வியாழன், மார்ச் 25

கலக்கல் சிக்கன்

 கலக்கல் சிக்கன்



தேவையான பொருள்கள்:  



      சிக்கன்                                    :     1 / 2  kg .


1.    பூண்டு                                        :     2  முழு பூண்டு உரித்தது
2 .  சின்ன வெங்காயம்         :      200  kg .
3 .   இஞ்சி                                     :    ஒரு விரல் நீளம் 
4 .    பச்சைமிளகாய்                :     7   (காரம் நம் விருப்பத்திற்கு ஏற்ப) 
5 .    கொத்தமல்லி,புதினா    :    கொஞ்சம் ( தேவைபட்டால்)
6 .  மைதா மாவு                       :     1  டேபிள் ஸ்பூன்
7 .  அரிசி மாவு                          :     2  டேபிள் ஸ்பூன்
8 .   சமையல் சோடா             :     ஒரு pinch    ( அஜ்னமோட்டோ தவிருங்கள் )
9 .   முட்டை                                :     1 
10 .  உப்பு                                      :     தேவையானளவு
11 .  எண்ணெய்                          :     50 ml      



செய்முறை:
             
               1    முதல் 5   வரை உள்ளவற்றை மிக்ஸ்யில் போட்டு நைசாக  அரைக்கவும்.
அரைத்த paste இல் மைதா,  அரிசி மாவு,  சமையல் சோடா,  உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.   கடைசியாக முட்டைஐ  உடைத்து ஊற்றி  அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.  பின் வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 5, 5  துண்டுகளாய் போட்டு பொறித்து எடுக்கவும்.  


               அடுப்பை சிம்மில் வைத்தே வேகவிடவும், அப்போதுதான் கறி உள்ளயும் 
நன்கு வெந்திருக்கும்.  விருப்பபட்டால் கலருக்காக சிறிது கேசரி
பவுடரை சிக்கன் கலவையுடன் கலந்து கொண்டால் பார்க்க கலரிங்காக இருக்கும். 


SPEACIALITY:


                  இந்த சிக்கன் சுவை நன்றாக  இருப்பதுடன்,  CRISP ஆகவும்,  அதே நேரம் SOFT ஆகவும் இருப்பதால் செய்த உடனே PLATE  காலியாகிவிடும்.  


                   மேலும் இதில் வேறு மசாலா பொருள்கள் சேர்க்காததால் இயற்கையாக 
வாசனை மனதை மயக்கும்.   சின்ன வெங்காயம் சேர்ப்பதால்  சிக்கனில் இருக்கும் HEAT ஐ சமன் செய்து விடுகிறது, எண்ணையும் அதிகம் குடிப்பது இல்லை. 


செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.      



                  

கள்ளகாதல் தவறில்லை - 5

 ரகசிய சிநேகிதன்

தொடர்பு தவறாக இருந்தாலும் சில உறவுகளை  பார்த்தால் காதல் 
காவியங்கள் கூட  இவர்களிடம் தோற்றுவிடும்.   கவிதைகள் எழுதுவதும்,  PHONE   இல் மணிகணக்காக பேசுவதும், ஒருநாள் பார்க்கலைனாலும் பைத்தியம் பிடிக்கிற மாதிரியான   உணர்வுகள், நீ எனக்கு உயிர்  நீ இல்லனா எனக்கு வாழ்வே இல்லை 
என்பது மாதிரியான  விநோதங்களும் இருக்கத்தான் செய்கிறது.  

சொல்லப்போனால் முதல் காதலில் இருக்கும் தேடலும், அன்பும்,  possessiveness,       எல்லாம் அதைவிட கொஞ்சமும் 
குறையாமல் இந்த காதலிலும் சுவைமாறாமல்   இருக்கிறதா  சொல்கிறார்கள்.  

இந்த பெண்கள் தன் கணவன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பணிவிடையில் எந்த குறையும் வைப்பதில்லை.  அதே நேரம் தன் ரகசிய சிநேகிதனையும் கணவன் நிலையில் வைத்து கவனிக்க தவறுவது இல்லை.   ஒரு லாஜிக்  என்னனா வயது குறைந்த ஆணுடன் பழகும் பெண் இவர்களுக்குள் ஈகோ பிரச்னை வருவது இல்லை.  

அந்த பெண்ணின் சொல்லுக்கு அந்த ஆண் கட்டுபட்டே போகிறான், அவளுக்காக எதை செய்யவும் தயாராகவே இருக்கிறான்.   

ஒரு கட்டத்தில் தங்களது தவறை உணர்ந்தவர்கள்   அதில் இருந்து  விடுபட நினைத்துதான்  குற்ற உணர்ச்சியால் கோவில்,சாமியார் என்றும் 
படித்தவர்கள்  counselling  என்றும்   போக தொடங்குகிரார்கள்.  சிலர் விடுபட நினைத்தாலும் எதிர் பாலினம் விடுவதில்லை.  முதலில் அன்பாக முடியாது என்பார்கள்,  போக போக செத்துவிடுவேன் என்று சென்சிடிவா சொல்லி கடைசியில் கணவன் அல்லது மனைவிடம் 
சொல்லிவிடுவேன் என்று மிரட்டி அடிபணிய வைப்பார்கள்.  இப்படி இந்த உறவில் ஒரு முறை விழுந்தவர்கள் 
மறுபடி எழ முடியாமல் போய்விடுகிறது. 
Counselling 
    
கடைசியில் மனநல மருத்துவரிடமும்,  தன் நெருங்கிய நண்பர்களிடமும் 
ஆலோசனை கேட்கும் அளவிற்கு போய்விடுகிறது.  நானும்  எனக்கு
தெரிந்த இரண்டு பெண்களுக்கு  COUNSELLING  பண்ணி இருக்கிறேன்.   அவர்களின் நிலைதான் என்னை இந்த TOPIC  ஐ எழுத தூண்டியது.
ஒருவர் college  professor ,  அடுத்தவர் ஒரு AUDITOR  ரின் மனைவி   
இருவரின் விசயமும் ஓரளவிற்கு ஒன்றுதான் தங்களது கணவரின் பாராமுகதிற்கு தண்டனை தருவதாக நினைத்து ஒருவர் தன் வீட்டு கார் டிரைவருடனும் அடுத்தவர் பக்கத்துக்கு வீட்டு கல்லுரி மாணவரிடமும் இணைந்து விட்டவர்கள்.   இதில் professor க்கு கல்லூரி போகும் வயதில் இரண்டு பிள்ளைகள்.    பிள்ளைகள் இருவரும் வெளிஊரில் HOSTEL இல்,  கணவர் சொந்த தொழில் பார்ப்பதால் பாதி நாள் வெளிஊர்.   இருக்கும்போதும் மனைவியிடம்  பாராமுகம்.  இரண்டு குடும்பங்களிலும் பணத்திற்கு குறைவு இல்லை,  இருந்தும் தனிமை, வயதில் குறைந்த நபரிடம் மனதை பறிகொடுத்துவிட்டனர் .   

இந்த உறவு கிட்டத்தட்ட 5  வருடங்களுக்கு மேல் தொடர்ந்திருக்கிறது.   இப்போது மகளுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் தன் மனசாட்சி உறுத்த என்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்கள்.   "இதுவரை செய்தது பாவம், என்ன செய்வது, இதில் இருந்து எப்படி 
வெளியில் வருவது, என்னால் அவனை மறக்கவும் முடியாதே,  அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன் "  என்று கதறி அழும் 40 வயது பெண்மணி ஐ  பார்த்து எனக்கு கோபம் வரவில்லை,  மாறாக பரிதாபம் தான் வந்தது.  

இந்த அன்பை என்னவென்று சொல்வது.    இந்த அன்பிற்கு என்ன பெயர்? எனக்கு புரியவில்லை.    வெளியில் இருந்து பார்த்துவிட்டு இவர்களை குறை சொல்ல மட்டும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

கணவனிடம் வைக்கவேண்டிய அன்பு ஏன் இப்படி திசை மாறியது?  குறை யாரிடம் ?   ஆணிடமா, பெண்ணிடமா அல்லது இந்த சமூகத்திடமா?   வெளிநாட்டில் பரவாஇல்லை,  பிடிக்கவில்லை என்றால் DIVORCE ,  மறுபடி வேற கல்யாணம்,  அதுவும் பிடிக்கவில்லை என்றால் மறுபடி DIVORCE வேற கல்யாணம் இப்படி சமூககட்டுப்பாடு ஏதும் இல்லாமல் 
மனதிற்கு பிடித்தமாதிரி வாழ்கிறார்கள்.  

ஆனால் நம் நிலைமை பல பொருந்த திருமணங்கள்,  மனங்களை பார்க்காமல் வசதி வாய்ப்பு, கௌரவத்திற்காக நடக்கும் திருமணங்கள்.  தவிர    இப்ப நடக்கும் காதல் திருமணங்களின் ஆயுளே  அதிகபட்சம் ஒரு வருடம் தான்!    கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்னை,  விட்டு கொடுத்து போகாத மனப்பான்மை,  பொருளாதார நிலைமை,  பெண்களிடம்  பொறுமை இல்லாத தன்மை,  ஆண்களின் அலட்சியம் இந்த மாதிரி காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

கூட்டு குடும்பம் என்ற ஒன்றே இப்போது இல்லை,  இந்த குடும்பங்களில் பெரியவர்கள் எப்போதும் உடன் இருப்பதால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.   ஆனால் இப்போதுதான் திருமணம் முடிந்ததும் கல்யாண மண்டபத்தில் இருந்தே நேராக தனிக்குடித்தனம் போய்விடுகிறார்களே!  

சூழ்நிலை கைதி  

முக்கியமா தவறு செய்ய சூழ்நிலை அமையாதவரை  எல்லோருமே யோக்கியர்கள் தான்.  சூழ்நிலை அமைந்தும் தவறு செய்யாதவன் ஒன்று கடவுளுக்கு பயந்தவர்களாக இருக்கணும் அல்லது கோழையாக இருக்கணும்.  இதுதான் இன்றைய நிலைமை.  ஒருவகையில் நாம் எல்லோருமே சூழ்நிலை கைதிகள்தான்.   

மாட்டிகொள்ளாதவரை கணவன் நல்ல கணவன்தான்,   மனைவி நல்ல மனைவிதான்.    இதுதான் நிதர்சனமான உண்மை. 

மறுபடி தலைப்புக்கு வருகிறேன்.   இந்த உறவை தவறாக பார்க்காதீர்கள்.
அவர்கள் மேல் பரிதாபபடுங்கள்,  ஒருவகையில் அவர்கள் மனநோயின் பிடியில் முற்றிய நிலையில் இருக்கிறார்கள்.  நோயை குணபடுத்த பார்க்கணுமே ஒழிய மேலும் குத்தி கிழிக்க பார்க்ககூடாது,  அவர்கள் மன்னிக்கபட வேண்டியவர்கள்,  மன்னிப்பும் ஒருவிதத்தில் அவர்களுக்கு தண்டனைதான்.   அந்த மன்னிப்பு அவர்களை மறுபடி தவறு செய்ய தூண்டாது.    இதை  என்னுடைய  வேண்டுகோளாக எடுத்துகொள்ளுங்கள்.
                                  
                               கடைசி பகுதி அடுத்த பதிவில்!    காத்திருங்கள் !!  
      

       
         

செவ்வாய், மார்ச் 23

கவிதைகள் 4

     " என்னை பற்ற வைப்பது எளிது !
       தீக்குச்சி தேவையில்லை,
       உன்னுடைய  முடியாது என்ற
       ஒரு  வார்த்தை போதும்!   இப்போதும்
       எரிந்து கொண்டு தான் இருக்கிறேன்,
        நீ முடியாது என்று சொன்னதால்! 
       
        உன்னிடம் மன்றாடி கெஞ்சினேன்,  நீ
        மறுத்ததை மறக்க முடியவில்லை.
        கனவிலும் என் கன்னத்தில் தைத்தன, 
        முட்களாய் உன் முத்தங்கள்! " 


     "  நாம் ஒன்று சேரவில்லை, 
        நம் காதலும் ஒன்று சேரவில்லை.
        சேரும் என்ற நம்பிக்கை போனதால் 
         பிரிவோம் என்று நம்புகிறேன். 
         அதாவது  சரியாக நிறைவேறட்டும்
         பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்
        அதை அனுபவிக்க ஆசையாக இருக்கிறது "


      "  பிறந்த குழந்தைக்கு தெரியாது
         தான் பிறந்திருப்பது!  இறந்த
         மனிதனுக்கு தெரியாது
         தான் இறந்திருப்பது!  அப்படித்தான்
         எனக்கும் தெரியாது
          உன்னை பிரிந்திருப்பது! "   


       "  என் நினைவுகளை  உன் தோட்டத்தில்  
          செடிகளோடு சேர்த்தே புதைத்து விடு,
          பூக்களில் என் வாசமும் இருக்கும்!
          இரவுகளில் வரும் உன் கனவுகளில்
          நான் உன்னோடு பேசலாம், 
          வீசும் காற்றில் என் சுவாசமும்
          கலந்து இருக்கலாம்!   கேட்கும்
          பாடலில் என் நினைவு வரலாம்
          இப்படி நாம் பிரிந்து இருந்தாலும்
          சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து
           கொண்டுதான் இருக்கும், 
           உன்னையும் என்னையும் இணைத்து.....!


        "  இன்றும் நான் உன்னை தேடுகிறேன்! 
                   நீ இங்கே  இல்லை,
           நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
                  இனிய முத்தங்கள் மட்டுமே இருக்கின்றன! "


          "   வாழ பிறந்த என்னை
                     வாட பிறந்தவளாக்கி விட்டாய்!  "


        

திங்கள், மார்ச் 22

கஷ்டப்பட்டு அல்ல இஷ்டப்பட்டு

வாழவிடுங்கள் குழந்தையாய்:



இப்ப உள்ள குழந்தைகள் அதிக விவரமாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.   ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகளை நாம்தான் புரிந்து கொள்ளாமல் படி படி என்று துன்புறுத்தி கொண்டிருக்கிறோம்.  



நம்முடைய நிறைவேறா ஆசைகளையும், கனவுகளையும் அவர்கள்மேல் திணித்து நிறைவேற்ற  சொல்லி வற்புறுத்திட்டு இருக்கிறோம்.   அவர்களை பெற்றதால் மட்டுமே நமக்கு  எல்லாம் தெரியும் என்றும் பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சொல்ல முடியாது.   அவங்க வயசுக்கு என்ன தெரியனுமோ அது கண்டிப்பா தெரிந்துதான் இருக்கும்.   இப்போது எல்லாம் 10  வயசுலேயே அவர்களின் வாழ்க்கையை  தீர்மானிக்க கூடிய 
பக்குவத்திற்கு வந்து விடுகிறார்கள்.  தவிரவும் பெண் பிள்ளைகள்
10 , 11 வயதில் பருவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.  



சொன்னதும் புரியகூடிய அளவில் இருக்கும் பிள்ளைகளை  எப்படி படிப்பது, படிப்பின்மேல் ஆர்வத்தை எப்படி கொண்டு வருவது  என்பதை மட்டும் முறைப்படி சொல்லி கொடுங்கள் போதும். அதை விடுத்து ஓயாமல் படி படி என்று சொல்லும்போது அந்த படிப்பே
கசப்பாக மாறிவிடுகிறது.  படிப்பை விருப்பபட்டு அதாவது இஷ்டப்பட்டு படிக்கணும் கஷ்டப்பட்டு அல்ல.     இதை அவர்களுக்கு புரிய வைத்தால் போதும்.      ஈடுபாடு தன்னால் வந்துவிடும்.        



படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை.  அது ஒரு பகுதி அவ்வளவுதான்.  மற்றபடி அவர்களை ஒழுக்கம் , கடவுள் பக்தி, பெரியவர்களிடம் மரியாதை,  விருந்தோம்பல்,  நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்ப்பதுதான் முக்கியம்.  இவை எல்லாம் சரியாக இருந்தால் படிப்பு தானாக வந்துவிட போகிறது.  



நன்றாக விளையாடவிடுங்கள்.  வீட்டின் சூழ்நிலை இன்பமானதாக 
இருக்குமாறு  பார்த்து கொள்ளுங்கள்.  அவர்களின் முன் பெற்றோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் இருந்தாலே போதும்.  அவர்கள் உங்களை மதிப்பார்கள், உங்கள் பேச்சிற்க்கும் மதிப்பு கொடுப்பார்கள். 



உங்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற உறுதி ஏற்படுமாறு 
நீங்கள் உதாரணமாக இருங்கள்.  



எல்லாவற்றையும் விட நம் குழந்தைகள் தானே சந்தோசமா இருந்துவிட்டு போகட்டுமே.  சந்தோசத்தை அனுபவிக்கட்டும்,   ஆம் நாம் அனுபவிக்காத,  நமக்கு கிடைக்காத இன்பத்தை அவர்களுக்கு வாரி வழங்குவோம்.  அதை பல மடங்காய் திருப்பி நமக்கு தருவார்கள், எதிர்காலத்தில்!   நம்புங்கள் நலம் பெறுவோம்.    
 

கள்ளக்காதல் தவறில்லை - 4

எதிர் பாலினம்:


திருமணம் தாண்டிய உறவுகளின் ஆரம்ப காலம் நட்பாக இருக்கும். ஆனால் நட்பு மட்டும் போதும் என்ற அளவில் இருந்தாலும் எதிர்பாலினத்தின் தேவை உடலை தேடுவதாக இருக்கும்போது அங்கே  உறவு தவறாக போய்விடுகிறது.  இதற்கு மறுத்தால் தன்னுடன் பேசுவதை எங்கே நிறுத்தி விடுவானோ என்ற ஐயத்தால் 'மண் தின்கிற உடம்பு தானே அவன் தின்றால் என்ன' என்று தனக்குள் சமாதானம் செய்து கொள்கிறாள். பின்னர் ஒரு கட்டத்தில் சமூகத்திற்கும், கணவனுக்கும் பயந்து விட்டுவிட நினைத்தாலும் வெளிவர முடியாமல் தவித்து பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறாள். இந்த  கட்டத்தில் தான் விஷயம் வெளிவரத்  தொடங்கும்,  முடிவு அவமானம், அசிங்கம், கொலை, தற்கொலை என்று முடிகிறது.

ஒரு பெண்ணால் தான் நினைப்பது எதையும் சாதிக்கமுடியும். அவளுக்கு வேண்டியது எல்லாம் சின்ன அங்கீகாரம், கொஞ்சம் அன்பு, கணவனின் ஆதரவு மட்டும்தான்.  ஆனால் இந்த ஆண்களின்  சமுதாயம் இதைப் பற்றி எல்லாம் எங்கே யோசிக்கிறது.  அதற்கு வேண்டியது 5 நிமிட சந்தோசம் கொடுக்க மனைவி போதும், ஆனால் அவளது விருப்பம் அத்துடன் முடியாது என்பதை ஆண்கள் உணருவதே இல்லை.  அதனால் தான் அவளுக்கு  ஒரு வடிகால் தேவைப்படுகிறது, தவறுகிறாள்.

இலைமறை காய்மறையாக:


இத்தகைய  தவறான உறவுகள்  பல குடும்பங்களில் நடந்துக்  கொண்டு தான் இருக்கின்றன.  ஆனால் வெளியில் தெரிவது இல்லை.  கிராமங்களில் யார் யாருடன் பேசுகிறார்கள் என்று தெளிவாக சொல்லிவிடலாம் என்பதால் அங்கே  நடப்பவை  குறுகிய காலத்திற்குள் தெரிந்துவிடும்.   ஆனால் நகரத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். 

தற்போது கூட்டுக்குடும்ப முறைகள் இல்லாததால் பெரியவர்கள் வழி நடத்துதல் இல்லாமல் தவறுகள் சுலபமாக நடக்கின்றன.  

இனி வருங்காலத்தில் இது அதிகரிக்குமே தவிர குறையாது.   
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருப்பது ஊருக்கே தெரியும்,  ஆனால் அந்த வீட்டிலும் ஒரு ரகசிய உறவு இருக்கத்தான் செய்கிறது.  இது உண்மையில் சத்தியமானதும் அதிர்ச்சியான விஷயம்தான்.   இருவருக்கும் இடையில் எந்த நிமிடம் 3  வது ஆள் வந்தான்,  ஏன், எப்படி என்று எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை...!                          

தொடரும்...



ஞாயிறு, மார்ச் 21

கள்ளகாதல் தவறில்லை - 3

  பெண்களின் இன்றைய நிலை:

இப்போது பெண்கள் குடும்பத்தில் சந்தோசமாக  வாழ்கிறார்கள் என்று தோணவில்லை. ஏதோ சந்தோசமாக  இருக்கிறமாதிரி நடிச்சிட்டு இருக்கிறாங்க என்றுதான் சொல்வேன்.  பலரின்  மனதிலும் ஏதோ வெறுமை இருக்கத்தான் செய்கிறது.  நான் சந்தித்த, பழகிய,    நெருங்கிய 
தோழிகள் என்று பலரிடம்  இருந்து தொகுத்த விசயங்களைத்தான் இங்கு எழுதுகிறேன்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் அதில் நிறைவாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் நிஜம்.    கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் தான் சுய விருப்பங்களை ஓரம் கட்டி விட்டு மற்றவர்களுக்காக வாழவேண்டிய நிர்பந்தம்.   காலம் செல்ல செல்ல அவர்களுக்கு ஏற்றார் போல் முரண்பாடாக இருந்தாலும் தனது சிந்தனையையும்  மாற்றிக் கொண்டு adjust செய்து கொள்கிறாள். பிறகு குழந்தை பிறந்ததும் அதற்கு ஏற்ப  மாறிவிடுகிறாள்.  இப்படி முதல் 10 , 12  வருடத்திற்கு தான் சுயத்தை தொலைத்துவிட்டு  அல்லது மறந்துவிட்டு குடும்பத்திற்காக பாடுபடுகிறாள்.     

இவளுடைய அன்பையும், ஆதரவையும் பிறர் எதிர்பார்க்கும் அதே நேரம் இவளும் சக மனுசிதானே என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள்.
முக்கியமாக கணவனின் புறகணிப்புதான் மிகவும் பரிதாபம்.

இந்த மாதிரி நிலையில்தான் அன்னியர் நுழையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது கணவனின் நண்பராகவோ, பக்கத்துக்கு வீட்டினராகவோ, கூட வேலை பார்பவராகவும்,  பஸ், ரயிலில் சந்திப்பவராகவும் 
எப்படியாவது இருக்கலாம்.  வசதியான  வீட்டு பெண்களின் நிலை பாவம்,  காரணம் கணவர் பணம், பணம் என்று தொழிலின் பின் ஓடுபவராக வீட்டில்    தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்பதையும் மறக்கும் நிலைக்கே போய்விடுகிறார்.  

இந்த மாதிரி பெண்கள் சில சின்ன சின்ன விசயங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மனசுக்காக தவிக்கிறார்கள்.  இவளுக்கு தேவை 
எல்லாம் தன்னையும் ஒரு ஜீவனாக மதித்து பேசக்கூடிய 
ஒரு துணையைத்தான்.  மனபாரத்தை கொட்டியதும்,  பதிலுக்கு
அன்பும் ஆதரவும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்,  பலநாள் 
இழந்த இன்பம் கிடைத்ததாக எண்ணி மனம்   உற்சாகமாக மாறிவிடுகிறது.   விளைவு  தன்  மன இறுக்கம் குறைய  குறைய தன்னை பற்றி 
யோசிக்கத் தொடங்குகிறாள். பருவ வயதில் தனக்குள் வந்து மறைந்து போன 
காதல் உணர்வுகள் மறுபடி உணர்வு பெற்றதாக ஆனந்தப்
 படுகிறாள்.    தனக்குள் மாற்றத்தை கொண்டுவந்த ஆடவனுக்கு 
தன்னையே கொடுக்க முன்வந்துவிடுகிறாள். இது ஒரு வகை என்றால்,

சிலர் பேசுவதுடன்  நிறுத்திவிடுவார்கள்.  ஆனால் எதிர் பாலின் தேடல் வேறுவிதமாக இருக்கும்.

   

வெள்ளி, மார்ச் 19

கள்ளகாதல் தவறில்லை - 2

          இந்த தலைப்பு இப்ப ரொம்ப முக்கியமானு நினைக்ககூடாது.    தொடர்ந்து படித்து பாருங்க  இந்த கால சூழ்நிலைக்கு இதை விவாதிப்பது சரிதான் என்று தோன்றும்.

அந்த காலம் தொட்டே:

            மாற்றான் மனையின் மீது மோஹம் என்பது எந்த காலத்தில் தான் இல்லை.  ஏன் கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை இந்திரன் மீது மோகம் கொள்ளவில்லையா?  அதையும்  எழுத்தாளர்களும் ,  கவிஞர்களும்  ஆளுக்கு ஆள் கற்பனை செய்து இன்றுவரை எழுதி கொண்டிருக்க வில்லையா ?  தவறு அகலிகை மீது மட்டும் இல்லை, அது ஒரு பொருந்தா திருமணம்.       சிறு வயது முதல் இந்திரனிடம் பழகி வந்தவள்  ,  பொருந்தா மணத்தால்  அவளது மனம் அவனை நாடியதில் தவறு என்ன?   பொருந்தா மணம் இப்படிப்பட்ட உறவுகளில் கொண்டுவந்து விட்டு விடும்.    

பத்தினி என்றால் என்ன?

காவியகதை  இப்ப  நமக்கு தேவையில்லை , நடைமுறைக்கு வருகிறேன்.  இந்த மாதிரி விசயத்தில்  ஏதோ பெண்ணே காரணம் என்கிறமாதிரி அந்த ஆணை பற்றியே விட்டுவிடுகிறார்கள் .  பெண்ணை பற்றி மட்டும் 2 குழந்தைக்கு  அம்மா ,  வயது 40 க்கு மேல  இந்த வயதில இப்படி 
இருக்கிறாளே என்று கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம் , இதில் 
வருத்தம் என்னவென்றால்  அந்த பெண்ணை அதிகமா  திட்டுவது  
பெண்கள்தான், அந்த பெண் மட்டும் தான் மோசம் என்ற மாதிரியும்  நாம எல்லோரும் பத்தினி பரம்பரை என்கிறமாதிரி பேசுவார்கள்.      

 என்னை கேட்டால் பத்தினி என்ற வார்த்தை இப்ப உள்ள பெண்களுக்கு
பொருந்துமா என்பதே சந்தேகம்தான்.   அடுத்த ஆண்களை ஏறிட்டு பார்க்காத,  பேசாத ,  வேற ஆண்ணையே மனதாலும் நினைக்காத பெண்கள் யாரும் இப்ப இருப்பார்களா  என்று எனக்கு தோணவில்லை.    காரணம் இப்ப நாம இருக்கிற சூழ்நிலை.   பெண்கள் வெளியில் வேலைக்கு போகிறார்கள், பலருடன் பேசியே ஆகவேண்டிய சூழல்   ,  இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி  என்னும் சாதனம்.  நாம் வாங்கவில்லை என்றாலும் அரசாங்கமே பார்த்து சந்தோசமா வாழ்க்கைய அனுபவியுங்க என்று கூப்பிட்டு கொடுக்கிறது.   அதை பார்க்கிற பாட்டி கூட  என்னமா நல்லா இருக்கிறான், எப்படி பேசறான் என்று நினைக்கமலா இருப்பாங்க?    என் பாட்டியே அந்த காலத்தில இருந்த பாகவதர்போல வருமானு சிலாகித்து சொல்றத கேட்டிருக்கிறேன்.

 இலக்கியம் தான் சொல்லி இருக்கே,  அடுத்த ஆணை மனதிற்குள் ஒரு கணம் நினைத்தாலே போதும், பெண் அவனுடன் மனத்தால் வாழ்ந்து விடுகிறாள் என்று.   பின் எப்படி பத்தினி என்று சொல்லமுடியும்.   வேண்டும் என்றால் பத்தினி என்ற வார்த்தைக்கு வேறு ஏதாவது நல்ல அர்த்தம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள், நானும் எனது எண்ணத்தை மாற்றி கொள்கிறேன்.
                                                                          தொடரும்..........