Tuesday, January 3

11:32 AM
115




   பதிவர் திரு.சங்கரலிங்கம்  அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 



ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.










                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   

                                              

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         


CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 



                  

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.




நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு ஊக்கம் அளித்த திரு.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



Tweet

115 comments:

  1. பகிர்விற்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  2. விசாலினிக்கு எனது அன்பும், பாராட்டும்,
    வாழ்த்துக்களும்...

    திரு.சங்கரலிங்கம் ஐய்யா அவர்களுக்கு என் வந்தனம்...

    ReplyDelete
  3. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுட்டிப்பெண்ணே!
    விசாலினியே ! நீ மேன்மேலும் உயர்வாய்.
    அருமையான தகவல் தந்ததிற்கு நன்றிகள்.
    திறமையை வெளிச்சத்திற்குக்
    கொண்டு வந்ததிற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
    இவள் நம் நெல்லை மண்ணின் மகள் என்றதும் இன்னும் பெருமை கொண்டேன்
    இன்னொரு தாமிரபரணி கிடைத்தது போல!..சகோதரிக்கு வாழ்த்துக்கள் அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  6. நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாத இந்த இளம் சிங்கத்தை பதிவுலதிக்கு கொண்டு வந்த சங்கரலிங்கம் சாருக்கு நன்றி... இதனை பகிர்ந்து கொண்ட என் கவுசல்யா அக்காவுக்கும் நன்றி... என் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்....

    ReplyDelete
  7. சாதனை குழந்தைக்கு வாழ்த்துக்கள்..அண்ணனுக்கும், பகிர்ந்த உங்க்ளுக்கும் நன்றி!

    ReplyDelete
  8. சுட்டிப்பெண் இன்னும் இன்னும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  9. விசாலினியின் திறமைகளை வெளிகொணர்ந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் முதலில் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். விசாலினி மேன்மேலும் பல திறமைகளை வெளிப்படுத்தி பல உலக சாதனைகள் பெற என் ம்னமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  10. விசாலினிக்கு எனது பாராட்டும்,
    வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  11. நானும் எனது பதிவில் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  12. விசாலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. இது போன்ற பயனுள்ள பதிவுகள் தொடரட்டும் சகோதாரி.

    ReplyDelete
  14. விசாலினிக்கு பாராட்டுக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் பல சிறுமி விசாலினிக்கி. அதனை உலகிறியச் செய்ய பகிர்ந்த உங்களுக்கு எம் நன்றிகள்.

    இதோடு நில்லாமல் சிறுமி மேலும் பல எல்லைகளை தொட வேண்டும், தமிழனின் பெயரை உலகம் வியக்கம் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எம் அவா. நன்றி.

    ReplyDelete
  16. @@ FOOD NELLAI...

    இந்த பதிவு எழுத நீங்கள் எடுத்துக்கொண்ட பிரயாசங்கள் பெரிது...நான் அதை நன்கு அறிவேன்...அப்படி தகவல்கள் திரட்டி பதிவிட்ட உங்கள் பதிவை கஷ்டப்படாமல் பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவே. இதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவள் .

    நன்றிகள் அண்ணா .

    ReplyDelete
  17. @@ கே.ஆர்.பி.செந்தில்...

    வருகை தந்து படித்து கருதிட்டமைக்கு மிக்க நன்றிகள்

    :)

    ReplyDelete
  18. @@ ஸ்ரவாணி...

    உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரவாணி.

    ReplyDelete
  19. வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

    ReplyDelete
  20. சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் விசாலினி. நம்மவர்கள் இதனைப் போற்றிக் கொண்டாடவில்லையே என்ற தங்கள் ஆதங்கம் சரிதான். சுட்டிப் பெண்ணுக்கு என் இதய நல்வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  21. @@ புதுகைத் தென்றல்...

    மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  22. @@ S Maharajan said...

    //இவள் நம் நெல்லை மண்ணின் மகள் என்றதும் இன்னும் பெருமை கொண்டேன்
    இன்னொரு தாமிரபரணி கிடைத்தது போல!..//

    நலமா நண்பரே ? ஆளையே காணும் !!

    விசாலினியை தாமிரபரணி போல என்று சொல்லி ரொம்ப பெருமைபடுதிடீங்க...

    :))

    நன்றிகள்

    ReplyDelete
  23. @@ சசிகுமார் said...

    //நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாத இந்த இளம் சிங்கத்தை //

    இளம் சிங்கம்னு சொல்லி அசத்திடீங்க ...!! :)

    //என் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்....//

    மிக்க நன்றிகள் சசி.

    ReplyDelete
  24. @@ விக்கியுலகம்...

    மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  25. @@ MANO நாஞ்சில் மனோ...

    நன்றி மனோ.

    ReplyDelete
  26. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //விசாலினியின் திறமைகளை வெளிகொணர்ந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் முதலில் பாராட்டப்படவேண்டியவர்கள்//

    உண்மை. அவர்களின் ஊக்கபடுத்துதல் இல்லையென்றால் இந்த பெண்ணின் திறமைகள் அவளுக்கு உள்ளேயே இருந்திருக்கும்...அவசியம் அவர்களையும் பாராட்டவேண்டும்.

    நன்றிகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  27. @@ சிநேகிதி...

    நன்றி தோழி.

    ReplyDelete
  28. @@ sasikala...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தோழி.

    ReplyDelete
  29. @@ இடி முழக்கம்...

    வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  30. விசாலினிக்கு வாழ்த்துகள். அவரது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள். விசாலினிக்கு மடலும் அனுப்பி விட்டேன். பகிர்வுக்கு நன்றி கெளசல்யா.

    ReplyDelete
  31. @@ Balaji...

    நன்றிகள் பாலாஜி.

    ReplyDelete
  32. @@ Snabak Vinod said...

    //இதோடு நில்லாமல் சிறுமி மேலும் பல எல்லைகளை தொட வேண்டும், தமிழனின் பெயரை உலகம் வியக்கம் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எம் அவா//

    வினோத் நலமா ?

    கண்டிப்பாக உங்களின் அவா நிறைவேறும் என நானும் வேண்டுகிறேன்.

    இந்த பெண்ணிற்க்காக ஒரு சிறு முயற்சி இது, வேறு ஒன்றும் பலரும் இணைந்து செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளோம்...அதை பற்றி விரைவில் பதிவுலகில் பகிர்ந்து கொள்வோம்.

    நன்றிகள் வினோத்

    ReplyDelete
  33. @@ Hotlinksin.com...

    வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  34. @@ கணேஷ் said...

    //சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் விசாலினி. நம்மவர்கள் இதனைப் போற்றிக் கொண்டாடவில்லையே என்ற தங்கள் ஆதங்கம் சரிதான்.//

    உள்ளூரில் இருக்கும் நிறைய பேருக்கே தெரியவில்லையே என்ற ஆதங்கம் நிறைய இருக்கு.

    சங்கரலிங்கம் அண்ணன் இதனை பதிவுலகிற்கு சொல்ல மேற்கொண்ட முயற்சியை எண்ணி மகிழ்கிறேன் கணேஷ்.

    நன்றிகள்.

    ReplyDelete
  35. @@ ராமலக்ஷ்மி said...

    // விசாலினிக்கு மடலும் அனுப்பி விட்டேன்.//

    மடல் அனுப்பியமைக்கு மிக்க நன்றிகள் தோழி.

    ReplyDelete
  36. இளம் சாதனையாளரைப் பாராட்டுவதில் மிக மகிழ்ச்சி!
    மத்திய மாநில அரசுகண்டு கொள்ள "ஒரு கொலை வெறி" பாடவேண்டுமோ!
    இது தான் தமிழனின் தலைவிதி!

    ReplyDelete
  37. விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  38. சிறுமியின் சாதனைகளை வாசிக்கும் போது உடம்லே சிலிர்த்துவிட்டது

    வாழ்த்துக்கள் அந்த சாதனைபெண்ணுக்கு

    ReplyDelete
  39. All The Best Keep Rocking!!!!!!!!

    ReplyDelete
  40. இதை என் மாணவர்களுக்கு காட்டினேன்

    ReplyDelete
  41. No words...! God bless our Chutti Visalini...! Damn the media which only revolves around the feet of Actors, Politicians...! We are here with Visalini....We will support and encourage our LITTLE GENIUS. Thanks for sharing such valuable info with us, Kousalya...!(Sorry for texting in English...!)

    ReplyDelete
  42. அன்பு செல்லம் விசாலினிக்கு எனது பாராட்டும் அன்பும்
    தமிழர் புகழ் உலகுக்கு உயர்த்திட அந்த சிறுமிக்கு ஊக்கமும், உறுதுணையாயும் இருக்கும் அவள் தம் பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  43. I appreciate her brilliance and wishes all the best. she must be brought to the lime light
    vijayan

    ReplyDelete
  44. இது இறைவனின் பேரருள்.விசாலினிக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    ReplyDelete
  45. சுட்டித்தனம் செய்யும் வயதில்
    கெட்டிக்காரத்தனம்...
    வளரட்டும் விசாலினியின் திறமை...
    வாழ்த்தட்டும் தமிழ்கூறும் நல்லுலகம்...

    ReplyDelete
  46. @@ யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    //மத்திய மாநில அரசுகண்டு கொள்ள "ஒரு கொலை வெறி" பாடவேண்டுமோ!
    இது தான் தமிழனின் தலைவிதி!//

    :)ஆதங்கத்தை இப்படியும் வெளிபடுத்த முடியுமா?

    ஆனா இணையத்தில் இருக்கும் நாம் நினைத்தால் கண்டுகொள்ள வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். அதன் காரணமாகவே இப்பதிவை சங்கரலிங்கம் அண்ணா எழுதினார்கள்...

    இதோ இப்போது பாருங்கள், நம் இணைய நேச உறவுகள் பல இடங்களிலும் ஷேர் செய்து தங்களின் ஒத்துழைப்பை பிரமாதமாக கொடுத்து கொண்டிருக்கிறார்களே...! இது ஒன்றே போதும் !!

    நிச்சயம் ஒரு நாள் மத்திய, மாநில அரசின் கவனத்தை சென்றடையும்... அடைய செய்யும் வரை நாம் ஓயகூடாது !!

    விசாலினியை போற்றி பாராட்டும் ஓர் நாள் வந்தே தீரும்.

    மிக்க நன்றிகள் யோகன்

    ReplyDelete
  47. @@ Kanchana Radhakrishnan...

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  48. @@ ஆமினா said...

    //சிறுமியின் சாதனைகளை வாசிக்கும் போது உடம்லே சிலிர்த்துவிட்டது//

    ஒவ்வொரு தாயுள்ளமும் இதை கேட்டாலே பூரித்து விடும் தானே ? உங்களுக்கு ஏற்பட்டதும் அத்தகைய ஒரு உணர்வு தான் தோழி.

    நன்றிகள்.

    ReplyDelete
  49. @@ Anonymous...

    பேர் தெரிந்தா நன்றி சொல்ல கொஞ்சம் நல்லா இருக்குமே...

    இருப்பினும் வருகைக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  50. @@ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    //இதை என் மாணவர்களுக்கு காட்டினேன்//

    நல்லதொரு காரியம்.

    மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  51. @@ Sathish Kumar said...

    //Damn the media which only revolves around the feet of Actors, Politicians...!//

    மீடியாக்கள் செய்தியை வெளியிட்டன. ஆனால் பெரும்பான்மையோரை சென்று சேரும் படி இல்லை என்பதே உண்மை. நம் மக்களில் ஒரு சிலரும் சினிமா, அரசியல் இதில் தானே அதிக கவனம் கொள்கிறார்கள்.

    //We are here with Visalini....We will support and encourage our LITTLE GENIUS.//

    இது, இது இதை தான் நான் உங்கள் எல்லோரிடமும் எதிர்பார்த்தேன்...எதிர்ப்பார்ப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியில் தற்போது இருக்கிறேன்.

    //(Sorry for texting in English...!)//

    பரவாயில்லைங்க.

    நன்றிகள் சதீஷ் குமார்.

    ReplyDelete
  52. @@ வேர்கள் said...

    //அன்பு செல்லம் விசாலினிக்கு எனது பாராட்டும் அன்பும்
    தமிழர் புகழ் உலகுக்கு உயர்த்திட அந்த சிறுமிக்கு ஊக்கமும், உறுதுணையாயும் இருக்கும் அவள் தம் பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துகள்//

    விசாலினியின் பெற்றோரை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம் , சிறுவயதில் பேச மிக சிரமபட்ட குழந்தையை கொஞ்ச கொஞ்சமாக பேசவைத்து பழக்கி இருக்கிறார்கள்...!!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  53. @@ Anonymous said...

    //I appreciate her brilliance and wishes all the best. she must be brought to the lime light
    vijayan//

    உங்களின் மனம் நிறைந்த வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றிகள் விஜயன்.

    ReplyDelete
  54. @@ asiya omar said...

    மிக்க நன்றிகள் தோழி.

    ReplyDelete
  55. @@ மகேந்திரன் said...

    //சுட்டித்தனம் செய்யும் வயதில்
    கெட்டிக்காரத்தனம்..//

    சுட்டித்தனமும் அதிகம் இருப்பதாக கேள்வி :)

    மிக்க நன்றிகள் மகேந்திரன்.

    ReplyDelete
  56. ivali paratta vayathuillai varthaiyuillai

    ReplyDelete
  57. unnai petra un thaiku enadu paratukal. and un thai kaalai thotu vanankukiran

    ReplyDelete
  58. பகிர்விற்கு நன்றி !!!!சாதனைபெண்ணுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள் விசாலினி...உன்னால் ஊரும், உலகமும் ஒருநாள் பெருமை பெரும். நீ நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. அஸ்ஸலாமு அலைக்கும்
    சாதனை மாணவி விசாலினிக்கு வாழ்த்துக்கள். இன்னும் பற்பல சாதனைகள் அவர் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  61. alex: hi visalini,
    indru pol endrum sathanaigal padaikka enathu valthukal.....

    ReplyDelete
  62. விசாலினிக்கு எனது அன்பும், பாராட்டும்,
    வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  63. Superb Visalini!!!.. Whether the Media hails u or critizises u.. Don't get into it.. only think that can take u where u want to be is Self-Motivation.. U have the talent and the gift of a great IQ. Keep Rocking!!!

    ReplyDelete
  64. T.N.Thasan......jaffna9:13 PM, January 05, 2012

    I wish for your achievement......

    ReplyDelete
  65. விசாலினிக்கு எனது அன்பு வாழ்த்துக்கள் ....
    பகிர்வுக்கு நன்றி கௌசல்யா

    ReplyDelete
  66. It was great to know about Visalini. Thank you for sharing!

    ReplyDelete
  67. loooong live baby....if india doesn't recognize you....then remember...you are the real achiever...bcoz here no one recognises true effort....corrupted country...you go ahead....we indian(public) are here to backbone you

    ReplyDelete
  68. HI congrats little girl..If someone can translate this blog in to English this will reach many people, a small suggestion..Sorry I am not good at blogging..All the very best to this girl..

    ReplyDelete
  69. விஷாலினிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்விற்கு மிக்க நன்றி கௌசல்யா.

    ReplyDelete
  70. Congratulation to youngest guiness record holder Visalini;),I pray god this girl should reach greater heights,I have no words to express my feelings
    ...P.Agilan

    ReplyDelete
  71. விசாலினிக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்..
    Paramanthan Thanusanth

    ReplyDelete
  72. விசாலினிக்கு எனது அன்பு வாழ்த்துக்கள் ...
    Paramanthan Thanusanth

    ReplyDelete
  73. valga valamudan tamilay tamilaray,,,,,,,

    ReplyDelete
  74. god bless you..our nellai vishalini. carry on,

    ReplyDelete
  75. god bless you..our nellai vishalini. carry on

    ReplyDelete
  76. விசாலினிக்கு எனது அன்பும், பாராட்டும்,
    வாழ்த்துக்களும்...
    விஷாலினிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்விற்கு மிக்க நன்றி Kamachi

    ReplyDelete
  77. விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  78. மனம் திறந்து பாராட்டுகிறேன் ... வாழ்க வாழ்க .... ஆனால் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் போன்ற ஒப்புயற்வற்ற தம்ழ் அற நூல்களை முதலில் குழந்தைகளுக்கு சொல்லிக்குடுங்கள். உலகம் நிரம்ப மெட்டீரியலாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆரக்கிள் தராத ஆறுதலையும் அறநிலையையும் ஆத்திச்சூடி ஊட்டும்.

    ReplyDelete
  79. my hearty congratulations visa!!!!!!!!!!!

    ReplyDelete
  80. மென்மேலும் உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள், விசாலினி. பகிர்ந்தமைக்கு நன்றிகள் கௌசல்யா !!

    ReplyDelete
  81. Hearty congradulations dear..long live

    ReplyDelete
  82. Hello VESELANI Kuddy Valththukal, Long Live , I Wish 4 U Achievement

    ReplyDelete
  83. மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  84. Indiavin arivu pokkisham "Vishalini" en manamarntha vazhthukkal... God bless u...

    ReplyDelete
  85. விசாலினியின் சாதனைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! பெற்றோருக்கு எங்கள் பாராட்டுக்கள்! உங்கள் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  86. VISHALINI - VICTORY
    CONGRATS FOR YOUR ACHIVEMENT.I PROUD OF YOU

    ReplyDelete
  87. Hi genius....I red about you in a Tamil news paper... U r gr8...

    ReplyDelete
  88. விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! மிகவும் பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது

    ReplyDelete
  89. ஹரி பிரகாஷ்..12:27 AM, January 11, 2012

    வாழ்த்துக்கள்ம்மா விசாலினி..

    பிழைப்பிற்காக படிப்பு என்பது தான் எங்கள் நிலை..
    சாதிச்சு நிக்கிற உன்னை பார்த்து பெருமை படுகிறேன் ம்மா..

    மைக்ரோசாப்ட் கம்பெனி ல கண்டிப்பா உன் திறமைக்கு madhippum உண்டு வேலையும் உண்டு ..

    என் வாழ்த்துக்கள் என்றும்..

    ஹரி பிரகாஷ்..

    ReplyDelete
  90. first of all my hearty congratulations for our icon of Tamil Nadu.
    i will do my best to familiarize this wonderful child(by sharing to all my friends)to the world.
    And i was so upset why still this child of miracle didn't get her recognition from the state & central government.
    I wish the child may in future she will get the reward for her talent and will show our state's identity to this country and the world.
    ALL THE BEST... for Vishalini and great wishes to her parents.
    regards,
    satish.

    ReplyDelete
  91. 68.
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

    ReplyDelete
  92. Congrats vishalini.............

    ReplyDelete
  93. என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டும்...!
    ஓங்குக விசாலியின் புகழ்...

    ReplyDelete
  94. Heartiest congratulations

    ReplyDelete
  95. hi vishalini.......
    goood evening...this is arumugam from coimbatore...wat a great power you are having.it is really amazing..your parents are very lucky bcoz of you.i wish you for your brightful future.in future you will achive a lot,i wish you again sister.i dont have enough words to wish you but anyway you have a better future ahead....
    god is always with you my dear......BYE.....BYE
    arumugam
    BOSCH,covai.

    ReplyDelete
  96. unathu thiramaikalai kandu nan viyaken intha anbu thamilanin manam niraintha paratukal visalini indiavirkum, thamilnattirkum, namma tirunelveli oorukum pearumai theadi thanthai unai thooki vaithu kondada nangal irukirom thool kodukavum irukirom vaalthukal

    ReplyDelete
  97. senguttuvan chicago2:17 AM, January 15, 2012

    விசாலினிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  98. சுட்டிக்கு வாழ்த்துக்கள். நானறிந்த இணையங்களில் பகிர்ந்துள்ளேன்...

    நன்றி.

    செந்தூரன்.

    ReplyDelete
  99. இந்த சுட்டி பெண்ணின் அறிவை இந்திய அரசு அல்லது தமிழக அரசு அல்லது தமிழ் மக்கள் புகழ்வார்கள் என்று எதிபார்க்க வேண்டாம் , இங்கிருப்பவர்கள் அறிவை கண்டு அஞ்சுபவர்கள். அறியாமையை கண்டு வாங்குபவர்கள், எனவே தொய்வின்றி இந்த இளம் மகளை உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுங்கள். வாய்ப்புக்கள் பெருக என்னுடைய வாழ்த்துக்கள்.

    கௌதம சன்னா
    கொள்கை பரப்பு செயலர்
    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    ReplyDelete
  100. இந்த சுட்டி பெண்ணின் அறிவை இந்திய அரசு அல்லது தமிழக அரசு அல்லது தமிழ் மக்கள் புகழ்வார்கள் என்று எதிபார்க்க வேண்டாம் , இங்கிருப்பவர்கள் அறிவை கண்டு அஞ்சுபவர்கள். அறியாமையை கண்டு வாங்குபவர்கள், எனவே தொய்வின்றி இந்த இளம் மகளை உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுங்கள். வாய்ப்புக்கள் பெருக என்னுடைய வாழ்த்துக்கள்.

    கௌதம சன்னா
    கொள்கை பரப்பு செயலர்
    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    ReplyDelete
  101. இதனை ஆங்கிலத்திலும் எழுதியிருந்தால் இன்னும் பலருக்கு இச் சேதி போய் சேரும்... இல்லையா....

    இந்தியாவில் பிறக்காமல் இருந்திருந்தாலும் அவர்கள் மொழியில் மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தால் .... வெளிவருமா....

    எல்லோருக்கும் ஓரளவேனும் தெரிந்த மொழியில் வருவது செய்தியைப் பலவிடங்களுக்குக் கொண்டு செல்லும்...

    இது என் கருத்து....

    விசாலினிக்கு எம் பாராட்டுகள் .... என்றும்... உண்டு....

    ReplyDelete
  102. cograulations.visalini wish u all the best.

    ReplyDelete
  103. விசாலமான இந்த உலகமே உனது பெயரை ஆச்சரியத்தோடு விசாரிக்கட்டும் குழந்தாய்!! என் தாய் நாட்டின் நல்ல இளம் சிற்பியே... உனக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  104. விசாலினிக்கு எம் பாராட்டுகள்

    ReplyDelete
  105. all the best da enngal tamil thagamae..............

    ReplyDelete
  106. சுட்டிப்பெண் இன்னும் இன்னும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள்...!!!

    sakthi

    ReplyDelete
  107. great achievement.. i am very proud abt visalini..congratss

    ReplyDelete
  108. அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  109. குழந்தைக்கு வாழ்த்துகள். உண்மையில் இத்தகவல் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். குழந்தைக்கும் வாழ்த்துகளை அனுப்பிவிட்டேன். தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  110. சாதனைகளை கவுரவிப்போம்! நல்லதொரு பகிர்வு...

    ReplyDelete
  111. நல்வாழ்த்துக்கள் விசாலினி.பகிர்வுக்கு நன்றி கௌசல்யா.

    ReplyDelete
  112. Menmaellum saadhanaigal padaithida vaalthukal....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...