ஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'

>> Wednesday, December 7இதுவரை கட்டுரை போல பதிவுகள் எழுதி இருந்தாலும் கதை எழுதியதில்லை. (எழுத தெரியவில்லை என்பதே உண்மை) ஆனால் என் மனதை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றி எழுதவேண்டுமென நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. தவிர இதை எழுதுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு முக்கிய காரணம் அவள் என் நெருங்கிய சினேகிதி...! தனது மன குமுறல்களை டைரியிலும்  என்னிடமும் தவறாது கொட்டிவிடுபவள்...அனைத்தையும் சேர்த்து ஒரு கதையாக(?) என் தோழியின் சுய சரிதையை இங்கே பதிகிறேன் அவளின் அனுமதியுடன்...(அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயரும் ஊரும் மட்டும் தவிர்க்கபடுகிறது)

முன் அறிமுகம் !

சந்தோசமான வாழ்க்கை எல்லோருக்கும்  அமைந்துவிடுவதில்லை, பிரச்சனைகளின் நடுவில் வாழ்பவர்களில் ஒரு சிலர் ஒரு கட்டத்தில் மீண்டு எழுந்துவிடுவார்கள் ஒரு சிலரால் முடிவதில்லை. அந்த ஒரு சிலரில் இவளும்  ஒருத்தி. சிறுவயதில் மனதை பாதித்த சம்பவங்கள் திருமணம் முடிந்தபின்னரும் ஏன் வயதான பின்னர் கூட மனதை அழுந்த செய்யும்.அதிலும் இந்த பெண்ணை பொறுத்தவரை சிறு வயதில் மனதை பாதித்தவைகள் திருமணதிற்கு பின்னரும் தொடருவது வேதனை ! அன்பான கணவன் , குழந்தைகள், செல்வச்செழிப்பான வாழ்வு என எல்லாம் இருந்தும் எதுவுமே தனதில்லை என்பதை போல எந்த வித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

யார் இவள் ?

சிறு வயதில் இருந்து எனக்கு அவளை தெரியும்...ஒருவர் குடும்பத்தை பற்றி மற்றொருவருக்கு நன்கு பரிட்சயம் உண்டு.நடுவில் சில வருடங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவளது சொந்த ஊரில் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி தனது பள்ளி படிப்பை தொடர்ந்தாள்...பின் கல்லூரி வாழ்வின் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது...இன்று வரை தொடருகிறது எங்களின் நட்பு. 

தாம்பத்தியம் தொடரை நான் எழுத மிக முக்கிய காரணம் என் தோழி தான். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கலாம், அவள் வாழ்வில் எதனால் பிரச்னை என்று ?! ஆம். அவளது பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சண்டைகள் ! இது ஒரு பக்கம் என்றால் இவற்றின் நடுவே வேறு சில இம்சைகள்(?) இவையும் சேர்ந்து கொண்டு இவள் மனதை அதிகம் பாதித்தன, கண்டபடி யோசிக்க வைத்தன...

சில அனுபவங்கள்  

தனது பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறான தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதை பற்றி அறிய நேரிட்ட சூழல்...இப்படி வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கிடைத்தன சில கசப்பான அனுபவங்கள் !

இதற்கிடையில் இவளது வாழ்வில் அழகான காதல் ஒன்றும் வந்து(!) போனது(?) ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் ஆறு வருடமாக வளர்த்த காதல், பிறகு ஒருநாள் முதல் முறையாக இருவரும் நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை வெளியிட்ட அக்கணத்திலேயே அந்த அழகான காதல் முடிவுக்கும் வந்து விட்டது ?!!

ஆமாம்.காதலை சொன்ன அத்தருணத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர்...அதன் பின் இந்த நிமிடம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டதே இல்லை...ஆனால் அந்த காதல் இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இருவரின் நெஞ்சிலும்...!

இப்படி அவளது பல வித்தியாசமான சம்பவங்களை எவ்வித ஜோடனையும் இன்றி அப்படியே பதிய வைக்க எண்ணுகிறேன்.

'இவள்' உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்...ஆனால் நிச்சயம் உங்கள் மனதை பாதிப்பாள்...'இவள்' மட்டும் என்று இல்லை இவளை போன்று பலர் நம்மிடையே இருக்கிறார்கள், நமக்குதான்  தெரிய வாய்ப்பில்லை...! 'இவள்' ஒருவேளை நம் முன்னே நடமாடி கொண்டிருக்கலாம்,நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம், பழகி கொண்டிருக்கலாம்...ஒரு தோழியாக, சகோதரியாக...

ரகசியமாக தனக்குள்ளே இன்னொரு(?)வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இவளை போன்றோர் தங்களது சுயத்தை, மனதை தாங்களாக எங்கும் வெளிபடுத்த விரும்ப மாட்டார்கள்...ஒரு வேளை இவளை போன்ற சாயலில் யாராவது உங்களிடம் பேசும்போது ஒரு பலவீனமான கணத்தில் சில வேதனைகளை கொட்டி இருக்கலாம், அதை அசட்டை செய்யாமல் இனியாவது ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி ஒரு சின்ன புன்னகையை பரிசளியுங்கள்...அவளது கனவு  தோட்டத்தில் பூக்கும் பூக்களும் மணம் வீசிவிட்டு போகட்டும்...!!

இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்து படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...

முன் அறிமுகம் ஒரு வழியாக முடிந்து விட்டது. :) என் தோழியே தனது கதையை சொல்வதாக எழுதி இருக்கிறேன்...உங்களுடன் இனி அவள் பேசுவாள்...நான் விடை பெறுகிறேன்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


இவள்...!

'Born with a Silver spoon in my mouth' என்று சொல்கிற மாதிரியான குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாக பிறந்தேன். குழந்தையில் குண்டா(!) அழகா இருப்பேனாம், இப்பவும் போட்டோவுல  பார்த்தா எனக்கே பெருமை தாளாது...என்னை தூக்கி வச்சுகிறதுக்குனே ரசிகர்கள் கூட்டம் அலையுமாம்...!


ஐந்து வயது வரை மிக செல்லமாக வளர்ந்தேன்...வளர்க்கப்பட்டேன்...!அதற்கு பின் விதி ஒரு ஜோசியக்காரன் வடிவத்தில வந்தது...எதிர்காலத்தில எனக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாதாம், எப்பவும் எதிர்த்து பேசுவேனாம்...நடப்பேனாம்...வீட்டிற்க்கு அடங்க மாட்டேனாம்...!இப்படி வாய்க்கு வந்ததை உளறி கொட்டி இருக்கிறான்...என் மேல அவனுக்கு என்ன கோபமோ தெரியல...?! நான் வளர்ந்த சூழலை பார்க்கிற யாரும் ஈசியா சொல்லிடலாம், இப்படி அதிக செல்லமா வளர்த்தா பின்னாடி சொன்ன பேச்சை கேட்க மாட்டானு...! ஆனால் என் அம்மா புதுசா அவன் எதையோ சொல்லிட்ட மாதிரி அதுக்கு அப்புறமா என்னை கொஞ்சம் யோசனையோட  டீல் பண்ண தொடங்கிடாங்க...! 

மத்தபடி என்னை கவனிக்கிற விதத்தில எந்த குறையும் இருக்காது... கலர்கலரா கவுன் அதே நிறத்தில பிளாஸ்டிக் கம்மல், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பாங்க...பள்ளி விழாக்களில் நான்தான் ஸ்பெஷல்...எல்லாம் அம்மாவின் ட்ரைனிங் !! 


பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவிற்கு அப்போதைய கவர்னர் பட்வாரி அவர்கள் வர வழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமான  பாடல் ஒன்றுக்கு நானும் இன்னும் மூன்று பேரும் நடனம் ஆட ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம், விழாவிற்கு முதல் நாள் காலையில் என் காலில் கொலுசு போடும் இடத்தில் எதனாலோ ஒரு பெரிய கட்டி வந்துவிட்டது...வலி இல்லை ஆனா பார்க்க ஒரு மாதிரியாக  இருந்தது.

முட்டி வரை உள்ள கவுன் தைச்சு தயாரா இருக்கு, ஆனா என் கால் இப்படி இருக்கிறதால கவுன் மாடல் டிரஸ் செட் ஆகாது, என்ன பண்ணலாம் என யோசனையில் இருக்கும் போது என் அம்மா உடனே எல்லோருக்கும் மேக்ஸி (நைட்டி மாதிரியான கால்வரை உள்ள மாடல் டிரஸ்)  போட சொல்லிடலாம் என சொல்லவும், எங்க ஆசிரியை கொஞ்சம் யோசிச்சாங்க... உடனே என் அம்மா "நானே நாலு பேருக்கும் மொத்தமா வாங்கி கொடுத்துவிடுகிறேன்" அப்படின்னு சொல்லிடாங்க...அப்பவே கடைக்கு போய், நல்லா அழகா பிரில் வச்ச வேற வேற கலர்ல ஒரே மாதிரியான மேக்ஸி வாங்கி கொடுத்தாங்க...அதை போட்டுட்டு சிறப்பா ஆடி முடிச்சோம்.

இப்படி என்னை அருமையா கவனித்து கொண்டாலும் அம்மாவின் மனதோரத்தில் சிறு கசப்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது...அதை நானே உணர்ந்து கொள்ள கூடிய சூழல் ஒன்றும் வந்தது...


பொதுவாக விடுமுறை நாள் அன்று சோம்பலாய் விடியும் மாணவ மாணவர்களின் பொழுதுகள் !

அப்படிதான் எனக்கும் ஒருநாள் காலை பொழுது விடிந்தது...கலைந்து கிடந்த முடிகளை ஒன்று சேர்த்து கிளிப் போட்டு, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல எழுந்தேன்...இன்னும் சற்று நேரத்தில் என் தலையில் இருந்து ரத்தம் கொப்பளிக்க போகிறது என தெரியாமல்...!? 

                                                                   * * * * ** * * * *

'இவள்' உங்களுடன் தொடர்ந்து பேசுவாள்...
படங்கள்- நன்றி கூகுள் 
29 comments:

ஓசூர் ராஜன் 11:44 AM, December 07, 2011  

ஆரம்பமே அசத்தலாக இருக்கு! தொடருங்கள், தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!!

நண்டு @நொரண்டு -ஈரோடு 12:40 PM, December 07, 2011  

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

asiya omar 1:23 PM, December 07, 2011  

//இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்து படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...//

தொடர்ந்து எழுதுங்க.வித்தியாசமான அணுகுமுறையில் கதை.

sakthi 1:49 PM, December 07, 2011  

நல்ல ஆரம்பம் தொடருங்கள்

rufina rajkumar 2:05 PM, December 07, 2011  

நல்லா சஸ்பென்ஸ் வைத்து கதையை நிறுத்தி இருக்கிறீர்கள். தொடருங்கள், எங்களோடு போட்டி போட ஒரு புது முகம் தயாராகட்டும்

கணேஷ் 2:55 PM, December 07, 2011  

ஒரு நாள் காதல் என்னுடையது. இந்தத் தோழிக்கோ காதல் சொன்ன அன்றே முடிந்து விட்டது என்பதைத் தெரிந்தபோது வருத்தமாக இருந்தது. ஜோசியம், ஜாதகம் என்று அதை நம்பி அலைபவர்களைக் கண்டாலே கொலைவெறி வரும் எனக்கு. ‘இவளின்’ வாழ்க்கையிலும் அது விளையாடி இருக்கிறதே... பாவம்! தோழியைத் தொடர்ந்து சந்திக்கிறேன்.

உங்கள் உரைநடை நன்றாகவே இருக்கிறது- கதை என்ற வடிவத்திலும். வாழ்த்துக்கள் கௌசல்யா சிஸ்டர்!

angelin 4:09 PM, December 07, 2011  

இவளின் ஆரம்பமே ஆணி அடித்தாற்போல் நிற்கிறது
ஒவ்வொரு வரியும் துயரத்துடன் எதையோ எங்கேயோ நினைவுகளை அழைத்து செல்கிறது .தொடருங்கள் கௌசல்யா .நாங்களும் தொடர்கிறோம்

ஹேமா 2:29 AM, December 08, 2011  

கௌசி...மனதைத் தொடுகிறாள் தோழி.தோளில் சாய்ந்திருக்கட்டும்.மனம் அமைதியாகட்டும் !

விச்சு 6:53 AM, December 08, 2011  

அசத்தலான ஆரம்பம். முன்னோட்டமே நல்லா எழுதியிருக்கீங்க. தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் 8:25 AM, December 08, 2011  

தொடருங்கள்... தொடர்கிறேன்...

suryajeeva 11:42 AM, December 08, 2011  

தொடர்கிறேன்

Rathnavel 6:20 PM, December 08, 2011  

நல்ல பதிவு.
தொடருங்கள்.
வாழ்த்துகள்.

Kousalya 12:51 PM, December 09, 2011  

@@ ஓசூர் ராஜன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Kousalya 12:53 PM, December 09, 2011  

@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

நன்றிகள்


@@ asiya omar...

நன்றி தோழி.@@ sakthi...

நன்றிகள் தோழி.

Kousalya 12:55 PM, December 09, 2011  

@@ rufina rajkumar said...

//எங்களோடு போட்டி போட ஒரு புது முகம் தயாராகட்டும்//

அக்கா உங்களோட போட்டியா ? அது எப்படி முடியும், கதை எழுத நான் இப்பதான் கத்துட்டு இருக்கிறேன்.

ஏதாவது குறை இருந்தா சொல்லிதாங்க திருத்திகிறேன்.

உங்களின் உற்சாகபடுத்தும் குணம் பிடித்திருக்கு அக்கா

:)) நன்றிகள்

Kousalya 1:01 PM, December 09, 2011  

@@ கணேஷ் said...

//ஒரு நாள் காதல் என்னுடையது.//

ஆச்சர்யமா இருக்கு... :)

//தோழியைத் தொடர்ந்து சந்திக்கிறேன்.//

உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் எனக்கு நிறைவை கொடுக்கிறது...

மகிழ்வுடன் நன்றிகள் கணேஷ்

Kousalya 1:05 PM, December 09, 2011  

@@ angelin said...

//இவளின் ஆரம்பமே ஆணி அடித்தாற்போல் நிற்கிறது
ஒவ்வொரு வரியும் துயரத்துடன் எதையோ எங்கேயோ நினைவுகளை அழைத்து செல்கிறது //

அவளின் துயரங்கள் என்னையும் அதிகமாக பாதித்தது. பலர் வாழ்க்கையில் அனுபவித்ததை மொத்தமாக சேர்த்து அவள் அனுபவித்து விட்டதை போல எண்ணுகிறேன்.

தொடர்ந்து படியுங்கள் தோழி.நன்றி.

Kousalya 1:06 PM, December 09, 2011  

@@ அப்பாதுரை...

மிக்க நன்றிகள்.

:))

Kousalya 1:12 PM, December 09, 2011  

@@ விச்சு...

உற்சாகபடுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள்.

Kousalya 1:17 PM, December 09, 2011  

@@ வெங்கட் நாகராஜ்...

நன்றிகள்.@@ suryajeeva...

நன்றிகள்.


@@ Rathnavel...

நன்றிகள் ஐயா.

Kousalya 1:19 PM, December 09, 2011  

@@ ஹேமா...

//மனதைத் தொடுகிறாள் தோழி.தோளில் சாய்ந்திருக்கட்டும்.மனம் அமைதியாகட்டும் !//

எழுத்தில் என்ன சொல்ல வருகிறேன் என்பதை மிக அழகாக புரிந்து கொள்வீர்கள் ஹேமா.

உங்கள் வார்த்தைகள் மன நிறைவை கொடுத்து விட்டு ஓடிவிடும் எனக்கு தெரியாமல்...

:))

நன்றிகள்பா

இராஜராஜேஸ்வரி 2:10 PM, December 09, 2011  

அருமையான ஆரம்பம். பாராட்டுக்கள்..

வல்லிசிம்ஹன் 8:11 PM, December 09, 2011  

தோழியின் மீது உங்களுக்கு உள்ள பரிவு பிரமிக்க வைக்கிறது.
ஹ்ம்ம். இது போல எத்த்தனை பெண்களோ. தொடர்கிறேன். அசத்தல் நடை.வாழ்த்துகள் கௌசல்யா.

மோனா,  3:10 AM, December 10, 2011  

சிறப்பான ஆரம்பம். இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Anonymous,  3:20 PM, December 20, 2011  

Good one ... waiting eagely for your next post

adhiran 11:35 PM, December 28, 2011  

you start write fiction.. good to know. try your best.
regards - mahi.

Anonymous,  7:52 AM, January 17, 2012  

realy touching, waiting for next post.-retna

நாம் நண்பர்கள் 3:12 PM, March 05, 2014  

முகவுரையில் இது ஒரு உண்மை சம்பவம் என்று சொல்லி விட்டீர்கள் படிக்க படிக்க ஒரு பெண்ணின் மனதின் அக உணர்வை எழுத்தில் வடிக்கும் உங்களுக்கு நன்றி ,தொடர்கிறேன் ,

பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறான தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதை பற்றி அறிய நேரிட்ட சூழல்.///இந்த வாக்கியம் படிக்கும் போது என்னை அறியாமல் அழுதேன் இந்த சமுகமே பெண்ணுக்கு எதிர் ஆனதோ என்று

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Visitors

Copyright

MyFreeCopyright.com Registered & Protected

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP