Monday, October 18

11:05 AM
60


நாலு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை  சம்பவம் இது. எங்களது பாக்டரியில் மருந்து பொருட்களை (தீக்குச்சி செய்ய தேவைப்படும் குளோரேட், சல்பர் போன்ற பொருட்கள்) தனி தனி அறைகளில் ஸ்டாக் செய்து வைத்து இருப்போம். அந்த அறைகளை கவனித்து கொள்வதற்காக இரவில் ஒரு காவலாளி அந்த அறைகளுக்கு வெளியில் படுத்து இருப்பார்.  அன்று மழை பெய்து கொண்டிருந்ததால் அதனால் உள்ளே ஒரு இடத்தில் படுத்து இருந்திருக்கிறார்.

நடு ராத்திரியில எங்க வீட்டு கதவை  பலமா தட்டற சத்தம் கேட்டுச்சு .....என்னவோ ஏதோனு பயந்துட்டு (தீ விபத்து நடப்பது இந்த தொழிலில்  சகஜம்) வேகமா நானும் என் கணவரும் எழுந்து வந்து கதவை திறந்தோம் ....வெளியே அந்த காவலாளி நடுங்கிட்டே "முதலாளி குளோரேட் ரூம்ல யாரோ இருக்கிற மாதிரி இருக்கு....நீங்க உடனே வாங்க' ன்னு  சொல்லவும் எங்களுக்கும் ஒரே படபடப்பு.... உடனே என் கணவர் ஒரு கம்பை கைல எடுத்திட்டு வேகமா அந்த இடம் நோக்கி நடக்க தொடங்கிட்டார்....எனக்கு ஒரே பயம் இவர் தனியா போய் என்ன பண்ணுவாரோ...உள்ள இருக்கிறவன் கத்தி, அரிவாள்  ஏதும் வச்சிருந்தா.... ஏடா கூடாம ஆச்சுனா என்ன பண்ணனு....பக்கத்தில இருக்கிற இவரோட அண்ணன்ங்க வீட்டு  கதவுகளையும் ஓடி போய் தட்டினேன்.....ஒருத்தரையும்  விடலையே ...வயதான என் மாமனார், மாமியார் முதல் அத்தனை பேரும் பதறி எழுந்து வந்திட்டாங்க...(எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு...மொத்த உருப்படி ஒரு 17 தேறும்...!)

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி  தான் அந்த அறை உள்ளது.... ஆண்கள் மட்டும் அந்த ரூம் பக்கம் போக நாங்க எல்லோரும் ஒரு வித திகிலோட அந்த பக்கமே பார்த்திட்டு இருந்தோம்....கொஞ்ச நேரம் அமைதியா போச்சு....திடீர்னு  ஒரே அடிதடி சத்தம்...யார் யாரை அடிக்கிறாங்கன்னு  தெரியாம அக்கா'ஸ் 'எல்லோரும் ஆண்டவா என் வீட்டுகாரரை   காப்பாத்து'ன்னு வேண்டிட்டு இருந்தாங்க....ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!) 

அப்புறம் மெதுவா அந்த திருடனை இழுத்திட்டு  வந்தாங்க....(என் நம்பிக்கை  வீண் போகலைங்க...) போன வேகத்தில எங்க ஆட்கள் ஆளுக்கு ஒரு அடிதான் கொடுத்திருக்காங்க....ஆனா அந்த திருடன் ரொம்ப பாவங்க...சோர்ந்து போய்ட்டான்....(எங்க வீட்டு குட்டிஸ் எல்லாத்துக்கும் ஒரே சந்தோசம் இப்பதானே முதல் முறையா திருடனை நேரில் பாக்கிறாங்க.....நாளைக்கு ஸ்கூல்ல  போய் எப்படி பெருமை அடிக்கலாம்னு அப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சிடுசுங்க )


அப்புறம் மாமனார் தலைமையில் ஒரு சின்ன மீட்டிங் 'இந்த திருடனை இப்ப என்ன செய்யலாம் என்று..?' ஆளாளுக்கு ஒவ்வொரு ஆலோசனை சொன்னார்கள்...முடிவாக காலையில் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடலாம்.....இப்ப கம்பெனி முன்பாக இருக்கும் லாம்ப் போஸ்டில் கட்டி வைக்கலாம் என்ற  யோசனை குரல் வாக்கெடுப்பில் தேர்ந்து எடுக்க பட்டது.....! ஆனால் கட்டி வைச்ச பிறகு  கயிறை அறுத்திட்டு ஓடிட்டா என்ன செய்ய என்று ஆண்களில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிட்டு காவல் இருக்கணும்  என்றும் முடிவு செய்திட்டு மத்த எல்லோரும் தூங்க போய்ட்டோம்....நேரம் மூணு மணி ஆச்சு......ஒரு மணி நேரம் நிம்மதியா தூங்கி இருப்போம்....வெளியில் மறுபடியும் சத்தம்....! ஏற்கனவே எல்லோரும் கொஞ்சம் அலர்ட்டா  இருந்ததாலே...சட்டுன்னு எழுந்திட்டோம்....இப்ப என்ன பிரச்சனைன்னு வந்து பார்த்தா, நின்ன போன மழை மறுபடி  சோன்னு கொட்டுது....!! அந்த திருடன் மழையில நல்லா  நனைஞ்சிட்டு  நடுங்கிட்டு இருந்தான் (அடி வாங்கின உடம்பு வேறையா..... நல்லாவே நடுங்கினான் )


என் மாமனார் 'ஏம்பா, அவன் செத்து கித்து போய்ட போறான், ரூம்  உள்ளே கொண்டு போய் அடைங்க' னு சொல்லவும்....அடடா இது என்னடா புது சோதனைன்னு அவனை கொண்டு போய் ஒரு ரூம்ல அடைச்சாங்க....! இப்ப தூக்கம் சுத்தமா போச்சு...எங்க அக்கா மழைக்கு சூடா டீ குடிங்கன்னு 'கருப்பட்டி இஞ்சி போட்டு ப்ளாக் டீ'  கொண்டு வர மொத்தமா நாங்க ரவுண்டு கட்டி உட்கார்ந்து.....அழகா டீ குடிச்சிட்டு பேசி பேசியே  இரவை ஒரு வழியா போக வச்சிட்டு விடியலை வர வச்சிட்டோம்....! மணி 5 ஆனதும் என்னைக்கும்  போல அவங்க அவங்க வேலையை வேகமா பார்க்க ஆரம்பிச்சோம்.....ஏழு மணி ஆனதும் தொழிலாளர்கள் வேற வர தொடங்கிட்டாங்க....அப்புறம் என்ன எல்லோரும் கூடி கூடி பேசி திருடனை ஹீரோவாகிட்டாங்க...


மணி ஒன்பது ஆச்சு....இனிதான் தான் கிளைமாக்ஸ்....அந்த திருடனை காரில் ஏத்திட்டு  காவல் நிலையத்துக்கு என் கணவர் அழைத்து கொண்டு போனார். இங்கிருந்து போகும் போது கொஞ்சம் தள்ளாடிட்டேதான் போனான்...அங்க போனதும் இன்ஸ்பெக்டர் முன்னாடி அப்படியே விழுந்திருக்கான் (ஆனா அது ஆக்டிங்க்னு அப்ப என் கணவருக்கு தெரியல ) இன்ஸ்பெக்டரும் பதறி, 'என்னங்க சார் ரொம்ப அடிச்சிடீங்களா.....ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆக போகுது....அவன்தான் ஒண்ணு திருடலையே...பேசாம அவன் ஊர் பேரை கேட்டுட்டு அந்த ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுடுங்க' ன்னு சொல்லி இருக்கிறார்....!!? இவரும் நம்ம காவல்துறையின்  மனிதாபிமானத்தை மெச்சிட்டு (திட்டிட்டுதான்.....!) அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு,  கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்............!!?


இதில இருந்து நாங்க கத்துகிட்ட பாடம் என்னனா.......அதை நான் எப்படிங்க  சொல்றது...... உங்களுக்கே  இப்ப புரிஞ்சிருக்குமே....!!?

திருட வந்தவனை நல்லா (கவனிச்சு )உபசரிச்சு விருந்தாளி போல அனுப்பி வச்ச இந்த சம்பவம்.....ஒரு மழைநாள் இரவில், திக் திக்னு திரில்லா ஆரம்பிச்சி....அடிதடி சண்டை நடந்து..... ஒரு பஞ்சாயத்து ( இங்க சொம்புக்கு பதிலா டீ கப் ) சீன் வேற....குட்டிஸ் கலாட்டா....பெண்களின் வித்தியாசமான வேண்டுதல்கள்.....கிளைமாக்ஸ் சீன்ல போலீஸ் வருவதற்கு பதிலா  நாங்க ஸ்டேஷனுக்கு போய்....அப்புறம் ஒரு சின்ன டுவிஸ்ட்....கடைசியில் சுபம் (எங்களுக்கு இல்லை அந்த திருடனுக்கு )


வாசலில் என் கவிதை

Tweet

60 comments:

 1. .ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!)////

  அட டா இவங்க ரொம்ப நல்லவங்க இதை நான் நம்ப மாட்டேன்...

  ReplyDelete
 2. //அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு, கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்//

  நீங்க ரொம்ப நல்லவங்க

  ReplyDelete
 3. அந்த திருடனை நைட்டே அனுப்பி இருந்தா 200 ரூபாய் மிச்சம்

  ReplyDelete
 4. செம.. செம....ஹா.. ஹா.. ஹா..

  நான் சிரித்து முடிக்கலீங்க.....! ஆமா களவாணி விவராமான படிச்ச களவாணியா இருப்பாரோ...

  குளொரேட் ரூம்ல வந்து எடுக்க போயிருக்கார்.. (கெமிஸ்ரி கிராஜிவேட்டா..என்ன? ஹா..ஹா..ஹா)

  உங்க எல்லாருக்கும் வள்ளி திருமணம் நாடகம் பாக்குற மாதிரி ஜாலியா.. சுத்தி உக்காந்து சுக்கு காபி குடிச்சு என்னா ரவுசு பண்ணி இருக்கீங்க.... நல்ல வேளை.. பக்கத்துல பூக்கடை, வெற்றிலை பாக்கு கடை, பெட்டிகடை போட்டு திருவிழா மாதிரி ஆக்காம விட்டீங்களே...

  அப்புறம் பூரி செட் வாங்கி கொடுத்து.. 200 ரூபாய் பணம் வேறயா..!!!!????இதனால் சகலமான திருடர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் திருடவேண்டும் என்றால் சங்கரன் கோவில் பக்கம் போய்க்கோங்க...

  ரியலி சூப்பர்ப் போஸ்ட்!!!!!

  Different stroke from you kousalya.. ! keep it up.....!

  ReplyDelete
 5. சூப்பர் காமெடி படம்!

  ReplyDelete
 6. ஹா ஹா.. சகோ கலக்கல்...
  திருட வந்தவனை நல்லா (கவனிச்சு )உபசரிச்சு விருந்தாளி போல அனுப்பி வச்ச//
  ஓ இது தான் வந்தாரை வரவேற்கிறது அப்படிங்கறதா? :)

  உங்க உபசரிப்ப பார்த்துட்டு மறுபடியும் அவன் வரலையா ;)

  ReplyDelete
 7. /இதனால் சகலமான திருடர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் திருடவேண்டும் என்றால் சங்கரன் கோவில் பக்கம் போய்க்கோங்க...//

  adi vaangarathu yaaru neengala

  ReplyDelete
 8. ///அப்புறம் ஒரு சின்ன டுவிஸ்ட்....கடைசியில் சுபம் (எங்களுக்கு இல்லை அந்த திருடனுக்கு ) ///

  .....Sorry, சிரிக்காமல் இருக்க முடியல....ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்கள் எழுதி இருக்கும் விதம் சூப்பருங்கோ!

  ReplyDelete
 9. Really superb. Very reality and different post

  ReplyDelete
 10. அருமையா இருந்தது அக்கா ரசித்து படித்தேன் சிரித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 11. அட. இதுவும் நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
 12. உண்மைலேயே நீங்க ரொம்ப நல்லவங்க .. திருடனுக்கு கூட பணம் கொடுத்து அனுப்பிருக்கீங்க .. இந்த நல்ல மனசு யாருக்கு வரும் ..!!

  ReplyDelete
 13. தலைப்பு ஏமாந்த வேளை என்று வைக்கலாமே...

  nantraaka siriththen... arumai..

  ReplyDelete
 14. திருடனுக்கு நல்ல யோகம் தான்.

  //அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு, கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்//

  நீங்க ரொம்ப நல்லவங்க

  ReplyDelete
 15. சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்புத் திருடனா? உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு.

  ReplyDelete
 16. ரொம்ப நல்லா உபசரிச்சு
  இருக்கீங்க இன்னொரூ தடவைந்துடபோறான்........

  ReplyDelete
 17. உங்க வீட்டு காசுல உப்ப(அதாங்க பூரிசெட்) தின்னுட்டாரு இல்ல..!! இனிமே உங்க வீட்டுக்கு மட்டும் திருட வரமாட்டாரு..!!
  உப்பிட்டவரை உள்ளளவும் நினை..!!
  அப்டின்னு அவ்வையார்(!!??)சொல்லியிருக்காங்க..!!

  ReplyDelete
 18. (எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு...மொத்த உருப்படி ஒரு 17 தேறும்...!)////

  பேசாம இந்த விசியத்த வீட்டுக்கு முன்னாடி ஒரு போர்டு எழுதி வைங்க , திருடன் என்ன போலீஸ் காரன் கூட உள்ள வரமாட்டாங்க

  ReplyDelete
 19. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 20. //அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு, கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்............!!?//

  ஆஹா அட்ரஸ் சொன்னீங்கன்னா வாரத்துக்கு ஒருத்தனை அனுப்பலாம்னு இருக்கோம்.

  இப்படிக்கு திருடன் சங்கம்

  :)) அந்தந்த நேரத்துக்கு உங்க ஃபீலிங் எப்படி இருந்திருக்கும்னு புரியுது...ஆனா கடைசில காமெடியா முடிஞ்சதுதேன் காமெடி...அதுல 200 ரூவா வேற எக்ஸ்ட்ராவா குடுத்து அனுப்பியிருக்கீங்க. ரொம்ப நல்லவங்க போலவே...??? :))

  ReplyDelete
 21. சௌந்தர் said...

  //அட டா இவங்க ரொம்ப நல்லவங்க இதை நான் நம்ப மாட்டேன்...//

  உண்மையை வெளியே சொல்லாத சௌந்தர்.

  :))

  ReplyDelete
 22. LK...

  //நீங்க ரொம்ப நல்லவங்க//

  என் கணவரை தானே சொல்றீங்க....ஆமாம் அவர் என்னை மாதிரி கிடையாது....?!!

  :))

  ReplyDelete
 23. /என் கணவரை தானே சொல்றீங்க....ஆமாம் அவர் என்னை மாதிரி கிடையாது....?!//

  இருவரையும் தான் சொன்னேன்

  ReplyDelete
 24. ஹா ஹா! நிறையவே மனிதாபிமானம் உடைய குடும்பம்தான்.

  ReplyDelete
 25. dheva said...

  //குளொரேட் ரூம்ல வந்து எடுக்க போயிருக்கார்.. (கெமிஸ்ரி கிராஜிவேட்டா..என்ன?//

  தீப்பெட்டி கம்பெனியில திருடணும்னா இதை தான் திருடனும்....! இதை திருடி அடுத்த கம்பெனியில வித்துடுவாங்க.

  //பக்கத்துல பூக்கடை, வெற்றிலை பாக்கு கடை, பெட்டிகடை போட்டு திருவிழா மாதிரி ஆக்காம விட்டீங்களே.//

  அடடா இது தோணலையே.....காலையில வீட்டுக்கு முன்னாடி ஏகப்பட்ட கூட்டம்.....நீங்க இப்ப சொன்னதை ட்ரை பண்ணி இருந்திருக்கலாம் ...!!
  :)))

  //Different stroke from you kousalya.. ! keep it up.....!//

  எழுதிட்டா போச்சு.....! நன்றி தேவா.

  ReplyDelete
 26. அருண் பிரசாத் said...

  //சூப்பர் காமெடி படம்!//

  நாங்க நொந்து போன கதை உங்களுக்கு சூப்பர் காமெடி படமா சகோ....! :))

  இப்ப நினைகிறப்ப அது ஒரு அழகான நிகழ்வு தான்....!

  நன்றி அருண்.

  ReplyDelete
 27. Balaji saravana said...

  //ஓ இது தான் வந்தாரை வரவேற்கிறது அப்படிங்கறதா? :)
  உங்க உபசரிப்ப பார்த்துட்டு மறுபடியும் அவன் வரலையா ;)//

  நாங்க அவனை மாலை போட்டு வரவேற்றோம்னு சொல்வீங்க போல.....?! :))

  உபசரிப்புலே ஏதோ குறை போல அதுதான் மறுபடி அந்த திருடன் வரலன்னு நினைக்கிறேன்...!! நீங்க ரசிச்சதுக்கு மகிழ்கிறேன் சகோ.

  ReplyDelete
 28. திருடன் பாவம். நல்லா இருக்கு திருடன் அனுபவம். கடைசியில் திருடனுக்கு நல்ல காலம் பிறந்தது கண்டு மகிழ்ந்தேன்.!!!!!haha.....

  ReplyDelete
 29. Chitra said...

  //.....Sorry, சிரிக்காமல் இருக்க முடியல....ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்கள் எழுதி இருக்கும் விதம் சூப்பருங்கோ//

  அட எதுக்கு சித்ரா இந்த சாரி....எங்களுக்கு அன்னைக்கு மட்டும் தான் டென்ஷன் அப்புறம் இப்பவரை அது ஒரு இனிய நகைசுவை நிகழ்வு....

  அன்னைக்கு எங்கள் ஒவ்வொருத்தர் முகமும் இருந்த கோலத்தை இப்ப நடிச்சி காமிக்கிறது தான் எங்க வீட்டு பசங்களின் பொழுது போக்கே.....

  ReplyDelete
 30. radhika said...

  //Really superb. Very reality and different post//

  thank u for ur first visit.

  ReplyDelete
 31. சசிகுமார் said...

  //அருமையா இருந்தது அக்கா ரசித்து படித்தேன் சிரித்து மகிழ்ந்தேன்//

  கமெண்ட் கவிதை மாதிரி இருக்கு சசி....!! :))

  ReplyDelete
 32. சுல்தான் said...

  //அட. இதுவும் நல்லாத்தான் இருக்கு//

  ரசனைக்கும் உங்களின் முதல் வருகைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. asiya omar said...

  //very interesting//

  நன்றி தோழி.

  ReplyDelete
 34. ப.செல்வக்குமார் said...

  //உண்மைலேயே நீங்க ரொம்ப நல்லவங்க .. திருடனுக்கு கூட பணம் கொடுத்து அனுப்பிருக்கீங்க .. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்//

  இவங்க அடிச்ச அடியில திருடனுக்கு சீரியஸ் ஆகலை அதுவே பெரிய விஷயம் தானே செல்வா....!!?

  ReplyDelete
 35. வெறும்பய said...

  //தலைப்பு ஏமாந்த வேளை என்று வைக்கலாமே...

  nantraaka siriththen... arumai..//

  அட எனக்கு இது தோணலையே...!?

  :)))

  ReplyDelete
 36. அம்பிகா said...

  //திருடனுக்கு நல்ல யோகம் தான்.//

  ஆமாம். போலீஸ்கிட்ட போயிட்டும் மாட்டலையே.... வருகைக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 37. ஜெயந்தி said...

  //சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்புத் திருடனா? உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு.//

  உங்களை இங்க வர வச்ச அந்த திருடனுக்கு நன்றி சொல்லணும்....! உங்களுக்கு வாழ்த்துக்கள்.. :)))

  ReplyDelete
 38. நிலாமதி said...

  //ரொம்ப நல்லா உபசரிச்சு
  இருக்கீங்க இன்னொரூ தடவைந்துடபோறான்........//

  இப்பவரை வரல....! :))

  நன்றி அக்கா

  ReplyDelete
 39. சேலம் தேவா said...

  //உங்க வீட்டு காசுல உப்ப(அதாங்க பூரிசெட்) தின்னுட்டாரு இல்ல..!! இனிமே உங்க வீட்டுக்கு மட்டும் திருட வரமாட்டாரு..!!
  உப்பிட்டவரை உள்ளளவும் நினை..!!
  அப்டின்னு அவ்வையார்(!!??)சொல்லியிருக்காங்க..!!//

  எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சகோ...!!? ஆனா மனசுக்கு நீங்க சொன்னது கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு....!! முதல் வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 40. மங்குனி அமைசர் said...

  //பேசாம இந்த விசியத்த வீட்டுக்கு முன்னாடி ஒரு போர்டு எழுதி வைங்க , திருடன் என்ன போலீஸ் காரன் கூட உள்ள வரமாட்டாங்க//

  ஆனா அரசியல்வாதிங்க நாங்க அழைக்காமலேயே வருவாங்க தெரியுமா அமைச்சரே...?! 14 வோட் ஒரே இடத்தில.....!

  ReplyDelete
 41. இம்சைஅரசன் பாபு.. said...

  //ha ........ha .........//

  சிரிச்சு இன்னும் முடியலையா....?!

  :))

  ReplyDelete
 42. அன்னு said...

  //ஆஹா அட்ரஸ் சொன்னீங்கன்னா வாரத்துக்கு ஒருத்தனை அனுப்பலாம்னு இருக்கோம்.
  இப்படிக்கு திருடன் சங்கம்//

  அப்ப உங்க சங்கத்தில ஒருத்தன் தானா வந்தது...!?

  //அந்தந்த நேரத்துக்கு உங்க ஃபீலிங் எப்படி இருந்திருக்கும்னு புரியுது...//

  நீங்கதாங்க பொறுமையா அந்த பீல் எப்படி இருந்திருக்கும்னு உட்கார்ந்து யோசிச்சு இருக்கீங்க....இதுக்கே உங்களை நான் பாராட்டனும்....

  //ஆனா கடைசில காமெடியா முடிஞ்சதுதேன் காமெடி...அதுல 200 ரூவா வேற எக்ஸ்ட்ராவா குடுத்து அனுப்பியிருக்கீங்க. ரொம்ப நல்லவங்க போலவே...???//

  அந்த சூழ்நிலை அப்படி ஆகி போச்சுங்க....! :)))

  வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 43. V.Radhakrishnan said...

  //ஹா ஹா! நிறையவே மனிதாபிமானம் உடைய குடும்பம்தான்.//

  அது தெரிஞ்சுதானோ என்னவோ திருடனும் எங்களை ஏமாத்திட்டு போய்ட்டான்....! :))))

  நன்றி சகோ.

  ReplyDelete
 44. vanathy said...

  //திருடன் பாவம். நல்லா இருக்கு திருடன் அனுபவம். கடைசியில் திருடனுக்கு நல்ல காலம் பிறந்தது கண்டு மகிழ்ந்தேன்.!!!!!haha.....//

  திருடனுக்கு நல்ல காலமா....??!! வாணி நீங்களுமா இப்படி....?! என்னவோ போங்க உங்களுக்கும் முகம் தெரியா திருடனை பிடிச்சு போச்சா??

  :))

  ReplyDelete
 45. ஹா.. ஹா.. ஹா..

  இதுவும் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 46. திருடனக் கூட இவ்வளவு நல்லா வழியனுப்பி வச்சிருக்கீங்களே..

  என்ன ஒரு நல்ல மனசு உங்க குடும்பத்துக்கு..

  ReplyDelete
 47. @கௌசல்யா

  //'இந்த திருடனை இப்ப என்ன செய்யலாம் என்று..?'//

  ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு தலைவர் ஆக்கிடலாம்.

  //ஆட்கள் ஆளுக்கு ஒரு அடிதான் கொடுத்திருக்காங்க

  லாம்ப் போஸ்டில் கட்டி வைக்கலாம்

  மழை மறுபடி சோன்னு கொட்டுது....!! //

  அடி, லாம்ப் போஸ்ட், மழை... அப்பொ அந்த திருடன் பேர் பாட்ஷா??

  ReplyDelete
 48. hey nanathan 50th....

  entha posthan kalakalana post..

  nice one////

  நீங்க ரொம்ப நல்லவங்க elam kidaiathunu therium...

  annalum nallavangathan.

  ReplyDelete
 49. பூரி சாப்பிட்ட திருடன் “நீங்க ரொம்ப நல்லவங்க” ந்னு சொல்லி, திரும்ப எப்ப வரலாம்னு கேட்காம விட்டானே. சுவையான அனுபவம்.

  வெங்கட் நாகராஜ்
  புது தில்லி.
  www.venkatnagaraj.blogspot.com

  ReplyDelete
 50. சே.குமார் said...

  //ஹா.. ஹா.. ஹா..

  இதுவும் நல்லாத்தான் இருக்கு//


  நல்லா ரசித்து இருப்பது தெரிகிறது சகோ. நன்றி

  ReplyDelete
 51. Sriakila said...

  //திருடனக் கூட இவ்வளவு நல்லா வழியனுப்பி வச்சிருக்கீங்களே..
  என்ன ஒரு நல்ல மனசு உங்க குடும்பத்துக்கு.//

  ஆனா இந்த மனசு மறுபடி அந்த திருடன் வந்தா இருக்காதுங்க அகிலா...

  :))

  ReplyDelete
 52. TERROR-PANDIYAN(VAS) said...

  //ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு தலைவர் ஆக்கிடலாம்.
  அடி, லாம்ப் போஸ்ட், மழை... அப்பொ அந்த திருடன் பேர் பாட்ஷா??//

  ஏற்கனவே நாங்கள் அந்த திருடனை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி வச்சிட்டோம்....பத்தாதுக்கு நீங்க வேற, தலைவர்...பாட்சானு சொல்லி பெருமைபடுத்துரீன்களே...சகோ......!! :))

  ReplyDelete
 53. siva said...

  //hey nanathan 50th....

  entha posthan kalakalana post..

  nice one//

  நாங்க நொந்த கதைய சொன்னா உங்களுக்கு கலக்கலான போஸ்டா....?! ம்...ம்.... வருகைக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 54. வெங்கட் நாகராஜ் said...

  //பூரி சாப்பிட்ட திருடன் “நீங்க ரொம்ப நல்லவங்க” ந்னு சொல்லி, திரும்ப எப்ப வரலாம்னு கேட்காம விட்டானே. சுவையான அனுபவம்.//

  அடுத்து வந்தா சிக்கன் பிரியாணி ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லாம போனானேனு சந்தோசபட்டுக்க வேண்டியது தான்...!! :))

  ReplyDelete
 55. நீங்க ரொம்ப நல்லவங்க போல இருக்கே..குடுத்த வச்ச திருடன்

  ReplyDelete
 56. சந்தோசத்தில பெரிய சந்தோசம் , அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்ப்பது தான் - ஒரு திருடனை சந்தோசப்படுத்தி பார்த்த உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுதான் . வாழ்த்துக்கள் ... !

  ReplyDelete
 57. //ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!) //

  வாவ்... சூப்பர் தோழி...

  "திருடன் வந்த வேளை"னு தலைப்புக்கு பதிலா "திருடனுக்கு வந்த வேளை"னு வெச்சுருக்கலாம்... ஹா ஹா ஹா... சூப்பர்ங்க கௌசல்யா

  ReplyDelete
 58. // அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு, கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார் //

  ஹி ஹி .........

  இத மொதல்லயே செஞ்சுருந்தா காவல் நிலையம் வரை சென்ற பெட்ரோல்-ஆவது மிஞ்சி இருக்குமே.......

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...