இந்த புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகபடுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள அத்தளத்தை பார்வையிட்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால் கடந்த வியாழன் அன்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணைய தளம் தொடங்கி வைக்கபட்டது.
முதல் களப்பணியாக மரம் நடுதல் விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன...
பசுமை விடியல் - ஒரு அறிமுகம்
பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும்.
ஆனால்...
மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...
2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!
உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான் இருக்கின்றன...!
மக்களை பற்றி நாடு அக்கறை கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?! அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல் படுத்தபட வேண்டும்...!
இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!
கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்...!
இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!
ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!
பதிவுலக உறவுகளே !
உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன். மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.
இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.
பிரியங்களுடன்
கௌசல்யா
படங்கள் - நன்றி கூகுள்
அன்பு சகோதரி
பதிலளிநீக்குஇதோ பசுமைத் தளம் தேடி வருகிறேன்.
நல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல முயற்சி.
வாழ்த்துகள்.
அருமை..
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
@@ மகேந்திரன்...
பதிலளிநீக்குநன்றிகள் மகேந்திரன்.
@@ Rathnavel...
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றிகள் ஐயா.
@@ FOOD NELLAI...
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா.
@@ ரெவெரி...
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றிகள்.