பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.
அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.
நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?! அரசாங்கம், ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும்.
ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!
* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!
* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !
இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)
வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்...
சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ??
இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்...
நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"
"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?"
என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன்.
(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை)
B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது.
முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார். ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார்.
அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...
புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான் என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !)
புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான் என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !)
அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...
திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம்.
* * *
என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?
* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும் துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!
* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும் துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!
இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது என்பது பழங்கதையாகி விடுமல்லவா ?
இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும்.
சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)
என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !!
வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!
பி.கு.
எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
படங்கள் _ நன்றி கூகுள்
சீக்கிரமாக நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வெளிநாடு செல்கிறார்கள்...
பதிலளிநீக்குபோகும்போது பல கனவுகளோடு செல்கிறார்கள்... ஆனால் வரும்போது யாரும் சந்தோஷமாக வருவதில்லை... வெளிநாடு வாழ் தமிழர்கள் எல்லோருமே மனதில் ஒரு வலியோடுதான் வாழ்கிறார்கள்... தன் குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்கிறார்கள்...
நல்லதொரு இடுகை மேடம்... நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்...
//கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?!////
பதிலளிநீக்குஅதுங்க... நம்ம கவருமெண்டு நல்லதே பண்ணுது... இங்க வேல செஞ்சு குடும்பம் நடத்தனும்னா மாசம் பதினஞ்சு ஆயிரம் வேணும்...
மொத அரசு நல்லா இருந்தா, யாரும் வெளிநாடு போக மாட்டாங்க...
#இன்னும் முழுசா படிக்கல... வாரேன்..
நீங்கள் நினைப்பது போல் எல்லாரும் இல்லை, எனினும் சோகங்கள் இருக்கத்தான் செய்யும்... ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றைப் பேர இயலும்?
பதிலளிநீக்கு:-)
#நான் ஊரில் மாடு மேய்க்கிறேன் மை லார்ட்...
:-)
//நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர்//
பதிலளிநீக்குஒரு பதிவு தேத்த உதவிய உங்க கணவருக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி அதற்கு உதவி செய்த புரட்சி தலைவி ஜெயலலிதா அரசாங்கத்திற்கும் நன்றி :))
//இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)//
பதிலளிநீக்குமறுபடியும் முதல்ல இருந்தா?
என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள்///
பதிலளிநீக்குவெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் லோல் படுகிறார்கள் என்று யார் சொன்னது ?
குடும்ப சூழலின் காரணமாக எப்படியாவது பிழைக்கலாம் என்று சென்றவர்களை போய் மோகத்தில் செல்கிறார்கள் என்று சொல்வது மிக தவறு...
தன்னம்பிக்கை உள்ளவர்கள் தோற்று போக மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ...............................
பதிலளிநீக்குசிறப்பான ஒரு பதிவு அக்கா
பதிலளிநீக்குதன்னம்பிக்கை பக்தி மார்க்கத்தில் அடகு வைக்கப் படுகிறது... எவன் ஒருவன் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையை உதருகிரானோ அவன் சொந்த காலில் நிற்கிறான்... உதவி செய்ய உறவுகளும் இருந்தால் அவன் எழுந்து நிற்கிறான்... ஆனால் இது அனைவருக்கும் நடக்காது... அதே தெருவில் இன்னும் பத்து இஸ்திரி கடைகள் விழுந்தால்.. யோசித்துப் பாருங்கள்...
பதிலளிநீக்குவணக்கம் சகோ...நீங்க சொல்றது படி பாத்தா...சொந்த தொழில் தான் செய்யனும்ங்கரா மாதிரி செய்தி வருது சரிங்களா..!
பதிலளிநீக்குகொஞ்சம் நம்ம நாட்டு மக்கள் தொகையையும்...படிப்பாளிகளின் எண்ணிக்கையையும் பாருங்க...உண்மையில அரசாங்கம் மறைமுகமா என்ன சொல்லுதுன்னு உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன்..அது என்னன்னா படிப்பை(கல்வியை!) கொடுத்துடுறோம் நீங்க எங்கயாவது போய் செல்வத்த சமபாதிசிக்கங்கன்னு சொல்லுது...
இது என் தாழ்மையான கருத்து...நானும் இப்படித்தான் இந்தியாவ விட்டு போக மாட்டேன்னு சொல்லி ஓடிட்டு இருந்தவன்தான்!
என்ன சகோ...பின்னூட்டத்த பிரசுரிக்க மாட்டீங்கறீங்க...சரி விடுங்க!
பதிலளிநீக்கு@@ விக்கியுலகம் said...
பதிலளிநீக்கு//என்ன சகோ...பின்னூட்டத்த பிரசுரிக்க மாட்டீங்கறீங்க...சரி விடுங்க!//
அப்படி எல்லாம் இல்லைங்க...போஸ்ட் போட்டுட்டு அவசர வேலையாக வெளில போயிட்டேன்.இப்பதான் வந்தேன்.
துணிகளை அயர்ன் பண்ணக் குடுத்தா ஒரு நாளு ஆகுமா... அவ்வளவு போட்டியில்லாம இருக்குது போல அந்தத் தொழில் உங்க ஊர்ல... ஆனா, வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் என்பது சத்திய வார்த்தைகள். உழைக்கத் தயாரானவனுக்கு எப்படியும் பிழைக்க வழி தெரியும். தன்னம்பிக்கைப் பதிவுக்கு நன்றிங்க...
பதிலளிநீக்குகௌசல்யா மேடம்,
பதிலளிநீக்குஅருமையான சுயமுன்னேற்ற பதிவு.
மற்றபடி,
இக்கட்டுரையை விமர்சிக்கும் தகுதி இழந்தவன் நான் என்பதால் ”நோ” கருத்து!
மிக நல்ல தேவையான பகிர்வு.சொன்ன உதாரணங்களும் சூப்பர்.
பதிலளிநீக்குஎத்தனை பேர் இங்கே குறைந்த சம்பளத்திற்கு,கட்டட வேலை,கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கிறார்கள் தெரியுமா,ஓவர் டைமாக வீட்டு வேலையும் செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்து ஊருக்கு போகும் பொழுது சாண்டகிளாஸ் மாதிரி சம்பாதித்த அனைத்திற்கும் பரிசு பொருட்களாக வாங்கி சென்று அதிலும் குற்றம் குறை கேட்டு,சம்பாதித்த பணத்தை ஊரில் இருக்கும் லீவு நாட்களில் செலவழித்து விட்டு,பற்றாததற்கு கடன் வாங்கி, திரும்ப வந்து கடனை அடைக்கவும் இப்படி தான் பாவம் இங்கு வெளிநாட்டு கனவோடு வரும் படிக்காத இளைஞர்களின் பாடு.அவங்களுக்கு வயதான பின்பு முக்கால்வாசி பேருக்கு பேங்க் பேலன்ஸ் நில் தான்.அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி?யார் இதனை முறையாக செய்வார்கள் என்ற ஆதங்கம் எனக்கு,நீங்கள் விரிவாக விவாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு..உஷாராக இருந்து சம்பாதித்து லட்சியங்களை அடைபவர்களும் இருக்கிறார்கள் அவர்களை விட்டு விடுவோம்..
நான் வெளிநாடு சென்று வேலை செய்தவன் என்ற முறையில் இந்த பின்னூட்டமிடுகிறேன். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே... தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பதிலளிநீக்குவெளிநாடு சென்று வேலை செய்வதில் பல வகைகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து படித்துவிட்டு விசயாத்தையும் விட்டுவிட்டு சென்னை மும்பை போன்ற நகரங்களில் வேலை செய்பவரும் அயல் நாட்டில் வேலைசெய்பவரும் ஒரே மனநிலை, ஒரே நோக்கத்தில்தான் இருப்பதாக கருதுகின்றேன்.
@@ Philosophy Prabhakaran said...
பதிலளிநீக்கு//வெளிநாடு வாழ் தமிழர்கள் எல்லோருமே மனதில் ஒரு வலியோடுதான் வாழ்கிறார்கள்... தன் குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்கிறார்கள்...//
வீட்டினர் கனவை நிறைவேற்றுகிறார்கள்...இவர்களின் தியாகம் மிக உயர்ந்தது...இதை அவர்களின் குடும்பத்தினர் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
// நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்...//
இதுவே குறைக்க பட்ட ஒன்றுதான் பிரபாகர். :))
நன்றிகள்.
நல்ல அருமையான பகிர்வு,
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தேவைகள் இருக்கும் வரை வெளிநாடு பயணம் தொடரவே செய்யும்.
நீங்கள் சொல்லும் அதே தெருவில் சரியான வருமானம் இல்லாமல் கடை நடத்துபவர்கள் பலர் இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே வகையான தன்னம்பிக்கை இருக்கும் என்று கூற முடியாதல்லவா.
போலவே வெளிநாட்டில் வந்து கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். வாழ்வில் நல்ல நிலையை அடைந்து சந்தோசம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.
இக்கரைக்கு அக்கரை பச்சை :)))
@@ வெளங்காதவன் said...
பதிலளிநீக்குஅரசை எதற்கும் குறை சொல்வது எனக்கு என்னவோ சரியா தெரியவில்லை சகோ. தனி மனிதன் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை சரி செய்து வாழ்வதற்கு அரசு என்ன செய்யும்?
இதை பற்றி சொல்வது என்றால் நிறைய சொல்லலாம்...அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசலாம்.
//நீங்கள் நினைப்பது போல் எல்லாரும் இல்லை, எனினும் சோகங்கள் இருக்கத்தான் செய்யும்...//
எல்லா விசயத்தில் இருப்பதை போல இதிலும் பல பக்கங்கள் இருக்கலாம்...அதில் ஒன்றை மட்டுமே இங்கே சொன்னதாக நான் நினைக்கிறேன்.
// ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றைப் பேர இயலும்?//
இப்படி மனதை சமாதான படுத்தி கொள்ளவேண்டியது தான். வேற வழி :))
நன்றிகள்.
@@ ராஜகோபால்.S.M said...
பதிலளிநீக்கு//மின்சாரத்தை நிறுத்தி அதற்க்கு உதவி செய்த புரட்சி தலைவி ஜெயலலிதா அரசாங்கத்திற்கும் நன்றி :))//
கண்டிப்பா சொல்லிடுவோம் :))
வருகைக்கு நன்றிகள் ராஜகோபால்.
@@ சௌந்தர் said...
பதிலளிநீக்கு//வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் லோல் படுகிறார்கள் என்று யார் சொன்னது ?//
எல்லோரையும் சொல்லவில்லை...அப்படி சலித்து கொண்டவர்களை சொன்னேன் ! :)
//குடும்ப சூழலின் காரணமாக எப்படியாவது பிழைக்கலாம் என்று சென்றவர்களை போய் மோகத்தில் செல்கிறார்கள் என்று சொல்வது மிக தவறு...//
'எப்படியாவது பிழைக்கலாம்' என்றால் எப்படி திருடி, கொள்ளை அடித்தா ?!!
நீ சொன்ன இந்த இரு வார்த்தையை இப்படி தவறாகவும் பொருள் எடுத்துக்க முடியும் ! :))
ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துகொண்டு மிக தவறு என்று சொல்வது எவ்வாறு சரி?!!
பதிவில் தன்னம்பிக்கை உள்ள ஒருவரை பற்றியும் சொன்னது உனக்கு புரிந்தால் சரி.
வருகைக்கு நன்றி சௌந்தர்.
@@ Surya Prakash said...
பதிலளிநீக்கு//தன்னம்பிக்கை உள்ளவர்கள் தோற்று போக மாட்டார்கள் //
மிக சரி. நேரில் பார்த்து வியந்த ஒன்று.
நன்றி சூர்யபிரகாஷ்
@@ Harini Nathan...
பதிலளிநீக்குரொம்ப நாளா ஆளை காணும்...! நலமா ஹரிணி...?
:))
@@ suryajeeva said...
பதிலளிநீக்குஅனைவருக்கும் நடக்காது என்று சொல்வதை விட தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு நடக்காது என்றால் மகிழ்வேன்.
//அதே தெருவில் இன்னும் பத்து இஸ்திரி கடைகள் விழுந்தால்.. யோசித்துப் பாருங்கள்...//
அதே ரோட்டில் இன்னும் நாலு கடைகள் இருக்கிறது !! அனைத்திலும் இதே நிலைதான்... 'போயிட்டு நாளைக்கு வாங்க' என்ற பதில் தான்.
ரொம்ப நாளா இதை விசாரிக்கணும் என்று இருந்தேன், நேற்று இந்த கடையில் விசாரித்ததால் தான் இந்த பதிவே ! :))
குறைகள் எங்கும் இருக்கும் நான் இதில் இருந்த நிறை மட்டுமே பார்த்தேன்.
நன்றி சூர்யா.
@@ விக்கியுலகம் said...
பதிலளிநீக்கு//வணக்கம் சகோ...நீங்க சொல்றது படி பாத்தா...சொந்த தொழில் தான் செய்யனும்ங்கரா மாதிரி செய்தி வருது சரிங்களா..!//
வணக்கம் சகோ. அரசு வேலை/கம்பெனி வேலை கிடைக்கும் என்று காத்திருந்து சலித்துவிட்டு கடன் வாங்கி வெளிநாடு செல்வதை விட, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து, இங்கேயே ஒரு தொழிலை பார்த்து குடும்பத்துடன் இருக்கலாமே என்பது தான் என் ஆதங்கம் சகோ.
//நம்ம நாட்டு மக்கள் தொகையையும்...படிப்பாளிகளின் எண்ணிக்கையையும் பாருங்க...உண்மையில அரசாங்கம் மறைமுகமா என்ன சொல்லுதுன்னு //
அரசாங்கத்தின் சிலபல விசயங்களை யோசித்தால் விரக்தி தான் மிஞ்சும் சகோ.
.....
நான் அதிகம் ஆன்லைன் இருப்பதில்லை, அதனால் வரும் பின்னூட்டங்களை உடனுக்கு உடன் பப்லிஷ் செய்ய இயலுவதில்லை...மற்றபடி எனக்கு கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் இருக்காது :))
கருதிட்டமைக்கு நன்றிகள் சகோ.
@@ கணேஷ் said...
பதிலளிநீக்கு//துணிகளை அயர்ன் பண்ணக் குடுத்தா ஒரு நாளு ஆகுமா... அவ்வளவு போட்டியில்லாம இருக்குது போல அந்தத் தொழில் உங்க ஊர்ல... //
அயர்ன் பண்ண துணிகள் நிறைய இருக்கு கணேஷ் ! :))
நன்றிகள்
@@ சத்ரியன்...
பதிலளிநீக்குநன்றிங்க.
உங்களூக்கு ஒரு சிறிய பதில்
பதிலளிநீக்குhttp://www.terrorkummi.com/2011/11/1.html
@@ asiya omar said...
பதிலளிநீக்குமிக மகிழ்கிறேன் தோழி...மிக விரிவாக தெளிவாக கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை குறித்தும் எழுத வேண்டும் என்று உள்ளேன்...உங்களின் இந்த கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும்.
//உஷாராக இருந்து சம்பாதித்து லட்சியங்களை அடைபவர்களும் இருக்கிறார்கள் அவர்களை விட்டு விடுவோம்..//
சரிதானே...! உங்களுக்கு தெரியாததல்ல, என் பதிவுகள் நிறைவுகளை குறித்து பேசுவதை விட எதிலும் இருக்கும் குறைகளை குறித்தே அதிக பேசும் என்று...
இதன் மூலம் எனக்கு தெரியாதவற்றை பதிவுக்கு வரும் கருத்துக்களின் மூலம் நான் தெரிந்து கொண்டு என்னை தெளிவு படுத்தி கொண்டு வருகிறேன்.
அதற்க்கு உங்களை போன்றோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
மகிழ்வுடன் நன்றிகள் தோழி.
@@ Lingesh said:
பதிலளிநீக்கு// சென்னை மும்பை போன்ற நகரங்களில் வேலை செய்பவரும் அயல் நாட்டில் வேலைசெய்பவரும் ஒரே மனநிலை, ஒரே நோக்கத்தில்தான் இருப்பதாக கருதுகின்றேன்.//
கருதிட்டமைக்கு நன்றிகள் .
கருத்தினை சொல்வதற்கு எதுக்கு சாரி எல்லாம்...!
@@ சிநேகிதன் அக்பர் said...
பதிலளிநீக்கு//நீங்கள் சொல்லும் அதே தெருவில் சரியான வருமானம் இல்லாமல் கடை நடத்துபவர்கள் பலர் இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே வகையான தன்னம்பிக்கை இருக்கும் என்று கூற முடியாதல்லவா//
உண்மை. ஒரு விஷயம் பற்றி சொல்லும் போது சிறப்பா யார் செய்து இருப்பது என்று அவங்களை பற்றி தானே பேச முடியும்...
//போலவே வெளிநாட்டில் வந்து கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். வாழ்வில் நல்ல நிலையை அடைந்து சந்தோசம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.//
அது போலவே இந்த பதிவை பொருத்தவரை கஷ்டபடுபவர்களை பற்றி ஏன் அங்கே போய் கஷ்டம்... ?! என்பதாக எண்ணி எழுதப்பட்டது.
புரிதலுக்கு நன்றிகள் சகோ.
@@ TERROR-PANDIYAN(VAS) said...
பதிலளிநீக்கு//உங்களூக்கு ஒரு சிறிய பதில்//
சிறிய பதில் அல்ல, பெரிய பதில் !! :))
இரு பதிவுகளையும் படித்தேன்...உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்...
எனக்கு ஆதங்கமாக தெரிந்தது, எழுதினேன். அதற்கு உங்களின் விரிவான விளக்கங்கள் எனக்கு பல நல்ல புரிதல்களை கொடுத்தன...
அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் டெரர்.
வாழ்த்துக்கள்.
//கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?!//
பதிலளிநீக்குஎன் மனதிலும் இந்த ஆதங்கம் உண்டு கௌசி .அதுவும் இங்கே நிறைய பேர்
படிக்க என்று வராங்க ஊரில் லட்சங்களில் கடன் வாங்கி .இங்கே வந்ததும் படித்துக்கொண்டே வேலை செய்யலாம் என்று தப்புகணக்கு .அவர்கள் படும் பாடு இருக்கே பாவம் .ஒரு இடத்துக்கு வேலைக்கு போக கார் வாங்கினால் இன்ஷூரன்ஸ் /mot / என்று எவ்வளவோ இருக்கு .முடியாதவங்க லிப்ட் கேட்டு போவாங்க,இன்னும் எவ்ளோ இருக்கு கடும் குளிரில் பாவமா இருக்கும் .நம்மூரில் வேலை வாய்ப்புகள் இல்லையா
கௌசி...இக்கரைக்கு அக்கரை பச்சை.வெளிநாட்டில அவதிப்படுற எங்களிட்ட கேளுங்கோ.நிறையச் சொல்லுவம்.என்னதான் உழைச்சாலும் என்னதான் இருந்தாலும் எதுவுமே இல்லாததுபோலத்தான் வெளிநாடு !
பதிலளிநீக்கு***வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!***
பதிலளிநீக்குஅது சரி, வெளிநாட்டுக்குப் போறதை விடுங்க, அங்காடி தெருக்குப் போயி கருங்காலிட்ட அடி வாங்கி ஏன் அடிமையா வாழ்றாங்க? திருநெல்வேலி-லையே தொழில் செஞ்சா என்ன?னு கேட்டால் பொழைப்புக்கு வழியில்லைனுதான் சொன்னாங்க.
மக்கள்த்தொகை பெருகிக்கிட்டே போகுது, ஜனங்கள் அதிகமாவதால் தொழில், வியாபாரம் எல்லாம் நடத்தத்தான் செய்யலாம். ஆனால் மக்கள்த்தொகையை கட்டுப்படுத்த வழியே இல்லை. யாருக்கும் கவலையும் இல்லை! நீங்க என்னவோ வெளிநாடு மோகத்தைப்பத்தி கவலைப்படுறீங்க்? எந்த்தனைவிழுக்காடு போறாங்கனு பாருங்க? வெளிநாட்டு மோகத்தால் நம்ம நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படப்போவதில்லைங்க!
கடன் வாங்கி இந்தியா திரும்பலாம்னு இருக்கேன்.. பரவாயில்லிங்களா?
பதிலளிநீக்குLingesh கருத்து அருமை.
மனிதனுக்குத் முதலில் தன்
பதிலளிநீக்குநம்பிக்கை வேண்டும் என்பதை
தாங்கள் வலியுறுத்துவதாக
இப் பதிவு அமைந்துள்ளது
உழைக்கும் எண்ணம்
உள்ளவன் எங்கிருந்தாலும் வாழ
முடியும்!
இதில் வாதத்திற்கு இடமில்லை அவரவர் மனநிலைக்கு
ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
//கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?// நீங்க படிச்சுட்டு வேலையில்லாம இருந்திருந்தா தெரியுமுங்க அந்த வலி. ஒரு விசயத்த சொல்லனுமுன்னா முன்னாடி தெரிஞ்சிருக்கனும்னு கட்டாயமில்ல ஆனா அதனோட அடிப்படை என்னன்னு கட்டாயமா தெரிஞ்சிருக்கனும். இது ஏதோ ஹிட்ஸ் எழுதின மாதிரி இருக்கு. இந்த மாதிரி டயலாக்க கேட்டுக்கேட்டு புலிச்சுப்போச்சு. அடப்போங்க. ரொம்ப ஈசியத்தான் எழுதிடுறீங்க. அடுத்த வேலை சோத்துக்கு நம்மள நம்பி வீட்ல பசியோட காத்துக்கிட்டு இருக்குறவங்கள நினைக்குறப்போ போகத்தாங்க தோணும். அதிகபட்சம் நம்மூர்ல அந்த வேலைய செஞ்சா மூவாயிரம் ரூபா கிடைக்கும் அதே வேலைய இங்க செஞ்சா 25,000 கிடைக்கும்னா, கஸ்டம் தீர வரத்தான் செய்வாங்க. வெளிநாட்டு மோகம். ரொம்ப சூப்பர். வெளிநாட்ல வேலை செய்றவன இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது.
பதிலளிநீக்கு//உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும்.//
காலேஜ்லயோ இல்ல பள்ளிக்கூடத்துலயோ போய் இது மாதிரி பேசுனா நிறைய கைத்தட்டுவாங்க.
//உழைக்க என்ன வெட்கம் ?!//
எதுக்குங்க போல்ட் லெட்டர்ல போட்டிருக்கீங்க. வெளி நாட்ல யாருமே உழைக்காத மாதிரி. போய் வேற வெலை இருந்த பாருங்க.
//உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! // எதார்த்தத்துல இதுக்கெல்லாம் ரொம்ப காலம் ஆகுமுங்க. வாழ்க்கை இவ்வளாவு ஈசியா இத்தன நாள் தெரியாம போயிடுச்சே.
மொத்தத்துல நான் எதுவும் தப்பா எழுதியிருக்குறதா நீங்க நினச்சா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லங்க.
very nice post, you show the reality.
பதிலளிநீக்குmany foreign returns left their young life and family.
தவறான புரிதல்கள் எடுத்து கொண்ட சகோதரர்களுக்காக மட்டும்...
பதிலளிநீக்குஇந்த பதிவில் நான் வெளிநாடு வேலைக்கு சென்றவர்கள் அத்தனை பேரையும் அவமதித்ததை போல ஒரு மாய தோற்றம் அவசியமின்றி விழுந்துவிட்டது என நினைக்கிறேன்.
எனது இந்த விளக்கம் சப்பைகட்டுவதற்க்காக அல்ல. சில தவறான புரிதல் ஏற்பட்டு விட்டதற்க்கு வருத்தம் தெரிவித்தும் எனது நிலையை சொல்வதற்கும் தான்.
என்னை பொறுத்தவரை எது ஒன்றிலும் இருக்கும் நிறைகளை விட குறைகளை பற்றிதான் பதிந்து வருகிறேன்...நிறைகளை பேச தெரியாது என்றில்லை...எனது தாம்பத்தியம் போஸ்டிலும் சந்தோசமாக வாழும் கணவன் மனைவியரை பற்றி ஏதும் விஷயம் இருக்காது. அவர்களிடத்திளிருக்கும் குறைகளை தான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.ஒரு இடத்தில் இருக்கும் குறைகளை குறித்து பேசும் காரணம் நிறைகள் இல்லை என்பதற்காக இல்லை குறைகளும் தெரியட்டும், அதை தீர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக தான் இன்று வரை எழுதி வருகிறேன்.
கடன்பட்டு, கஷ்டப்பட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் பல தியாகங்களை தங்கள் குடும்பத்திற்காக செய்கிறார்கள் என்பது கூட தெரியாதவள் அல்ல.
பதிலளிநீக்குபதிவில் பல இடங்களில் குடும்பம் என்று குறிபிட்டதிர்க்கு காரணம் பல குடும்பங்களின் பிரச்சனைகளை/வேதனைகளை நேரில் பார்த்து வருந்தி இருக்கிறேன் என்பது பொருள், அனைத்தையும் விட வெளிநாடு விருப்பம் இல்லாமல் செல்லும் இளைஞர்கள் படும் அவதி, அதையும் அவர்களின் மூலம் தெரிந்திருக்கிறேன்.
சொன்னபோனால் வெளிநாட்டில் வேலை செய்வோரின் வலிகள் அங்கே போகாமலேயே எனக்கும் நன்கு தெரியும். தினமும் பல மனிதர்களை சந்திக்கிறேன், பிரச்சனைகளை கலந்து பேசுகிறேன், கவுன்சிலிங் வருபவர்கள் யாரும் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள வருவதில்லை...அவர்களின் வேதனைகளை கண் முன்னால் காண்கிறேன், மெயிலில் படிக்கிறேன்...
* வெளிநாட்டில் வேலைக்கு போன கணவன் விருப்பம் இன்றி மூன்று வருடம் கடந்து விட்டது இனி ஊரில் இருக்கிறேன் என்றதற்கு மறுபடி போகலைனா உன் குழந்தைகளுடன் நானும் தீக்குளித்து விடுவேன் என்று மனைவி கூறிவிட மறுநாள் இவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அனுப்பின பணத்தை எல்லாம் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு இப்போது செய்வதறியாது நிற்கிறார் அந்த மனைவி இரு பெண் குழந்தைகளுடன் !!
பதிலளிநீக்கு* 'அவ கணவன் வெளிநாட்டில் இருக்கிறான், இருந்தும் பாரேன் எப்படி அலங்காரம் பண்ணிட்டு போறா, யாரை கவருவதற்கு' என்பதை போன்ற வக்கிரமான பேச்சையும், மகனை இங்கே வர சொல்லி தொந்தரவு பண்ணாத, அவன் இங்க வந்துட்டா எங்க (ஆடம்பர)செலவுக்கு யார் பணம் தருவா என்கிற மாமியாரின் இம்சை இரண்டையும் பொறுத்து பொறுத்து ஒரு கட்டத்தில் மனபிறழ்வு ஏற்பட்டு மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன் கடல் கடந்து, மனைவி மனநோய் மருத்துவ மனையில், இரண்டு வயது ஆண் குழந்தை தனியே தனது அம்மா வழி பாட்டி வீட்டில்...!
* என் கணவன் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணி ஒரு மாசத்துல விட்டுட்டு இப்படி போகணும், தெருவில கண்டவனும் ஒவ்வொரு விதமா பேசுறானே என்று வேதனை படும் மனைவிகளின் வேதனையை, வலியை ஒரு முறை காதால் கேட்டால் மட்டும் போதும்...
'ஒரு மனைவி இப்படி இருப்பாங்களா?', 'ஒரு அம்மா இப்படி கொடுமை படுத்துவாங்களா ?', 'இப்படியும் மனுசங்க பேசுவாங்களா?' என்று உணர்ச்சி வசப்பட்டு பார்க்காமல் இதுவும் நிதர்சனம் என்பதை எடுத்துகொள்வது நன்று.
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
இங்கே ஒரு மூணு உதாரணம் குறிப்பிட்டேன், இன்னும் இது போல் பல இருக்கலாம்...
அதில் என் மனதை அதிகம் பாதித்ததை பதிவாக எழுதுகிறேன்...படிக்கிறவர்கள் தேவை என்றால் எடுத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் தயவு செய்து கடந்து சென்று விடுங்களேன்
எதையும் ஆராயாமல் நான் எழுதியதை போல இந்த பதிவிற்கு இரண்டு எதிர் பதிவுகள்...! அரசியல் ஒரு சாக்கடை என்று யாராவது விமர்சித்தால் நான் அரசியலில் இருக்கிறேன் என்னை தான் சொன்னாய் என்று சொல்வதை போல் இருக்கிறது.
பதிலளிநீக்குயாரையும் குறிப்பாக குறிப்பிட்டு சொல்லாத என் பதிவு தனது மனதை புண்படுத்திவிட்டது என்று சொன்ன சகோதரருக்கு என் வருத்தங்கள். அதே நேரம் என் பெயரை குறிப்பிட்டு தனது பதிவில் களங்கபடுத்தியது என் மனதை புண் படுத்தாது என்பதை எப்படி மறந்து போனார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
நான் ஆதங்கத்துடன் எழுதியதை ஹிட்ஸ்க்கு எழுதினேன் என்று ஒரு சகோதரர் சொல்கிறார். மாதத்துக்கு நாலு பதிவு எழுதுறேன் என்னை போய் ஹிட்ஸ்க்கு என்று சொல்லி காமெடி பண்ணாதிங்க சகோ.:)
என் மனதை எப்படி எல்லாம் காய படுத்தலாம் என்று யோசிப்பதை விட வலியையும் அறிந்து தான் எழுதி இருக்கிறாள் என்று கடந்து செல்வது பதிவுலகை அதிகம் மதிக்கும் எனக்கு, நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
இன்னும் இதில் இருக்கும் வார்த்தைகளையும் தனி தனியே பிரித்து பொருள் கொண்டு விமர்சித்து பதிவெழுதினால் அதையும் நான் வரவேற்பேன் :)
@@ angelin...
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி தோழி.
@@ ஹேமா...
புரிதலுக்கு நன்றிகள் ஹேமா.
@@ ஜீவன் பென்னி...
பதில் கொடுத்துவிட்டேனு நினைக்கிறேன். புரிதலுக்கு நன்றிகள் சகோ.
@@ Anonymous...
நன்றிகள்.
@@ வருண்...
ரொம்ப நாள் ஆச்சு...நலமா சகோ?
உணர்விற்கு நன்றிகள் வருண்.
@@ அப்பாதுரை...
நன்றிகள் சகோ.
@@ புலவர் சா இராமாநுசம் said...
புரிதலுக்கு மிக்க மகிழ்கிறேன். நன்றிகள் அப்பா.
இங்கே பின்னூட்டம் இட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குஉரிமையாக கேட்கிறேன் இந்த பதிவு உங்கள் மனதை எந்த விதத்திலாவது வருத்தி இருந்தால் தயவு செய்து பொறுத்து கொண்டு மன்னித்துவிடுங்கள். இது போல் ஒரு சூழல் இனி வராது.
//தவறான புரிதல்கள் எடுத்து கொண்ட சகோதரர்களுக்காக மட்டும்...
பதிலளிநீக்குஇந்த பதிவில் நான் வெளிநாடு வேலைக்கு சென்றவர்கள் அத்தனை பேரையும் அவமதித்ததை போல ஒரு மாய தோற்றம் அவசியமின்றி விழுந்துவிட்டது என நினைக்கிறேன்.//
மாயத்தோற்றம் இல்லங்க உங்க தலைப்பே அவமதிக்குற மாதிரிதான் இருக்கு. அதனால தான் என் கருத்துக்களை பதிவு செஞ்சேன். எவ்வளவோ பேருக்கு ஆலோசனை சொல்லுற நீங்க இந்தப் பதிவு எழுதுறப்போ கொஞ்சம் எச்சரிக்கையோட எழுதியிருந்தா இந்த மாயத்தோற்றமே வந்திருக்காது. நானும் கமெண்ட் போட்டிருக்க் மாட்டேன்.
//அதில் என் மனதை அதிகம் பாதித்ததை பதிவாக எழுதுகிறேன்...படிக்கிறவர்கள் தேவை என்றால் எடுத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் தயவு செய்து கடந்து சென்று விடுங்களேன்//
பொது வெளியில எழுதுறப்போ உங்க எழுத்து என்னய அதிகமா பாதிச்சா அதற்கான எதிர்வினைய நிச்சயமா செய்வோம்க. மற்றபடி வாழ்த்துக்கள்.
எனது இரண்டாவது கருத்துரையை வெளியிட வேண்டாம். தங்களின் விளக்கத்தை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@@ ஜீவன் பென்னி...
பதிலளிநீக்கு// உங்க தலைப்பே அவமதிக்குற மாதிரிதான் இருக்கு. //
தலைப்புக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியதுவதுக்கு மகிழ்கிறேன்.
நன்றிகள்
@கௌசல்யா
பதிலளிநீக்கு//அதே நேரம் என் பெயரை குறிப்பிட்டு தனது பதிவில் களங்கபடுத்தியது என் மனதை புண் படுத்தாது என்பதை எப்படி மறந்து போனார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.//
இது என்னை சொல்றிங்களா? இல்லை வேற யாரோ இன்னும் ஒரு எதிர்பதிவு சொன்னிங்களே அவங்களை சொல்றிங்களா? என்னையா இருந்தா ஒரு ஒரு சின்ன சந்தேகம். என்னோட பதிவில் உங்க பெயர் எங்க களங்கபடுத்தி இருக்கு காட்ட முடியுமா? உங்களை பற்றி தரகுறைவா ஒரு வார்த்தை காட்ட முடியுமா?
என்னோட கருத்து சின்னதா இருந்தா இங்கு கமெண்டில் சொல்லி இருப்பேன். மத்தபடி மூன்று எழுத்து பதிவர், அமெரிக்காவை சேர்ந்த அந்த பதிவர், இந்த பதிவர்ன்னு சுத்தி வளைக்காமல் நேரடியா உங்கள் பதிவு, ப்ளாக் லிங்க் போட்டு எழுதியது தவறுன்னு நினைக்கிறிர்களா?
சரியாக சொன்னீர்கள் சகோதரி...பணத்திற்காக, பிரிந்து இருப்பது, பாசம் எங்கோ போய் விடுகிறது.அதிலும் கொடுமை..கல்யாணம் முடிந்து, பிரிந்து வாழ்வது. வாழ்வது ஒருமுறை...போன இளமை திரும்ப கிடைக்குமா? யோசிக்க வேண்டிய பதிப்பு. தொடருங்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபதிவுலகில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.இதே கருத்தை ஒட்டிய எனது பதிவுகள்.
பதிலளிநீக்கு1.http://rajasabai.blogspot.com/2011/10/blog-post_19.html
2.http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_22.html
3.http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_05.html
@@ எல் கே said...
பதிலளிநீக்கு//பதிவுலகில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று.//
எது ஒன்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜமே...! எல்லோராலும் எல்லாவற்றையும் ஒரே பார்வையாக கொள்ள முடியாது, ஒருத்தருக்கு சரியாக இருப்பது மற்றொருவருக்கு தவறாக இருக்கலாம். இது இயல்பு...இந்த பதிவு விசயத்திலும் இது தான் நடந்திருக்கிறது.
உண்மையில் இதனால் எனக்கு தான் நிறைய புரிதல்கள் ஏற்பட்டிருக்கிறது. :)
நன்றிகள் கார்த்திக்.
@@ துபாய் ராஜா...
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை இன்று படித்தேன்...மிக விளக்கமாக இருந்தது .வலிகளில் இத்தனை விதங்களா என ஆச்சர்யபடவைத்துவிட்டது.
வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது.
எல்லாம் படித்த பின் இறுதியில் மனதில் சுமை கூடியதை போல் உணர்ந்தேன்.
வருகைக்கு நன்றிகள் ராஜா.
இந்தியாவில் மனிதர்கள் குறைவு.அதாவது மனிதத்தன்மையற்றவர்கள் அதிகம்.சுருக்கமா சொல்லனும்ணா அமெரிக்காவிலேயோ,ஆஸ்திரேலியாவிலேயோ ஏன் சிங்கப்பூர்ல கூட ஒரு கடை நிலை தொழிலாளி ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் முன் கால்மேல் கால்போட்டு பேசமுடியும் அதை தவறாக அந்த மேலாளரும் எடுத்துக்கொள்ள மாட்டார்..அதே இந்தியாவில்???
பதிலளிநீக்குஈசியான வேலை .. நல்ல சம்பளம் , நல்ல மதிப்பு அதான் வெளிநாடு..வர்ட்டா!!!
அப்ரம் சும்மா இந்தியா இந்தியான்னு கத ஓட்டாதிங்க.இந்தியா இந்த அளவுக்கு வளர்ந்து இருக்குறதே வெளி நாட்டு நிறுவனங்களாலதான் புரியுதோ???
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=8041&ncat=2
பதிலளிநீக்கு***@@ வருண்...
பதிலளிநீக்குரொம்ப நாள் ஆச்சு...நலமா சகோ?
உணர்விற்கு நன்றிகள் வருண்.***
ஆமாங்க, ரொம்ப நாளாச்சுங்க, கெளசல்யா! :-)
என்னைப்பொறுத்தவரையில் நீங்க ரொம்ப நல்ல விசயத்தை, நல்லவிதமாத்தான் சொல்லியிருக்கீங்க, அதில் எந்த மறுகருத்தும் இல்லை- நான் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு இருந்தாலும்.
ஆனால் கொஞ்சம் கவனமாக இதைப் பார்க்கனும்ங்க..
ஹைதராபாத், பங்களூர்ல தான் இப்போ யு எஸ்க்கு தேவையான கெமிக்கல்ஸ் (மருந்து கம்பெணிகளுக்கு) எல்லாம் தயாரிச்சு அனுப்பப்படுகிறது. காண்ட்ராக்ட் வொர்க். இங்கே இந்தியாவில் இதுபோல் காண்ட்ராக்ட் வொர்க் பண்றவங்க எல்லாம் இந்தியாவிலேயே இருப்பதால், இவர்களை இந்தியத் தியாகிகள்னு சொல்ல முடியாது.
ஏன்னு கேளுங்க,
மேலைநாடுகள் இந்த வேலையை இந்தியாக்கு அனுப்பக்காரணமே, வேதிக்கழிவுகள், "பொல்லுசன்" போன்றவைகளில் இருந்து அமெரிக்கா தப்பிக்கத்தான். அதாவது இந்த இந்திய தியாகிகள் எல்லாம் மேலை நாட்டுக்களுக்கு கைக்கூலியாக இருந்துகொண்டு நம்ம நாட்டை வேதிக்கழிவுகளால் பாழ் படுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க னு நான் சொல்லுவேன். அதுதான் உண்மை. அது அவங்களுக்கும்தெரியும். இதன் விளைவுகள் பின்னாலதான் நம்ம மக்களுக்கு விளங்கும். நம்ம ஆளு என்னைக்கு 50 வருடம் கடந்து என்ன நடக்கப்போதுனு யோசிச்சான்??
ஆக, நம்ம நாட்டிலேயே இருக்கவங்க எல்லாம் நாட்டுக்கு நல்லது செய்றாங்க என்றோ, நாட்டுப்பற்று உள்ளவங்க என்றோ சொல்ல முடியாதுங்க. இதைப்பத்தி நெறையாப் பேசலாம்.
நான் எதிர்கருத்து சொல்வதை தவறா எடுத்துக்காதீங்க. எனக்கு எதுக்கெடுத்தாலும் தலையை ஆட்டி சரி சரி னு சொல்றவங்களத்தான் பிடிக்காது. எதிர்கருத்து வரும்போதுதான் நம்ம நெறையா கற்றுக்க முடியும்! நம்ம கற்றது கையளவுதானங்க. இல்லையா? :)