Thursday, April 19

10:48 AM
22

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள் 
Tweet

22 comments:

  1. தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ...

    துப்புவதால் இவ்வளவு நடக்கிறதா ??

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்....நல்ல பதிவு!

    ReplyDelete
  3. வட இந்தியாவில் மட்டும்தான் இப்படி பான், புகையிலை போட்டு துப்பி கொண்டு இருந்தார்கள்..இப்போ தமிழ் நாட்டிலும் பரவி இருக்கிற வட இந்தியர் களால் இங்கும் இன்னும் அதிகமாக துப்ப படுகிறது..நமக்கும் ஒரு சட்டம் வேணும்..என்கிட்ட வேலை செஞ்ச வட இந்திய வேலையாட்களால் சிவகாசியில் பக்கத்து வீட்டிற்கு இலவசமாய் வெள்ளை அடித்து கொடுத்தது ஞாபகம் வருகிறது

    ReplyDelete
  4. துப்புவதால் விளையும் தீமைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்

    நன்றி நண்பா

    ReplyDelete
  5. 'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!



    வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!!

    விழிப்புணர்வு பகிர்வு..

    ReplyDelete
  6. கெளசல்யா மேடம்! சாலையில் டூ வீலரில் செல்லும் போது பினனால் என்ன வண்டி வருகிறது, யார் வருகிறார்கள் என்றுகூட பார்க்காமல் துப்பும் ஜென்மங்களை தமிழ்நாட்டிலும் பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். எனக்கு மட்டும் அதிகாரமும், கேஸ் இல்லை என்ற உத்தரவாதமும் இருந்தால் நிறையப் பேரைச் சுட்டுத் தள்ளியிருப்பேன். நச்சென்று ஆணியடித்தது போல நிஜம் சொன்ன உங்கள் பதிவு எனக்கு தென்றலாய் இருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் தோழி!

    ReplyDelete
  7. விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு கெளசல்யா.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு.

    இவர்கள் “துப்பப் பிறந்தவர்கள்” என நினைப்பு!

    ரப்பர் பந்து போல, துப்பினால் அது எகிறி அவர்கள் வாய்க்குள்ளேயே போகும்படி ஏதாவது செய்யமுடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன்!

    ReplyDelete
  9. //நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்//

    மேலே சொன்னதை ஒவ்வொரு மனிதனும் உணர்த்து
    சுயகட்டுப் பாட்டுடன் செயல் படின்...!
    துப்பு கெட்டவன் என்று சொல்வது போல துப்பிக் கெட்டது நாடு என்ற நிலை வராது . செய்வார்களா ?

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. விழிப்புணர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  11. தப்பித்தவறிக்கூட பேருந்துகளை ஒட்டினாப்ல போயிரக்கூடாது. எந்த நிமிஷம் யாரு நம்ம மேல வெற்றிலை அபிஷேகம் செய்வாங்கன்னு சொல்லவே முடியாது. அதுவும் வீட்லயே தம்பாக்கு ரெடி செஞ்சு டப்பியில் அடைச்சுக் கொண்டாரதால நான்ஸ்டாப் சப்ளைதான்.

    அதுவும் புதுக்கட்டிடங்களின் மூலைகள்ல துப்பி வைக்கிறதுல எங்காட்களுக்கு அலாதி இன்பம். இதைத் தடுக்கறதுக்காக சாமி படம் போட்ட டைல்ஸை ஒட்டி வெச்சாலும் அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்குது.

    என்ன சொன்னாலும் நம்மாட்களுக்கு உறைக்கும்ங்கறீங்க?????

    ReplyDelete
  12. மிகவும் அவசியமான அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கௌசல்யா.

    ReplyDelete
  13. இந்த ஒருவரிதான் ரொம்ப முக்கியம். ***மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம்.***

    திருடனா பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அல்லவா?

    மும்பையில் மட்டுமல்ல அனைத்து பொது இடங்களிலும் இப்படி நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுவது பொது மக்களைத்தான் அதிகம் பாதிக்கும்.

    பயன்மிக்க பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!!

    ReplyDelete
  14. @@ wesmob...

    முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  15. @@ koodal bala said...

    //பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்//

    மிக சரி. நன்றி பாலா

    ReplyDelete
  16. நன்றாக துப்பு துலக்கி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  17. Its a great job to create some awareness to our Indian Brothers ang Sisters

    ReplyDelete
  18. நல்லதொரு பதிவு....அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது. தனி நபர் ஒழுக்கத்தை உணர்வோம் ; செயல்படுத்துவோம்.

    ReplyDelete
  19. நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயும் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...!பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயும் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...!பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. A good service and averness, will these culprit learn.
    balakrishnan

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...