Wednesday, April 11

2:14 PM
27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவை படித்து கருத்துக்களை கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாக பேசுவதும், விவாதிப்பதும் மிக தவறான ஒன்றாக பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தை பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்து சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் கலையபட்டாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! (சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறு செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறந்தே போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சி பண்ணிகொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதை பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயதுக்காக சலிப்பாக சென்று கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்து கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவை பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிபடுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்து பேசி குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்து பேசினால் அப்பெண் அனுபவபட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தை பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதை தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 
உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனை கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்து கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்த பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதை போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலை தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிக பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிட கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை தொடர்ந்து பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டு போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும் உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்...அப்படி பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் 'மனதோடு மட்டும்'

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

Tweet

27 comments:

 1. பெண்மையைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும்- அந்தரங்க உறவில் கூட என்கிற உண்மையை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை. தொடருங்கள்...

  ReplyDelete
 2. மந்தோடு மீண்டும் வரும் செய்திகளுக்கு மிகவும் நன்றி.
  அனைத்து செய்திகளும் உண்மை.

  ReplyDelete
 3. வொகு, நாகரீகமாக, சொற்களை
  வரிதோறும் தேர்ந்தெடுத்து தொடரைக்
  எழுதியுள்ள பாங்கு போற்றத்தக்கது!
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. ஒரேயடியாக கிளுகிளுப்பாகவோ, இல்லை ஒரேயடியாக புள்ளி விவரங்களாகவோ இருக்கும் பாலியல் கட்டுரைகளின் நடுவில் உங்கள் கட்டுரை பல செய்திகளோடு, அதேசமயம் வாசிக்கக் கூடிய எழுத்து நடையிலும் இருக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும். இப்படி ஒரு தொடரை முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. தொடரை உளவியல் ரீதியிலும்
  மனோவியல் ரீதியிலும் நீங்கள்
  கொண்டு செல்லும் பாங்கு
  அழகாய் இருக்கிறது..

  புரிந்து நடந்தால்
  இல்லறம் நன்று...

  ReplyDelete
 6. "கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்."

  idhai patri konjam vilakkavum....

  aan - 32, pen 20...iruvarum uravinar(maama-athai magal) matrum kaadhalargal. manavaalkai yevvaaru irukkum...

  ReplyDelete
 7. இந்த மாதிரி ஒரு பதிவை, வெகு கவனமாக எழுத ரொம்பவே பக்குவம் வேணும். எழுதி வைத்துவிட்டு நல்ல ஷேப்க்கு கொண்டுவர பலமுறை வார்த்தைகளை எடிட் செய்யனும். அப்போத்தான் இந்த ஒரு "தரத்துக்கு" கொண்டுவர இயலும்.

  டாக்டர் ஷாலினியின் இதுபோல் கட்டுரைகளை என்னால் என்றுமே ரசிக்க இயலவில்லை. குறைகள்தான் நெறையத் தெரிந்தன என் கண்களுக்கு. நீங்க எவ்ளோவோ பரவாயில்லை! :)

  உங்க கட்டுரையும் பொதுவாக பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளனும் என்பதை வலியுறுத்துவது போலதான் பெண்களுக்கு "டிஃபெண்ஷிவா" இருக்கு. அதற்குக் காரணம் ஆண்கள்தான் பொதுவாக இந்த தேவையால் மரமண்டையாக இருப்பதால் எனலாம்.

  எனக்குத் தெரிய பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியவையும் நெறையா இருக்கு. ஆனால் இதை எல்லாம் நாகரிகமாக எழுதுறது, சொல்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

  Anyway, it is a good write-up! இதோட நான் நிறுத்திக்கிறேன் :)

  ReplyDelete
 8. Excellent analysis! Well written!

  ///பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... "மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறந்தே போகும்"///

  டார்வின் என்று சொன்னாலே பாதி பேர் பேய் புடிச்சா மாதிரி அலறுவான்.

  இதை யார் சொன்னாலும், மருத்தவ ரீதியாக இது நூற்றுக்கு நூறு உண்மை; ஜனன உறுப்புகள் உபயோகப் படுத்தாவிட்டால், அதை தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில்," disuse atrophy" என்று அழகாக சொல்லாம்.

  ReplyDelete
 9. மிக அருமையான பயனான தகவல். பாராட்டுகள்

  ReplyDelete
 10. @@ கணேஷ் said...

  //பெண்மையைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும்- அந்தரங்க உறவில் கூட என்கிற உண்மையை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

  முக்கியமாக இந்த இடத்தில் புரிந்து நடந்து கொண்டால் முழு வாழ்க்கையும் இனிமைதான். இங்கே தவறும்/குறையும் போது மொத்த குடும்ப வாழ்க்கையும் ஆட்டம் காண ஆரம்பிக்கிறது.

  இதுதான் குடும்ப சச்சரவிற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்கிறது என்பதையே சம்பந்தப்பட்ட தம்பதிகள் உணருவது இல்லை...

  உணர்ந்து சரி செய்து கொண்டால் அவர்கள் குடும்ப வாழ்வில் இன்பம் இன்றி வேறில்லை.

  ***

  நன்றி கணேஷ்

  ReplyDelete
 11. @@ வல்லிசிம்ஹன் said...

  //மந்தோடு மீண்டும் வரும் செய்திகளுக்கு மிகவும் நன்றி.
  அனைத்து செய்திகளும் உண்மை.//

  ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களை இங்கே பார்த்து...நலமா இருக்கிறீர்களா?

  புரிதலுக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 12. @@ முன்பனிக்காலம் said...

  //ஒரேயடியாக கிளுகிளுப்பாகவோ, இல்லை ஒரேயடியாக புள்ளி விவரங்களாகவோ இருக்கும் பாலியல் கட்டுரைகளின் நடுவில் உங்கள் கட்டுரை பல செய்திகளோடு, அதேசமயம் வாசிக்கக் கூடிய எழுத்து நடையிலும் இருக்கிறது.//

  ஒரு சகோதரியாக ஒரு தோழியாக உங்களுடன் சாதாரணமாக பேசுவதை போல தொடர் அமையவேண்டும் என்பதை மனதில் வைத்து எழுதி வருகிறேன். படிக்கும் ஒரு சிலரது மனதையாவது சற்று யோசிக்க வைத்தால் மகிழ்வேன்.
  அதை ஓரளவு சரியாக செய்கிறேன் என நினைக்கிறேன். :)

  //வாழ்த்துக்களும் நன்றிகளும். இப்படி ஒரு தொடரை முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்கள்!//

  உங்களை போன்றோரின் ஊக்குவிப்பு தான் பதிவு எழுத காலதாமதம் ஆனாலும் என்னை தொடர்ந்து எழுத வைக்கிறது.

  உங்களின் முதல் வருகைக்கும் புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 13. @@ புலவர் சா இராமாநுசம் said...

  //வொகு, நாகரீகமாக, சொற்களை
  வரிதோறும் தேர்ந்தெடுத்து தொடரைக்
  எழுதியுள்ள பாங்கு போற்றத்தக்கது!
  வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 14. @@ மகேந்திரன் said...

  //புரிந்து நடந்தால்
  இல்லறம் நன்று...//

  உண்மை.

  நன்றிகள் மகேந்திரன்.

  ReplyDelete
 15. @@ Anonymous said...

  //"கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்."

  idhai patri konjam vilakkavum....//

  இந்த வயது விஷயம் குறித்து ஏற்கனவே தாம்பத்தியம் தொடரில் ஒரு இடத்தில் சிறிது எழுதி இருக்கிறேன். தனியாக ஒரு பாகம் எழுதினால் நன்றாக இருக்கும்...முயலுகிறேன்.

  அதிகபடியான வயது வித்தியாசத்தில் தற்போது திருமணங்கள் நடைபெறுவதில்லை என்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல, நிறைய நடக்கிறது. இது போன்ற திருமணங்கள் வீட்டு பெரியவர்களின் மனதிருப்திக்காக சில சூழ்நிலைக்காக நடைபெற கூடும், ஆனால் சரியல்ல என்பதே என் கருத்து.

  இரண்டு மூன்று வயது வித்தியாசங்கள் சிறப்பு. அந்த காலத்தில் பத்து வயது வித்தியாசங்கள் உள்ள தம்பதிகள் மன ஒற்றுமையாக இருந்தார்கள் என்றாலும் ஒருவரின் முழு கட்டுப்பாட்டில் மற்றொருவர் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது எல்லோருக்கும் நிறைவை கொடுக்காது. அதிக படியான விட்டுகொடுத்தல் அங்கே தேவை படும்...

  மேலும் உடல்/மன ரீதியில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

  விரிவாக அவசியம் ஒரு பாகம் எழுதுகிறேன்.

  முக்கியமான ஒன்றை பற்றி யோசிக்க வைத்திருகிரீர்கள். மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 16. @@ வருண் said...

  //எழுதி வைத்துவிட்டு நல்ல ஷேப்க்கு கொண்டுவர பலமுறை வார்த்தைகளை எடிட் செய்யனும்.//

  என் நிலையை இதை விட நன்றாக புரிந்துகொள்ள முடியாது. :)


  யார் மனதையும் வருத்தகூடாது.

  நாகரீகமாக இருக்கணும்.

  பதிவும் நல்ல முறையில் போய் சேரனும்

  இப்டி அப்டின்னு பல முறை வாசித்து எடிட் பண்ணி, வெளியிட்ட பின்னும் திருப்தி இல்லாம நாலு முறை படித்து பார்த்து...ம்...ரொம்ப கஷ்டம் வருண். :)

  ஆனா அத்தனை சிரமமும் நீங்க எல்லாம் படித்து கருதிடும் போது மறைந்து போய் விடுகிறது என்பதே உண்மை.

  //உங்க கட்டுரையும் பொதுவாக பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளனும் என்பதை வலியுறுத்துவது போலதான் பெண்களுக்கு "டிஃபெண்ஷிவா" இருக்கு.//

  மொத்த தொடரும் படித்து பார்த்தால் உங்களுக்கு புரியும், இருவரையும் சேர்த்தே சொல்லி இருப்பேன்...குறிப்பாக இந்த பாகத்தில் ஆண்களின் அலட்சிய தன்மையை குரிபிட்டாக வேண்டும், அதான் எழுதினேன்.

  தொடரும் பாகத்தில் இந்த விசயத்தில் ஆண்கள் பெண்களை புரிந்துகொள்ள பெண்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்ற ரீதியில் எழுதுவேன்.

  //அதற்குக் காரணம் ஆண்கள்தான் பொதுவாக இந்த தேவையால் மரமண்டையாக இருப்பதால் எனலாம்.//

  ம்...நீங்களே சொல்லிடீங்க... :))

  //எனக்குத் தெரிய பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியவையும் நெறையா இருக்கு. ஆனால் இதை எல்லாம் நாகரிகமாக எழுதுறது, சொல்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்.//

  சற்று சிரமம் தான். ஆனா சொல்லி ஆகணுமே...! கண்டிப்பாக இயன்றவரை எல்லாம் சொல்வேன்/எழுதுவேன்.

  //Anyway, it is a good write-up! இதோட நான் நிறுத்திக்கிறேன் :)//

  தொடர்ந்தும் சொல்லலாமே, என்னை யோசிக்கவைத்தால் தானே தொடரை நான் தொடர முடியும். :))

  ***

  மிக்க நன்றிகள் வருண்.

  ReplyDelete
 17. @@ நம்பள்கி! said...

  //இதை யார் சொன்னாலும், மருத்தவ ரீதியாக இது நூற்றுக்கு நூறு உண்மை; ஜனன உறுப்புகள் உபயோகப் படுத்தாவிட்டால், அதை தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில்," disuse atrophy" என்று அழகாக சொல்லாம்.//

  மன ரீதியிலான அவஸ்தைகள் வேறு இருக்கிறது. தம்பதிகள் இதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் அக்கறை செலுத்தியாக வேண்டும்.

  ***

  உங்களின் முதல் வருகைக்கும், புரிதலுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 18. @@ கோவி.கண்ணன் said...

  //மிக அருமையான பயனான தகவல். //

  வருகை தந்து படித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 19. உண்மை சுடும்! உண்மை எப்போதும் சுடும்!! இருந்தாலும் இலை மறைவு காய்மறைவா சொல்கிறேன்...

  அந்த காலத்தில், ஆண்-ஆதிக்கம் செய்ததால், சனாதன காரனத்தினால், மனைவி சமைக்கவும், வீட்டு வேலை செய்வும் சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாக வைத்துக் கொள்ளவும் தான்...கணவர்கள் வயது குறைவாக் மனைவியை தேர்ந்து எடுத்தார்கள். இது தான் உண்மை. உண்மை எப்போதும் சுடும்...

  பெண் சாகும் வரை எப்பொழுது வேண்டுமானாலும், உடலுறவு கொள்ளமுடியும். ஏனெறால் பெண் receptive partner (வாங்கிக் கொள்பவர்கள்; எனக்கு தெரிந்த தமிழ் இவ்வளவு தான். மன்னிக்கவும்)

  ஆண்களின் வயது பெண்களின் வயதை விட வயது குறைவாக இருந்தால் உடல் உறவு நன்றாக இருக்கும். இது தான் உண்மை. உண்மை எப்போதும் சுடும்...

  இல்லாவிட்டால், ஏன் திருமணம் ஆன பெண்கள், தன்னை விட இள வயது பையன்களை விரும்புகிரார்கள்? ஏனெறால், அந்த "திராணி" வயதான ஆண்களுக்கு கிடையாது. இது தான் உண்மை. உண்மை எப்போதும் சுடும்...

  பின்குறிப்பு: இப்போ தமிழ் நாட்டில் குழதைகளுக்கு கூட "திரானிக்கு" அர்த்தம் தெரியும்!

  ReplyDelete
 20. //ஆண்களின் வயது பெண்களின் வயதை விட வயது குறைவாக இருந்தால் உடல் உறவு நன்றாக இருக்கும். இது தான் உண்மை.
  உடல் உறவு நன்றாக இருக்கும் என்றால் என்ன பொருள்? "நன்றாக இருப்பது" என்றால் என்ன? உடலுறவுக்கும் கொள்வோர் வயதுக்கும் தொடர்பு இல்லை என்றே நம்புகிறேன். இளைய ஆண்கள் அதிக நேரம் "இயங்க" முடியும் என்பது myth. எந்த வயதிலும் பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் இயங்க முடியும் என்பதே "உண்மை".

  ஆண்களுக்கு செக்ஸ் நிறைவாக அமைய வேண்டுமெனில், பெண்கள் மனதைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. பெண்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இரு தரப்பினருக்கும் இரண்டு புரிதலும் இருந்தால் இருவருக்குமே செக்ஸ் நிறைவாக அமையும்.

  ஆண்களுக்கு செக்ஸ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பாலுறுப்பு மட்டுமே என்று நிறைய பாலுளவியல் surveyக்கள் கூறுகின்றன. உண்மை என்றே நினைக்கிறேன் :-) பெண்களுக்கு செக்ஸ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பாலுறுப்பு அல்ல (உடை களையும் வரிசையிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்). தகராறு இங்கயே தொடங்கிடுச்சே!

  நல்ல கட்டுரையைத் தொடர்ந்து எழுத முன்வந்தமைக்கு பாராட்டுக்கள் கௌசல்யா.

  ReplyDelete
 21. receptive partner? huh? nothing is so distorted from truth.

  ReplyDelete
 22. first intha dhairiyathirku enathu paaratukkal kous...apram pirithoru santharpathil detaila pesuren...congrats kous...

  ReplyDelete
 23. "மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறந்தே போகும்......ஐயோ .....facebook/computer என கதியே கிடக்கும் மக்களே உஷார் .....நான் உள்பட...................
  பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்து பேசினால் அப்பெண் அனுபவபட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள். இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். ....உண்மை மேடம் ...

  ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்....உண்மை..இருந்தாலும் ..என் மனைவி பேச மாட்டாள்....பயம் தான் ....

  உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்......வேலி நாட்டில் இருந்து வருகிறவர்கள் ஒரு வருடம் கழித்து வருகிறோம் .....அப்பொழுது இரண்டு/சில நாள்கள் வரை வழி இருக்கும் ...புரிந்து நடக்கணும் .............

  உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.....முதலிலேயே பெண்கள் சொல்ல மாட்டார்கள்......மூன்று நாள் விஷயம் கூட ....கை வைத்த பின்னர் தான் சொல்வார்கள்....ஆண்கள் அது வரும் நாளை எண்ணி கொண்டு இருக்க முடியாது...கோபம் வர தான் செய்யும் ....

  உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்..... ஏன் ... ஒவ்வரு பெண்களுக்கும் தெரியும் ,,,,ஆண்கள் ....மாலை நேரத்தில் வழிவதே ...இரவுக்கு ..அடி போடத்தான் .....முதலில் சொல்லணும்னா....இன்று ரெட் லைட் என்று .....சொல்ல மாட்டுலேவளே .....

  உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்..... கணவன் வழியும் போதே இவர்களுக்கும் தெரியும் ....இன்று எனக்கு மூன்று நாள் .....நடக்க போவது ஒன்றும் இல்லை என்று................சொல்ல மாட்டார்களே .....பின் என்ன நைட் சண்டை தான் ....யார் மேல் தவறு ...என்று ...

  உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?....உண்மை தான் இது விளையாட்டு இல்லை....அத்தியாவசியம் .......

  இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. .....ஒத்து கொள்கிறேன் .....என்ன செய்ய ......


  படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்...அப்படி பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை.......இப்படி எல்லோரும் புத்திசாலி இல்லை....இதை காரணமாக வைத்து தப்பித்து கொள்ளலாம் என வக்காலத்து வாங்காதீர்கள் ...முதலில் அவனுடைய தேவையை பூர்த்தி செய்யுங்கள் .....பின் அவனுக்கு புரிய வையுங்கள் ....ஏப்பா...முன்ன மாதிரியில்லை ....மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்குது ...இது தேவையா ..என புரிய வையுங்கள்......நீங்களே முடிவு செய்யாதீர்கள் .......

  ReplyDelete
 24. nice story and using good words...

  ReplyDelete
 25. ~படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்...அப்படி பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்~

  அப்பாதுரை அவர்கள் இங்கு குறிப்பிட்டதைப் போல இருவருக்கும் அடுத்தவரின் உடல்பற்றிய புரிதல் அவசியம்..
  ~ஆண்களுக்கு செக்ஸ் நிறைவாக அமைய வேண்டுமெனில், பெண்கள் மனதைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. பெண்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இரு தரப்பினருக்கும் இரண்டு புரிதலும் இருந்தால் இருவருக்குமே செக்ஸ் நிறைவாக அமையும்~

  செக்ஸ் மட்டுமே நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்காது. There are lot of things in sex - tocuh, rub, talk etc..donno whether this is relevant to mention it here???
  delete this if it is not relevant

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...