வெள்ளி, அக்டோபர் 8

10:47 AM
53

ஒரு பக்கம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அவலங்கள், தீவிர வாதம் போன்ற வன்முறைகளால் அவதி படும் மக்கள், ஆட்கொல்லி நோய்களால் மரணமடையும் மக்கள், விபத்து களால் உயிர் இழக்கும் மக்கள்....ஆனால் மற்றொரு பக்கம் "ஏன் படைக்கப்பட்டோம்.......?", "இன்று ஏன் இந்த சித்திரவதை அனுபவிக்கிறோம்.....??", "உயிர் எங்கள் அனுமதி இல்லாமல் ஏன் பறிக்கபடுகிறது....??" இப்படிப்பட்ட விடை இல்லாத கேள்விகள்.....??!! நாள்தோறும் சிலரின் சுயநலத்திற்காக மொத்த மொத்தமாக அப்பாவி மக்களை வதைத்து கொல்லுகிற கொடூரம்.....!!?

அது ஏன் எதற்காக என்று விவாதிப்பதற்காக இல்லை இந்த பதிவு....!!? எல்லோருக்கும் இருக்கும் மனசாட்சி என்ற ஒன்று ஒரு சிலருக்கு  இல்லாமல் ஏன் போய் விட்டது....?? மனிதம் அவ்வளவு மலிவானதா....?? அடுத்த உயிர் பறி போவதை பார்க்கும் போது நம் கண்ணிற்கு அது ஒரு நிகழ்வு, அவ்வளவே......அடிக்கடி ரத்த காட்சிகளை மீடியாக்கள்  மூலமாக பார்த்து பார்த்து நமக்கும் பழகி போய் விட்டது.....அதே நேரம் தன் ரத்த உறவுக்கு ஒன்று என்றால் துடிக்கிறோம்.....!கதறுகிறோம்....! அப்போது மட்டும் நம்முடைய இரக்க குணம், மனிதாபிமானம், அன்பு, பாசம்  வெளிப்படுவது  ஏன்...?? எனக்குள்ளும் இந்த கேள்வி அடிக்கடி எழுகிறது, நானும் இந்த ஜனசமுத்திரத்தில் ஒருத்தி  தான் என்பதை மறந்துவிட்டு.....!!?? 

சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஜெர்மானிய படம் 'THE BOY IN THE STRIPED PYJAMAS' என்னை பல விதத்தில் யோசிக்க வைத்தது....அதன் பாதிப்பில் தான்  இந்த பதிவு...

ஹிட்லர்  அரசாட்சி செய்த  காலம் அது.  யூதர்களை கொல்வதை  மட்டுமே முழு நேர வேலையாக செய்யக்கூடிய காலகட்டத்தில் நடந்ததாக சித்தரிக்கப்பட்ட ஒரு கதை. 'நாஸிகள் முகாம்' ஒன்றுக்கு ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன்  வருகிறார். அவரது ஒன்பது வயது மகன் 'ப்ருனோ' அவனை சுற்றி தான் இந்த கதை பயணிக்கிறது.

அந்த பையனுக்கு தனியாக வீட்டில் இருப்பது வெறுப்பாக இருக்கவே வெளியில் விளையாட  செல்கிறான். ஆனால் அருகில் யாரும் இல்லை.  பொறுமையிழந்த அவன் ஒருநாள் வீட்டின் பின் கதவை திறந்து அங்கு ஒரு 'முகாம்' இருப்பதை பார்த்து அங்கே ஓடுகிறான். அங்கே தடுப்பாக 'முள்வேலி' அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் இவன் வயதையொத்த ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து மெல்லிய தேகத்துடன் இருப்பதை பார்க்கிறான். அவன் அந்த யூத சிறுவனிடம், "எதுக்கு இந்த முள்வேலி போட்டிருக்காங்க.... விலங்குகள் வராமல் இருக்கவா....??" ,என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன் "மனிதர்கள் வராமல் தடுக்க....!!" என்று பதில் சொல்கிறான். (இந்த  ஒரு பதில் சட்டென்று நம் முகத்தில்  அறைவது போல் இருக்கிறது)

ஜெர்மானிய  சிறுவனுக்கு 'இந்த அகதி முகாம்', 'யூத சிறுவனின்  பதில்' என்று எதுவும் புரியவில்லை. மறுநாள் அந்த அதிகாரியின் வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது . அதற்கு ஒய்ன் கிளாஸ்  கழுவும் வேலைக்காக முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான்.  ஜெர்மானிய சிறுவன், யூத சிறுவனுக்கு கேக் கொடுத்து சாப்பிட சொல்லும்போது ராணுவ அதிகாரி பார்த்து விடுகிறார்......ஜெர்மானிய சிறுவனும் அப்பாவின் மேல் உள்ள பயத்தில் 'இவனை எனக்கு  தெரியாது' என்று சொல்லவும் கேக் திருடியதாக  எண்ணி யூத சிறுவனை அடிக்கிறார்.

மறுநாள் தன்  தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனை தேடி வருகிறான் ப்ருனோ. ஆனால் யூத சிறுவன் பெருந்தன்மையாக "அகதியாக இருப்பவன், அவமானங்களை தாங்கி பழகி விட்டான் " என்கிறான். இருவருக்குள் நட்பு பூ மலருகிறது.

யூத முகாமில்  இருப்பவர்களை கூட்டங்கூட்டமாக கொல்லும் வேலை (கொடூரம்..!?)  ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த  அந்த ராணுவ அதிகாரியின்  மனைவி அதிர்ச்சி அடைந்து கணவனுடன் சண்டை இடுகிறாள். அதற்கு அந்த ராணுவ அதிகாரி, 'ஹிட்லரின் கட்டளை' மீற  முடியாது... ' என்கிறான்.  இனியும் இங்கிருந்து இந்த கொடுமையை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்ப முடிவு செய்கிறாள்.

ஊருக்கு கிளம்பும் முதல் நாளில் யூத சிறுவன் தன் 'அப்பாவை காணவில்லை' என்று தன்  நண்பனிடம் கூறி கவலைபடுகிறான். இருவரும் சேர்ந்து தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். இதற்காக அகதி உடை ஒன்றை திருடி வந்து ஜெர்மானிய சிறுவனுக்கு தருகிறான்.

இருவரும் அகதி முகாமுக்குள் செல்கின்றனர்...அங்கே நடக்கும் கொடுமைகளை பார்கிறார்கள். அந்த நேரத்தில் ஹிட்லரின் அவசர ஆணைப்படி எல்லோரும் மொத்தமாக கொள்ள அழைத்து போக படுகிறார்கள், அதில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கிறார்கள் .

தன்  மகனை காணாமல்  அந்த தாய் பல இடங்களில் தேடி அலைகிறாள்..... ப்ருனோவின் தந்தை முகாமிற்குள் வந்து தேடுகிறான்..... 'விஷ வாயு' செலுத்தி கொல்வதற்காக  அடைத்து வைக்கப்பட்டுள்ள சேம்பருக்குள் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ள விவரம் தெரியவருகிறது.  தங்கள்  பிள்ளையை காப்பாற்ற  குடும்பமே தவித்து போராடுகிறது. ஆனால் இருவரும் செத்து விழுகிறார்கள். அவர்களின் கை இறுக்கமாக பின்னபட்டிருக்கிறது. முள் வேலியின் அந்த பக்கம் கழட்டி போடபட்டிருக்கிற  தன் மகனின் உடைகளை கையில் வைத்து  ஜெர்மானிய மகனின் தாய் கதறி அழுகிறாள்.

படுகொலை காட்சிகள், வன்முறை எதுவும் இன்றி உணர்வை மட்டுமே காட்சிகள் பிரதிபலிக்கின்றன.இது கற்பனை கதை என்று சொல்ல முடியவில்லை...மனிதாபிமானம் மறந்த சிலரால் மனிதம் செத்து சீரழிந்து கொண்டிருக்கிறதை நெஞ்சில் அறைவது போல் காட்சியின் பரிமாணம் உணர்த்துகிறது....    !!!??


"தன்  சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம், ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??" என்று 'ஜெர்மானிய மனசாட்சி' கேள்வி கேட்பதுபோல் இருக்கிறது....படத்தின்  கடைசி காட்சியை பார்க்கும் போது நம் மனதையும்  மெல்ல கீறி பார்க்கிறது இந்த கேள்வி.......!!   






உலகத்தின் சில இடங்களில் வெளியில் தெரிந்தும் தெரியாமலும்...... இந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மை படுத்தி சொல்லிய ஒரு சிறந்த படைப்பு இந்த படம்.



Tweet

53 கருத்துகள்:

  1. மனதை கனக்கவைத்து விட்டது. கண்டிபாய் இந்த படத்தை பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்..... தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று இன்னும் பலர் இருப்பதால்தான் இந்த நிலைமை. அருமையான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ///"அகதியாக இருப்பவன், அவமானங்களை தாங்கி பழகி விட்டான் //

    இந்த வரிகளைப் படிக்கும்போது உடம்பு சிலிர்ப்பதை என்னால் உணரமுடிகிறது .. படம் பார்க்கும்போது சத்தியமா கண்ணீர் வந்துவிடும்னு நினைக்கிறேன் ..!!

    பதிலளிநீக்கு
  4. // இந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மை படுத்தி சொல்லிய ஒரு சிறந்த படைப்பு இந்த படம்//

    உண்மைலேயே அழக்கான விமர்சனம் அக்கா .,
    நான் இத படித்துக்கொண்டிருக்கும் போதே என் உடல் சிலிர்ப்பதை பல இடங்களில் உணர்ந்தேன் .. நானும் இந்த திரைப்படத்தினைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன் .. இது தமிழா , இங்கிலீசா..? அதிலும் அந்த ஜெர்மானிய சிறுவனும் இறந்து விடுவது போன்ற காட்சிகள் கொடுமயானதானதாக இருக்கும் .!

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப கனத்துப் போகுது மனம்..
    //தன் சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம்,
    ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??//
    கேள்விகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன சகோ :(

    பதிலளிநீக்கு
  6. "தன் சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம், ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??"////

    தனக்கு வரும் போது தான் தெரியும்...எல்லாமே...

    இதே போல தான் இங்கு பக்கத்தில் நடக்குது...

    பதிலளிநீக்கு
  7. //"தன் சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம், ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??"//

    தனக்கு வந்தால் தெரியும்..
    ரொம்ப சரியா சொன்னீங்க...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு.உங்கள் லேபிளில் சினிமா என்ற வார்த்தையை சேர்க்கவும்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை படித்ததும் மனது கனமானது.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பகிவுக்கு நன்றி மனசு கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. மனதைக் கனக்க செய்கிறது கதை!

    பதிலளிநீக்கு
  12. இந்த பாவி ஹிட்லர் செய்த கொடுமைகள் கொஞ்சமா? நான் ரீடர்ஸ் டயஸ்டில் ஒரு ஆர்ட்டிக்கிள் படித்தேன். மிகவும் கவலையாக இருந்தது. விஷ வாயு செலுத்திய இடத்தை இன்னும் அப்படியே பாதுகாத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் ஹிட்லர் போல இன்னும் பலர் வேறு பெயர்களில் நடமாடுகிறார்கள்.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் எழுத்துகளிலேயே இவ்வளவு சோகங்கள் வண்டு ஒட்டி கொள்கின்றன .படம் பார்த்தல் ரொம்ப சங்கடமாக இருக்கும் என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  14. rombha feel panni ezhudhirukeenga..enayum feel pannavachuteenga thozhi..rombha manasu bharama ayduchu..indha padam pakka chance kedacha kandippa paapen

    rombha nandri

    பதிலளிநீக்கு
  15. மனதை வலிக்க செய்தப் பதிவு

    பதிலளிநீக்கு
  16. இந்த படத்தை பத்தி எங்கள் அலுவலகத்தில் ஒரு யூத நண்பர் சொல்ல கேட்டுள்ளேன் கௌசல்யா. அவர்களின் அவலத்தை பதிவு செய்த சிறந்த படங்களில் ஒன்று என குறிப்பிட்டார்... நல்லபதிவு

    பதிலளிநீக்கு
  17. வார்த்தைகள் கலங்குகிறது
    கௌசி.
    அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
    படமாகப் பார்க்கத் தேவையேயில்லை !

    பதிலளிநீக்கு
  18. நல்ல கருத்துகளை பதிந்துள்ளீர்கள். நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அருண் பிரசாத்...

    பார்த்திட்டு சொல்லுங்க சகோ... நன்றி

    பதிலளிநீக்கு
  20. Chitra said...

    //உண்மைதான்..... தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று இன்னும் பலர் இருப்பதால்தான் இந்த நிலைமை. //

    உண்மைதான் தோழி...வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ப.செல்வக்குமார் said...

    ஆங்கில படம் தான்...முழு படமும் பார்க்க இயலாவிட்டாலும் இறுதி காட்சி ஒன்று போதும், நிதர்சனம் நெஞ்சை அறைவதை உணரமுடியும் செல்வா. வருகைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  22. Balaji saravana said...

    //கேள்விகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன சகோ :(//

    ஆமாம் சகோ...விடை இல்லா கேள்விகள்.....!

    பதிலளிநீக்கு
  23. வாசிக்கும் போது பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  24. உலகம் முழுக்க இந்த மாதிரி காலம் காலமா நடந்துக்கிட்டே தாங்க இருக்கு. யூதர்கள் படமா எடுத்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்கு நடந்தத இப்போ பாலஸ்தீன்ல அவங்க இன்னொருத்தங்களுக்கு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மனுசன் வரலாற்றுலேர்ந்து பாடம் கத்துக்கனும்னு சொல்வாங்க ஆனா எல்லாம் அதுக்கு எதிர்விதாமா தான் நடந்துக்கிட்டு இருக்கு. நான் அது எனக்கு நடக்குற வரைக்கும் அதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குற பார்வையாளனாவே இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  25. சௌந்தர் said...

    //தனக்கு வரும் போது தான் தெரியும்...எல்லாமே...//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  26. அன்பரசன்...

    ஆமாம் சகோ. நன்றி.

    பதிலளிநீக்கு
  27. சி.பி.செந்தில்குமார் said...

    //நல்ல பதிவு.உங்கள் லேபிளில் சினிமா என்ற வார்த்தையை சேர்க்கவும்.//

    சேர்த்துவிட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  28. சசிகுமார் said...

    //பதிவை படித்ததும் மனது கனமானது.//

    அந்த உணர்வு வருவதை தவிர்க்க முடியாது சசி. நன்றி.

    நிலாமதி said...

    //உங்கள் பகிவுக்கு நன்றி மனசு கனக்கிறது.//

    உண்மைதான் அக்கா. நன்றி

    பதிலளிநீக்கு
  29. Sriakila said...

    //மனதைக் கனக்க செய்கிறது கதை!//

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  30. vanathy said...

    //இந்த பாவி ஹிட்லர் செய்த கொடுமைகள் கொஞ்சமா? நான் ரீடர்ஸ் டயஸ்டில் ஒரு ஆர்ட்டிக்கிள் படித்தேன். மிகவும் கவலையாக இருந்தது. விஷ வாயு செலுத்திய இடத்தை இன்னும் அப்படியே பாதுகாத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் ஹிட்லர் போல இன்னும் பலர் வேறு பெயர்களில் நடமாடுகிறார்கள்.
    நல்ல பதிவு.//

    உங்களின் தகவலுக்கு நன்றி வாணி.. அந்த இடத்தை பாதுகாத்து வருவது எனக்கு புதிய தகவல் தோழி.

    பதிலளிநீக்கு
  31. புதிய மனிதா.. said...

    //சிறப்பான பதிவு ..//

    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  32. இம்சைஅரசன் பாபு.. said...

    //உங்கள் எழுத்துகளிலேயே இவ்வளவு சோகங்கள் வண்டு ஒட்டி கொள்கின்றன .படம் பார்த்தல் ரொம்ப சங்கடமாக இருக்கும் என்றே தோன்றுகிறது//


    நடந்த சம்பவங்கள் உண்மை எனும் போது நம் வருத்தம் அடைவது தவிர்க்க முடியாது சகோ.

    பதிலளிநீக்கு
  33. Gayathri said...

    //rombha feel panni ezhudhirukeenga..enayum feel pannavachuteenga thozhi..rombha manasu bharama ayduchu..indha padam pakka chance kedacha kandippa paapen//

    உங்களை உணர்வுகளை உணர முடிகிறது தோழி. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக படம் பாருங்கள். நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  34. LK said...

    //மனதை வலிக்க செய்தப் பதிவு//

    புரிதலுடனான உணர்வுகள்.

    பதிலளிநீக்கு
  35. அப்பாவி தங்கமணி said...

    //இந்த படத்தை பத்தி எங்கள் அலுவலகத்தில் ஒரு யூத நண்பர் சொல்ல கேட்டுள்ளேன் கௌசல்யா. அவர்களின் அவலத்தை பதிவு செய்த சிறந்த படங்களில் ஒன்று என குறிப்பிட்டார்... நல்லபதிவு//

    அப்படியா தோழி. அந்த யூத நண்பர் சரியாக தான் சொல்லி இருக்கிறார்...அவர் அந்த படம் பார்க்கும் போது எவ்வளவு வேதனையை அடைந்து இருப்பார்....?!

    கருத்திற்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  36. ஹேமா said...

    //வார்த்தைகள் கலங்குகிறது
    கௌசி.
    அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
    படமாகப் பார்க்கத் தேவையேயில்லை !//

    ஹேமா என்னால் உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது தோழி.

    பதிலளிநீக்கு
  37. ஈரோடு தங்கதுரை said...

    //நல்ல கருத்துகளை பதிந்துள்ளீர்கள். நல்ல பதிவு . //

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  38. சே.குமார் said...

    //மனதை கனக்க வைத்து விட்டது.//

    நானும் உணருகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  39. யாதவன் said...

    //வாசிக்கும் போது பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது//

    புரிந்து கொள்ள முடிகிறது சகோ. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. ஜீவன்பென்னி said...

    //உலகம் முழுக்க இந்த மாதிரி காலம் காலமா நடந்துக்கிட்டே தாங்க இருக்கு. யூதர்கள் படமா எடுத்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்கு நடந்தத இப்போ பாலஸ்தீன்ல அவங்க இன்னொருத்தங்களுக்கு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மனுசன் வரலாற்றுலேர்ந்து பாடம் கத்துக்கனும்னு சொல்வாங்க ஆனா எல்லாம் அதுக்கு எதிர்விதாமா தான் நடந்துக்கிட்டு இருக்கு//

    நீங்க சொல்வது நிரம்ப சரிதான்....."பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்கிறோமோ, அப்படி நாம் மற்றவர்களிடம் நடந்து கொள்வது இல்லை." இது மனித இயல்பு போல.

    வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு அதை சரியாக வேறு ஒருவருக்கு செய்து கொண்டிருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது.


    உங்களின் கருத்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  41. உணர்வுமிக்கப் பதிவு...உங்கள் வார்த்தைகளின் வலி என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..ஈழத்து தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போது இங்கே உள்ளவர்களுக்கும் அதே மனநிலைதான் இருந்தது.. ஜெர்மானியனைப் போல்தான் நம் தமிழ்நாட்டவரும் நடந்து கொண்டார்கள்..

    பதிலளிநீக்கு
  42. அழகாக விளக்கிஉள்ளீர்கள....
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  43. மனம் வலிக்கின்றது சகோதரி

    பதிலளிநீக்கு
  44. padaipali said...


    ///உணர்வுமிக்கப் பதிவு...உங்கள் வார்த்தைகளின் வலி என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..ஈழத்து தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போது இங்கே உள்ளவர்களுக்கும் அதே மனநிலைதான் இருந்தது.. ஜெர்மானியனைப் போல்தான் நம் தமிழ்நாட்டவரும் நடந்து கொண்டார்கள்.///

    உண்மை தான் என்று சொல்லவே மனம் வலிக்கிறது....இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் ஒரு பார்வையாளனாகவே இருப்பான்....??! அங்கே நடப்பவை ஒரு நாள் இங்கேயும் திரும்பலாம் சொல்லமுடியாது...!???

    வருகைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  45. வேலன்...

    வருகைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  46. ஸாதிகா said...

    //மனம் வலிக்கின்றது சகோதரி//

    உங்களின் உணர்வு புரிகிறது சகோ. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  47. அதிகம் அறியப்படாத ஒரு சிறந்த திரைப்படத்தை உங்களுக்கே உரிய நடையில் மிக அழகான விமர்சனமாக இங்கே அனைவரும் அறிய கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக நன்றியும் பாராட்டுக்களும் கெள்சல்யா!

    எப்போதுமே குழந்தைகளின் மரணங்கள், துயரங்கள், அவர்களுக்கு ஏற்படும் கொடூரங்கள், மற்றவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளைவிட மிக அதிகமான வேகத்தில் மனதைத் தாக்கும். மறக்க இயலாத வகையில் மனதை மிகவும் பாதிக்கும். மலையாளம், ஹிந்தி திரையுலகில் இந்த மாதிரி படங்கள் அடிக்கடி தோன்றும். உறக்கத்தை இரண்டு தினங்கள் கெடுத்து விடும். அதுவும் இந்த மாதிரி உண்மை நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களின் பாதிப்பு அசாதரணமானது.

    ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கின்ற உண்மை எல்லோர் வாழ்விலும் நிகழ்வதுதான். இதைக்கூட தவிர்க்க முடியாது ஒவ்வொருத்தரும். பாருங்களேன், ஒரு விமான விபத்தில் நிறைய பேர்கள் இறக்கும்போது, அதில் தப்பிப்பிழைத்தது நம் உறவினராக இருந்தால் முதலில் சந்தோஷம்தானே வருகிறது! அப்புறம்தானே மற்றவருக்காக பரிதாபப்படத் தோன்றுகிறது! அடுத்தவர் வலியையும் தன் வலியாக நினைத்து புரிந்து நடப்பவர்கள் இந்த உலகில் மிகக் குறைவு!!

    பதிலளிநீக்கு
  48. மனோ சாமிநாதன் said...

    //ஒரு விமான விபத்தில் நிறைய பேர்கள் இறக்கும்போது, அதில் தப்பிப்பிழைத்தது நம் உறவினராக இருந்தால் முதலில் சந்தோஷம்தானே வருகிறது! அப்புறம்தானே மற்றவருக்காக பரிதாபப்படத் தோன்றுகிறது! அடுத்தவர் வலியையும் தன் வலியாக நினைத்து புரிந்து நடப்பவர்கள் இந்த உலகில் மிகக் குறைவு!!//

    உங்களின் கருத்துக்கள் அப்படியே நிதர்சனத்தை சொல்கிறது அக்கா....! அடுத்தவர்களின் வலியை வேடிக்கை பார்த்தே மனித நேயம் குறைந்து விட்டது....நமக்கு என்று வந்ததும் உடனே விழித்து கொள்ளும் மறைந்து இருக்கும் மனித நேய உணர்வுகள்.....

    இதில் நானும் விதிவிலக்கில்லை என்று தான் தோன்றுகிறது அக்கா....

    கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  49. உலகில் எந்த காலத்தில் நடந்த அவலங்கலானாலும், மேலும் அது திரைப்படங்களாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வருந்தும் தமிழனுக்கு எந்த இனமும் கவலைபடுவதாய் தெரியவில்லை... எனினும் ஒரு திரைக்காவியமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை பற்றி நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை...கண்முன்னே நிற்கின்றன காட்சிகள்...

    பதிலளிநீக்கு
  50. இந்த பதிவை பார்த்த பிறகுதான் அந்த படத்தை Download செய்து பார்த்தேன்.நன்றி.

    வலிகள் என்றும் ரணகளம்.
    http://www.mxstar.blogspot.com/

    பதிலளிநீக்கு
  51. பெயரில்லா5:34 AM, நவம்பர் 09, 2010

    so you didn't feel the same when my people died in vanni or when they are still dieing in the camps???

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...