திங்கள், ஜனவரி 9

7:36 AM
25

நல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடித்துக்கொள்வதை விட தொடர்ந்து அவர்களுடன் அன்பை பரிமாறிகொள்வது ஒன்றே என் கடமை என்று எண்ணுகிறேன். எனவே 'அன்பு தொல்லை இனி தொடரும்' என்ற அன்பான மிரட்டலுடன், நடைபெற்ற ஒரு உன்னத நிகழ்ச்சி பற்றிய சிறு துளிகளை இங்கே பகிர்கிறேன்...பதிவர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.  ஜனவரி 12 அல்லது  14 அன்று நிகழ்ச்சி நடத்தலாம் என 'நிகழ்ச்சி நிரல்' மாடல் ஒன்றை வடிவமைத்தும், பதிவர்கள் + எம் எல் ஏ கேள்வி நேரம் ஒன்றுக்காக இருபது கேள்விகள் (அரசியல் தவிர்த்து) ரொம்பவே யோசிச்சு(?) டைப் செய்து முன்தினம் இரவு செல்வா(செல்வாஸ்பீக்கிங் ) அண்ணனுக்கு மெயில் செய்தேன். இனி நட்புகளை அழைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது...ஆனால் மறுநாள்(5/1/12) காலை 11 மணிக்கு "நாளையே  ஏற்பாடு பண்ண முடியுமா , எம்.எல்.ஏ வை இப்போது விட்டால் அடுத்து ஒரு மாதம் ஆகிவிடும்" என்றார் அண்ணன்...! ஒண்ணும் ஓடல...!! விசாலினியை பற்றி பிளாக்கில  எழுதியதும் தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு போய் விடவேண்டும், தாமதம் பண்ணகூடாது என்பதால் "சரிணா பண்ணிடலாம்" என்றேன்.

அன்று துவங்கவேண்டும் என முடிவு செய்திருந்த பசுமைவிடியல் தளம் முழுமையாக வடிவமைக்கபடவே இல்லை...பெங்களூரில் இருக்கும் பிரபுவை(பலே பிரபு) தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். "சரிக்கா கவலை படாதிங்க, இரவுக்குள் முடிச்சிடலாம்" என்றான்.

சங்கரலிங்கம் அண்ணாவிற்கு தெரிந்திருந்தாலும் "எல்லாம் நீங்க இருக்கும் தைரியத்தில்தான்,உதவி பண்ணுங்க"னு புலம்பி தள்ளிட்டேன்...எல்லாம் பொறுமையாக கேட்டவர், 'ஓ.கே ஜி (தங்கையை பெயர் சொல்லாமல் 'ஜி' னு மரியாதையாக அழைக்கும் அன்பு அண்ணன் !!) பண்ணிடலாம்' என்றார்.  

அப்புறம் அங்கும் இங்கும் போன் மேல போன் பண்ணிட்டே இருந்தோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் யாரை அழைத்தாலும் நிச்சயமாக வர இயலாது...இது நன்கு தெரிந்தும் அழைத்தோம்...தூரத்தில் இருந்து வந்த சீனா ஐயா, ரத்னவேல் ஐயா, சி.பி.செந்தில்குமார், மதுரை சரவணன் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு)

நிகழ்ச்சியை அப்படியே சொல்வதை விட என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த அற்புத தருணங்களை மட்டும் இங்கே...

                        சூரிய சக்தியால் மின்சாரம் பெற்று உபயோகபடுத்துகிறார்கள்-இசக்கி ரிசார்ட்ஸ் 

விழா நடைபெறும் இடமான 'குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்' போனதும் எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் விழாவாச்சே மேடை, மைக் அப்படி இப்படின்னு பந்தா செட்டப் இருக்கும்னு ஹால் கதவை மெதுவா திறந்தா ...திக்குன்னு ஆச்சு !! மேடைக்கு பதில் சின்னதா ஒரு டீப்பா, நோ மைக், நல்லவேளை வி ஐ பி சேர் இருந்தது...நாங்கள் அமர ஷோபா, பிளாஸ்டிக் சேர் என்று போடப்பட்டிருந்தது. அங்கே இருந்தவர்களை இதை பற்றி கேட்டேன், ) ஆனா அவங்க,' எம் எல் ஏ சார் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு கால் பண்ணி சொல்லிட்டார் மேடம் அதான் இப்படி' என்றார்கள்.

அட என்ன அரசியல்வாதி இவர், ஆடம்பரமா ஏன் பண்ணலன்னு கேட்பார்னு பார்த்தா இப்படி சொல்லி இருக்கிறாரே(எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்...!) ம்...சரி சரி வரட்டும் பார்ப்போம்னு நானும் வேறு எந்தவித உள்வேலைகளும்(இன்டீரியர் டெக்கரேஷன் !?) செய்யாம, டென்ஷனை குறைக்க விசாலினியை தோட்டம் நடுவில வச்சு சுத்தி சுத்தி போட்டோ  எடுத்து தள்ளினேன்.

பதிவுலக நட்புகளின் வருகை 

நம்ம நட்புகள் எல்லாம் வந்து சேர்ந்தாங்க...சீனா ஐயா வந்து அமர்ந்ததும் "யார் வரவேற்பு கொடுக்க போறாங்க , ப்ரோக்ராம் லிஸ்ட் எங்க?" அப்படின்னு கிட்டத்தட்ட மிரட்ட தொடங்கினார் அன்பாகத்தான்...நானும் கொஞ்சம் டென்ஷனோட(?) "வேற யாரு நீங்கதான்" டக்குனு சொல்லவும், ஐயா(வாழ்க) மறுப்பார்னு பார்த்தால் ஒரு நோட்ல குறிக்க தொடங்கிட்டார். மதுரை சரவணன் திருக்குறள் சொல்லி தொடங்க, ஐயா வரவேற்பு என முடிவாகியது.

                                             (பதிவுலக நட்புகளுடன் விசாலினி மற்றும் குடும்பத்தினர் )

சட்டமன்ற உறுப்பினர் உள்ளே என்ட்டர், நாங்க அட்டன்ஷன் பொசிஷனுக்கு வந்தாச்சு...பரஸ்பர அறிமுகம்...பிறகு அகரமுதல் எழுத்தெல்லாம் என சரவணன் சொல்ல விழா தொடங்கியது...அமரப் போன (விழா) தலைவர், இந்த சேர் யார் போட்டா, வேண்டாம் எடுங்க"னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தே விட்டார். எனக்கு சப்புன்னு ஆகிபோச்சு...!

அப்புறம் பொன்னாடை அணிவிக்க தயார் ஆனதை பார்த்தவர், "என்ன இது", "இது ஷால்...மரியாதைக்கு" னு இழுக்க..."அதெல்லாம் வேண்டாம், இனி இது மாதிரி யாரையும் கௌரவபடுத்தனும்னா இதுக்கு பதிலா ஒரு புக் வாங்கி கொடுங்க போதும்" என்றதும் எனக்கு மயக்கம் வராத குறை...இவர் எம் எல் ஏ இல்லையோ, சந்தேகமே வந்து போச்சு...

சீனா ஐயா மிக அருமையாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்...எல்லோரை  பற்றியும் சொல்லிவிட்டு 'பசுமை விடியல்' நிர்வாகிகள் நாலு பேரின் பெயர் , இயக்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் சுருக்கமாக சிறப்பாக எடுத்துரைத்தார்...இதெல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரிய பட்டேன், நிகழ்ச்சி முடிந்து வெளில வந்து கேட்டால் 'எனக்கு எப்படி தெரிந்தது' என அவரே வியந்துதான் ஹைலைட் !! (ஒரு வேளை மைன்ட்வாய்ஸ் ரீட் பண்ண தெரியுமோ...?!)

                          இணையதளம் துவக்கம் - M.L.A, விசாலினி,செல்வகுமார் அண்ணா

தொடர்ந்து விழா தலைவர், 'பசுமை விடியல்' இணைய தளத்தினை தொடங்கிவைத்தார். தளத்தினை பார்த்தவர் pages ஒவ்வொன்னும் பார்த்து 'இது என்ன, இது எப்படி' என்று கேட்டு, 'இந்த லிங்கை எனக்கு மெயில் பண்ணிடுங்க' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் ஐடியை என்னிடம் கொடுக்கசொல்லி சொன்னார்.

பிறகு சட்டுன்னு செல்வகுமார் அண்ணன், 'கௌசல்யா நீ எழுந்து பசுமை விடியல் பத்தி சில வார்த்தைகள் சொல்'லுனு சொல்லிட்டார். சத்தியமா இதை நான் எதிர்ப்பார்க்கல, சும்மா கூட்டத்தில கோவிந்தா போட்டுட்டு இருந்த என்னை தனியா பேச சொன்னா எப்படி ? அதுவும் எம் எல் ஏ முன்னாடி, எத்தனை நாள் பிளான் பண்ணினாரோ தெரியல, நல்லா மாட்டி விட்டுட்டார், அப்புறம் ஏதோ ஒரு வேகத்துல கடகடன்னு ஒப்பிச்சிட்டு வந்துட்டேன். (என்ன பேசி இருப்பேன்னு இப்பவும் யோசிச்சு பார்க்கிறேன் 'ம்ஹூம் சுத்தம், நினைவே இல்ல')என் பேச்சை பொறுத்துக்கொண்ட நட்புகளின் சகிப்புத்தன்மை ரொம்ப பெரியது...!!

சுட்டிப்பெண்ணுக்கு மரியாதை 


விசாலினிக்கு கேடயம் ஒன்று 'தமிழ் இணைய வலைபதிவர்கள்' சார்பில் வழங்கப்பட்டது...அவளை பற்றி அவங்க அம்மா, சட்டமன்ற உறுப்பினரிடம் விவரமாக எடுத்து சொல்லவும், மிக ஆச்சர்யபட்டவர் "நம்ம சி எம் பெண் குழந்தைகளுக்காக நிறைய செஞ்சிட்டு வராங்க,விசாலினி பற்றி சொன்னால் சந்தோசபடுவாங்க,பாராட்டுவாங்க,  கண்டிப்பாக இவளது திறமையை உலகம் அறியச் செய்ய நிச்சயம் சி எம் கிட்ட கொண்டு போவேன்" என்றதும் ஒரே கைதட்டல் !! இதை எதிர்ப்பார்த்து தானே பதிவர்கள் நாங்கள் அனைவரும் குழுமி இருந்தோம் !!


விசாலினி பற்றி அவங்க அம்மா நிறைய சொன்னாங்க...(அவ்வளவையும் சொல்லனும்னா ஒரு தொடர் பதிவு போடணும்...!!)அவளின் பெற்றோர்கள் இவளுக்காக படும் பாடுகள், எடுக்கும் பிரயாசங்கள், செலவு பண்ணும் தொகை எல்லாமே வேறு யாரும் கற்பனை செய்ய கூட இயலாதவை !! இவளுக்காக பெரிய பை நிறைய பைல்கள், போட்டோ ஆல்பம், சான்றிதல்கள் என்று வைத்திருக்கிறார்கள்...இப்பவும் தொடர்ந்து சில கோர்ஸ்கள் படித்து வருகிறாள்...ஒரு தேர்வுக்கு இரண்டு பேப்பர், இதில் ஒரு பேப்பர் தலா ரூபாய் 80,000 என கட்டி இருக்கிறார்கள், இரண்டில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டாலும், மொத்தமாக 1,60,000 போய்விடுமாம். என் போன்ற சாதாரண தாய் இப்படிதான் பணத்தை பற்றி யோசிப்பாள் ஆனால் அவர்கள் செலவழித்து கொண்டே இருக்கிறார்கள்...!! பெண்ணின் திறமையை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்...!!


சட்டமன்ற உறுப்பினரின் எளிமை 


எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதி என்றால் மக்களுக்கு(என்னையும் சேர்த்துதான் ) சிலபல  புரிதல்கள் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அங்கே இருந்த ஒரு மணி நேரமும் (விழா முடிந்ததும் சென்னை ரயிலை பிடிக்கவேண்டிய அவசரம் வேறு ) எங்களில் ஒருவராக இருந்தார். இவரின் குணம் தெரிந்து தான் செல்வகுமார் அண்ணன் எங்களிடம் அறிமுகம் படுத்திவைக்க 'இப்படி தவித்தாரா ?' என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மக்களோடு மக்களாக பழகும் இத்தகைய குணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்...!?

'கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடவேண்டும் என்ற ஒரு யோசனை இருக்கிறது, அப்போது 'பசுமை விடியல்' இயக்கத்தை சேர்த்து கொள்கிறோம்' என்றார். அவரின் ஆர்வத்தை மிக வியந்தேன்...தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் (துகள்களாக்கி)வைத்து சாலைகள் அமைக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது என பகிர்ந்துகொண்டார். நாங்கள் அதற்கு வாழ்த்து சொன்னோம். சில கேள்விகள் கேட்டோம், ரொம்ப கேஷுவலாக பதில் சொன்னார்...'விழா முடிந்ததா நான் கிளம்பலாமா' என கேட்டு அனுமதி(!) கொடுத்த பின் தான் கிளம்பினார்.

மரக்கன்றை செல்வகுமார் அண்ணனிடம் இருந்து இவர் பெறும்போது விசாலினியை அழைத்து "நான் உன்னைவிட ரொம்ப சின்ன பையன்,நீதான் பெரியவ, உன் கையால் தொட்டு கொடு" னு சொல்ல அனைவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை !


மரக்கன்றை அதே இடத்தில் நன்றாக நட்டு பேணி வளர்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் சொன்னார்.அந்த செண்பக மரம் பூத்துகுலுங்கி மணம் வீசும் நாள் அன்று பதிவர்களான நம்மை அம்மரம் நிச்சயம் வாழ்த்தும்...! 

மிக சிறப்பாக விழா நடைபெற பேருதவி புரிந்த மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பின்குறிப்பு

தொடரும் பதிவு ஒன்றில் விசாலினியை பற்றியும் , வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நட்புகள் பற்றியும், ஜெயா டிவி, சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி, மக்கள் டிவி, மற்றும் மீடியாக்கள் பற்றியும் சிறிது பகிர்கிறேன்..
 Tweet

25 கருத்துகள்:

 1. எம் எல் ஏ சார் நம்ம செல்வா சாரோட க்ளாஸ்மேட் என்பதால் ஒத்துழைப்பு கொடுப்பதில் நட்பு பரிமாணத்தை காட்டினார்:))

  பதிலளிநீக்கு
 2. பெருமையாக இருக்கிறது. உங்கள் அமைப்பு வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. எம் எல் ஏ இம்புட்டு எளிமையா இருக்காரே ஆச்சர்யமா இருக்கு, வாழ்த்துக்கள் அவருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 4. விசாலினிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 5. இந்த ஏற்பாட்டை மிக சிறப்பாக நடத்திய உங்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 6. Congrats for the event success. My heartiest wishes for MLA and Visalini.

  Akka my wishes to you to get success in all your effort.

  பதிலளிநீக்கு
 7. விழா சிறப்புற நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 8. குழந்தை விசாலினிக்கும்
  புதிதாய் தோற்றிய பசுமையான தளத்துக்கும்
  என் அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 9. @@ சி.பி.செந்தில்குமார் said...

  //எம் எல் ஏ சார் நம்ம செல்வா சாரோட க்ளாஸ்மேட் என்பதால் ஒத்துழைப்பு கொடுப்பதில் நட்பு பரிமாணத்தை காட்டினார்//

  நம்மையும் அதே நட்புடன் நடத்தியது பெரிய விஷயம் !

  நன்றிகள் செந்தில்

  பதிலளிநீக்கு
 10. @@ அப்பாதுரை said...

  //பெருமையாக இருக்கிறது. உங்கள் அமைப்பு வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.//

  உங்களின் வாழ்த்து எனக்கு இன்னும் அதிக உத்வேகம் கொடுக்கும்.

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 11. @@ சிநேகிதி...

  வாழ்த்துக்கு நன்றி தோழி

  பதிலளிநீக்கு
 12. @@ Harini Nathan...

  மிக்க நன்றிகள் ஹரிணி

  பதிலளிநீக்கு
 13. @@ MANO நாஞ்சில் மனோ said...

  //எம் எல் ஏ இம்புட்டு எளிமையா இருக்காரே ஆச்சர்யமா இருக்கு, வாழ்த்துக்கள் அவருக்கு...!!!//

  எனக்கு இதே ஆச்சர்யம் தான் :)

  நன்றிகள் மனோ.

  பதிலளிநீக்கு
 14. @@ விக்கியுலகம்...

  நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 15. @@ வெங்கட் நாகராஜ் said...

  //விழா சிறப்புற நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி//

  நன்றிகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 16. @@ மகேந்திரன் said...

  //குழந்தை விசாலினிக்கும்
  புதிதாய் தோற்றிய பசுமையான தளத்துக்கும்
  என் அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.//

  வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 17. @@ ஜீவன்பென்னி said...

  //pasumai vidiyal valarattum... vazthukkal...//

  உங்களின் அன்பான வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்கள் கௌசல்யா,பகிர்விற்கு நன்றி.பசுமை விடியல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 19. @@ Asiya Omar said...

  //வாழ்த்துக்கள் கௌசல்யா,பகிர்விற்கு நன்றி.பசுமை விடியல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.//

  மிக்க நன்றிகள் தோழி

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...