அன்பு உறவுகளுக்கு வணக்கம்
பதிவுகள் எழுதி ரொம்ப நாள்(மாசம்) ஆச்சு ...இனியாவது தொடர்ந்து எழுத லாம் என இருக்கிறேன், அப்படி தீவிரமா பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்ல இந்த பதிவு . எப்படி இருக்கிறீர்கள் ? நலம் தானே ! எங்கே ஆள காணும் என்று நலம் விசாரித்த நட்புகளுக்கு எம் அன்பான நன்றிகள்!
மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு டென்ஷன்... நமக்கு தேர்தல் டென்ஷன் ! (யார் வந்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்கு எந்நாளும் நன்னாளே) சமூக தளங்கள் தான் தேர்தல் முடிவை உறுதி செய்ய போவதை போல பரபரப்பாக இருக்கிறது. அரசியல் நக்கல் , நையாண்டிகள் , நிறைய பிளாஷ்பேக் கதைகள் என்று சூடு பிடித்து விட்டது. என்னைபோல அரசியல் கிலோ என்ன விலை என்பவர்களுக்குத் தான் இவங்கலாம் எதை பத்தி யாரை பத்தி பேசுறாங்கனு ஒரே குழப்பமாக இருக்கிறது . ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் சக வலைத்தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.
வாழ்க்கை ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு தினமும் சொல்லிக் கொடுத்து கொண்டே இருந்தாலும் அத்தனை பேருமா அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், வெகு சிலரே கற்றுக் கொள்கிறார்கள், பலர் கற்க தவறி விடுகிறார்கள். ஒருவேளை நாம தவறவிட்டாலும் நம்ம கூட இருக்கிறவங்க கற்றுக் கொடுத்துடுவாங்க போல . சிரிக்கத் தெரிந்த மனிதனாச்சே நாம , சங்கடங்கள் சிரமங்களை சிரித்தே கடந்து விடலாம் என்று எண்ணினால், எங்கே சிரிக்க விடுகிறார்கள்...நம்மை சுற்றி இருக்கிறவர்கள். எப்பொழுதும் எதையாவது பேசி, விவாதம் என்ற பெயரில் நம்மள குழப்பி, கழுத்து சுளுக்குற அளவு கருத்து சொல்லி...னு என்னவோ போங்க ரொம்பவே படுத்தி எடுக்குறாங்க. அவங்க கூட பழகி பழகி நமக்கும் அதே பழக்கம் தொத்திகிச்சு (இல்லைனாலும் ஒன்னும் தெரியாதாக்கும்) அதிலும் முக்கியமா இந்த பதிவுலகம வந்ததில் இருந்து வெளில யார் கிட்ட பேசினாலும் பதிவுல எழுதுற மாதிரியே பேசிகிட்டு இருக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு என்னோட காலேஜ் பிரெண்ட் ஒருத்திய சந்திச்சேன், 'என்ன நீ என்னவோ மாதிரி பேசுற, நிறுத்தி நிதானமா, முன்ன எல்லாம் இப்படி பேச மாட்டியே' கேட்ட பிறகு தான் எனக்கே இது புரியுது.
சமீபத்துல கோர்ட்க்கு ஒரு கேஸ்ல சாட்சியா போனேன்... எதிர்தரப்பு வக்கீல், இதுக்கு என்ன பதில் சொல்ரிங்கனு கேட்க,டக்னு 'நீங்க சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன், மறுக்கிறேன்' னு சொல்லிட்டேன், வக்கீல் முறைக்க, ஜட்ஜ் சிரிக்க, கோர்ட் ஒரு மாதிரியா பார்க்க, நாக்க நான் கடிக்க...சில நொடிகள் அமைதியா போனது . (அங்க வச்சா நான் எழுதிய கண்டனம் போஸ்ட் ஞாபகத்துக்கு வரணும்) ஒரு வழியா விசாரணை முடிஞ்சு வெளில வர, எங்க வக்கீல், உள்ள போறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிச்சிங்க, இப்படி தைரியமா பேசுவிங்கனு நான் எதிர்பார்க்கள...முக்கிய சாட்சி உங்களோட இந்த ஒரு பதில் போதும் கேஸ் ஜெயிச்சிடும்னு சொல்றாரு. பார்த்திங்களா இந்த பதிவுலகம் எப்படி என்னை வளர்த்து விட்டுருக்குதுனு !
இப்படி இங்கே நான் கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய ! கடந்த நாலு மாதமாக எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. பிற வேலைகள்,பிரயாணங்கள் அதிகரித்து விட்டதால் மனமும் சோர்ந்துப் போய்விட்டது. . மறுபடி இதோ இன்று எழுதும் போது அதே பழைய உற்சாகம் ! அதுதான் இந்த பதிவுலகின் விந்தை. பழைய நண்பர்களை பார்த்ததும் வருமே ஒரு குஷி, அந்த மாதிரி !!!
பதிவுலகம் வரலைனாலும் டேப்லெட் மூலம் பேஸ்புக் செக் பண்ணிட்டு இருப்பேன், பசுமைவிடியல் தளத்தில் அப்டேட் பண்ணுவேன். ஆனா ஒரு இம்சை ! ஓபன் பண்ணின கொஞ்ச நேரத்துல இன்பாக்ஸ்ல வந்து ' நீங்க ஆன்லைன் இருக்குறது தெரியும் , ஏன் பதில் சொல்ல மாட்டேன்றிங்க' என்பார்கள் சில துப்பறிவாளர்கள்! 'ஹாய், நல்லா இருக்கிங்களா?' ன்ற கேள்விக்கு எத்தனை முறைதாங்க பதில் சொல்றது. நிஜமா முடியல !! அதை விட ஒரு சகோதரர் கேட்டார், 'என்னங்க இத்தனை மணிக்கு பேஸ்புக்ல இருக்கிங்க...அதும் ஒரு பெண்ணா இருந்துகிட்டு ?!' என்ன கொடுமைங்க இது ?? நான் என்ன ரோட்லையா ராத்திரி 1 மணிக்கு தனியா நின்னேன். அப்படியே நின்னாலும் அது அவங்கவங்க சொந்த விஷயம்... இவங்கள மாதிரியானவங்க கற்காலத்த விட்டு வெளில வரமாட்டாங்க போல !
அடிக்கடி கணவருடன் இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும் சூழல் , வண்டி ஓட்டுற அவர் தூங்ககூடாதேனு பேஸ்புக் அப்டேட்ஸ் படிச்சு அதை பத்தி பேசிகிட்டு போவோம். அப்படியே ஊரும் வந்துவிடும்.....இது பத்தி எல்லாம் தெரியாம அடுத்தவங்களின் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைக்கும் அதிக பிரசங்கிகள் எப்போ திருந்தப் போகுதோ தெரியல . உங்களுக்கு தோணலாம் ,இந்த மாதிரி ஆட்களை பிளாக் பண்ணி இருக்கலாமே என்று , அப்படியும் கொஞ்ச பேரை பிளாக் பண்ணியாச்சு, எதுக்கும் நாம கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்போம்னு டீஆக்டிவேட் பண்ணி வச்சேன்... அப்போதான் தெரியுது வெளியுலகம் ரொம்ப அழகு என்று !! இப்படி அடிக்கடி வெளியுலகம் போய்வருவது எல்லோருக்கும் நல்லது !! :-)

வாட்ஸ்அப் என்றொரு இனிய இம்சை
ஒருநாள் ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஆர்டர் கொடுத்துவிட்டு டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடிட்டு இருந்தேன். அந்த பக்கம் வந்த ஒருத்தர் , நீங்க வாட்ஸ்அப்ல இருக்கிங்களா என்றார். நான் ரொம்ப வேகமா இல்லைங்க பேஸ்புக் ல இருக்கேன் சொன்னேன் . ஓ ! மீ டூ பட் வாட்ஸ்அப் இஸ் த பெஸ்ட் அப்டி இப்டி னு எடுத்துவிட்டுகிட்டே இருந்தார். அப்டி என்னடா அதுல இருக்கும் ரொம்ப ஆர்வமாகி கற்போம் பிரபு தம்பிக்கு கால் பண்ணேன் , ஆண்ட்ராயிடு போன்ல இது ஒரு ஆப்ஸ் , fb இன்பாக்ஸ் மாதிரி சாட் பண்ணிக்கலாம் .போட்டோஸ், விடியோஸ் ஷேர் பண்ணிக்கலாம் என்று அவர் சொன்னதையே விரிவா சொன்னான். சரி அதையும் என்னனு பார்த்திடலாம்னு டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணிட்டு இருக்கேன். டைப் பண்ண பொறுமை இல்லைனா சொல்ல வேண்டியதை பேசி அனுப்பிடலாம் என்பது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. முக்கியமா, பிடித்தவர்கள் குரலை லைவா கேட்பதும் நினைத்தப்போது எல்லாம் மறுபடி போட்டு கேட்பதும் ஒரு அலாதி குஷி!! :-)
வாட்ஸ்அப் நிஜமா பெஸ்ட். ஆனா பாருங்க இதுலயும் அதே இம்சை ! ஓபன் பண்ணதும் 'ஆன்லைன்' னு காட்டிக் கொடுத்துவிடும். நான் இரண்டு நாளா இத ஓபன் பண்ணவே இல்லன்னு சத்தியம் எல்லாம் செய்ய முடியாது. Last seen ல மாட்டி அசடு வழிய வேண்டியதுதான். இதுக்கும் ஒரு வழி இருக்குனு இப்போதான் கண்டுபிடிச்சேன் "WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி? ன்ற போஸ்ட்ல சொன்னபடி செட்டிங்க்ஸ் செஞ்சுக்கலாம்.
சில பேர் இதை மொபைல் என்பதையே மறந்துடுவாங்க, இஷ்டத்துக்கு வீடியோ, சாங் , படங்கள்னு அனுப்புவாங்க, மெமரி வேகமா காலியாகி நான் ஓபன் பண்றப்போ 'மரியாதையா ரீசார்ஜ் பண்ண போறியா இல்லையா'னு மிரட்டுது ஆன்ட்ராயிடு! பார்வேர்ட் மெசெஜ் ஒரு நாலு பக்கம் அளவுக்கு அனுப்புவாங்க, எல்லாம் படிச்சு நம்ம அறிவை வளர்த்துக்கவாம், இதையெல்லாம் முதல்ல அவங்க படிப்பாங்களானு தெரியல. அதைவிட 'இதை அப்டியே 108 முறை எழுதி அனுப்புங்க உடனே நல்லது நடக்கும்' என்ற அப்போதைய போஸ்ட் கார்ட் டைப் மெசெஜ அப்படியே வாட்ஸ்அப்ல அனுப்பி கொல்றாங்க. அறிவியல் வளர்ந்தாலும் இவங்க இன்னும் வளரலையே நினைக்குறப்போ அழவா சிரிக்கவா தெரியல. இப்போ முடிவு பண்ணிட்டேன் இது போல அவஸ்தை படுத்துற அன்பு நபர்களை பிளாக் பண்ணியே ஆகணும்னு, ஏன் பண்ணினனு கேட்க மாட்டாங்க (நம்புங்க) அப்படியே கேட்டாலும் சொல்லிக்கலாம், என் போன் என் உரிமை ! :-) இந்த பாலிஸிய ஏன் எல்லா இடத்திலும் பாலோ பண்ண முடியறதில்லை என்பது தான் நம்ம பலவீனம். ஆனா கண்டிப்பா பாலோ பண்ணனும் ஏன்னா நம்ம ஹெல்த் முக்கியமில்லையா !
அவசியமான விசயங்களை கேட்பதற்கும், சொல்வதற்கும் உபயோகபடுத்துவதற்கு பதிலாக ஹாய், ஹலோ, நலமா, என்ன பண்றிங்க , இப்போ பிரீயா, சாப்டிங்களா, என்று கேள்வியா கேட்டு வதைப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் ஒரே கேள்வியை தினமும்...பல பேர் கேட்டா நிலைமை அவ்ளோதான். இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டம், நிற்க நேரம் இன்றி ஓடி கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் எங்கே நிதானமாக பதில் சொல்ல முடிகிறது. அன்பு அதீத அன்பாக மாறி எதிர்பார்ப்புகள் அதிகரித்து இறுதியில் மன வருத்தத்தில் முடிந்து விடுகிறது. அன்பையும் அளவோடு செலுத்துவது நல்லது அது நட்பாக இருந்தாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும்... அதிக உரிமை அதிக மன கசப்பு. (அனுபவம்)
மேலும் இது போன்ற நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய பிரைவசி பறி போனது போல் இருக்கிறது. நம்ம வீட்டு கிச்சனை மத்தவங்க எட்டி பாக்குற ஒரு பீல் (பெட்ரூம்னு சொன்னா மட்டும் மக்கள் புரிஞ்சு திருந்திட போறாங்களா என்ன) நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி !! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக பறி போய்விட்டது.
எது எப்படி இருந்தாலும் நம் வாழ்க்கை நம் உரிமை என்று போய்க் கொண்டே இருக்கவேண்டும் ... அப்போது தான் நிம்மதி சாஸ்வதம். அவ்வாறு போகும் போது எதிர்படும் எல்லா உயிர்களிடத்தும் சிறு புன்னகை ஒன்றை உதிர்த்துச் செல்வோம் ... அது போதும் (ஒரு ஹாய் சொல்றேன்னு சொல்லிட்டு என்னை மாதிரி இப்படி கதை சொல்லிட்டு இருக்கப்படாது) :-)
உலகம் அழகானது...அன்பு உயர்வானது ...அன்பால் உலகை ஆளுவோம் !!
பிரியங்களுடன்
கௌசல்யா

அட...! வாட்ஸ்அப் உட்பட லேட்டஸ்டா வர்றீங்க...
பதிலளிநீக்குதொடருங்கள்... வாழ்த்துக்கள்...
கற்போம் இணைப்பிற்கும் நன்றி...
சகோ நல்ல பதிவு ,மீண்டும் முழு வேகத்துடன் இயங்குகள்,அன்பால் உலகை அழுவோம் .
பதிலளிநீக்குவருக வருக தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
பதிலளிநீக்குநிறைய பதிவுகளை எழுதுங்க நிறைய நிறைய பல பேருக்கு அது உபயோகமா இருக்கும்.. எழுதுவதும் ஒரு உற்சாகம் தான், கவலைகளை மறக்கலாம்.. இன்றைக்கு பதிவு எழுதிவிட்டு ஒரு நாள் நாம் கலவளியில் இருக்கும் பொழுது படித்தால் நம் எழுத்து நமக்கே உற்சாகம் தரும்.. ஆதலால் கண்டிப்பாக பதிவு எல்லுதவேண்டும் இல்லையேல் கண்டனம் பதிவு வருமென்று சொல்லிகொள்கிறேன்
இனி கிண்டல்
நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி!! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக பறி போய்விட்டது////
அக்காவை போல் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த மாதரி தொல்லைகள் வந்துகொண்டுதான் இருக்கும் ஒன்றும் செய்யமுடியாது அது ரசிகர்கள் தொல்லையாசே :))
நானும் தான் வாட்ச் அப் ல இருக்கேன் ஒரு பய எனக்கு தொல்ல கொடுகுறானா இல்லையே என்ன உலகமய்யா :))
மீண்டும் வருக தொடர்ந்து எழுதுக
பதிலளிநீக்குஆஹா ..சூப்பர் !! போட்றா ஒரு லைக்க :) இந்த அருமையான பதிவுக்கு
பதிலளிநீக்குஹைய்யோ FB மேனியா ..போட்டோ கமென்ட் வாசகம் வந்திடுச்சு :)
angelin
ஆஆஃ சௌந்தர் ..அது ரசிகர்கள் தொல்லை இல்லை :) தொண்டர்கள் !
பதிலளிநீக்கு..jokes apart ..
kowsi நீங்க பழையபடி நிறைய பதிவுகள் எழுதணும் ..
//
ஒரு மாதிரி நிறுத்தி நிதானமா //! புரிஞ்சி போச்சு ..என் accent உங்களை தொத்திக்கிச்சு :)
***நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி!! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக பறி போய்விட்டது***
பதிலளிநீக்குநீங்க முகநூல், வாட்ஸ் அப் னு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி ஊர் பேர் தரம் தெரியாதவனையெல்லாம் "நண்பர்" "சகோதரர்" னு ந்ட்பு பாராட்டினால் இப்படித்தான் ஆகும்.
இது யார் தப்புனு சொல்றீங்க?
என் அம்மா நல்லாப் படிப்பாங்க. ஆனால் அவர்களை எஸ் எஸ் எல் சிக்கு படிக்க வைக்கவில்லை. ஏன் என்றால் படிச்சு, வேலைக்குப் போனால் நாலு பேரோட பழகணும், நாலு பேரு நாலுவிதமா பழகுவாங்க, இப்படி பிரச்சினைகளைத் தவிர்க்க. இப்படித்தான் நம்முடைய கன்சர்வேடிவ் சொசைட்டி உருவாச்சு. அதை பெண்ணடிமைத்தனம்னு இப்போ சொல்றோம்.
அதிலிருந்து லிபெரல் ஆகிட்டீங்க நீங்க எல்லாம். அப்படி ஆகும்போது அதன் விளைவுகள் நீங்க சந்தித்துத்தான் ஆகணும். இல்லையா? இதுபோல் மன உளைச்சல்லாம் வேணாம்னா முக நூல், வலையுலகம் இதிலெல்லாம் இருந்து அனானிமஸா இருந்து ஒதுங்கி வாழணும்.
Everything has a price! The more you get involved in "virtual world", the more trouble you would encounter. It is as simple as that.
Anyway, welcome back, Mrs. Raj!
@@திண்டுக்கல் தனபாலன்...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் தனபாலன் சார்.
@@நாம் நண்பர்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள்.
@@சௌந்தர்...
பதிலளிநீக்குபெரிய மனுஷன் மாதிரி அறிவுரை எல்லாம் சொல்ற... :)
தொடர்ந்து எழுதிடுவோம்.
//நானும் தான் வாட்ச் அப் ல இருக்கேன் ஒரு பய எனக்கு தொல்ல கொடுகுறானா இல்லையே என்ன உலகமய்யா :))//
வேணும்னா இப்படி பண்ணு ,எல்லோரையும் நீ தொல்லை பண்ணு, உனக்கும் நேரம் போகும்.
நன்றி சௌந்தர் :-)
@@எல்.கே ...
பதிலளிநீக்குநன்றி கார்த்திக் :-)
@@Cherub Crafts...
பதிலளிநீக்குபேஸ்புக் ல ஓவரா சுத்தினா இப்படிதான் ஆகும் ஏஞ்சல் :-)
படித்து ஜாலியா என்ஜாய் பண்ணி இருக்கிங்கனு நினைக்கிறேன். :-)
நன்றி தோழி.
@@ வருண் said...
பதிலளிநீக்கு//ஊர் பேர் தரம் தெரியாதவனையெல்லாம் "நண்பர்" "சகோதரர்" னு ந்ட்பு பாராட்டினால் இப்படித்தான் ஆகும். //
உண்மை. ஆனா இதெல்லாம் இணையம் வந்த புதிதில் ரெகுவஸ்ட் வந்தால் ஓகே பண்ணியே ஆகணும் போலனு பண்ணியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். புதிதாக இணையம் வரும் ஆண் பெண் அனைவருக்கும் ஏற்படும் பிரச்னை இது.
வாட்ஸ் அப் ல நாமளா யாரையும் இணைக்கனும் என்று இல்லை என் மொபைல் நம்பர் தெரிஞ்ச யார்னாலும் மெச்செஜ் பண்ணலாம். தெரியாத ஆளா இருந்தா கண்டுக்கொள்வதில்லை :-)
லேட் நைட் வாட்ஸ்அப் வந்திருக்க என்று கேட்டது என் காலேஜ் தோழி ஒருத்திதான் , பெண்ணுக்கு இம்சை கொடுப்பதும் பெண்ணாவும் இருக்கலாம். :-) பேஸ்புக்ல கேள்வி கேட்டது வீட்டுக்கு வந்து செல்லுமளவு தெரிந்த சகோதரர் ஒருத்தர் தான்.
உரிமை என்ற பெயரில் கேள்வி கேட்பது பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களும், நெருங்கிய நட்புகளும் தான் .
அதுவும் தவிர யாரை எங்கே வைக்கணும் என்ற தெரிதல் இல்லாமல் இந்த இணையத்தில் நீண்ட காலம் நடமாட இயலாது .
ஆமா வருண் அம்மாவை பற்றி எல்லாம் நினைக்குற அளவுக்கு அப்படி நான் என்ன சொல்லிட்டேன் !! :-) ஏதோ சில மேட்டரை தேத்தி போஸ்ட் எழுதினா இப்படியா சீரியஸ் ஆவுறது :-)
சீரியஸ் போஸ்ட்ஸ் இனிமேல் தான் இருக்கு அப்போ பேசிக்கலாம். :-)
//Anyway, welcome back, Mrs. Raj!//
இதுதான் வருண் ! :-) நன்றிகள்.
Welcome back.....
பதிலளிநீக்குநமக்கும் இந்த Android தொலைபேசிகளுக்கும் ரொம்ப தூரம்.... :) பயன்படுத்த முடியாது!
வணக்கம் அக்கா... நலமா....
பதிலளிநீக்குநெடு நாள் கழித்து உங்களை பாக்கிறேன் பதிவு வழியாக.....
பேஸ்புக், வாட்ஸ்அப்ன்னு ரொம்ப எழுதியிருக்கிங்க....
ஹைடெக்னாலஜி ரொம்பவே உங்களை ஆக்கிரமிச்சு இருக்கு போல... ஹா ஹா....
வாங்க பதிவுலகம் எப்பவும் போல இருக்கு...ஆனா எழுதறவங்க கொஞ்சமா எழுதறாங்க...
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்கு