அவராக கேட்டு என்னை உற்சாக படுத்தி வருகிறார்.உதவிகள் வேறு எதுவும் வேண்டும் என்றால் ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்று தானாக மனமுவந்து சொல்லவும் ஒரு மனம் வேண்டும் அது இவரிடம் இருக்கிறது.
இனிமையான சகோதரர். நெல்லை பதிவர் சந்திப்பின் போது வருகை தரும் அனைவரிடமும் சிறு சேவை ஒன்றுக்காக பணம் கலெக்ட் செய்து அதை கருணை இல்லத்திற்கு வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் இவரிடம் தான் சொன்னேன். அதற்கு அவர் 'தாராளமா செய்யலாம் சகோ, எல்லோரும் நிச்சயம் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பார்கள்' என்று எனக்கிருந்த சிறு தயக்கத்தையும் களைந்து உற்சாக படுத்தினார். அவரது இந்த ஊக்கம் தான் இன்று வரை நான் தொடரும் சேவைகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.
திவான்ஜி
சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர். நகைச்சுவையாய் அர்த்தங்களுடன் பேசும் இவரது பேச்சில் அடுத்தவரின் மீதான நேசம் அப்பட்டமாக தெரியும் . உறவுகளின் உன்னதம் புரிந்து அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த மனிதர். எல்லோரும் பேசிகொண்டிருக்கும் போது, என் கணவர் சாதாரணமாக கைகட்டிக் கொண்டு இருந்தாலும் 'பாஸ் நான் இருக்கிறேன். தைரியமா இருங்க, வீட்ல இருக்கிற மாதிரி இங்கேயும் ஏன் இப்படி பயந்து நடுங்கி கைகட்டிட்டு...! ' என்று என்னை அப்ப அப்ப வாரிவிடுவதில் சமர்த்தர். கருணை இல்லத்தில் கேம்ப் நடத்தியபோது லேப் டெக்னீஷியன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இவனது பிறந்தநாள் வந்தபோது உனக்காக ஒரு வாழ்த்து கவிதை எழுதணும் என்று போனில் சொன்னதும், 'ஐயோ அக்கா வேண்டாம், கவிதை எழுதி அதை நான் படிச்சி.......அந்த விபரீதம் வேண்டாம் விட்டுடுங்க பிளீஸ்...' என்று கிண்டலடித்து சிரிக்க வைத்தான். 'அப்ப சரிவிடு எழுதல, இந்த சந்தோசமும் உற்சாகமும் உன்னுடன் இறுதிவரை இருக்க வாழ்த்துகிறேன்' என்றேன். 'அதுகூட நீங்களும் என்கூட கடைசிவரை இருக்கணும் அக்கா' என்று சொல்லி நெகிழவைத்து விட்டான்.
ஒரு உணர்வு பூர்வமான நட்பு எங்களுடையது. ஒரே ஊர் என்பதால் பிரியத்தின் அளவு சிறிது கூடி இருக்கலாம்...!இப்பவும் அடிக்கடி சங்கரலிங்கம் அண்ணனிடம், 'கௌசல்யா அடுத்து என்ன பண்ண போறாங்க' என்று விசாரிக்க தவறுவதே இல்லை.
நாஸ்காம்(NASSCOM) ஒர்க்ஷாப் செல்ல இவர்களும் ஒரு காரணம். அவர்களது உறவினர் மூலமாக இந்த ஒர்க்சாப் பற்றி எங்களுக்கு தெரியவந்தது. அதன் பின்னே திருச்சி சென்றோம். மிகுந்த சமூக சேவை ஆர்வம் கொண்டவர். முதியோர்களின் வசதிக்காக ஒரு இல்லம் பற்றிய ஒரு ஐடியா ஒன்றை சொல்லி இருக்கிறார். தகுந்த சமயம் வாய்த்ததும் ஆரம்பிக்க வேண்டும். அடிக்கடி பல தகவல்களை சொல்லி உற்சாக படுத்திகொண்டு வரும் அன்பான அக்கா இவர்கள்.
லோகோ வடிவமைக்கவேண்டும் என்றதும் உடனே தயார் செய்துகொடுத்தவர். உங்கள் சேவையில் எனது பங்காக இது இருக்கட்டும் என்று மகிழ்வுடன் சொன்ன அறிவார்ந்த சகோதரர்.
இவரை பற்றி எழுதணும் என்றவுடன், ஏற்கனவே இங்கே எழுதப்பட்ட வார்த்தைகள் எல்லாம் தங்களை ஒருமுறை சரிபார்த்து கொள்கின்றன...சரிதானா என்று?!!
சண்டையில் தொடங்கிய எங்கள் அறிமுகம் நட்பாக மாறி இன்றுவரை ஒரு தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. கற்றுகொடுத்து வழிகாட்டுவதில் குரு, கண்டிப்பதில் தந்தை, அன்பு காட்டுவதில் அன்னை, ஆலோசனை கூறுவதில் சகோதரன் எல்லாம் சேர்ந்தவர் நண்பர் தேவா ! 'சொசைட்டிக்கு ஏதாவது செய்யணும் கௌசல்யா' என்று எனக்குள் இருக்கும் சேவை உணர்விற்கு எண்ணெய் வார்த்து கொண்டே இருப்பவர். எனது அத்தனை சேவையிலும் ஆத்மார்த்தமாக இருந்து வருபவர்.
எங்கள் சேவை நிறுவனத்திற்கு வந்த ஒரு கல்வி உதவி வேண்டுகோள் மனுவை பற்றி இவரிடம் சொன்னதும் கழுகின் மூலம் செய்வோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து பிற கழுகு குழும நண்பர்கள் உதவியோடு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்.
எங்கள் சேவை நிறுவனத்திற்கு வந்த ஒரு கல்வி உதவி வேண்டுகோள் மனுவை பற்றி இவரிடம் சொன்னதும் கழுகின் மூலம் செய்வோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து பிற கழுகு குழும நண்பர்கள் உதவியோடு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்.
ஸ்டார்ட் மியுசிக் ராமசாமி இவர் கருவேலமரம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை பாபு மூலமாக எனக்கு கொடுத்தார்.அடுத்து நான் மேற்க்கொள்ளபோகும் கருவேலமரம் பற்றிய பிராஜெக்டுக்கு உதவியாக இருக்கும்.
இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் கிடைக்க பெற்ற யாராக இருந்தாலும் நிச்சயம் சாதிப்பார்கள் தான் வாழும் சமூகத்தை நேசிப்பார்கள் அதன் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிக்காக உற்சாகமாக உழைப்பார்கள் !!
எதுப்பு என்பதின் விளக்கம்
பதிலளிநீக்குசரக்குகள் ஏற்றி, இறக்கும் கூலியை/லாரி வாடகையை முன்பணமாக கொடுப்பதை குறிக்கும் சொல்.
* உதாரணமாக சரக்கு ஏற்றுமிடத்தில் நம் சார்பில் கூலி கொடுக்கப்பட்டு இருந்தால் 'எதுப்பு இவ்வளவு' என்று சீட்டில் குறித்து கொடுத்து விடுவார்கள். அப்பணத்தை நாம் கொடுக்கவேண்டும்.
* சில நேரங்களில் நம் இடத்திற்கு நேரடியாக லாரி சர்வீஸ் இருக்காது...அது போன்ற சமயங்களில் வேறு வாகனத்தில் மாற்றி நம் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். முதலாவது லாரிக்கு கொடுக்க வேண்டிய வாடகையை இரண்டாவது லாரி ஓட்டுனர் கொடுத்திருப்பார். அதை எதுப்பு என்ற வார்த்தையிலும் இவரது வண்டிக்கான கூலியை வாடகை என்றும் குறித்திருப்பார். இரண்டையும் வாடகை என்றால் வேறுப்பாடு இருக்காது அது போன்ற சூழ்நிலையில் பயன்படுமொரு அழகிய சொல் தான் இந்த எதுப்பு !!
புரியும்படி விளக்கிவிட்டேன் என நினைக்கிறேன். :))
'எதுப்பு’ விளக்கத்திற்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் தங்களின் நட்புகள் பற்றியும், அவர்கள் தங்களுக்கும், தங்களின் சமுதாயச் சேவைகளுகும் செய்த மற்றும் செய்து வரும் உதவிகள் பற்றியும் மிக அருமையாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.
தமிழ்மண நட்சத்திரம் தினமும் நன்கு ஜொலிக்கிறது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள், நன்றிகள். vgk
எதுப்பு என்பது என்னவென்று தெரியாமல் குழம்பியிருந்தேன். தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். வலையுலகில் அனைவரையும் நீங்கள் நினைவு கூர்ந்திருப்பது நெகிழ வைக்கிறது. புதிதாய் இணைந்திருக்கும் என் போன்றவர்களையும் நினைவில் வையுங்கள். எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. நன்றி.
பதிலளிநீக்குநட்பை மறக்காத நல்ல உள்ளம் கௌசல்யா உங்களுக்கு நன்றி
பதிலளிநீக்குஇனிய நட்புகளே !
பதிலளிநீக்குஊர் செல்லவிருப்பதால் இனி வரும் பின்னூட்டங்களை மாலையில் வந்ததும் வெளியிடுகிறேன்...பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி.
உங்களுக்கு உதவி செய்த நண்பர்களுக்கு பாராட்டுக்கள் ...
பதிலளிநீக்குகடவுள் குணம் கொண்ட மனிதன் தான் கடவுள் என்பது என் எண்ணம்
பதிலளிநீக்குஎதுப்பு என்பதற்கு நேற்று முழுவதும் லேக்சிகனை பிரித்து தேடியது தான் மிச்சம்... விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
இம்சைஅரசன்பாபுன்னு ஒரு பதிவர் இருக்காரா? அவர் ரொம்ப மோசாமான பயலாச்சே .. அந்த ஆள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா பழகுங்க சகோ ..ஹி ஹி ..
பதிலளிநீக்குஉங்க கூட்டுக் குடும்ப அனுபவம் நல்லதொரு அன்பின் பிரதிபலிப்பு!
பதிலளிநீக்குபதிவுலக நண்பர்களின் உதவும் குணமும் தங்களின் மேன்மேலும் வளரட்டும்! நெகிழ்ச்சியான வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேடம் ...,இப்போ தான் பார்கிறேன் ..,
பதிலளிநீக்குஅன்பு சகோதரி,
பதிலளிநீக்குநட்புள்ளங்களுக்கு தகுந்த மரியாதை
செய்துவிட்டீர்கள். செய்நன்றியை மறக்காது இருத்தல் நன்று,
அந்த பணியை செவ்வனே செய்திருக்கிறீர்கள்.
"எதுப்பு" என்ற சொல்லுக்கு பொருள் கூறியிருப்பது
மிக அருமை..
தெரிந்துகொண்டேன் ஒரு சொல்லை...
மிக்க நன்றி.
என்னமோ...சொல்லி இருக்கீங்க..ஆனா எனக்கு புரியல.....
பதிலளிநீக்குதங்ஸ்,
பதிலளிநீக்குஎன்ன தவம் செய்தனை என்று நீ குறிப்பிட்ட வார்த்தைகளை உனக்கே டெடிகேட் செய்கிறேன்.
அறிமுகங்கள், அறிந்த முகமாக மாறிய சில நிமிடங்களிலேயே உறவாக மாறுவது அபூர்வம்.
வாழ்வில் நிறைய சாதிக்கப் போகிற உனக்கு நான் தூண்டுதலாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!
சியர்ஸ் டியர் தங்கை!
உங்கள் சேவை மனப்பான்மையும்,நட்பு வட்டாரமும் மென் மேலும் செம்மையாக வளர எனது வாழ்துக்கள் .........
பதிலளிநீக்குஅன்பின் இனிய சகோதரி
பதிலளிநீக்குஇப் பதிவின் மூலமாக
கங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
கிடைக்கப் பெற்றேன்
தங்களின் தொண்டு மனப்
பான்மையும் பொதுச்சேவை செய்யும்
இயல்பையும் மிகவும் பாராட்டுகின்றேன்
வளர்க தங்கள் தொண்டு!
வாழ்க! நீவீர் பல்லாண்டு!
புலவர் சா இராமாநுசம்
பெரிய நட்பு வட்டத்தை அருமையாக அறிமுகம் செய்து விட்டீர்கள்.உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉணர்வுப்பூர்வ பகிர்வு!
பதிலளிநீக்குஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
கௌசல்யா, மெய்சிலிர்க்க வைக்கும் உங்கள் சேவை மனப்பான்மையை பாராட்ட வார்த்தைகள் ஏது?.. நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் நண்பர்கள் வட்டமும் அப்படியே.. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியே. நல்வாழ்த்துகள். தொடரட்டும்
பதிலளிநீக்கு@@ வை.கோபாலகிருஷ்ணன்...
பதிலளிநீக்குமகிழ்கிறேன். மிக்க நன்றிகள்
@@ கணேஷ் said...
பதிலளிநீக்கு//புதிதாய் இணைந்திருக்கும் என் போன்றவர்களையும் நினைவில் வையுங்கள். எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.//
உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்வையும், தெம்பையும் கொடுக்கிறது. நன்றிகள் கணேஷ்
@@ rufina rajkumar...
பதிலளிநீக்குநல்ல நட்புகளை விடாமல் பிடிச்சி வச்சுக்கணும் என்கிற பேராசை எனக்கு நிறைய உண்டு அக்கா. :))
நன்றிகள் அக்கா
@@ koodal bala...
பதிலளிநீக்குநன்றிகள் பாலா.
@@ Online Works For All...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
@@ suryajeeva said...
பதிலளிநீக்கு//கடவுள் குணம் கொண்ட மனிதன் தான் கடவுள் என்பது என் எண்ணம்//
ரொம்ப அழகா சொல்லிடீங்க சூர்யா.
//எதுப்பு என்பதற்கு நேற்று முழுவதும் லேக்சிகனை பிரித்து தேடியது தான் மிச்சம்...//
எனக்கு அர்த்தம் தெரியாம முழிச்சு, அதை இங்கே சொல்லி, உங்களை இப்படி தேட வச்சி, கஷ்ட படுத்திட்டேன் போல !! :))
தேடல் சுகமானது என்று மனசை தேத்திகோங்கோ பிளீஸ் :))
உங்கள் தேடலுக்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்
@@ இம்சைஅரசன் பாபு.. said...
பதிலளிநீக்கு//அவர் ரொம்ப மோசாமான பயலாச்சே .. அந்த ஆள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா பழகுங்க //
அப்படி ஒன்னும் தெரியலையே...! :) இப்ப சொல்லிடீங்கல இனி கவனமா இருந்துகிறேன்.
வருகைக்கு நன்றி பாபு.
@@ ஓசூர் ராஜன்...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு மிக்க நன்றிகள்.
@@ நம்பிக்கைபாண்டியன் said...
பதிலளிநீக்கு//பதிவுலக நண்பர்களின் உதவும் குணமும் தங்களின் மேன்மேலும் வளரட்டும்! //
வாழ்த்துக்கு நன்றிகள் பாண்டியன்
@@ shankar...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றிகள் சங்கர்.
@@ மகேந்திரன்...
பதிலளிநீக்குகவிதையிலேயே நண்பர்களை வாழ்த்துகிற ஆள் ஆச்சே நீங்க...!!
மனம் நிறைந்த உங்கள் வாழ்த்துக்கு மகிழ்கிறேன், நன்றிகள் மகேந்திரன்
@@ மாங்கனி நகர செல்லக் குழந்தை said...
பதிலளிநீக்கு//என்னமோ...சொல்லி இருக்கீங்க..ஆனா எனக்கு புரியல.....//
இதுக்கு நான் என்ன சொல்ல தெரியல :))
அடுத்த பதிவு உங்களுக்கு புரிகிற மாதிரி எழுதிடுறேன்.
உங்க பேர் வித்தியாசமா இருக்கு.
ஊர் பேரை இப்படி கூட அழகா சொல்லலாமா ?!! :))
முதல் வருகைக்கு நன்றிகள்
@@ r.selvakkumar said...
பதிலளிநீக்கு//தங்ஸ்,
என்ன தவம் செய்தனை என்று நீ குறிப்பிட்ட வார்த்தைகளை உனக்கே டெடிகேட் செய்கிறேன்.//
அண்ணா...!!! :))
//அறிமுகங்கள், அறிந்த முகமாக மாறிய சில நிமிடங்களிலேயே உறவாக மாறுவது அபூர்வம்.//
நாம் சந்தித்த அந்த நாள் நினைவுக்கு வந்துவிட்டது. இவ்வளவு அழகான தருணங்கள் அவை !!
//வாழ்வில் நிறைய சாதிக்கப் போகிற உனக்கு நான் தூண்டுதலாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி//
//இருப்பேன்//
இதை விட வேறு என்ன வேண்டும் அண்ணா எனக்கு...!!
'என்ன தவம் செய்தனை' மீண்டும் உங்களுக்கே !! :))
நன்றிகள் அண்ணா
@@ Surya Prakash...
பதிலளிநீக்குசூர்யபிரகாஷ் உங்களுக்கு என் நன்றிகள்
@@ புலவர் சா இராமாநுசம்...
பதிலளிநீக்குஉங்களை போன்ற பெரியவர்களின் வாழ்த்தும் ஆசிர்வாதமும் கிடைக்க நான் பாக்கியம் பெற்றிருக்கிறேன். எனக்கு உத்வேகத்தை கொடுக்கும் உங்கள் வரிகளுக்காக மகிழ்கிறேன்.
மிக்க நன்றிகள்.
@@ சென்னை பித்தன்...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள்.
@@ கோகுல்...
பதிலளிநீக்குநன்றி கோகுல்.
@@ Starjan ( ஸ்டார்ஜன் )...
பதிலளிநீக்குநன்றிகள் ஸ்டார்ஜன்
உங்கள் சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்,அடுத்த முறை ஊர் வரும் பொழுது சந்திக்கலாம்..
பதிலளிநீக்குUngal Ithayam pol ungal Vaazhvum malara iraivanai vendukiren.
பதிலளிநீக்குஅவசியமே இல்லீங்களே? ஏதாவது செய்தபிறகு தானே நன்றியும் நினைவும்..?
பதிலளிநீக்குசெயலில் இறங்கியிருக்கும் நீங்கதான் என் போன்றவர்களுக்கு மாடல்.. நன்றியை நாங்க சொல்லணுமோ?.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
//சண்டையில் தொடங்கிய எங்கள் அறிமுகம்..
பதிலளிநீக்குinteresting.
@@ அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//அவசியமே இல்லீங்களே? ஏதாவது செய்தபிறகு தானே நன்றியும் நினைவும்..?//
செய்த பிறகு தான் நன்றி என்பது இயல்பு...
ஆனால் உத்வேகம் கொடுப்பது தான் என்னை பொருத்தவரை மிக பெரிய விசயம்...ஊக்கபடுத்துவதும், உற்சாகபடுத்துவதும் இல்லை என்றால் இது போன்ற சேவைகள் செயல் முறைக்கு வராது என்பது என் கருத்து. உங்களுக்கு தெரியாது உங்களின் வார்த்தைகள் என்னை எப்படி தயார் படுத்துகிறது என்பது...!!
இந்த நினைவுகள் எனக்கு சுவாசம் !!
//சண்டையில் தொடங்கிய எங்கள் அறிமுகம்..
interesting.//
உண்மையில் அழகான தருணம் அது. சந்தர்ப்பம் கிடைத்தால் பதிவிட விருப்பம் தான். :))
வாழ்த்துக்கள் வழிநடத்தட்டும்... நன்றி சகோ.
வாழ்வின் அற்புதம் என்ன தெரியுமா? நிறைவான உறவுகளை நாம் சூழப் பெற்றிருப்பது. தன்னை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாக தோன்றும் ஆனால் நிறைவானதாக இருக்காது.
பதிலளிநீக்குதனிமனித தேவைகளின் அளவு தாண்டி ஒவ்வொருவரும் ஆசையின் பொருட்டு தனக்கு மட்டுமே என்று சேர்த்துக் கொண்டு நகருகையில் வாழ்க்கை சிக்குப் பிடித்துப் போகிறது.
தேங்கி நிற்கும் எல்லாமே அழுக்கு பிடிக்கும். இது இயற்கை. நகரும் நதிகள் எப்போதும் பல மனிதர்களுக்கு பல சூழல்களுக்கு பல விடயங்களுக்கு பலனைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கும். பாசமும், அன்பும், அரவணைப்பும், சக மனிதர்களுக்கு செய்யும் சேவைகளாய் பயணித்துக் கொண்டே இருக்கையில் அதன் விளைவுகள் உன்னதமானவை.
நமது செயல்களின் விளைவு நமக்கு திருப்தியை கொடுக்க வேண்டும். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கண்ணயரும் போது இமைகளை மூடிய மூன்றாவது நொடியில் உறக்கம் கைக்கொள்ளுமெனில் திருப்தியின் உச்சத்தில் ஆன்மா லயித்துக் கிடக்கிறது என்று அர்த்தம். திருப்தி என்பது செல்வத்தால் மட்டுமே வந்து விடும் என்று மனிதர்கள் கருதுவதுதான் மாயா, மானுட மடைமை.
பத்துப் பிள்ளைகளுக்கு உதவுததலும், இயலாமையில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்றதை செய்வதும் நமது வாழ்க்கையை பூர்த்தியாக்கும். தன்னார்வத்ட் தொண்டு நிறுவனம் என்னும் எண்ணத்தை செயலாக்கிய இடத்தில் பளீச் சென்று வெளிப்பட்டிருக்கும் உங்கள் ஆன்ம சக்தியின் பலம்..இன்னும் மெருகேறவும், தொடர்ந்து செயல் பட எல்லா வலுவினையும், அதற்கான சுற்றுச் சூழலையும், வாய்ப்புக்களையும் எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி சர்வ நிச்சயமாய் உதவும்.
அற்புதமான மனிதர்களை இயற்கை உங்களைச் சுற்றி வைத்திருக்கிறது. எல்லா விடயங்களும் உள்வாங்கும் அற்புததிறன் உங்களுக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.....தொடர்ந்து எரியட்டும் இந்த அக்னி........! செழிக்கட்டும் சுற்றம்...!
எனது அன்பான வாழ்த்துக்களும் ஆதரவும்....கெளசல்யா!
நன்றிகள்!
@@ asiya omar...
பதிலளிநீக்குநன்றி தோழி, நேரில் நிச்சயம் சிந்திப்போம்
@@ துரைடேனியல்...
பதிலளிநீக்குஉங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்.
பதிவுலகம் பற்றி அருமையாய்
பதிலளிநீக்குசிறப்பான கருத்துக்களின் பகிர்வுகளுக்கு நன்றி.
அன்பின் கௌசல்யா
பதிலளிநீக்குஅருமையான இடுகை - இணையம் மூலமாக நண்பராகி - ஏதோ ஒரு வகையில் உதவிகள் செய்து - இன்றும் நட்பும் அன்பும் பாராட்டி வரும் நண்பர்களை நினைவில் வைத்து - ஒரு இடுகையாக இட்டமை நன்று. மேன்மேலும் தொண்டு நிறுவனம் சிறப்புற நடைபெற, எண்ணங்கள் செயல்களாக மாற, பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
@@ FOOD said:
பதிலளிநீக்கு//அது தேவைப்படுவோரை சென்றடைய எங்களால் ஆன உதவி செய்ய எப்போதும் காத்திருக்கிறோம் தங்கையே.//
உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் அண்ணா.
@@ dheva said...
பதிலளிநீக்கு// தன்னை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாக தோன்றும் ஆனால் நிறைவானதாக இருக்காது.//
சத்தியமான வரி.
//தனிமனித தேவைகளின் அளவு தாண்டி ஒவ்வொருவரும் ஆசையின் பொருட்டு தனக்கு மட்டுமே என்று சேர்த்துக் கொண்டு நகருகையில் வாழ்க்கை சிக்குப் பிடித்துப் போகிறது.//
//தேங்கி நிற்கும் எல்லாமே அழுக்கு பிடிக்கும். இது இயற்கை. நகரும் நதிகள் எப்போதும் பல மனிதர்களுக்கு பல சூழல்களுக்கு பல விடயங்களுக்கு பலனைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கும்.//
இதைவிட அழகா வேறு எப்படி தான் உருவகபடுத்துவது ?!! :))
//நமது செயல்களின் விளைவு நமக்கு திருப்தியை கொடுக்க வேண்டும். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கண்ணயரும் போது இமைகளை மூடிய மூன்றாவது நொடியில் உறக்கம் கைக்கொள்ளுமெனில் திருப்தியின் உச்சத்தில் ஆன்மா லயித்துக் கிடக்கிறது என்று அர்த்தம்//
//திருப்தி என்பது செல்வத்தால் மட்டுமே வந்து விடும் என்று மனிதர்கள் கருதுவதுதான் மாயா, மானுட மடைமை.//
கருத்து என்று சொல்ல வந்த இடத்திலும் எனக்கு பாடம் கற்று கொடுத்து செல்லும் உங்களை எப்படி வாழ்த்துவது என தெரியவில்லை !!
//.தொடர்ந்து எரியட்டும் இந்த அக்னி........! செழிக்கட்டும் சுற்றம்...!//
என் இறை பற்ற வைத்த அக்னி இது...தொடர்ந்து எரியும்...உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் துணையுடன்...!
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...நன்றி தேவா.
@@ இராஜராஜேஸ்வரி...
பதிலளிநீக்குநன்றி தோழி
@@ cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//மேன்மேலும் தொண்டு நிறுவனம் சிறப்புற நடைபெற, எண்ணங்கள் செயல்களாக மாற, பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் -//
ஒரு வார பதிவுகளையும் படித்து சரமாரியாக பின்னூட்டங்களை இட்ட உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்.
உங்கள் வாழ்த்தும் பிரார்த்தனையும் என்னை வழி நடத்தும் என்றும்...
மகிழ்கிறேன் ஐயா
Sorry for the late reply. Just tied up with work over here.
பதிலளிநீக்குCongratulations!!!
Best wishes for you to do more and more!!!!
Keep Rocking!