வாழவிடுங்கள் குழந்தையாய்:
இப்ப உள்ள குழந்தைகள் அதிக விவரமாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகளை நாம்தான் புரிந்து கொள்ளாமல் படி படி என்று துன்புறுத்தி கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நிறைவேறா ஆசைகளையும், கனவுகளையும் அவர்கள்மேல் திணித்து நிறைவேற்ற சொல்லி வற்புறுத்திட்டு இருக்கிறோம். அவர்களை பெற்றதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என்றும் பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சொல்ல முடியாது. அவங்க வயசுக்கு என்ன தெரியனுமோ அது கண்டிப்பா தெரிந்துதான் இருக்கும். இப்போது எல்லாம் 10 வயசுலேயே அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய
பக்குவத்திற்கு வந்து விடுகிறார்கள். தவிரவும் பெண் பிள்ளைகள்
10 , 11 வயதில் பருவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
பக்குவத்திற்கு வந்து விடுகிறார்கள். தவிரவும் பெண் பிள்ளைகள்
10 , 11 வயதில் பருவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
சொன்னதும் புரியகூடிய அளவில் இருக்கும் பிள்ளைகளை எப்படி படிப்பது, படிப்பின்மேல் ஆர்வத்தை எப்படி கொண்டு வருவது என்பதை மட்டும் முறைப்படி சொல்லி கொடுங்கள் போதும். அதை விடுத்து ஓயாமல் படி படி என்று சொல்லும்போது அந்த படிப்பே
கசப்பாக மாறிவிடுகிறது. படிப்பை விருப்பபட்டு அதாவது இஷ்டப்பட்டு படிக்கணும் கஷ்டப்பட்டு அல்ல. இதை அவர்களுக்கு புரிய வைத்தால் போதும். ஈடுபாடு தன்னால் வந்துவிடும்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு பகுதி அவ்வளவுதான். மற்றபடி அவர்களை ஒழுக்கம் , கடவுள் பக்தி, பெரியவர்களிடம் மரியாதை, விருந்தோம்பல், நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்ப்பதுதான் முக்கியம். இவை எல்லாம் சரியாக இருந்தால் படிப்பு தானாக வந்துவிட போகிறது.
நன்றாக விளையாடவிடுங்கள். வீட்டின் சூழ்நிலை இன்பமானதாக
இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அவர்களின் முன் பெற்றோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் இருந்தாலே போதும். அவர்கள் உங்களை மதிப்பார்கள், உங்கள் பேச்சிற்க்கும் மதிப்பு கொடுப்பார்கள்.
உங்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற உறுதி ஏற்படுமாறு
நீங்கள் உதாரணமாக இருங்கள்.
நீங்கள் உதாரணமாக இருங்கள்.
எல்லாவற்றையும் விட நம் குழந்தைகள் தானே சந்தோசமா இருந்துவிட்டு போகட்டுமே. சந்தோசத்தை அனுபவிக்கட்டும், ஆம் நாம் அனுபவிக்காத, நமக்கு கிடைக்காத இன்பத்தை அவர்களுக்கு வாரி வழங்குவோம். அதை பல மடங்காய் திருப்பி நமக்கு தருவார்கள், எதிர்காலத்தில்! நம்புங்கள் நலம் பெறுவோம்.
உண்மை
பதிலளிநீக்குthank you friend
பதிலளிநீக்கு