செவ்வாய், மார்ச் 23

1:05 PM
2

     " என்னை பற்ற வைப்பது எளிது !
       தீக்குச்சி தேவையில்லை,
       உன்னுடைய  முடியாது என்ற
       ஒரு  வார்த்தை போதும்!   இப்போதும்
       எரிந்து கொண்டு தான் இருக்கிறேன்,
        நீ முடியாது என்று சொன்னதால்! 
       
        உன்னிடம் மன்றாடி கெஞ்சினேன்,  நீ
        மறுத்ததை மறக்க முடியவில்லை.
        கனவிலும் என் கன்னத்தில் தைத்தன, 
        முட்களாய் உன் முத்தங்கள்! " 


     "  நாம் ஒன்று சேரவில்லை, 
        நம் காதலும் ஒன்று சேரவில்லை.
        சேரும் என்ற நம்பிக்கை போனதால் 
         பிரிவோம் என்று நம்புகிறேன். 
         அதாவது  சரியாக நிறைவேறட்டும்
         பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்
        அதை அனுபவிக்க ஆசையாக இருக்கிறது "


      "  பிறந்த குழந்தைக்கு தெரியாது
         தான் பிறந்திருப்பது!  இறந்த
         மனிதனுக்கு தெரியாது
         தான் இறந்திருப்பது!  அப்படித்தான்
         எனக்கும் தெரியாது
          உன்னை பிரிந்திருப்பது! "   


       "  என் நினைவுகளை  உன் தோட்டத்தில்  
          செடிகளோடு சேர்த்தே புதைத்து விடு,
          பூக்களில் என் வாசமும் இருக்கும்!
          இரவுகளில் வரும் உன் கனவுகளில்
          நான் உன்னோடு பேசலாம், 
          வீசும் காற்றில் என் சுவாசமும்
          கலந்து இருக்கலாம்!   கேட்கும்
          பாடலில் என் நினைவு வரலாம்
          இப்படி நாம் பிரிந்து இருந்தாலும்
          சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து
           கொண்டுதான் இருக்கும், 
           உன்னையும் என்னையும் இணைத்து.....!


        "  இன்றும் நான் உன்னை தேடுகிறேன்! 
                   நீ இங்கே  இல்லை,
           நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
                  இனிய முத்தங்கள் மட்டுமே இருக்கின்றன! "


          "   வாழ பிறந்த என்னை
                     வாட பிறந்தவளாக்கி விட்டாய்!  "


        
Tweet

2 கருத்துகள்:

 1. " பிறந்த குழந்தைக்கு தெரியாது
  தான் பிறந்திருப்பது! இறந்த
  மனிதனுக்கு தெரியாது
  தான் இறந்திருப்பது! அப்படித்தான்
  எனக்கும் தெரியாது
  உன்னை பிரிந்திருப்பது! "


  //////////

  நல்லாயிருக்குங்க

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...