About Me

இருட்டை ஒருபோதும் இருட்டால் விலக்க முடியாது. வெளிச்சம் தான் அக்காரியத்தைச் செய்யும். அதுபோலத்தான் வெறுப்பை இன்னொரு வெறுப்பின் மூலம் விரட்ட முடியாது. அன்பு தான் அதன் ஒரே வெளிச்சம்.

                                                    -மார்டின் லூதர்கிங் ஜூனியர்

"பிறர் உன்னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படியே நீயும் அவர்களிடம் நடந்துகொள்"

 பள்ளி இறுதிநாள் அன்று ஒவ்வொருவரும் தங்கள் நட்புகளிடம்  ஆட்டோகிராப் வாங்கினார்கள். எனது டைரியில் எனது தோழி மேலே உள்ள இந்த வரிகளை குறிப்பிட்டு எழுதி கையொப்பம் இட்டு கொடுத்தாள். உண்மையில் அதற்க்கு முந்தைய நாள் எங்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது, அதனால் இப்படி எழுதியது என் கோபத்தை கிளறியது. ஆனால்  பள்ளியின் இறுதிநாள் என்பதாலும் இனி எங்கே சந்திக்கபோகிறோம் என்பதாலும் மனவருத்தம் தள்ளி வைத்துவிட்டு இயல்பாய் பேசி பிரியா விடை பெற்றோம். அடுத்து வந்த சில நாட்களில் அதை அடிக்கடி எடுத்து படித்து பார்க்கும் போது தான் அதன் உள் அர்த்தமும், எதற்காக எழுதினாள் என்பதும் புரிந்தது. அதன் பின் அவளை நேரில் சந்திக்க இயலவில்லை, ஒரு சில கடித தொடர்புகள் பின் அதுவும் நின்றுவிட்டது.

இன்றும் இவ்வரிகள் என்னை வழிநடத்துகிறது என்பதே உண்மை.

நம் பார்வையின் கோணம் சரியாக இருந்தால் நம்மால் பார்க்கப்படும் எது ஒன்றும் சரியாகவே இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்னும் மனிதர்களை படித்து கொண்டிருக்கிறேன்...யாரும் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். முதலில் நான் என்னை சரியாக வைத்து கொள்கிறேன் என்று ஒவ்வொருவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

அகத்தியர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது போலவும் இன்னும் ஆயிரம் வருடம் வாழ்வது போலவும் எண்ணி கொண்டு பெருமிதமாக உலா வரும் மனிதர்கள் அநேகர். அது போல இல்லாமல் நாளை என்பது நம் கையில் இல்லை, இன்று முழுதாய் வாழ்வோம் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளிலும் சக மனிதரை நேசித்து மன நிறைவாய் இந்த ஓட்டத்தை ஓடி முடிப்போம்.

பிரபஞ்சம் என்னை வழி நடத்தும்  என் வாழ்வின் இறுதிவரை என்ற நம்பிக்கையில்.......இன்னும் நிறைய பேசுவேன் உங்களின் மனதோடு மட்டும்.....!!

கௌசல்யா



போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...