எனது பிரியத்துக்கு உரிய தோழனின்(கணேஷ்) கல்யாண நாள் இன்று. எங்களின் நட்பை நினைகூரும் விதமாய் ஒரு கவி மடல் அந்த நண்பனுக்கு......!!
இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
என்னால் வாழ்த்த இயலவில்லை..!
வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
என்னவாயிற்று எனக்கு.... ?
என்னை உன் புன்னகையால்
கவர்ந்தாய்! உன் அன்பு, அக்கறை
கலந்த பேச்சால் என் மென்மையை
உணர வைத்தாய்...!!
ஐந்து வருடமாய் என்னை
சந்தோசபடுத்தி மட்டுமே பார்த்த நீ
அழவைத்தும் பார்க்கிறாய் !!
அன்று....
உன் கல்யாணத்திற்கு வர இயலாது
என்று மறுத்தும் , வரவழைப்பேன்
என்ற உன் வார்த்தையின் தீவிரம்
புரிந்து ஓடி வந்தேன்...?! என்னை கண்டதும்
களங்கமின்றி புன்னகை புரிந்தாய்,
காலில் விழுந்து, என் அன்பையும்
ஆசியையும் ஒரு சேர பெற்றாய்!!
அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
பலமுறை நன்றி சொன்னாய் என்
வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
நன்றியா ? போடா வெங்காயம் என்று
ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!
நீ எனக்கு தூரத்து உறவாம்,
நட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் !!
மற்றவர்களுக்கு நாம் தாய், மகன்
நட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் !!
மற்றவர்களுக்கு நாம் தாய், மகன்
உறவு முறைதான்.... அதைவிட
புனிதமான உறவு, நாங்கள்
நண்பர்கள் என்பேன்....!! எனக்கு
சேவகனாய், தோழனாய், சில நேரம்
தாயாய் யாதுமாகி நின்றாய்!!
எங்கோ இருந்தும் நினைவுகளால்
தொடர்ந்து கொண்டிருப்பாய் !! சிறு
தலைவலிக்கும்,பதறி ஓடி வந்து
பணிவிடை புரிவதை
பார்க்கும் என்னவர், என்னை மறக்க
வைத்துவிடாதே என்று செல்லமாய்
உன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்
என் வலி இருந்த இடம் எங்கே
என்று நான் தேடவேண்டி இருக்கும் ??!!
அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு
போகிறேன் என்று சொன்னாலும்,
அவரின்றி தனியாக வேண்டாம்
நான் வருகிறேன் என்பாய்.....!
சிரித்து கொண்டே சொல்வேன்...
நீ இருப்பதோ பல மைல் தூரம் தள்ளி என்று...!!!
உன் கண் மூடித்தனமான அன்பால்
பாதிப்பு இல்லை என்றுதான்
எண்ணினேன், அடுத்தவரிடம் பேசியதை
கூட தாங்க முடியாமல்
உன்னை நீ வதைத்து கொண்ட
போதுதான் உணர்ந்தேன்...!!
பாதிப்பு உனக்கில்லை
எனக்குத்தான் என்று ??!
இரு குழந்தைகள் உனக்கு இருந்தும் நீ
குழந்தை தான் எனக்கு....உன் அன்பில்
நிதானத்துடன் கூடிய நேசம் வர
இந்த இடைவெளி வேண்டும்தான்!!
அன்பு கொள்ள வேண்டுமே தவிர
தன்னையே கொல்லக்கூடாது....!
( இந்த மடலை முடிக்கும் முன்னே உன்னை அழைத்து வாழ்த்த எண்ணுகிறதே என் மனம், என் பேரன்கள் மருமகளுடன் இன்று போல் என்றும் இணைந்து நீ வாழ வாழ்த்துகிறேன் )
