ஞாயிறு, மார்ச் 21

11:52 PM

  பெண்களின் இன்றைய நிலை:

இப்போது பெண்கள் குடும்பத்தில் சந்தோசமாக  வாழ்கிறார்கள் என்று தோணவில்லை. ஏதோ சந்தோசமாக  இருக்கிறமாதிரி நடிச்சிட்டு இருக்கிறாங்க என்றுதான் சொல்வேன்.  பலரின்  மனதிலும் ஏதோ வெறுமை இருக்கத்தான் செய்கிறது.  நான் சந்தித்த, பழகிய,    நெருங்கிய 
தோழிகள் என்று பலரிடம்  இருந்து தொகுத்த விசயங்களைத்தான் இங்கு எழுதுகிறேன்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் அதில் நிறைவாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் நிஜம்.    கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் தான் சுய விருப்பங்களை ஓரம் கட்டி விட்டு மற்றவர்களுக்காக வாழவேண்டிய நிர்பந்தம்.   காலம் செல்ல செல்ல அவர்களுக்கு ஏற்றார் போல் முரண்பாடாக இருந்தாலும் தனது சிந்தனையையும்  மாற்றிக் கொண்டு adjust செய்து கொள்கிறாள். பிறகு குழந்தை பிறந்ததும் அதற்கு ஏற்ப  மாறிவிடுகிறாள்.  இப்படி முதல் 10 , 12  வருடத்திற்கு தான் சுயத்தை தொலைத்துவிட்டு  அல்லது மறந்துவிட்டு குடும்பத்திற்காக பாடுபடுகிறாள்.     

இவளுடைய அன்பையும், ஆதரவையும் பிறர் எதிர்பார்க்கும் அதே நேரம் இவளும் சக மனுசிதானே என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள்.
முக்கியமாக கணவனின் புறகணிப்புதான் மிகவும் பரிதாபம்.

இந்த மாதிரி நிலையில்தான் அன்னியர் நுழையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது கணவனின் நண்பராகவோ, பக்கத்துக்கு வீட்டினராகவோ, கூட வேலை பார்பவராகவும்,  பஸ், ரயிலில் சந்திப்பவராகவும் 
எப்படியாவது இருக்கலாம்.  வசதியான  வீட்டு பெண்களின் நிலை பாவம்,  காரணம் கணவர் பணம், பணம் என்று தொழிலின் பின் ஓடுபவராக வீட்டில்    தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்பதையும் மறக்கும் நிலைக்கே போய்விடுகிறார்.  

இந்த மாதிரி பெண்கள் சில சின்ன சின்ன விசயங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மனசுக்காக தவிக்கிறார்கள்.  இவளுக்கு தேவை 
எல்லாம் தன்னையும் ஒரு ஜீவனாக மதித்து பேசக்கூடிய 
ஒரு துணையைத்தான்.  மனபாரத்தை கொட்டியதும்,  பதிலுக்கு
அன்பும் ஆதரவும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்,  பலநாள் 
இழந்த இன்பம் கிடைத்ததாக எண்ணி மனம்   உற்சாகமாக மாறிவிடுகிறது.   விளைவு  தன்  மன இறுக்கம் குறைய  குறைய தன்னை பற்றி 
யோசிக்கத் தொடங்குகிறாள். பருவ வயதில் தனக்குள் வந்து மறைந்து போன 
காதல் உணர்வுகள் மறுபடி உணர்வு பெற்றதாக ஆனந்தப்
 படுகிறாள்.    தனக்குள் மாற்றத்தை கொண்டுவந்த ஆடவனுக்கு 
தன்னையே கொடுக்க முன்வந்துவிடுகிறாள். இது ஒரு வகை என்றால்,

சிலர் பேசுவதுடன்  நிறுத்திவிடுவார்கள்.  ஆனால் எதிர் பாலின் தேடல் வேறுவிதமாக இருக்கும்.

   
Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...