திங்கள், நவம்பர் 8

9:09 AM
46முந்தைய பதிவில் பெண்கள் சம்பந்த பட்ட உச்சகட்டம் என்ன என்பதை பற்றி சிறிது சொல்லி  இருந்தேன். பதிவை பற்றி வந்த மெயில்களில் பல சந்தேகங்களை கேட்டு இருந்தனர், இதனை பற்றி இவ்வளவு சந்தேகங்களா என்று ஆச்சரியம் வரவில்லை மாறாக ஏன் இப்படி தெளிவில்லாமல் இருக்கிறோம் என்ற ஒரு ஆதங்கம் தான் இருக்கிறது. படித்த கணவன்  மனைவிக்கு இடையில் கூட இதனை பற்றிய தெளிவு இல்லை என்பதை என்னவென்று சொல்வது...?! எது பரவச நிலை என்பது தெரியாமல் அல்லது உணராமல் இருக்கும் போது, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை எப்படி புரிந்து கொள்ளமுடியும்....?? 


திருமணம் முடித்தோம், பிள்ளை பெற்றோம், பள்ளிக்கு அனுப்பினோம், சம்பாதிக்கிறோம், பேங்க்கில் (Bank Balance)  சேமிப்பை அதிகரித்தோம் என்று வாழ்வது எப்படி ஒரு நிறைவான வாழ்வாகும்...?? கடைசிவரை ஒன்றாக எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுகமாக ஒருவருக்கு ஒருவர் அன்பாக வாழ்ந்து முடிப்பது தானே ஒரு நிறைவான வாழ்க்கையாகும்...!! அப்படி வாழ்கின்ற பெற்றோர்களால் தான் இந்த சமூகத்திற்கு சிறந்த சந்ததியினரை விட்டு செல்ல முடியும்.      

/////பெண்களின் உச்சக்கட்டத்துக்கும் ஆண்களின் உச்சக்கட்டத்துக்குமிடையே இருக்கும் அடிப்படை வேறுபாடும் இந்த புரிதல் குறைவின் காரணமாக இருக்கலாம். காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன். பெண்களுக்குத் தோன்றும் பரவச இடைவெளிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆண்களும் (பெண்களும் கூட) "திருப்தி அடைந்து விட்ட" தாக நினைப்பதும் உண்டு. ஆண் பெண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம் தான் (உங்கள் பதிவில் கூட கணவன் மனைவியை ஆள்கிறான் என்று தான் எழுதியிருக்கிறீர்கள் :). பெண் ஆணை அடக்கக் கூடாது என்று நினைக்கிறோமா? கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது? எந்தக் கட்டத்தில் அத்தகைய பாகுபாடு மறைகிறதோ அந்தக் கட்டத்தில் தான் uninhibited (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) உறவு தொடங்குகிறது. பரவசங்கள் இருபுறமும் ஏற்படுகின்றன. தவறாக நினைக்கவேண்டாம்.. ஒரு பெண் உடல்சுகத்தை விரும்பினாள் என்றாலே - கணவனே கூட அதைத் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கலாசாரத்தில் இது போன்ற சாதாரண எதிர்பார்ப்புகள் கூட ரேடிகல் முற்போக்குத்தனமாகத் தான் தெரிகிறது. முழுமைப் புணர்ச்சியின் உடல்சுகத்துக்கு அப்பாற்பட்ட உள/உடல் பலன்களை அறியாமல் போகிறோம். டிப்ரெஷனில் இருப்பது கூடத் தெரியாமல் வாழ்கிறோம்./////

போன பதிவிற்கு வந்த அப்பாதுரை என்பவரின் பின்னூட்டம் தான் மேலே உள்ளது. நல்ல கருத்துரை. அவர் குறிப்பிட்ட நிலைதான் நம்மிடையே இருக்கிறது...


ஒரு பெண்  தான் விரும்பியதை சொல்ல கூடாது மீறி சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வர கூடிய அளவிற்கு தான் நம் கலாசார கணிப்பு இருக்கிறது....!!? ஆனால் நம் கலாசாரம்  என்றோ மாற தொடங்கி விட்டது பல விசயங்களில்...?! இன்னும் மாறி கொண்டிருக்கிறது...இல்லை மாற்றிக் கொண்டிருக்கிறோம்....! மாறும் காலத்திற்கு ஏற்ற  மாதிரி கணவனும் தன் மனைவியின் விருப்பம்  என்ன என்று தெரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கும் நிலை வர வேண்டும்...கட்டாயம் வந்துதான் ஆக வேண்டும் இந்த அந்தரங்க விசயத்தில்...! கணவன், மனைவி இருவருமே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இது வெறும் உடல் சார்ந்தது என்பது மட்டும் இல்லை.  உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியம் இதை வைத்துதான் இருக்கிறது.  

ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான். ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு  பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று ,  இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் தான்...!?  இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்க தொடங்குகிறாள். இதற்கு ஆண்களையும்  குறை சொல்ல முடியாது அவர்களின் உடல் அமைப்பு அப்படி....! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண்  தங்கள் தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.


கணவன் மனைவி உறவில் முழு திருப்தி அடையாதவர்கள்  நிச்சயமாக மன அழுத்தத்தில் விழுவார்கள். சமீப காலமாக ஒவ்வொருவரும் தங்களது சந்தோசம் தங்களது நிம்மதி என்று பிரித்து சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார்கள். வாழும் காலம் குறைவுதான் என்பது போலவும் அதற்குள் அனைத்தையும்  அனுபவித்து விட வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள்  பெருகி விட்டன. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட போய் தன் மனதை ஒரு நிலைபடுத்த என்று யோக நிலையங்களும், தியானம் செய்யுங்கள் என்ற போதனைகளும் அதிகரித்துவிட்டன. இயன்றவர்கள் மன நல  மருத்துவரை நாடுகின்றனர். 'கவுன்செலிங்' என்ற வார்த்தைகூட இப்போது நாகரீகமான வார்த்தையாக மாறிவிட்டது.  மனதை தடுமாற செய்ய கூடிய காரணிகள் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்ததால்தான் 'மனதை ஒரு நிலை படுத்துங்கள்' என்ற கோஷமும் வலுக்கிறது...வேறு சிலரோ ஆன்மீகத்தை நோக்கி சென்று தங்களை காத்து கொள்ள போராடுகின்றனர்.  

திருமணம் முடிந்தவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்ற அந்தரங்கத்தை அவசியமானதாக எண்ணுங்கள். அதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள் உறவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்..அந்த நேரம் முழுவதும்  உங்களுக்கான  நேரம் என்பதை மறவாதீர்கள். அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பெற கூடிய உற்சாகம் பல மடங்காய் அதிகரித்து தொடரும் நாட்களில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை  உணருவீர்கள். இந்த உறவு சரியாக இருக்கும் பட்சத்தில்,  தேவை இல்லை யோகாவும், தியானமும் இதைவிட சிறந்த உடற்பயிற்சியும் வேறில்லை....என்று நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

உறவு என்ன என்று தெரியவைக்க இப்போது மீடியாக்கள் முக்கியமாக இணையம் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது கணவன் மூலமாக அல்லது காதலன் மூலமாக சில பெண்களும் தெரிந்து வைத்திருக்கலாம். இந்த பட்சத்தில் மன அளவில், உடல் அளவில் அதை உணர , அனுபவிக்க விரும்புவது  இயல்புதான். முறையாக கிடைக்க வேண்டிய ஒன்று முறையற்ற  விதத்திலாவது கிடைத்துதானே ஆகும், அதுதானே நியதி....?! சந்தர்ப்பம் வாய்த்தவர்கள்  பெறுகிறார்கள், முடியாதவர்கள் மருகுகிறார்கள். மற்றபடி  மனதை சமாதானப்படுத்திக்   கொண்டு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அளவு வரை தான். (இந்த அளவு நல்ல குடும்ப உறவில் இருப்பவர்களை குறிப்பிடாது.)

கணவர்களின் புரிதலுக்காக

குழந்தை பெற்று தர வேண்டும், ஆணின் சந்தோசத்திற்கு என்று மட்டும் எண்ணாமல் அவளது உணர்வுகளுக்கும் ஒரு வடிகாலாய் அந்த பெண்ணின் கணவன் இருந்தாக வேண்டும். கணவனால் முழு  இன்பம் கிடைக்க பெறாதவர்கள் அல்லது அந்த உச்சகட்டம் என்ற நிலையை அறியாதவர்கள் தான் வெகு சுலபமாக தவறான உறவில் விழுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொள்ள நேரிடும் போது அந்த ஆண் முதலில் இந்த பெண்ணை தனது பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புவான். முழுவதுமாக அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடைய செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?) 

மனைவியரின்  புரிதலுக்காக

ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பதுதான் இந்திய பெண்களின் மனோபாவம் !? ஆனால் இந்த மனோபாவம் சிறிது மாற வேண்டும். மனைவியரும் தங்கள் கணவனின் விருப்பம் அறிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். (இதை பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளிலசொல்லி விட்டேன்)   வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று (மனம்  அல்லது உடல்  சம்பந்த பட்டதாக இருக்கலாம்) வெளியே  கிடைக்கிறது என்று தான் பல நல்ல கணவர்களும் தவறுகிறார்கள்....அது என்னவென்று அறிந்து சரி செய்து கொள்ளவேண்டியது அந்த மனைவியின் கடமைதான். ஒரு முறை தவற விட்டுவிட்டால் திரும்ப பெறுவது மிக கடினம் என்பதை பெண்கள் (மனைவியர் ) மறந்து விட கூடாது.


பெண்கள் நடுத்தர வயதை கடந்தாலும் இன்னும்  சொல்ல போனால் மெனோபாஸ் நிலை வந்த பின்னரும் கூட உறவில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் (மனைவியரின்) ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் நடுத்தர வயதை தாண்டிய பல ஆண்களும் தவறான வேறு வழிகளை எண்ண தொடங்குகிறார்கள்.

அதிலும் பெண்களின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் தான் இருவருமே உச்சகட்டத்தை அடைய முடியும் என்பதை பெண்கள் மறந்து விட கூடாது. உடலும்  மனமும் இணைந்து  
ஈடுபடும் போது தான் பெண்களுக்கும் இன்பம் அதிகரிக்கிறது.


ஒரு கருத்து 


கணவன், மனைவி  இருவரும் பொதுவான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக்  கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத்  தான் தவறுகிறார்கள்....??!! 


கணவன் அல்லது மனைவி பாதை தவறுவது எதனால்.....??!


எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது ஆனால் பொதுவாக சில காரணங்களை கூற முடியும் அதில் முக்கியமான ஒன்று....

ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவ்னெஸ் என்கிற அதீத அன்பு (தமிழில் அர்த்தம் சரியா என்று  தெரியவில்லை மன்னிக்கவும்) ....!!

* ஒருவர் மீது ஒருவருக்கு அதிகபடியான காதல் இருப்பது எப்படி தவறாகும்....?
* அதீத அன்பு எப்படி பாதை மாற காரணம் ஆகும்....??

இப்படி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான்...அது எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்....

தாம்பத்தியத்தின் அடுத்த பாகம் நாளை மறுநாள்....
  வாசலில் புதிய தொடர் இனியது காதல்...!Tweet

46 கருத்துகள்:

 1. தெளிவான விளக்கவுரை!
  தேவையான பாடம்!

  பதிலளிநீக்கு
 2. வெகு அருமையாக அலசி ஆரய்ந்து உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். இதைப் பற்றிப் பேசுவதே தவறு என்ற நிலை இருக்கும்வரை,மாற்றங்கள் வருவது அதிசயமே.
  பெண்ணோ ஆணோ,தாம்பத்தியத்தில் பூரண திருப்தி இல்லாவிடில் புகைச்சல் தான் குடும்பத்தில் இருக்கும். கண்டது காணாதது எல்லாவற்றுக்கும் சண்டை. மறைமுக பனிப்போர். திண்டாடுபவர்கள் குழந்தைகளே.வெகு நிதானத்தோடு அணுகுகிறீர்கள். வாழ்த்துகள் கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 3. கணவன், மனைவி இருவரும் பொதுவான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத் தான் தவறுகிறார்கள்....??!!


  ....interesting to know!

  பதிலளிநீக்கு
 4. காலைலதான் நினைச்சுகிட்டு வந்தேன்.... ! ஒரு விசயத்த காலம் புல்லா ஒதுக்கி ஒதுக்கி மறைச்சு மறைச்சு வச்சி அது பற்றிய புரிதல் இல்லாம அதை திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குற மாதிரி மக்கள் மனோ நிலை இருக்கே....ஏன் இது ஒரு கல்வியா இன்னும் நம்ம ஊர்ல ஏத்துக்க முடியலன்னு.....?

  நிறைய வக்கிற புத்தி இருக்கவங்களால கட்டுரையின் நோக்கம் கூட தவறாக புரிந்து கொள்ளப்படலாம் கெளசல்யா.. ஆனால்.... ஆழமான உண்மைகளை பேசத்துணிந்த செருக்கும் அறிவும் எப்போதும் பாராட்டுதலுக்குரியது.

  அறிவின் விசாலம் தெளிவினை கொடுக்கும்... 18+ ல போய் திருட்டுத்தனமா ஏ ஜோக் படிகிறதால எந்த பிரோயசனமும் இல்ல..ஆன அங்க தான் கூட்டம் அலை மோதுது... ! இது போன்ற புரிதல் அதிகமுள்ள் கட்டுரைகளை படித்து விளங்கிக் கொள்ளிதல் ஒரு சீரான சமுதாயத்தை சமைக்க உதவும்....

  சூப்பர், அருமைன்னு எல்லாம் கமெண்ட் போட தோணல எனக்கு.... இது போன்ற விழிப்புணர்வு அதுவும் பேசாப் பொருளை பேசத் துணிய கடவுள் கொடுத்திருக்கும் அறிவு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை விட்டுச் செல்ல மட்டும் ஆசைப்படுகிறது...!

  நிறைய விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுங்கள்....! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. ரொம்பத் தெளிவா சொல்லிருக்கீங்க.
  நல்ல தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 6. நிறைய விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுங்கள்....! வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இந்த மாதிரி பதிவு ரொம்பவும் அவசியம் ...........எழுத்து எல்லாம் அழகாக கோர்வையாக வருகிறது ..........ஆமா ஆமா சில பேர் 18 + கூட போடுறாங்க ............ஆனா உங்கள மாதிரி பதிவர்கள் நிறைய பேர் வர வேண்டும் என்றும் ஆசை படுகிறேன்

  பதிலளிநீக்கு
 8. பதிவு சூப்பர்.ஒரு ஆலோசனை.பாகம் பாகமா போடாம ஒவ்வொண்ணுக்கும் புது டைட்டில் வெச்சா நல்லாருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. //கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத் தான் தவறுகிறார்கள்//

  brilliant catch up. :-)

  பதிலளிநீக்கு
 10. //கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத் தான் தவறுகிறார்கள்//

  brilliant catch up. bravo kousalya. :-)

  பதிலளிநீக்கு
 11. பெண்ணை உறவில் அக்கறையுடன் நிறைவா எனக் கேட்க வேண்டும். இது கேட்காமல் செயல்படுவதே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது என் புரிதல்

  நன்றி சகோ. இந்த தலைப்பில் இன்னும் விரிவாக அலசுங்கள்.

  மனப்பூர்வமான வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. அனைவரும் படிக்க வேண்டிய பதிவுங்க.

  பதிலளிநீக்கு
 13. எளிமையாகவும் நுட்பமாகவும் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
  தாம்பத்திய உறவு சிறக்க ஆண்-பெண் நெருக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தலும். ஒருவரை ஒருவர் மதித்து அறிந்து நடக்கவில்லையென்றால் ஆரம்பத்திலேயே படுக்கையறையும் பாசாங்கறையாக முடிந்து விடும். பிறகு கடமைக்காக கலவி, குடும்பம் என்று தொடரும் ஆபத்து இருக்கிறது. ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து நெருங்கி வாழும் நிலையில் கூட காலப் போக்கில் சலிப்பும் (வளர்ச்சியும் கூட) உறவில் விரிசல்கள் ஏற்படுத்தலாம். மூன்று-ஐந்து வருடங்களுக்கொரு முறை புத்துணர்ச்சி பிறக்கும் வகையில் ஏதாவது ஒருவருக்கொருவர் செய்தால் நெருங்கிய உறவு பிழைக்கும் - இல்லையென்றால் இன்றைய சூழலில் விரிசல்கள் வேகமாகவே வளர வாய்ப்பிருக்கிறதென்று நினைக்கிறேன்.
  'தவறுதல்' என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அமைதியும் இன்பமும் இல்லாத கணவன்-மனைவி உறவினில் இன்னொருவரோடு பழகுதலோ கலத்தலோ தவறா? கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் ஆண்கள் - பெண்கள் இருவருமே தவறு செய்கிறார்களா? ஆண்கள் 'தவறி'னால் அனுசரித்துப் போகச் சொல்லும் சமூகம் பெண்கள் 'தவறி'னால் அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? உடல் சுகத்தை உடல் சுகத்துக்காக அனுபவிக்கும் பக்குவம் நம் சமூகத்தின் சில தட்டுகளில் மட்டுமே வந்திருக்கிறதே, ஏன்?

  பதிலளிநீக்கு
 14. //ஒரு பெண் தான் விரும்பியதை சொல்ல கூடாது மீறி சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வர கூடிய அளவிற்கு தான் நம் கலாசார கணிப்பு இருக்கிறது....!!?///

  இது உண்மைதான் அக்கா ., உங்களுக்கு நேரம் இருந்தால் நான் தற்பொழுது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன் ,வந்து படித்துப் பார்த்துவிட்டு கருத்துக்களைக் கூறவும் .. பெண்கள் பற்றிய கதைதான் ..

  பதிலளிநீக்கு
 15. எங்கள் எதிர்கால வாழ்வில் எதிகொள்ளப்போகும் விசயங்களைப் பற்றி எழுதிருக்கீங்க அக்கா . அதற்க்கு எனது நன்றிகள். நிச்சயம் இது போன்ற பதிவுகள் நன்மை பயக்கும். என்ன பிரச்சினை என்று தெரிந்துகொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும் ..மீண்டும் ஒரு முறை நன்றி ..!!

  பதிலளிநீக்கு
 16. அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடைய செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?)
  இது வேறு ஒன்றும் இல்லை....தினம் சாப்பிட்டதையே மீண்டும் மீண்டும் சாப்பிடும் பொழுது ஒரு சலிப்பு ஏற்படும் ....தீடிரென புது சாப்பாடு கிடைக்கும் பொழுது ....அதுவும் பிறர்க்கு பயந்து ...பயந்து ....சாப்பிடும் பொழுது ...அரிதாக சாப்பிடும் பொழுது ஒரு கிக் கிடைக்கும் ...அந்த கிக்கில் மயங்கி தான் .....தொலைந்து போகிறார்கள் ..... தச்சை கண்ணன்

  பதிலளிநீக்கு
 17. S Maharajan said...

  //தெளிவான விளக்கவுரை!//

  வாங்க சகோ. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வல்லிசிம்ஹன் said...

  //வெகு அருமையாக அலசி ஆரய்ந்து உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். இதைப் பற்றிப் பேசுவதே தவறு என்ற நிலை இருக்கும்வரை,மாற்றங்கள் வருவது அதிசயமே.
  பெண்ணோ ஆணோ,தாம்பத்தியத்தில் பூரண திருப்தி இல்லாவிடில் புகைச்சல் தான் குடும்பத்தில் இருக்கும். கண்டது காணாதது எல்லாவற்றுக்கும் சண்டை. மறைமுக பனிப்போர். திண்டாடுபவர்கள் குழந்தைகளே.வெகு நிதானத்தோடு அணுகுகிறீர்கள்.//

  உங்களின் அருமையான புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. குழந்தைகளை மனதில் வைத்தாவது பெற்றோர்கள் புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. Chitra said...

  //interesting to know//

  இது உண்மைதான் தோழி...! ஆலோசனை கேட்டு பெண்களிடம் இருந்து எனக்கு வரும் மெயில்களில் மூலம் நான் தெரிந்து கொண்டது தான் இது.....

  பதிலளிநீக்கு
 20. சே.குமார்...

  புரிதலுக்கு நன்றி சகோ.


  சசிகுமார்...

  நன்றி சசி.

  பதிலளிநீக்கு
 21. dheva said...

  //ஏன் இது ஒரு கல்வியா இன்னும் நம்ம ஊர்ல ஏத்துக்க முடியலன்னு.....?

  நிறைய வக்கிற புத்தி இருக்கவங்களால கட்டுரையின் நோக்கம் கூட தவறாக புரிந்து கொள்ளப்படலாம்//

  நம்ம ஊர்க்கு மிக அவசியம் தான் இந்த கல்வி...ஆனா இந்த கல்வி வரகூடாதுன்னு பெற்றோர்கள் தான் எதிர்கிறாங்க...?!

  எனக்கு வரும் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் போது கட்டுரையின் நோக்கம் இப்பவரை சரியாக தான் புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

  கட்டுரை பலரிடமும் சரியாக சென்றடைய வேண்டுமே என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கருத்திற்கு நன்றி தேவா.

  பதிலளிநீக்கு
 22. மங்குனி அமைச்சர் said...

  //தெளிவா சொல்றிங்க//

  நன்றி அமைச்சரே.


  examsavvy said...

  //vazhkaiku mikavum avasiam//

  நன்றி சகோ.


  அன்பரசன் said...

  //ரொம்பத் தெளிவா சொல்லிருக்கீங்க.
  நல்ல தகவல்கள்.//

  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 23. Pappu_Appu_Sahana said...

  //Excellent. Neat and clear message.//

  thank u for ur coming.


  ஜெஸ்வந்தி said...

  //Very good, useful article .I will come back to read your old posts.//

  thank u sis.

  நிலாமதி said...

  //நிறைய விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுங்கள்....! //

  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 24. இம்சைஅரசன் பாபு.. said...

  //இந்த மாதிரி பதிவு ரொம்பவும் அவசியம் ....எழுத்து எல்லாம் அழகாக கோர்வையாக வருகிறது....ஆமா ஆமா சில பேர் 18 + கூட போடுறாங்க ....ஆனா உங்கள மாதிரி பதிவர்கள் நிறைய பேர் வர வேண்டும் என்றும் ஆசை படுகிறேன்//

  18 + அப்படின்னு போடுற அளவிற்கு இதில் ஒண்ணும் இல்லையே சகோ. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் அப்படி போட்டுக்கலாம் ....!! :))

  நிறைய பதிவர்கள் வரவேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

  பதிலளிநீக்கு
 25. சி.பி.செந்தில்குமார் said...

  //பதிவு சூப்பர்.ஒரு ஆலோசனை.பாகம் பாகமா போடாம ஒவ்வொண்ணுக்கும் புது டைட்டில் வெச்சா நல்லாருக்கும்.//

  உங்க ஆலோசனையை ஏற்றுகொள்கிறேன். நன்றி சகோ வருகைக்கும் உங்கள் ஆலோசனைக்கும்...

  பதிலளிநீக்கு
 26. adhiran said...

  //கணவன்/மனைவி பிடிக்க வில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத் தான் தவறுகிறார்கள்//

  //brilliant catch up. :-)//

  thank u mahendhiran

  பதிலளிநீக்கு
 27. நிகழ்காலத்தில்... said...

  //பெண்ணை உறவில் அக்கறையுடன் நிறைவா எனக் கேட்க வேண்டும். இது கேட்காமல் செயல்படுவதே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது என் புரிதல்

  நன்றி சகோ. இந்த தலைப்பில் இன்னும் விரிவாக அலசுங்கள்.//


  மிக சரியான புரிதல்... தொடர்ந்து எழுத முயல்கிறேன் . நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 28. தாராபுரத்தான் said...

  //அனைவரும் படிக்க வேண்டிய பதிவுங்க.//

  ரொம்ப நாள் கழித்த உங்களின் வருகைக்கு நன்றிங்க...புரிதலுக்கு மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 29. vanathy said...

  //well written.//


  thank u vani.


  பிரியமுடன் பிரபு said...

  //நல்ல தகவல்கள்.//

  நன்றி சகோ


  Geetha6 said...

  //good post//

  thank u for ur first visit

  பதிலளிநீக்கு
 30. அப்பாதுரை said...

  //ஆண்-பெண் நெருக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தலும்.//

  இதை பற்றி நான் ஏற்கனவே பழைய பதிவில் சொல்லி இருக்கிறேன். பல பிரச்சனைகளை பற்றி சொல்லி விட்டு கடைசியில் தான் அந்தரங்கம் பற்றி சொல்ல தொடங்கி இருக்கிறேன்.
  ஆனாலும் இன்னும் சொல்லாமல் விட்டது நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.

  //மூன்று-ஐந்து வருடங்களுக்கொரு முறை புத்துணர்ச்சி பிறக்கும் வகையில் ஏதாவது ஒருவருக்கொருவர் செய்தால் நெருங்கிய உறவு பிழைக்கும் - இல்லையென்றால் இன்றைய சூழலில் விரிசல்கள் வேகமாகவே வளர வாய்ப்பிருக்கிறதென்று நினைக்கிறேன்.//

  மூணு அல்லது நாலு வருடங்கள் என்ற கணக்கு கூட வேண்டாம்.... மாதத்திற்கு ஒரு முறை இருவரும் தனியாக இருக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு....தங்களை புதுப்பித்து கொள்ளலாம். இன்னும் சில யோசனைகளும் இருக்கிறது தொடரும் பதிவில் எழுதுவேன்.

  //அமைதியும் இன்பமும் இல்லாத கணவன்-மனைவி உறவினில் இன்னொருவரோடு பழகுதலோ கலத்தலோ தவறா?//

  தவறு என்று தானே இந்த சமூகத்தின் விமர்சனம் இருக்கிறது........அதற்கு பயந்து தானே இந்த தவறுகளும் ஒரு வித பயத்துடன் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையென்றால் தவறுகள் தேசியமயமாக்கப்படுமே....!!?

  //ஆண்கள் 'தவறி'னால் அனுசரித்துப் போகச் சொல்லும் சமூகம் பெண்கள் 'தவறி'னால் அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை.//

  ஆண் தவறினால் அவனது குடும்பம் சார்ந்த சிறு வட்டம் மட்டுமே பாதிக்க படுவதாகவும் பெண் தவறினால் அவளது சந்ததியே பாதிக்கபடுவதாக தானே சொல்லப்பட்டு வருகிறது...!

  //உடல் சுகத்தை உடல் சுகத்துக்காக அனுபவிக்கும் பக்குவம் நம் சமூகத்தின் சில தட்டுகளில் மட்டுமே வந்திருக்கிறதே, ஏன்?//

  ஆமாம் இப்போது மிகவும் சகஜமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.....சில ஆண்கள் இதற்காக இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்...அவர்களை Gigolo என்கிறார்கள்....!! இதில் கொடுமை என்ன வென்றால் அந்த வீட்டு ஆண்களும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது.....!!? உன் சந்தோசம் உனக்கு, என் சந்தோசம் எனக்கு என்ற மாதிரி.......! வெளியே கௌரதிற்காக நாங்கள் மனமொத்த தம்பதிகள் என்ற ஜம்பம் வேறு .

  சகோ உங்களின் கருத்துகள் என்னை இன்னும் அதிகமாக யோசிக்க வைக்கிறது, இன்னும் பல விசயங்களை விரிவாக எழுத வைக்கிறது என்று எண்ணுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 31. ப.செல்வக்குமார் said...

  //எங்கள் எதிர்கால வாழ்வில் எதிகொள்ளப்போகும் விசயங்களைப் பற்றி எழுதிருக்கீங்க அக்கா . அதற்க்கு எனது நன்றிகள். நிச்சயம் இது போன்ற பதிவுகள் நன்மை பயக்கும். என்ன பிரச்சினை என்று தெரிந்துகொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.//

  உங்களின் இந்த புரிதலுக்கு மகிழ்கிறேன்....என்ன பிரச்சனை என்பது தெரியாமல் தான் பல குடும்பங்களும் கோர்ட்டில் போய் நிற்கின்றன. அதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நலனுக்காகத்தான் எனது இந்த பதிவே. நன்றி செல்வா...

  உங்க கதையை படிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 32. murugan said...

  //இது வேறு ஒன்றும் இல்லை....தினம் சாப்பிட்டதையே மீண்டும் மீண்டும் சாப்பிடும் பொழுது ஒரு சலிப்பு ஏற்படும் ....தீடிரென புது சாப்பாடு கிடைக்கும் பொழுது ....அதுவும் பிறர்க்கு பயந்து ...பயந்து ....சாப்பிடும் பொழுது ...அரிதாக சாப்பிடும் பொழுது ஒரு கிக் கிடைக்கும் ...அந்த கிக்கில் மயங்கி தான் .....தொலைந்து போகிறார்கள//

  ரொம்ப தெளிவாக உங்க கருத்தை சொல்லிடீங்க.....உண்மைதான். ஆனால் கூடிய சீக்கிரம் அந்த உணவும் சலிப்பை கொடுக்கலாம்....மறுபடி வேறு புது உணவை நாட வேண்டி இருக்கும்....தவறுகள் இயல்பாய் தொடரும்...எல்லாம் முடிந்து ஒரு கட்டத்தில் இக்கரைக்கு அக்கறை பச்சை என்று திரும்பி வருவார்கள், காலம் கடந்து போனபின்...!!?

  பதிலளிநீக்கு
 33. ரொம்ப தெளிவாக உங்க கருத்தை சொல்லிடீங்க.....உண்மைதான். ஆனால் கூடிய சீக்கிரம் அந்த உணவும் சலிப்பை கொடுக்கலாம்....மறுபடி வேறு புது உணவை நாட வேண்டி இருக்கும்....தவறுகள் இயல்பாய் தொடரும்...எல்லாம் முடிந்து ஒரு கட்டத்தில் இக்கரைக்கு அக்கறை பச்சை என்று திரும்பி வருவார்கள், காலம் கடந்து போனபின்...!!?  அதுக்காக எல்லோருக்கும் சலிப்பு ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது...நீங்க சொன்ன மாதிரி மூணு அல்லது நாலு வருடங்கள் என்ற கணக்கு கூட வேண்டாம்.... மாதத்திற்கு ஒரு முறை இருவரும் தனியாக இருக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு....தங்களை புதுப்பித்து கொள்ளலாம்..... நானும் இதை தான் கடை பிடிக்கிறேன் ....வருடத்திற்கு ஒரு முறை அதுவும் திருமண நாளை எதாவது ஒரு டூரிஸ்ட் இடங்களை தேர்வு செய்து அங்கு தனியாக இருவரும் கொண்டாடுகிறோம் ...இன்று வரை ...முடிந்தவரை கடை பிடிக்கிறோம் ...இரவு வசதியாக அமைய வில்லை என்றால் டெண்செனே கிடையாது ....மதியத்திற்கு மேல் சந்தோசமாக இருந்து கொள்கிறோம் ....60% அல்லது 70% எனது முடிவே இறுதியாக இருந்தாலும் என்னவள் சொல்லும்பொழுது அதையும் காது கொடுத்து கண்டிப்பாக கேட்பேன் ....அவளிடம் எதையும் மறைத்தது கிடையாது ....நாங்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறோம் ...ஆனால் கடவுள் தான் எங்களை பிரித்து விடுகிறார் ...பொருளை தேடி இன்று நான் அமீரகுத்திலும்/துபாய் அவள் தமிழகத்திலும் நாள்கள் ஓடுகிறது ... தச்சை கண்ணன்

  பதிலளிநீக்கு
 34. @@@murugan....

  உங்களின் வாழ்க்கை முறை தெரிந்து மகிழ்கிறேன்....இரவு தான் என்று இல்லை...மனதிற்கு பிடித்தால் மதியமும் நல்லதே....! உங்களையும் உங்கள் மனைவியையும் பிரித்த வைத்து இருக்கிற பொருளாதாரத்தை என்னவென்று சொல்வது...?! :)))

  தூரமாக இருந்தாலும் நினைவால் உங்கள் மனைவியை நெருங்கித்தான் இருக்கிறீர்கள்....இருவரையும் வாழ்த்துகிறேன் சகோ.

  பதிலளிநீக்கு
 35. அவசியமான பதிவுக்கு முதலில் மனமார்ந்த நன்றி
  (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?)

  மொத்தத்தில் காதல் என்பதே.. ஒருவர் ஒருவர் புரிந்துகொள்வதில் தான் என்பதை நல்ல தொரு மன இயல் பாடமாக அழகாக மனதில் பதிய வைத்துவிட்டீர்கள்... அதென்னங்க கடைசியில் குண்ட தூக்கிபோட்டுட்டீங்க.. அதீத அன்பு ஆபத்தா... எங்கே அடுத்த பதிவு.... உடனே படித்தாக வேண்டுமே

  பதிலளிநீக்கு

 36. "ஆதலினால் காதல் செய்வீர்"

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

  ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் உடலுறவு மட்டுமே.

  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

  கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், திருமணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப்
  பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

  எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக சாகும் வரை தொடர்கின்றன. கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது. கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்.

  நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம். கணவன் மனைவிக்கிடையில் காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம். இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி ஒரு ஆணும் பெண்ணும் சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.

  இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

  காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

  – நல்லையா தயாபரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக யோசிக்க வைக்கக் கூடிய கருத்துரை !! மனதில் பதிய வைக்க வேண்டுமேயென இருமுறை நிதானமாக வாசித்தேன்.

   சொல்லிய அனைத்தும் மிக ஆழமான உண்மை...காதலும் காமமும் ஒன்றா வேறு வேறா என ஆராய்ந்து பார்க்க தேவையின்றியே வாழ்ந்து முடித்துவிட்டார்கள்...ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவை இரண்டை பற்றிய தெளிவும் புரிதலும் தேவை அப்பொழுதுதான் பிரச்னை சிக்கல்கள் இன்றி வாழ்வை கொண்டுச் செல்ல முடியும். இவற்றை பற்றிய புரிதலின்மையே இன்றைய சமூகத்தை சீரழிக்கும் காரணிகளாகவும் இருக்கின்றன.

   புரிதல் உள்ள தம்பதியினரின் பிள்ளைகளால் மட்டுமே நல்ல சமூகம் கட்டமைக்க படும் என்பதால் காதல் காமம் பற்றி பேசியே ஆகவேண்டும்...தொடர்ந்து பேசுவோம்!

   தங்களின் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மகிழ்கிறேன் தொடர்ந்து வாசியுங்கள், மேலான கருத்தை தெரிவியுங்கள்.

   மிக்க நன்றிகள் !!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...