வெள்ளி, மார்ச் 19

PM 10:02

          இந்த தலைப்பு இப்ப ரொம்ப முக்கியமானு நினைக்ககூடாது.    தொடர்ந்து படித்து பாருங்க  இந்த கால சூழ்நிலைக்கு இதை விவாதிப்பது சரிதான் என்று தோன்றும்.

அந்த காலம் தொட்டே:

            மாற்றான் மனையின் மீது மோஹம் என்பது எந்த காலத்தில் தான் இல்லை.  ஏன் கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை இந்திரன் மீது மோகம் கொள்ளவில்லையா?  அதையும்  எழுத்தாளர்களும் ,  கவிஞர்களும்  ஆளுக்கு ஆள் கற்பனை செய்து இன்றுவரை எழுதி கொண்டிருக்க வில்லையா ?  தவறு அகலிகை மீது மட்டும் இல்லை, அது ஒரு பொருந்தா திருமணம்.       சிறு வயது முதல் இந்திரனிடம் பழகி வந்தவள்  ,  பொருந்தா மணத்தால்  அவளது மனம் அவனை நாடியதில் தவறு என்ன?   பொருந்தா மணம் இப்படிப்பட்ட உறவுகளில் கொண்டுவந்து விட்டு விடும்.    

பத்தினி என்றால் என்ன?

காவியகதை  இப்ப  நமக்கு தேவையில்லை , நடைமுறைக்கு வருகிறேன்.  இந்த மாதிரி விசயத்தில்  ஏதோ பெண்ணே காரணம் என்கிறமாதிரி அந்த ஆணை பற்றியே விட்டுவிடுகிறார்கள் .  பெண்ணை பற்றி மட்டும் 2 குழந்தைக்கு  அம்மா ,  வயது 40 க்கு மேல  இந்த வயதில இப்படி 
இருக்கிறாளே என்று கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம் , இதில் 
வருத்தம் என்னவென்றால்  அந்த பெண்ணை அதிகமா  திட்டுவது  
பெண்கள்தான், அந்த பெண் மட்டும் தான் மோசம் என்ற மாதிரியும்  நாம எல்லோரும் பத்தினி பரம்பரை என்கிறமாதிரி பேசுவார்கள்.      

 என்னை கேட்டால் பத்தினி என்ற வார்த்தை இப்ப உள்ள பெண்களுக்கு
பொருந்துமா என்பதே சந்தேகம்தான்.   அடுத்த ஆண்களை ஏறிட்டு பார்க்காத,  பேசாத ,  வேற ஆண்ணையே மனதாலும் நினைக்காத பெண்கள் யாரும் இப்ப இருப்பார்களா  என்று எனக்கு தோணவில்லை.    காரணம் இப்ப நாம இருக்கிற சூழ்நிலை.   பெண்கள் வெளியில் வேலைக்கு போகிறார்கள், பலருடன் பேசியே ஆகவேண்டிய சூழல்   ,  இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி  என்னும் சாதனம்.  நாம் வாங்கவில்லை என்றாலும் அரசாங்கமே பார்த்து சந்தோசமா வாழ்க்கைய அனுபவியுங்க என்று கூப்பிட்டு கொடுக்கிறது.   அதை பார்க்கிற பாட்டி கூட  என்னமா நல்லா இருக்கிறான், எப்படி பேசறான் என்று நினைக்கமலா இருப்பாங்க?    என் பாட்டியே அந்த காலத்தில இருந்த பாகவதர்போல வருமானு சிலாகித்து சொல்றத கேட்டிருக்கிறேன்.

 இலக்கியம் தான் சொல்லி இருக்கே,  அடுத்த ஆணை மனதிற்குள் ஒரு கணம் நினைத்தாலே போதும், பெண் அவனுடன் மனத்தால் வாழ்ந்து விடுகிறாள் என்று.   பின் எப்படி பத்தினி என்று சொல்லமுடியும்.   வேண்டும் என்றால் பத்தினி என்ற வார்த்தைக்கு வேறு ஏதாவது நல்ல அர்த்தம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள், நானும் எனது எண்ணத்தை மாற்றி கொள்கிறேன்.
                                                                          தொடரும்..........
Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...