பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 4

ஹிட்ஸ்..........தீருமா இந்தக் கொடுமை???


நான் எப்பவும் பதிவுலகம் பத்தி பெருமையாக நினைச்சிட்டு இருப்பேன். கடந்த போஸ்டில் கூட போன வருடத்தில் இனிய நினைவுகள் என்றால் பதிவுலகம்  வந்ததை பற்றிதான் எழுதினேன். இனி வருங்காலத்தில் பதிவுலகம் தான் பலரின் பார்வையில் இருக்கும் என்றே நினைக்க வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இங்கே வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்க  கூடிய அளவிற்கு போய்விடலாம். அத்தகைய பதிவுலகத்தின் தற்போதைய ஒரு நிலை வருத்தப்படும் நிலையிலேயே இருக்கிறது.

தரமான பதிவுகள்

பதிவுகளின் அளவு கோள் எப்படி நிர்ணயம் செய்ய படிக்கிறது என்பதில் நம்மிடையே ஒரு தெளிவு இல்லை, குழப்பமே மிஞ்சுகிறது. சிலர் ஹிட்ஸ் அதிகம் வாங்கி இருப்பதை பார்க்கும் மற்றவர் இது எப்படி அவரால் முடிகிறது...நாம இந்த மாதிரி அதிக ஹிட்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்...? ஒரு வேளை நாம  எழுதுற பதிவு நல்லா இல்லையா...
மத்தவங்களுக்கு பிடிக்கலையா என்று என்னை கேட்கும் போது என்னிடம் பதில் இல்லை. இப்படி கேட்டவர்கள் கொஞ்ச நாளில் பதிவு எழுதவே பிடிக்காமல் ஒரு விரக்தியின் உச்சத்தில் போய் விடுவதும் நடக்கிறது இங்கே...?! எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.

இந்த மாதிரியான ஆட்கள் நம்மளை மத்தவங்க கவனிக்கணும் என்பதற்காக மேற்கொள்ளும் ஒரு வழியே ஆபாசமான தலைப்புகளை வைப்பது, பதிவுகளிலும் அதிக பட்ச அநாகரீக வார்த்தைகளை சேர்ப்பது என்பது. தொடக்கத்தில் நல்லா எழுதிக்கொண்டு வரும் சிலர் இந்த ஹிட்ஸ் மோகத்தால் பாதை மாறி விடும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஒன்று அவர்கள் தங்கள் பாதையை  மாற்றி  கொள்கிறார்கள், இரண்டாவது தங்களது மோசமான பதிவுகளால் பிறரை அந்நிலைக்கு போக மறைமுகமாக தூண்டி விடுகிறார்கள். இது இரண்டுமே சரியல்லவே !!?

என் பிளாக் என் இஷ்டம் !

சிலரின் தவறுகளை நாம் சுட்டி காட்டினால் உடனே அவர்களின் இயலாமை இப்படி தான் வெளிப்படுகிறது , 'இது என்னுடைய தளம்...என் இஷ்டம் நான் எதையும் எழுதுவேன்...உனக்கு பிடிச்சா வா...இல்லைனா வராத...' இப்படி சொல்லி சமாளிக்கிறது  சரிதான். 

'எனக்கு பிடிக்கல நான் வருவது இல்லை, ஆனால் பலரை வரவழைகிறதே உங்களின் கவர்ச்சிகரமான தலைப்புக்கள், பதிவுகள்...?!' வாசகர்கள் எல்லோருமே ஆபாசத்திற்கு அடிமைகள் , இதற்கு மட்டும்  தான் லாயக்கு என்ற உங்களின் கண்ணோட்டத்தை மாற்றுங்களேன்.  உங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நஞ்சை ஆழமாய் விதைத்து, நீரூற்றி வளர்த்து விடாதீர்கள் தயவு செய்து. (களைச் செடிகள், விஷச் செடிகள் தான் விரைவில் வளர்ந்துவிடும்...? இது இயற்கை !! )

சில விமர்சனங்கள் 

விஷயம் இருக்கிறவங்க எழுதுறாங்க திறமை இல்லாதவங்க ஏன் பொறாமை படுரீங்கனு கூட ஒரு கேள்வி வரும். சரக்கு இருக்கிறவங்க எல்லாம் கொட்டினா பரவாயில்லை, ஆனா...??! தவிரவும் மக்களை திருத்தணும் என்று முடிவு பண்ணிட்டு யாரும் இங்கே எழுத வரல, முதல நாம சரியா இருக்கிறோமா இல்லையா என்றே  தெரியாத போது நாம எப்படி மக்களை திருத்த முடியும்...?!

ஆபாசமாக எழுதுங்கள்

பெண்களை பத்தி கவர்ச்சியா  எழுதியோ, ஆபாச வர்ணிப்பு, ஆபாச படங்களை போட்டு வாசகர்களை நீங்கள் இழுங்கள்...ஆனால் அதற்கு முன் ஒரு காரியம் பண்ணுங்கள், கூகிள்ல adult content warning என்கிற ஒரு வசதி இருக்கிறது அதையும்  போட்டுடீங்கனா ஹிட்ஸ் இன்னும் அதிகமா அள்ளிட்டு போகும். நீங்களும் இந்த ஹிட்ஸ் சாதனை பத்தி பலரிடம் சொல்லி பெருமை பட்டுக்கலாம்...?!! 'பதிவர்கள்' என்கிற போர்வையில் சின்னத்தனமான வேலைகள் செய்வது அநாகரீகம்.    

திரட்டிகள் என்ன செய்யும் ??

திரட்டிகள் என்பது பல பதிவுகளை ஒரே இடத்தில் சேர்த்து தருவது, மற்றும் பதிவர்களை ஊக்கபடுத்துவதற்காக இந்த வார சிறந்த பதிவர்கள் என்பது போல் தேர்ந்து எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது ? திரட்டிகள் எதன் அடிப்படையில் இதை முடிவு செய்கிறார்கள் என்பதை விட இது போன்ற திரட்டிகளை சில பதிவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பக்கமாக திருப்பி கொள்கிறார்கள் என்பதே என் கருத்து. திரட்டிகளையும் அவர்கள் வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. அதற்கு மாறாக எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும்  இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள். 

வேண்டுகோள் 

உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள்.  

எந்தவொரு பதிவுக்கும்  நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட்  வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.  

திங்கள், டிசம்பர் 6

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!