செவ்வாய், நவம்பர் 6

10:13 AM
26

இணையத்தில் விவாதிப்பதற்கு காரசாரமாக ஒரு விஷயம் கிடைத்து ஒரு மாதம் ஓடிவிட்டது, இந்த ஒன்று பலவாகி, பலரையும் பலவிதத்தில் யோசிக்க,வசைபாட,விவாதிக்க,எழுதவும் வைத்துக்கொண்டிருக்கிறது... அவர்கள் எல்லோரின் புண்ணியத்தில் எனக்கு பூர்வ ஜென்ம ஞாபகமே வந்துவிடும் போல...!? :) அந்த அளவிற்கு பல தலைமுறை வரலாறுகளை தோண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எதை பற்றிய பிரச்சனை என்பதே இந்த நிமிஷம் மறந்து பின்நவீனத்துவம்னா என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்.:) 

நண்பர் ஒருத்தர் கேட்டார், பெண் சம்பந்தப்பட்ட இதை பற்றி பெண் பதிவர்கள் அவ்வளவா ஏன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று...ஆதரவாக, எதிராக, நடுநிலை என்று மூன்றில் எதையோ ஒன்றை சார்ந்து பேசணும் இல்லைனா மௌனமா இருக்கணும். இந்த விசயத்தின் ஆரம்பம், முடிவு பற்றி எதுவும் தெரியாமல் என்னனு எழுத??!  (சம்பந்தப்பட்ட அத்தனையும் படிச்சிட்டு பதிவு எழுதணும்னா எனக்கு இரண்டு மாசம் ஆகும்) :) நான் பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பெண் பதிவரை சுற்றி பாலியல் சார்ந்த கருத்து மோதல்கள், சாதியை சாடுதல் என பிரச்சனைகள் பல கட்டங்களில் நடந்தேறின. இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெண் பதிவரின் குடும்பத்திலும் எதிரொலித்து பிரச்னை பெரிதானது. இணைய உலகில் இது போன்றவையும் நிகழும் என்ற யதார்த்தம் அப்போது புரிந்தது. அதே போல் சமீபத்திய விஷயம் இன்று பலருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எனது சொந்த(?) தளம் எதுவும் எழுதுவேன் என்று இனி சொல்ல கூட ரொம்ப யோசிக்கணும் போல !?  

இந்த பிரச்னையை பேசவோ, விவாதிக்கும் அளவிற்க்கோ எனக்கு விவரம் போறாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை. ஆனா இந்த பிரச்சனையை வைத்து ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஆண் பெண் என பிரித்து பார்பதாகவே இருக்கிறது. யாராக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தை விவாதிப்பது என்று இல்லாமல் எழுதியவரை தாக்குவது குறித்த என் வருத்தத்துடன் கூடிய  ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பேதம் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆண் பெண் பேதம் பிரித்தும் பெண் என்றால் பாலியல் ரீதியாக விமர்சிப்பது என்பதும் மிக கேவலம், கண்டிக்கப்படவேண்டும். இச்செயல் படித்தவர்களிடத்தில் மிகுந்திருப்பது கொடுமை !! பணம் சம்பாதிக்க, அறிவை வளர்க்க பயன்படும் கல்வி, ஒழுக்கத்தை போதிக்கிறதா அல்லது அந்த போதனை அலட்சியபடுத்தபடுகிறதா ?!

முகநூலில் ஒரு பிரபல பெண்மணி ஒருவர் நடுநிலையாக பேசுகிறேன் என்று எழுதிய அந்த நோட்ஸில்  முழுக்க முழுக்க ஆண்களின் மீதான தாக்குதல் மட்டுமே அதிகம். அங்க சுத்தி இங்க சுத்தி தவறுகள் அத்தனையையும் தூக்கி ஒருசாராரின் மீது போடுவது எப்படி நடுநிலைமை ஆகும்...??!

ஆண்  பெண்ணை வசைபாட முதலில் தேர்ந்தெடுக்கும் வழி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் என்கிறதாம் பெண்ணிய உலகம்...??!!

அதனால் இனிமேல்,

சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைக்குரிய தலைப்புகளின் வரிசையில் ஆண்களையும் சேர்த்து விடலாம் போல ...!

ஒருவர் இப்படியா பேசினார் ?! எப்படி பேசலாம் ?! என்று பாலினம் ரீதியாக மட்டும் பார்த்து பேசுவது சரியா ?!

இணையம் மூலமாக ஒரு சில வரிகளில் எவ்வளவு பெரிய பிரபலங்களையும் நெருங்கிவிடமுடியும், அதிகம் நெருங்கினால் வம்பில் முடிந்து வாழ்வே கேள்வி குறியாகிவிடும் என்பதை தற்போது காலம்  எச்சரிக்கிறதா ?!

அவ்வளவு பெரிய குற்றமா ?

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் தவறுகள் இருக்கிறது, அதற்கு சிறைத் தண்டனை என்பது மிக அதிகம் என்பதே எனது புரிதல். தெருவில் ஒரு பெண் மானபங்கபடுத்தபடும் போது  வேடிக்கை பார்க்கும் கூட்டமும்,  காவல் நிலையம் வரை பந்தாடப்படும் பெண்மை பற்றி கூட பெரிதாக கவலைபடாதவர்கள் தானே நாம்...

பெண்ணுக்கெதிராக அரங்கேறும் கேவலங்கள் தான் எத்தனை எத்தனை ?! அருவருக்கச்செய்யும் அவலங்கள்,கொடுமைகள் பார்த்து  கலங்காத மக்கள், அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை கூட கள்ளகாதல் என்று நாமகரணம் சூட்டி அதிலும் பெண்ணை மட்டுமே சாடும் விவஸ்தைகெட்ட சமூகம் !! பெண் கெடுக்கப்படுகிறாள் என்றால் அவளது சம்மதமும் அதில் இருக்கிறது என்று வாய்கூசாமல் சொல்பவர்கள் வாழும் சமூகத்தில், எழுத்துக்கள் மன உளைச்சலை கொடுத்ததால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் என்பதும் அதுக்கு சிறைத்தண்டனை என்பதும் வினோதம் !

தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா?  காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

பெண்களுக்கெதிராக  நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.

சாதி,  மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது. இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை. சாதியை குறித்து ஏதும் கருத்து வந்தால் என்ன ஏது என்று தீர யோசிக்காமல் ஆவேசகருத்துக்களை அள்ளி விடுபவர்கள் அதிகம். கல்வி, அரசியல் , சமூகம் என்று அனைத்து இடத்திலும் சாதி பெருமைகள் கொண்டாடபடுகிறது. அதன் அடிப்படையில் வளரும் மாணவர்களின் நிலை சுயநலத்துடன் கூடிய ஒன்றாக மட்டும் இருக்கிறது. தனது கல்வி, தனது வாழ்க்கை , தன் சந்தோசம் என்ற குறுகிய வட்டத்தில் சுற்றிவர சாதி உதவலாம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல...?!

சக  மனிதனை மதித்து அன்பும் அக்கறையும் செலுத்தும் மனப்பான்மை தற்போது குறைந்து சுயநலம் மிகுந்திருப்பதால் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக மட்டுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நல்லவை குறைந்து தீயவை நிறைந்துவிட்டது. 

எது கருத்து சுதந்திரம் ?

சக மனிதனை பாதிக்காத எந்த கருத்தையும் தெரிவிக்கலாம், அதுதான் கருத்து சுதந்திரம் அப்படின்னு நினைக்காதிங்க. தனக்கு என்ன சொல்ல வருதோ அதை சொல்லலாம் அதுதான் கருத்து சுதந்திரம்...!!!!? ஒரு விஷயத்தை பலவிதமாக திரித்து கூறுவது, ஆபாசமாக கருத்திடுவதை நியாயபடுத்துவது, எழுதிய கருத்தை அழிப்பது, வக்கிரமாக வன்மமாக பேசுவது, வேறு பல பெயரில் ஒளிந்து கொண்டு கருத்திடுவது, சாதி, மதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு பேசுவது இது எல்லாமே கருத்து சுதந்திரத்தில் சேரும் என்கிறார்கள். மொத்தத்தில் எதன் அர்த்தமும் புரியாத ஒரு குழப்பத்தில் நான் !!

ஒருவருக்கு சாதாரண வார்த்தையாக இருப்பது பிறருக்கு மிக ஆபாசமான வார்த்தையாக தெரியும். அது போன்றவைகளை கேட்டு பழகாத சூழலில் வளர்ந்திருக்கலாம். ஊருக்கு ஒரு தமிழ்,  சென்னையில் வா போ என்றால் சாதாரணம், ஆனால் இங்கே,  என்ன'ப்பா' என்றால் 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?' என்கிறார்கள். வார்த்தைகளை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அழுத்தமாக சொல்கிறது தற்போதைய பிரச்சனை !

எதிரான கருத்து ஒன்று எங்கோ வெளியிடப்படும் போதும், அது ஒருவேளை தன்னை குறித்துத்தானோ என்ற சந்தேகமே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம் என்பது  பதிவுலகில் சகஜம்.  நம்மை குறித்த தவறான கருத்துக்களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது .

முகநூல், பிளாக், டுவிட்டர் எதாக இருந்தாலும் நாம் முன் வைக்கும் கருத்துக்களை வைத்துதான் நாம் அறியபடுகிறோம். நம்ம சொந்த தளம் நான் எதுவும் சொல்வேன் என்ற ரீதியில் கருத்துக்கள் இருந்தால் பிறரும் அதே ரீதியில் தான் நடந்துகொள்வார்கள். பிறரது கருத்துக்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் நிராகரிப்பதும் நமது உரிமை என்பதை நினைவில் வைத்துகொள்வது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது !

பெண்களே

ஆண்களை குறை சொல்றப்போ தவறாம பெண்கள் நாம சொல்றது 'உங்க அக்கா, தங்கை, அம்மா பத்தி கூட இப்படித்தான் பேசுவீங்களா?' என்று... ஆண்களை ஒட்டுமொத்தமாக மோசமானவங்க,ஆணாதிக்கவாதிகள், பாலியல் துன்புறுத்தல் பண்றவங்க என்று சொல்லும் போது நம்ம வீட்லயும் அப்பா,சகோதரன்,கணவர், மகன் என்று இருப்பார்களே அப்போ அவர்களையும் சேர்த்து தான் சொல்றோமா ?!

இதுவரை ஆண்கள் யாரும் பெண்களை பார்த்து இப்படி கேட்டார்களா என தெரியவில்லை !!?

இதுவும் ஆணாதிக்கம் ??!

தற்போது நடந்த பிரச்சனையிலும் இது முழுக்க ஆணாதிக்கம் அடிப்படையிலானது என்று கூறப்படுவது தவறு. பெண்ணை பற்றி ஆண் பேசினாலே அது ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தபடுவதை எண்ணி வருந்துகிறேன். இந்த பெண்ணியம் பேசுபவர்கள் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்பதையே பார்க்க மாட்டார்களா ?! ஆணாதிக்கம் என்ற கண் கொண்டு மட்டுமே பார்ப்பதால் உண்மையில் அந்த ஆண் எதை குறித்து சொல்ல வருகிறான் என்பதன் உட்கருத்து, பொருள் புரிந்து கொள்ளபடாமலேயே போய் விடுகிறது...!!? சமயங்களில் சிறந்த பொருள் பொதிந்த வாதங்களும் திசை மாறி போய்விடுகின்றன...!! 

ஒரு பெண்ணை அதிகபட்சமாக இழிவு படுத்த எவரும் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் ரீதியிலான கருத்திடல் . இதை ஆண்கள் மட்டும் செய்வது இல்லை, பெண்ணே மற்றொரு பெண்ணை அப்படி பார்க்கலாம், பேசலாம். இதை யாரும் ஆணாதிக்கம் மாதிரியான கருத்து என்று வசைபாடுவதில்லை, அதே சமயம் ஒரு ஆண் கூறும் போது மட்டும் ஏன் ஆணாதிக்கம் என்று பெரிதாக கூச்சலிட வேண்டும்...?

ஒரு ஆணை எதை சொல்லி, எந்த இடத்தில் தட்டினால் அவனுக்கு வலிக்கும் என்று ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். இரக்கத்தை சம்பாதிக்க தன் விருப்பத்தை பூர்த்தி செய்ய எந்தவிதமாக பேசவும் சிலரால் முடியும். பெண் என்பதால் சலுகை கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பில் அதிகம் அடிபடுவது ஆண்கள் தான்.  ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க வார்த்தைகளை பிரயோகிப்பது முதலில் அவளது உடலை நோக்கி என்றால் ஒரு சில பெண்கள் கையில் எடுப்பதும் அதே உடலை(வைத்துத்தான்) நோக்கிதான்  என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை !!?   

சுயபரிசோதனை

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள். எப்போதோ தாங்கள் பட்ட காயத்திற்கு இப்போது மருந்திடுகிறார்கள் போலும். ஆனால் இணையத்தில் இயங்கும் அனைவரையும் நன்றாக சுய பரிசோதனை செய்ய வைத்திருக்கிறது டுவிட்டர் விவகாரம் ! பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.
ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி! பகுத்தறியும் சுயசிந்தனை அற்று வார்த்தைகளை வீசுவது பூமாராங் போல திரும்பி வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வது நலம்.

பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட தங்கள் நிலை உணர்ந்து மனிதநேயம் என்ற ஒன்றை மட்டுமே எண்ணி விட்டுகொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஒன்றே இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே, பிறரை தூற்றவோ, பழிவாங்கவோ  இல்லை. பிறரையும் நோகடித்து தானும்  மன அழுத்தத்தில் விழும் இது போன்றவை இனியும் நிகழாமல் இருக்கவேண்டும். 

சிலரின் சுயநலம், பலரின் தூண்டுதல் என மாறி மாறி சொல்லப்படும் கருத்துக்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகாமல் விரைவில் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டுமென  இறைவனை வேண்டுகிறேன்.


பிரியங்களுடன்
கௌசல்யா




படம்  -நன்றி கூகுள்
Tweet

26 கருத்துகள்:

  1. ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி!

    -நன்று சொன்னீர்கள். பிரச்னை பெரிதாகாமல் முடிய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

    பதிலளிநீக்கு
  2. எது எப்படியோ, ஒண்ணா இருந்ததது இன்னைக்கு நாலு ஆச்சு ,இந்த போலீஸ் கம்ப்ளைன்ட் விளையாட்டு எல்லாருக்கும் புடிச்சிருக்கு இனி ஒவ்வொரு நாளுக்கும் அஞ்சு கம்ப்ளைன்ட் கொடுத்து விளையாட போறாங்க,,

    பதிலளிநீக்கு
  3. நடுநிலைமையா சொல்லியிருக்கீங்க....அதே நேரத்தில் இணையத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எதுவரை என்று வரையறுக்கப்படவில்லை...வரையறுக்கவும் முடியாது என்றுதான் தோன்றுகிறது...மிகப் பிரபல எழுத்தாளர்களே ..த்தா என்ற வார்த்தையை மிக சரளமாக அவரது இணைய பக்கங்களில் உபயோகப் படுத்துகிறார்கள்..இதைக் கட்டுப்படுத்துவது கடினம்தான்..என்னைக் கேட்டால் பிடிக்கவில்லைஎன்றால் விலகிக் கொள்ளவேண்டுமே தவிர,அதைச் சொன்னார்..இதைச்சொன்னார் என்று காவல்துரைவரை செல்லவேண்டிய அவசியமில்லை என்றுதான் சொல்வேன்...அரசியல் ரீதியான கருத்துகளை சொல்லும்போது எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தானே செய்யும்...அதற்கு தயாராக இருப்பவர்கள்தான் அதுமாதிரியான கருத்துகளை பொதிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க வேண்டிய பல அரிய கருத்துக்கள் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. நடுக்கோட்டுலே நின்னு சொல்லி இருக்கீங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  6. கட்டுரையோடு முழுமையாக உடன்படவில்லை எனினும்,

    //ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி!//
    நல்ல கருத்து. அனைவரும் இதைச் சரியாகக் கடைபிடித்தாலே பிரச்னையேதுமில்லாமல் இருக்கும்.

    //பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.//
    இதுவே இந்தச் சம்பவத்தின் பலனாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12:57 PM, நவம்பர் 06, 2012

    இந்த பிரச்சனைக் குறித்து பெண் பதிவர்கள் மவுனமாக இருந்தார்கள் என்ற குறையை நீக்கிவிட்டீர்கள். பல இடங்களில் உங்கள் கருத்தோடு நிச்சயம் உடன்படுகின்றேன்

    பதிலளிநீக்கு
  9. நடுநிலையோடு ஆயந்து அலசி எழுதியுள்ளீர்கள் ! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. முழுவதுமாக உங்கள் கருத்துக்களுடன் ஒத்துபோகிறேன் .

    பிரச்சினை ஒரு முடிவுக்கு வரணும் என்பதே என் பிரார்த்தனையும்
    எந்த இடமாக இருந்தாலும்
    அனைவரும் ஒரு எல்லைக்கோடு /ஒரு அளவுகோல் வைத்து நடந்துகொண்டால் நல்லது ..

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு
  12. மௌனமாக இருப்பது ஒரு தற்காப்பே. எதைப் பற்றிப் பேசினால் என்ன வருமோ என்கிறபயமும் தான்.

    நீங்கள் இந்த மௌனத்தை உடைத்து நல்ல கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
    நன்றி கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  13. //இக்பால் செல்வன் said...
    இந்த பிரச்சனைக் குறித்து பெண் பதிவர்கள் மவுனமாக இருந்தார்கள் என்ற குறையை நீக்கிவிட்டீர்கள்//
    தங்களுக்கு பிடிக்காத கருத்தை ஒரு பெண் சொல்லிவிட்டா எப்படி ஆண்களுக்கு அறசீற்றம வரும் என்பதை கண்ட பின்பு பெண்களுக்கு மவுனமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை. கட்டுரையாளர் கூட எவ்வளவு பவ்வியமாக சொல்கிறார் என்பதை கவனியுங்க.

    பதிலளிநீக்கு
  14. இங்கு கருத்து சுதந்திரமோ, எழுத்துச்சுதந்திரமோ கிடையா. ஒரு பெண்ணை இன்னும் சமூகம் உடல்ரீதியாகத்தான் பார்க்கிறது. அல்லது ஒரு ஆண் அப்படித்தான் அவன் அடிமனத்தில் பார்க்கிறான். எனவே அவளின் மற்ற ஆளுமையை அவளின் உடல் ரீதியாகத்தான் மதிப்பிடுகிறான். இவனை இப்படிச்செய்யச்சொல்லி அவன் மதமும் சொல்லிக்கொடுக்கிறது. இனங்களின் ஆதிதலைவர்களும் அப்படியே. எனவே சின்மையியை பாலியல் ரீதியாகத் தாக்கினார்கள். பாலியல் ரீதியான தாக்குதல் ஒரு கடைசி அஸ்திரம். பெண்ணின் பேச்சையடக்க. அவளுக்குப் பெருவேதனையைக்கொடுக்க.

    எல்லா ஆண்க‌ளும் அடிம‌ன‌த்தில் பெண்ணை உட‌லாக‌ முத‌லில் வைத்துப்பார்ப்ப‌வ‌ர்க‌ளே.

    பதிலளிநீக்கு
  15. @@ பால கணேஷ் said...

    //பிரச்னை பெரிதாகாமல் முடிய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.//

    வேண்டுதலும் இதுவே...!

    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  16. @@ Surya Prakash said...

    // ,இந்த போலீஸ் கம்ப்ளைன்ட் விளையாட்டு எல்லாருக்கும் புடிச்சிருக்கு இனி ஒவ்வொரு நாளுக்கும் அஞ்சு கம்ப்ளைன்ட் கொடுத்து விளையாட போறாங்க,,//

    சட்டங்கள் மக்களின் நன்மைக்காக, அதே நேரம் தவறானவர்கள் தங்களின் சுய நலத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் போது அப்பாவிகளும் தண்டிக்கபடும் சூழல் ஏற்படுகிறது என்பது வேதனை.

    . . .
    நன்றி சூர்யா

    பதிலளிநீக்கு
  17. @@ Manimaran said...

    //வரையறுக்கவும் முடியாது என்றுதான் தோன்றுகிறது//

    சரிதான்.

    //என்னைக் கேட்டால் பிடிக்கவில்லைஎன்றால் விலகிக் கொள்ளவேண்டுமே //

    இதை ஆரம்பத்திலேயே செய்து விட்டால் பிரச்சனை தொடருவது இல்லை.

    //அரசியல் ரீதியான கருத்துகளை சொல்லும்போது எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தானே செய்யும்...அதற்கு தயாராக இருப்பவர்கள்தான் அதுமாதிரியான கருத்துகளை பொதிய வேண்டும்.//

    உண்மை. எதிர்கொள்ளும் மனபக்குவம் இருக்கவேண்டும்.

    கருதிட்டமைக்கு மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. @@J.P Josephine Baba...

    நன்றி தோழி.



    @@துளசி கோபால்...

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  19. @@ ஹுஸைனம்மா said...

    //கட்டுரையோடு முழுமையாக உடன்படவில்லை எனினும்,//

    பரவாயில்லைங்க. எல்லோரின் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதில்லையே.

    //இதுவே இந்தச் சம்பவத்தின் பலனாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும்.//

    எதிர்ப்பார்போம்.

    மிக்க நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  20. @@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி...

    நன்றி தோழி.


    @@ saransakti...

    நன்றி.


    பதிலளிநீக்கு
  21. @@ இக்பால் செல்வன் ...

    நன்றிகள்.


    @@ புலவர் சா இராமாநுசம்...

    நன்றிகள் ஐயா.


    @@angelin...

    நன்றி தோழி.


    @@தினபதிவு...

    நன்றி.


    பதிலளிநீக்கு
  22. @@வல்லிசிம்ஹன் said...

    //மௌனமாக இருப்பது ஒரு தற்காப்பே. எதைப் பற்றிப் பேசினால் என்ன வருமோ என்கிறபயமும் தான்.//

    பயம் என்பதை விட இதை ஆளாளுக்கு பேசி ஏன் பெரிது படுத்தணும் அப்டி என்கிற எண்ணமாக கூட இருக்கலாம்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. @@வேகநரி said...

    //தங்களுக்கு பிடிக்காத கருத்தை ஒரு பெண் சொல்லிவிட்டா எப்படி ஆண்களுக்கு அறசீற்றம வரும் என்பதை கண்ட பின்பு பெண்களுக்கு மவுனமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.//

    அறசீற்றம் அளவோடு வந்தால் நல்லது :)
    பெண்கள் மௌனமா இருக்கிறாங்க என்பதல்ல, இதுல பெரிசா பேச என்ன இருக்கு அப்டின்ற சலிப்பாகவும் இருக்கலாமே ?!!

    //கட்டுரையாளர் கூட எவ்வளவு பவ்வியமாக சொல்கிறார் என்பதை கவனியுங்க.//

    இதுக்கு பேர் பவ்வியம் இல்லைங்க, என்னோட புரிதலை நேரடியா வெளிப்படையா சொல்றேன் எந்தவித பூச்சும் இல்லாமனு அர்த்தம்.

    வருகைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  24. பிரச்சினை என்னவென்று பின்புலம் கூடத் தெரியாமல் கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலவில்லை. சுவாரசியமான குழாயடியைத் தவற விட்டிருக்கிறேன் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  25. திருமிகு. கௌசல்யா அவர்களே,

    // தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா? காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

    பெண்களுக்கெதிராக நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.
    சாதி, மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது //

    நடுவிலிருக்கும் இந்த பத்திகளில் அல்லவா உணரமுடிகிறது உங்களின் நடுநிலையை - நடுநிலை அரசியலை.
    இது ஒரு வகை நடுநிலைசார்பு??!! / சார்புநடுநிலை??!! போல

    ஏதோ வேறு எந்த மோசமான கொடுமைகளும் யாராலும் கவனிக்கப்படாமலே சென்று / வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டது போல உணர்த்துவது ஏனோ?
    தங்களின் இந்த வலைப்பூ விலேயே இந்த உரலும் அதனுள் கொடுத்துள்ள வினவு தள உரலும் காட்டும் சித்திரம் என்ன?
    http://www.kousalyaraj.com/2011/10/blog-post_12.html &
    http://www.vinavu.com/2011/10/03/akt-school-report/

    ஒரு 'சின்'ன விவகாரமும் ஆணாதிக்கமும் பற்றி நடுநிலையாக கூறியுள்ளீர்கள். நல்லது. அதேபோல இதற்கு முன் உள்ள ஒரு 'சிம்'ம விவகாரமும் பெண்ணாதிக்கமும் என்பது பற்றி தங்களின் கருத்து என்னவோ?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...