வெள்ளி, அக்டோபர் 15

10:57 AM
45

இதற்கு முந்தைய பதிவை படிக்க தாம்பத்தியம் பாகம் 18  செல்லவும்

திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே  செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு.  குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது.  மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்....!!? இதில்  படித்தவர்களின் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றே  தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல் , புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது மிக முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக  இருந்துவிட்டால்....குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியே பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறி கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள், கள்ள உறவுகள் போன்றவை ஏற்பட சரியான செக்சை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும்  இறுதி நிலையாகும். ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள்.  ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம். 

* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு  கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும். 

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.  

இந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும். 

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை  ஒரு பெண்ணுக்கு தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே  மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி  தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே. 

* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை.  .....??!   ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள்  இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவை குறித்த முறையான தெளிவின்மை, உறவை பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும்  உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை.  அங்கே சரியாக  நடைபெறவில்லை  என்றால் அதன்  எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்...அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன்  தன் மனைவியை வென்றவன் ஆகிறான்...!! 

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்  (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால்  மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.  

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால்  அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது.  ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.
   
"மரணம் ஏற்படும் முன்பு மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.
கௌரமாக மரணமடைவதற்கு கௌரமாக வாழ வேண்டும் !"


தாம்பத்தியம் தொடர் தொடரும்....


Tweet

45 கருத்துகள்:

  1. முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. ////



    நல்ல தெரிந்து கொள்ளகூடிய விசயங்கள்........

    மேலும் இந்த நிலைக்கு பெண்களின் மூளையில் சுரக்கும் oxytocin என்ற ஒரு வகையான ஹோர்மோன் காரணம்..இதுதான் நீங்கள் சொல்லும் உணர்வை உறவின் போது உடல் முழுவதும் பரப்புகின்றது..இந்த ஹோர்மோன் இந்த வேலையைதவிர பெண்களுக்கு பல முக்கிய வேலைகளை செய்கின்றது என்பது கூடுதல் தகவல்..

    பதிலளிநீக்கு
  2. ganesh said...

    //மேலும் இந்த நிலைக்கு பெண்களின் மூளையில் சுரக்கும் oxytocin என்ற ஒரு வகையான ஹோர்மோன் காரணம்.இதுதான் நீங்கள் சொல்லும் உணர்வை உறவின் போது உடல் முழுவதும் பரப்புகின்றது.//

    இந்த ஹார்மோன் பெண்களின் பிரசவ நேரத்தில் அதிக அளவில் சுரக்கிறது....என்பதும் ஒரு கூடுதல் தகவல் தானே கணேஷ்.

    நான் குறிப்பிடாமல் விட்ட தகவலை சொன்னதிற்கு நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  3. பலரும் படிக்க வேண்டிய கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள்

    பதிலளிநீக்கு
  4. பலரும்பகிர்ந்து கொள்ள தயங்கும ஒருவிடயத்தை பகிரும் உங்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. pala pengaluku avargalathu udalgalai patri therivathu illai. vilakiyamaikku nandri

    - fathima

    பதிலளிநீக்கு
  6. கணவன் மனைவி சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை சொல்லி வருகிறீர்கள் ... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சசிகுமார் said...

    //அருமை அக்கா//

    நன்றி சசி.

    பதிலளிநீக்கு
  8. நிலாமதி said...

    //பலரும்பகிர்ந்து கொள்ள தயங்கும ஒருவிடயத்தை பகிரும் உங்களுக்கு என் நன்றிகள்.//

    நானும் பெரும் தயக்கத்திற்கு பின் தான் எழுதினேன்....அந்த தயக்கம் ஏன் வருகிறது என்று தான் எனக்கு புரியவில்லை....சமூக சீர்கெடுக்கு ஒரு முக்கிய காரணம் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். வெளிப்படையாக பேசி சந்தேகங்களை சரி செய்துகொள்ள ஏன் தைரியம் அற்று இருக்கிறோம். நமது டீனேஜ் பிள்ளைகளுக்கு அடிப்படையான சிலவற்றை சொல்லி வைப்பது அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கும்....ஆனால் இதை எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தெளிவாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நாம இன்னும் நிறைய மாற வேண்டும் அக்கா...

    உங்களுக்கு என் நன்றிகள் அக்கா...

    பதிலளிநீக்கு
  9. LK said...

    //பலரும் படிக்க வேண்டிய கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள்//

    உண்மைதான்....நன்றி

    பதிலளிநீக்கு
  10. அன்பரசன் said...

    //நல்ல விஷயங்கள்...//

    புரிதலுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  11. Chitra said...

    //பகிர்வுக்கு நன்றி....//

    நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  12. Anonymous said...

    //pala pengaluku avargalathu udalgalai patri therivathu illai. vilakiyamaikku nandri- fathima//

    இதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களுக்காக தான் இந்த பதிவே...

    வருகைக்கு நன்றி பாத்திமா.

    பதிலளிநீக்கு
  13. asiya omar said...

    //தேவையான பகிர்வு.//

    சரிதான் தோழி. நன்றி .

    பதிலளிநீக்கு
  14. ஈரோடு தங்கதுரை said...

    //கணவன் மனைவி சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை சொல்லி வருகிறீர்கள் ... வாழ்த்துக்கள்.//

    குடும்ப வாழ்க்கை என்பது ஏனோ தானோ என்று வாழ்வது இல்லை...குழந்தைகளின் நலனுக்காக கருத்து வேற்றுமை என்பது எழாமல் சந்தோசமாக வாழ்வது அவசியம்....
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  15. ஜெரி ஈசானந்தன். said...

    //Good blogging.//

    உங்களின் முதல் வருகைக்கும், தொடருவதற்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  16. vanathy said...

    //பகிர்வுக்கு நன்றி.//

    புரிதலுக்கு நன்றி வாணி.

    பதிலளிநீக்கு
  17. தேவன் மாயம் said...

    //அருமையான தகவல்கள்!//

    புரிதலுக்கு நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  18. கவுசல்யா நிலாமதி சொன்னது தான் நானும் நினைத்தேன். இதை பற்றி பேச சங்கட படுவார்கள். நீங்கள் பல தம்பதிகளுக்கு விழுப்புணர்வு தரும் பதிவாக பதிந்துள்ளீர்கள்.
    பகிர்வுக்கு நன்றீ

    பதிலளிநீக்கு
  19. முதலில் நன்றி அக்கா .,
    நாங்கள் எதிர்கால வாழ்கையில் சந்திக்கப்போகும் விசயங்களைப் பற்றி எழுதியதற்கு. பிரச்சினைகள் பல வரலாம். அதனைப் பற்றிய தெளிவு இருக்கும் போது அதனை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும் ..! உங்களின் இந்தத் தொடரின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .!!

    பதிலளிநீக்கு
  20. முதலில் ஒரு பெண்ணாக இது போன்ற விஷயங்களைத் தயக்கமில்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

    வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. இவ்வளவு எளிய நடையில் ,பெண்கள் அணுகத் தயங்கி, வெந்துபோகும் நிலைக்குப் போனாலும் பேசத் துணிவில்லாத விஷயத்தை அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கு நன்றி. யதேச்சையாகப் படிக்க நேர்ந்தது, இப்பொழுது திருப்தியாக இருக்கிறது,. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  22. Jaleela Kamal said...

    //கவுசல்யா நிலாமதி சொன்னது தான் நானும் நினைத்தேன். இதை பற்றி பேச சங்கட படுவார்கள். நீங்கள் பல தம்பதிகளுக்கு விழுப்புணர்வு தரும் பதிவாக பதிந்துள்ளீர்கள்.//

    சங்கடப்பட்டு வெளியில் பேசாமதான்....பல சிக்கல்கள் ஏற்படுகின்றன சகோ....! விழிப்புணர்வு இந்த விசயத்தில் கண்டிப்பாக வேண்டும்...வருகைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  23. ப.செல்வக்குமார் said...

    //அதனைப் பற்றிய தெளிவு இருக்கும் போது அதனை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும் ..! உங்களின் இந்தத் தொடரின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .!!//

    நல்ல புரிதல் செல்வா....இந்த தெளிவு கண்டு நான் சந்தோசபடுகிறேன்....! இதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்...

    :))

    பதிலளிநீக்கு
  24. Sriakila said...

    //முதலில் ஒரு பெண்ணாக இது போன்ற விஷயங்களைத் தயக்கமில்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.//

    பெண்கள் சம்பந்த பட்ட விஷயம் தானே இது....பெண்கள் தான் இதை இன்னும் தெளிவாக சொல்ல முடியும் என்பது என் கருத்து தோழி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வல்லிசிம்ஹன் said...

    இவ்வளவு எளிய நடையில் ,பெண்கள் அணுகத் தயங்கி, வெந்துபோகும் நிலைக்குப் போனாலும் பேசத் துணிவில்லாத விஷயத்தை அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கு நன்றி. யதேச்சையாகப் படிக்க நேர்ந்தது, இப்பொழுது திருப்தியாக இருக்கிறது,. வாழ்த்துகள் மா.//

    என் எழுத்துகள் சரியான பாதையில் தான் போய் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சொல்வதில் இருந்து புரிந்து கொண்டேன்...யாரையும் எதையும் பாதித்துவிட கூடாது என்றும், எழுத்து அதன் எல்லையை தாண்டி விட கூடாது என்றும் கவனம் எடுத்து எழுதி கொண்டு வருகிறேன்....உங்களை போன்றோரின் கருத்துக்கள் தான் என்னை உற்சாக படுத்துகிறது...

    அதற்காக நன்றி சொல்லி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. very nice writings,
    post tells boldness of u.
    it is very very very very..................useful tips to the newly as well as married couples.
    appreciate u telling the trouth of good mutual family life.

    பதிலளிநீக்கு
  27. பலரும் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயங்கள்.. வேறு எந்தப்பிரச்சினையும் இல்லாத சூழ்நிலையில் கூட சிலசமயம் கணவன்,மனைவிக்குள் பிணக்குகள் வரும். ஏன்னு தீர விசாரிச்சுப்பார்த்தா அதுக்கு இந்த ஒரு காரணம்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  28. துணிச்சலும் எளிமையும் ஒருங்கே அமைந்த எழுத்து - ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது படிக்க.

    பெண்களின் உச்சக்கட்டத்துக்கும் ஆண்களின் உச்சக்கட்டத்துக்குமிடையே இருக்கும் அடிப்படை வேறுபாடும் இந்த புரிதல் குறைவின் காரணமாக இருக்கலாம். காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன். பெண்களுக்குத் தோன்றும் பரவச இடைவெளிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆண்களும் (பெண்களும் கூட) "திருப்தி அடைந்து விட்ட" தாக நினைப்பதும் உண்டு. ஆண் பெண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம் தான் (உங்கள் பதிவில் கூட கணவன் மனைவியை ஆள்கிறான் என்று தான் எழுதியிருக்கிறீர்கள் :). பெண் ஆணை அடக்கக் கூடாது என்று நினைக்கிறோமா? கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது? எந்தக் கட்டத்தில் அத்தகைய பாகுபாடு மறைகிறதோ அந்தக் கட்டத்தில் தான் uninhibited (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) உறவு தொடங்குகிறது. பரவசங்கள் இருபுறமும் ஏற்படுகின்றன. தவறாக நினைக்கவேண்டாம்.. ஒரு பெண் உடல்சுகத்தை விரும்பினாள் என்றாலே - கணவனே கூட அதைத் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கலாசாரத்தில் இது போன்ற சாதாரண எதிர்பார்ப்புகள் கூட ரேடிகல் முற்போக்குத்தனமாகத் தான் தெரிகிறது. முழுமைப் புணர்ச்சியின் உடல்சுகத்துக்கு அப்பாற்பட்ட உள/உடல் பலன்களை அறியாமல் போகிறோம். டிப்ரெஷனில் இருப்பது கூடத் தெரியாமல் வாழ்கிறோம்.

    நல்ல பதிவு. மிச்ச பகுதிகளையும் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. அப்பாதுரை said...

    //காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன்.//

    அதுதான் ஏன் என்று கேட்கிறேன்...?? கணவன் மனைவிக்கு இடையில் இவை அதிகம் இருந்தால் கண்டிப்பாக இடைவெளியும் அதிகரிக்கும்....இந்த கூச்சம், அச்சம் கண்டிப்பாக தவிர்க்க படவேண்டும்...

    அப்புறம் சகோ உங்களின் இந்த தெளிவான கருத்துக்கள் எனக்கு திருப்தியை கொடுக்கிறது... நீங்கள் இங்கே கூறியுள்ள கருத்துகள் பலரின் பார்வைக்கு செல்லவேண்டும் என்று எனது அடுத்த பதிவில் இந்த பின்னூட்டத்தை இணைக்க உள்ளேன்...

    உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. @@ AJITH G...

    ஒரு கணவரால் அந்த நேரத்தில் தன் மனைவியின் உடல்நிலையிலும், உணர்வு நிலையிலும் ஏற்படும் திடீர் மாற்றத்தை நிச்சயம் நன்றாக உணரமுடியும், புரிந்துகொள்ளமுடியும்.

    வேறு விளக்கங்கள் தேவைப்படாது என நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. பயனுள்ள தகவல் சகோதரி அவா்களே. சரியான விளக்கம் கூட! தெளிவான, அற்புதமான விளக்கம். நன்றி மென்மேலும் இதுபோல் கருத்துமிக்க பதிவுகளை கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  34. நல்ல கருத்துமிக்க தகவல். நன்றி சகோதரி அவா்களே !

    பதிலளிநீக்கு
  35. கை கொடுங்கள் கௌசல்யா....எனது கல்லூரி காலத்தில் கல்லூரியில் மருத்துவ ரீதியாக ஒரு படம் போட்டு, ஒரு வாரம் செமினார் வகுப்பும் எடுத்தார்கள். அதில் பேசப்பட்டவையும், நான் வாசித்துத் தெரிந்து கொண்டவையும் நீங்கள் மிக அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். இந்த ஆர்கசம் நிலையை பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அடைந்திட முடியாதுதான். அதற்கு முதலில் பெண்ணிற்கு செக்ஸில் நாட்டம், மனம் முழுவதும் அதில் ஈடுபட்டு இருக்க வேண்டும். கடமை, குழந்தை பெறுவதற்கு என்று இந்த உறவு இருந்தால் நிச்சயமாக உச்ச நிலை அடைய முடியாது. பொதுவாக பெண்கள் இதை அடைவதில்லை. வெறும் உடலுறவு மட்டுமே உறவு என்று அவர்கள் நினைத்து விடுவதாலும், அதைப்பற்றிய உணர்வு இல்லாததாலும். 99 % பெண்களுக்கு இதைப் பற்றித் தெரிய வில்லை என்பதே உண்மை. தெரிந்திருந்தால் அவர்கள் அதைப் பற்றி கணவனுக்கும் சொல்லிக் கொடுத்து பெறலாம். ஆனால் மனம் அதற்கு முழுவதும் ஈடுபட வேண்டும். உறவை உறவிற்காக..அனுபவித்து .அன்பிற்காக காதலுக்காக என்று வைத்துக் கொண்டால் மட்டுமே அன்டஹ் அனுபவம்பெற முடியும். ஆனால் பெரும்பாலும் 10னிமிடத்திற்குள் உறவு முடியும் போது இது பெறப்படுவதில்லை.. ஸோ அங்கு உறவு ஒரு கடமை என்றாகிவிடுவதால். பெண்களுக்கும் அதைப் பற்றித் தெரியாததால்.....அதன் அனுபவம் பற்றி மிக அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள். இதுவும் கிளைட்டோரியஸ் ஒரு முக்கியமான ஜி ஸ்பாட்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. இறைவனின் அற்புத சிருஷ்டிப்பு

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...