வியாழன், மார்ச் 25

PM 12:23
4

 ரகசிய சிநேகிதன்

தொடர்பு தவறாக இருந்தாலும் சில உறவுகளை  பார்த்தால் காதல் 
காவியங்கள் கூட  இவர்களிடம் தோற்றுவிடும்.   கவிதைகள் எழுதுவதும்,  PHONE   இல் மணிகணக்காக பேசுவதும், ஒருநாள் பார்க்கலைனாலும் பைத்தியம் பிடிக்கிற மாதிரியான   உணர்வுகள், நீ எனக்கு உயிர்  நீ இல்லனா எனக்கு வாழ்வே இல்லை 
என்பது மாதிரியான  விநோதங்களும் இருக்கத்தான் செய்கிறது.  

சொல்லப்போனால் முதல் காதலில் இருக்கும் தேடலும், அன்பும்,  possessiveness,       எல்லாம் அதைவிட கொஞ்சமும் 
குறையாமல் இந்த காதலிலும் சுவைமாறாமல்   இருக்கிறதா  சொல்கிறார்கள்.  

இந்த பெண்கள் தன் கணவன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பணிவிடையில் எந்த குறையும் வைப்பதில்லை.  அதே நேரம் தன் ரகசிய சிநேகிதனையும் கணவன் நிலையில் வைத்து கவனிக்க தவறுவது இல்லை.   ஒரு லாஜிக்  என்னனா வயது குறைந்த ஆணுடன் பழகும் பெண் இவர்களுக்குள் ஈகோ பிரச்னை வருவது இல்லை.  

அந்த பெண்ணின் சொல்லுக்கு அந்த ஆண் கட்டுபட்டே போகிறான், அவளுக்காக எதை செய்யவும் தயாராகவே இருக்கிறான்.   

ஒரு கட்டத்தில் தங்களது தவறை உணர்ந்தவர்கள்   அதில் இருந்து  விடுபட நினைத்துதான்  குற்ற உணர்ச்சியால் கோவில்,சாமியார் என்றும் 
படித்தவர்கள்  counselling  என்றும்   போக தொடங்குகிரார்கள்.  சிலர் விடுபட நினைத்தாலும் எதிர் பாலினம் விடுவதில்லை.  முதலில் அன்பாக முடியாது என்பார்கள்,  போக போக செத்துவிடுவேன் என்று சென்சிடிவா சொல்லி கடைசியில் கணவன் அல்லது மனைவிடம் 
சொல்லிவிடுவேன் என்று மிரட்டி அடிபணிய வைப்பார்கள்.  இப்படி இந்த உறவில் ஒரு முறை விழுந்தவர்கள் 
மறுபடி எழ முடியாமல் போய்விடுகிறது. 
Counselling 
    
கடைசியில் மனநல மருத்துவரிடமும்,  தன் நெருங்கிய நண்பர்களிடமும் 
ஆலோசனை கேட்கும் அளவிற்கு போய்விடுகிறது.  நானும்  எனக்கு
தெரிந்த இரண்டு பெண்களுக்கு  COUNSELLING  பண்ணி இருக்கிறேன்.   அவர்களின் நிலைதான் என்னை இந்த TOPIC  ஐ எழுத தூண்டியது.
ஒருவர் college  professor ,  அடுத்தவர் ஒரு AUDITOR  ரின் மனைவி   
இருவரின் விசயமும் ஓரளவிற்கு ஒன்றுதான் தங்களது கணவரின் பாராமுகதிற்கு தண்டனை தருவதாக நினைத்து ஒருவர் தன் வீட்டு கார் டிரைவருடனும் அடுத்தவர் பக்கத்துக்கு வீட்டு கல்லுரி மாணவரிடமும் இணைந்து விட்டவர்கள்.   இதில் professor க்கு கல்லூரி போகும் வயதில் இரண்டு பிள்ளைகள்.    பிள்ளைகள் இருவரும் வெளிஊரில் HOSTEL இல்,  கணவர் சொந்த தொழில் பார்ப்பதால் பாதி நாள் வெளிஊர்.   இருக்கும்போதும் மனைவியிடம்  பாராமுகம்.  இரண்டு குடும்பங்களிலும் பணத்திற்கு குறைவு இல்லை,  இருந்தும் தனிமை, வயதில் குறைந்த நபரிடம் மனதை பறிகொடுத்துவிட்டனர் .   

இந்த உறவு கிட்டத்தட்ட 5  வருடங்களுக்கு மேல் தொடர்ந்திருக்கிறது.   இப்போது மகளுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் தன் மனசாட்சி உறுத்த என்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்கள்.   "இதுவரை செய்தது பாவம், என்ன செய்வது, இதில் இருந்து எப்படி 
வெளியில் வருவது, என்னால் அவனை மறக்கவும் முடியாதே,  அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன் "  என்று கதறி அழும் 40 வயது பெண்மணி ஐ  பார்த்து எனக்கு கோபம் வரவில்லை,  மாறாக பரிதாபம் தான் வந்தது.  

இந்த அன்பை என்னவென்று சொல்வது.    இந்த அன்பிற்கு என்ன பெயர்? எனக்கு புரியவில்லை.    வெளியில் இருந்து பார்த்துவிட்டு இவர்களை குறை சொல்ல மட்டும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

கணவனிடம் வைக்கவேண்டிய அன்பு ஏன் இப்படி திசை மாறியது?  குறை யாரிடம் ?   ஆணிடமா, பெண்ணிடமா அல்லது இந்த சமூகத்திடமா?   வெளிநாட்டில் பரவாஇல்லை,  பிடிக்கவில்லை என்றால் DIVORCE ,  மறுபடி வேற கல்யாணம்,  அதுவும் பிடிக்கவில்லை என்றால் மறுபடி DIVORCE வேற கல்யாணம் இப்படி சமூககட்டுப்பாடு ஏதும் இல்லாமல் 
மனதிற்கு பிடித்தமாதிரி வாழ்கிறார்கள்.  

ஆனால் நம் நிலைமை பல பொருந்த திருமணங்கள்,  மனங்களை பார்க்காமல் வசதி வாய்ப்பு, கௌரவத்திற்காக நடக்கும் திருமணங்கள்.  தவிர    இப்ப நடக்கும் காதல் திருமணங்களின் ஆயுளே  அதிகபட்சம் ஒரு வருடம் தான்!    கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்னை,  விட்டு கொடுத்து போகாத மனப்பான்மை,  பொருளாதார நிலைமை,  பெண்களிடம்  பொறுமை இல்லாத தன்மை,  ஆண்களின் அலட்சியம் இந்த மாதிரி காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

கூட்டு குடும்பம் என்ற ஒன்றே இப்போது இல்லை,  இந்த குடும்பங்களில் பெரியவர்கள் எப்போதும் உடன் இருப்பதால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.   ஆனால் இப்போதுதான் திருமணம் முடிந்ததும் கல்யாண மண்டபத்தில் இருந்தே நேராக தனிக்குடித்தனம் போய்விடுகிறார்களே!  

சூழ்நிலை கைதி  

முக்கியமா தவறு செய்ய சூழ்நிலை அமையாதவரை  எல்லோருமே யோக்கியர்கள் தான்.  சூழ்நிலை அமைந்தும் தவறு செய்யாதவன் ஒன்று கடவுளுக்கு பயந்தவர்களாக இருக்கணும் அல்லது கோழையாக இருக்கணும்.  இதுதான் இன்றைய நிலைமை.  ஒருவகையில் நாம் எல்லோருமே சூழ்நிலை கைதிகள்தான்.   

மாட்டிகொள்ளாதவரை கணவன் நல்ல கணவன்தான்,   மனைவி நல்ல மனைவிதான்.    இதுதான் நிதர்சனமான உண்மை. 

மறுபடி தலைப்புக்கு வருகிறேன்.   இந்த உறவை தவறாக பார்க்காதீர்கள்.
அவர்கள் மேல் பரிதாபபடுங்கள்,  ஒருவகையில் அவர்கள் மனநோயின் பிடியில் முற்றிய நிலையில் இருக்கிறார்கள்.  நோயை குணபடுத்த பார்க்கணுமே ஒழிய மேலும் குத்தி கிழிக்க பார்க்ககூடாது,  அவர்கள் மன்னிக்கபட வேண்டியவர்கள்,  மன்னிப்பும் ஒருவிதத்தில் அவர்களுக்கு தண்டனைதான்.   அந்த மன்னிப்பு அவர்களை மறுபடி தவறு செய்ய தூண்டாது.    இதை  என்னுடைய  வேண்டுகோளாக எடுத்துகொள்ளுங்கள்.
                                  
                               கடைசி பகுதி அடுத்த பதிவில்!    காத்திருங்கள் !!  
      

       
         
Tweet

4 கருத்துகள்:

 1. என் மனதை தொட்ட பதிவு. அப்படியே என் கதை. நன்றி
  - divya

  பதிலளிநீக்கு
 2. என் மனதை தொட்ட பதிவு. அப்படியே என் கதை. நன்றி
  - divya

  பதிலளிநீக்கு
 3. முக்கியமா தவறு செய்ய சூழ்நிலை அமையாதவரை எல்லோருமே யோக்கியர்கள் தான். சூழ்நிலை அமைந்தும் தவறு செய்யாதவன் ஒன்று கடவுளுக்கு பயந்தவர்களாக இருக்கணும் அல்லது கோழையாக இருக்கணும்.

  - இது மிகவும் உண்மையான விஷயம் மற்றும் சிந்திக்க வேண்டிய ஓன்று. . .

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...