Thursday, April 5

2:04 PM
27

தனி நபர் வளர்த்த காடு

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

                                                           
                                              மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்  மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் 

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து  வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

                                                 மூங்கிலிலை காடுகளே...!! 


தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான்  இந்த 'முலாய் காடுகள்' !! 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.


      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
                 இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!


பின்குறிப்பு 

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும்  வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!தகவல் -  The Times of India, இணையம் 
படங்கள் - நன்றி கூகுள்
                           
Tweet

27 comments:

 1. நல்ல பகிர்வு. அவர் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய மகாமனிதர்

  ReplyDelete
 2. கடமைத்துவ பதிவு வாழ்த்துக்கள்..>!

  ReplyDelete
 3. ஆஹா முந்திட்டீங்க நீங்க!

  பேப்பரில் படித்தவுடன் எழுத நினைத்தேன். வலைச்சரம் பணி முடிந்தபின் எழுதலாம் என விட்டேன்.

  ஆனாலும், இதுவும் நல்லதற்குத் தான்! நீங்கள் சிறப்பாக எழுதியாச்சே!

  ReplyDelete
 4. @@ தமிழானவன் said...

  //நல்ல பகிர்வு. அவர் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய மகாமனிதர்//

  உண்மை.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 5. @@ Nirosh said...

  //கடமைத்துவ பதிவு வாழ்த்துக்கள்..>//

  நன்றி Nirosh.

  ReplyDelete
 6. @@ வெங்கட் நாகராஜ் said...

  //ஆஹா முந்திட்டீங்க நீங்க! //

  :))

  //பேப்பரில் படித்தவுடன் எழுத நினைத்தேன். வலைச்சரம் பணி முடிந்தபின் எழுதலாம் என விட்டேன்.

  ஆனாலும், இதுவும் நல்லதற்குத் தான்! நீங்கள் சிறப்பாக எழுதியாச்சே!//

  இதை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 7. நினைத்துப் பார்க்க முடியவில்லை....திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !

  ReplyDelete
 8. திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !(c&p)

  நன்றி மேடம்....
  அனைவரையும் சென்று அடைய முயற்சி எடுப்போம்....

  ReplyDelete
 9. @@ koodal bala said...

  //நினைத்துப் பார்க்க முடியவில்லை....திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் //

  இவர் நம் வணக்கத்திற்குரியவர் பாலா. ஒரு காட்டை இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்குவது என்பது தனி மனிதரால் சாத்தியமா என யோசிக்கவே எனக்கு முடியவில்லை. ஆனால் சாதித்து காட்டி விட்டாரே...?!

  மிக ஆச்சர்யம்.

  ReplyDelete
 10. @@ NAAI-NAKKS said...

  //அனைவரையும் சென்று அடைய முயற்சி எடுப்போம்....//

  அவசியம் இப்பதிவை தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்

  நன்றிகள் நக்கீரன்.

  ReplyDelete
 11. உண்மையில் இவர் ஒரு உதாரண மனிதர்தான். தன் வாழ்நாளையே இந்த காடுகளுக்காக செலவிடுவது என்பது நினைத்து பார்க்கவே முடியாத தியாகம் !!!

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.

  பாராட்டப்பட வேண்டியவரைப் பற்றி அருமையான பகிர்வு.

  ReplyDelete
 13. நல்லதொரு அருமையான பகிர்வு.பாராட்டப்படவேண்டியவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டும். வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு.. இந்த சிந்தனை இப்போ யாருக்கு வருகிறது. இப்போதெல்லாம் சின்ன இடம் கிடைத்தால் உடனே ப்ளாட் போட்டு விற்று விடுகின்றனர். என்ன செய்ய எல்லாம் காலச்சூழல்!

  ReplyDelete
 15. திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !

  ReplyDelete
 16. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஐயா.....

  ReplyDelete
 17. மட்டை அடி வீரர் என பலகோடி சம்பாதிமட்டை க்கும் விளம்பரதரருக்கு எல்லாம் பாரத ரத்னா ,கேல்ரத்னா ,நவரத்ன என பல விருது கொடுத்து கௌரவிக்கும் மானம்கேட்ட அரசால் இவருக்கு விருது கொடுக்க அருகதை இல்லை .
  பாராட்ட வார்த்தை இல்லை இந்த மண்ணின் மைந்தனுக்கு ,வணங்குகிறோம்

  ReplyDelete
 18. kodana kodi nanrikal ayya ....

  ReplyDelete
 19. KADAVUL AVARUKU NALA AIYULAI KODUKA PIRATHIPOM

  ReplyDelete
 20. pls share this site to everyone. I request Our Country should reward some award and respect him for his unexpectable, wonderful service.

  ReplyDelete
 21. Arumugam,Tirunelvei5:41 AM, May 20, 2012

  நினைத்துப் பார்க்க முடியவில்லை....திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !

  ReplyDelete
 22. N.Arumugam. Tirunelveli5:42 AM, May 20, 2012

  நினைத்துப் பார்க்க முடியவில்லை....திரு.ஜாதவ் பயேங்.அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !

  ReplyDelete
 23. thiru jaadhav bayeng avarukku ennudaiya siram thazhndha vanakkangal
  padhivitamaikku thiru kousalya raj avarukkum oru nandri

  vaazhththukkal
  surendran

  ReplyDelete
 24. ஐயா இந்த நாடே கடமை பட்டு இருக்கு உங்களை கை கூப்பி வணங்குகிறோம் உங்களமாதிரி தன்னலம் கருதாம பொது நலத்தோடு எல்லோரும் இருந்துடங்கனா இந்த நாடு ரொம்ப சீக்கிரம் உருப்படும்

  நன்றி ஐயா

  ReplyDelete
 25. nalla manithar, govt. give rewards to him for appreciation.

  Kannan

  ReplyDelete
 26. அன்பே சிவம் படத்தில் முன்னே பின்னே தெரியாத ஒரு பயனுக்காக அழற ஒரு மனசு இருக்கே நீதான் கடவுள்னு ஒரு வசனம் வரும். அதுமாதிரி இவரும் ஒரு கடவுள் மாதிரி தான். இப்படி கூட மனிதர்கள் வாழ முடியுமா..?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...