வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மெயில், போன், சாட் மூலம் என்னை நலம் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை முதலில் இங்கே தெரிவித்து கொள்கிறேன். பதிவுலகம் மூலம் நிறைய அன்பை சம்பாதித்து இருக்கிறேன் என்பதை விலகி இருந்த நாள்கள் எனக்கு புரிய வைத்து விட்டது.கடந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு சம்பவங்களுடன் கழிந்தது. அதில் பதிவுலகம் தொடர்பான ஒரு இனிமையான நாள் ஒன்றை மறக்க இயலாது...
தோழி விக்னேஸ்வரியை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நேசமித்ரன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை எனக்கு தோழி பரிசளித்தார். பின் மூன்று நாள் கழித்து எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக புத்தகத்தை புரட்டினேன்...
எனக்கு இலக்கிய செறிவுடைய கவிதைகளை ஒரு முறை படிக்கும் போது புரிவது மிக சிரமம் (நம்ம தமிழ் புலமை அப்படி ?!) இவரது இந்த கவிதைகளை படிக்கும் போது முதலில் சுத்தமாக புரியவில்லை. ஆனால் அப்படி எதை பற்றிதான் எழுதி இருக்கிறார் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது உண்மை. மீண்டும் ஏற்கனவே படித்ததை மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். படைப்பை மீண்டும் மீண்டும் படித்து பொருள் புரிந்து கொள்ளும் போதே அந்த படைப்பு நிறைவு பெறுகிறது, மனதிலும் பதிந்து விடுகிறது. இதுதான் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்று நினைக்கிறேன்.
படிக்க படிக்க வாசிப்பின் ஆர்வமும், உத்வேகமும் அதிகரிப்பதை புரிந்து கொண்டேன்,இமைகொட்டாமல் அதில் லயிக்க தொடங்கினேன். வரிகளை பற்றிய கற்பனைகள், மனதிற்குள் வலம் வருவதை என்னால் உணரமுடிந்தது...இப்படி ஒரு விசித்திரம் இவரது எழுத்தில் நிகழ்வது அற்புதம். கவிதையை பலமுறை படித்தே தீர வேண்டிய கட்டாயத்தை மறைமுகமாக உணர்த்தும் படிமங்கள் அவை !!

கவிதையின் பொருள் புரிய இலக்கியம், இசை,கணிதம், விஞ்ஞானம்,வரலாறு,உடலியல், உளவியல், மொழியியல், வேதியியல், புவியியல் இன்னும் எத்தனை இயல்கள் இருக்கிறதோ... அவற்றை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது இவரது கவிதைகள் அதை நமக்கு கற்றுகொடுத்துவிடும்...! நோவா பேழை,வாதை, விலா எலும்பில் விந்து வைத்திருந்தவன் இப்படி இவர் எடுத்தாலும் வார்த்தைகளின் பொருள் புரிய கொஞ்சம் பைபிள் படித்திருக்க வேண்டும்...! (வேதம் எனக்கு பரிச்சயம் என்பதால் புரிந்தது !)
தமிழின் மீதான காதல் என்பதை விட 'சொற்களின் மீதான காதல்' தான் அதிகம் தெரிகிறது.
கவிதையும் நானும் !
* சொற்களின் பொருள் புரிந்துகொள்ளாமல் விட்டேனா பார் என்று என் ஆழ்மனம் கவிதைகளிடம் பகிரங்கமாக சவால் விடும் புதுமை !
* கவிதையின் இலக்கணம் என்பது ஆச்சரிய குறியீடு, இன்ன பிற ஜோடனைகள் என்ற என் புரிதலை உடைத்து போடும் லாவகம் !
* தெரிந்த பழகிய வார்த்தைகள், சொற்களை கவிதையாக்கி பார்ப்பதில் என்ன புதுமை என்று முகத்திற்கு நேராய் கை நீட்டும் துணிவு !
* பள்ளி,கல்லூரி வயதை தாண்டி, வெகுதூரம் வந்துவிட்ட என்னை, மீண்டும் மாணவியாக்கி, கற்று தந்து மகிழும் சுவாரசியம் !
* சொற்களை தேட எடுக்கும் பிரயாசங்கள் அற்புதம் என்றால் கவிதை குழந்தை பிறந்ததும் அடுத்த பிரசவத்திற்கான தேடல்கள் அதிசயம் !
* கவிதையை புரிந்து கொள்ளும் நேரத்தில் பல தளங்களை படித்து/படிக்காமல் பின்னூட்டம் இட்டு நண்பர்களின் வருகை, நம் தளத்திற்க்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற சில சராசரி பதிவர்கள் எண்ணம் பற்றி கண்டுகொள்ளாத மௌனம்!
* காதலி/காதலன் குணம் சில நேரங்களில் புதிராய் இருந்தும் புரிந்து கொள்ள முயற்சி செய்வதை போல், என்னையும் புரிஞ்சு கொள்ள முயற்சி பண்ணுங்களேன் என்ற கவிதையின் அன்பான கெஞ்சல்/கொஞ்சல் !
எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன், உங்கள் பார்வையில் என்ன வேண்டுமானாலும் பொருள் கொண்டுகொள்ளுங்கள்...தவறில்லை என்று தாராளமாக அனுமதி கொடுக்கிறார் ! வாசகனின் எண்ணத்திற்கும் கருத்திற்கும் இவர் கொடுக்கும் மரியாதை அளப்பரியது என்று இவரது பிற பதிவுகளை படித்தபோது எனக்கு தெரிந்தது.
ஒரு எழுத்தாளரின் கவிதைகள் என படிக்க தொடங்கி...இது ஒரு படைப்பாளியின் 'அற்புத படைப்புகள்' என்று மூடிவைத்தேன் புத்தகத்தை !!

புத்தகத்தை மூடி வைத்த சற்று நேரத்தில் அவருடன் தொலைபேசியில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பேச தொடங்கியதும் மனதோடு மட்டும் கௌசல்யா தானே நீங்க' என்றதும் இப்படி ஒரு அறிமுகம் எனக்கு கொடுத்த இந்த பதிவுலகத்தை எண்ணி மகிழ்வாக இருந்தது. கவிதைகள் பற்றிய என் கருத்துக்களை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டார். என் எளிய தமிழ் எழுத்தின் மேல் எனக்கிருக்கும் வருத்தத்தை சொன்ன போது, 'அதைப்பற்றி ஏன் கவலை படுறீங்க...நிறைய நல்ல புத்தகங்கள் படிங்க' என்று சில எழுத்தாளர்களின் பெயர்களை கூறினார்.
தமிழச்சியாக பிறந்து விட்டு இவரது கவிதைகளையும், உரைநடைகளையும் படிக்கும் போது தமிழ் எனக்கு மிக அன்னியமாக தெரிவதை எண்ணி வருந்துகிறேன். இப்படி நான் மட்டும் இல்லை என்னை போன்றோரே இங்கே அதிகம் என்று நினைக்கிறேன். (தமிழை சரியாக படிக்காதது நம் தவறா ? இல்லை சென்னை போன்ற நகரத்தில் ஆங்கில வழியில் படித்ததின் விளைவா ?? தாய்மொழிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவேண்டியது யார் கடமை ? என்று பல கேள்விகள் அவசியமின்றி அந்நேரத்தில் மனதில் எழுந்தது !!)
இவருடனான முதல் அறிமுகத்திலேயே தமிழின் மீதான பற்றும் அக்கறையும் ! மேலும் வெகு நாள் பழகியதை போன்ற இயல்பான உரையாடல்கள்! எனக்கு வியப்பாக இருந்தது அன்றைய பொழுது முழுவதும் !
தற்போது கோவில்களை பற்றிய வரலாற்று குறிப்புகளையும், அங்குள்ள சிலைகள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் தொகுத்து வருவதாகவும் பின் இது தொடர்பான நூல் ஒன்றையும் எழுத உள்ளார் என்று நினைக்கிறேன். அவரது இந்த சீரிய பணி முழுமையாய் நல்லமுறையில் நிறைவேற என் வாழ்த்துக்கள்...

அவர் எழுதிய கவிதைகளில் இரண்டு கவிதைகள் மட்டும் உங்களின் பார்வைக்காக...
"பழமை*புதுமை, தொன்மை*நவீனம் கலந்த அதீத புனைவுத் தன்மைக்கொண்ட அழகான கவிதைகள்"
அல்சியோன் நாட்கள்
நோய் நாட்களின் தூசி துடைத்து
நகரும் பள்ளி தலை உயர்த்தியது
மூளை சாய்ந்த செயற்கை காலின்
பெருவிரலில்
வயலின் தந்தியில் விரையும் எறும்பு
நின்று உணரிகள் விரிக்கும் தடம் செய்த விரல்
நிறம் மாறும் முள் வளர்ந்து
பிரேத சோதனை மர கத்தி
அகழ் பேஸ் மேக்கர் வசம்
விண்ணூர்திகளின் கறுப்புப் பெட்டி
சமிக்ஞைகள்
ஆலிவ் தளிர் ஏந்திய பறவையின் குரலில்
ஆர்க்மிடிசின் மகா நிர்வாணச் சொல்
தீபகற்பத்து சீசா மூக்கு டால்பின்
அல்சியோன் நாட்களுடன் வரும்
தசாப்தத்தின் பைனரி
விடியலில் !
***************
நிறம் மாறும் முள் வளர்ந்து
பிரேத சோதனை மர கத்தி
அகழ் பேஸ் மேக்கர் வசம்
விண்ணூர்திகளின் கறுப்புப் பெட்டி
சமிக்ஞைகள்
ஆலிவ் தளிர் ஏந்திய பறவையின் குரலில்
ஆர்க்மிடிசின் மகா நிர்வாணச் சொல்
தீபகற்பத்து சீசா மூக்கு டால்பின்
அல்சியோன் நாட்களுடன் வரும்
தசாப்தத்தின் பைனரி
விடியலில் !
***************
நாசிச திமிர்
திணை மாற்றும் தீபகர்ப்பப் புன்னகையில்
மஜ்ஜையில் பிரசவிக்கும்
மல்பெரிக் காடு.
நார்சிச வனம் மாற்றும்
நாசிசத் திமிர்.
மதுவில் மிகுந்த மரண
யாத்திரை குளிகைகள்
மருகும் மெழுகின்
விழித் திரள்.
பிறை வளர்த்து ஆபிரகாமின்
பலி பீடத்துக்கு அனுப்பும்
டிராகன் நாக்கு
டி ஸ்கேல் மேஜரில்
ஒலிக்கும் பியானோவின்
கறுப்புக் கட்டைகள் தரும்
நெட்டி முறிப்பு
தகனத் துறை எலும்புகள்
நதிப் படுகை நரக நகர்வுகள்
இருள் திறவு ஈமச் சுடர்
களரி முன்னோட்டம்.
ஒளி முகை
உரத்த பறவைகள்
பாடல் இரண்டும்
இணைந்திசை
குரல்வழி கடக்கும்
கோபுர பறவைகள்.
************
திணை மாற்றும் தீபகர்ப்பப் புன்னகையில்
மஜ்ஜையில் பிரசவிக்கும்
மல்பெரிக் காடு.
நார்சிச வனம் மாற்றும்
நாசிசத் திமிர்.
மதுவில் மிகுந்த மரண
யாத்திரை குளிகைகள்
மருகும் மெழுகின்
விழித் திரள்.
பிறை வளர்த்து ஆபிரகாமின்
பலி பீடத்துக்கு அனுப்பும்
டிராகன் நாக்கு
டி ஸ்கேல் மேஜரில்
ஒலிக்கும் பியானோவின்
கறுப்புக் கட்டைகள் தரும்
நெட்டி முறிப்பு
தகனத் துறை எலும்புகள்
நதிப் படுகை நரக நகர்வுகள்
இருள் திறவு ஈமச் சுடர்
களரி முன்னோட்டம்.
ஒளி முகை
உரத்த பறவைகள்
பாடல் இரண்டும்
இணைந்திசை
குரல்வழி கடக்கும்
கோபுர பறவைகள்.
************
தோல் சாட்டைக்கு மறுத்திருக்கலாம்
நேற்று நாயாக்கி பார்த்த
பின் நவீனத்துவ
பெண்ணுடன்.
'கிகோலோ' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் இந்த வரி புரிந்தால் தலைப்பின் பொருள் புரியும். சமூகத்தில் இப்படி ஒரு சாதி/இனம்(சாதி என்று சொன்னால் அதன் வீரியம் புரியும் என்று நினைக்கிறேன்)இருப்பது மேல்தட்டு மக்களுக்கு தெரியும் என்பது என் புரிதல்.
*************
ஒரு ஸ்பெஷல் டச் இந்த வரிகள் !!
உள்ளங்கையை தின்னக்
கொடுத்து விட்டு
ரேகைகள் மீதம் வைத்திருக்கின்றன
இலைகள் !
'வாழ்வின் முடிவு பரியந்தம் தொடர வேண்டும் நண்பரின் எழுத்துலக பணி' என்ற பிராத்தனை, வேண்டுகோளுடன், மகாசமுத்திரத்தில் ஒரு துளியை ருசித்த மகிழ்வில் முடிக்கிறேன்.
பின் குறிப்பு
இந்த பதிவு ஒரு கவிதை புத்தகத்தின் விமர்சனம் அல்லது பதிவர் அறிமுகம் அல்ல. விமர்சனம் செய்யகூடிய அளவிற்கு நான் இன்னும் கற்று கொள்ளவில்லை என்பதே உண்மை. கவிதைகளின் மேல் எனக்கு இருக்கும் ஈடுபாடும்,இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்கு நேசமித்ரன் அவர்களின் இந்த புத்தகம் உதவியது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
அவரை பற்றி பலருக்கும் நன்கு தெரியும், தெரியாதவர்களுக்காக அவரது தளத்தின் லிங்க் நேசமித்ரன் கவிதைகள்
புதிய பதிவர்களுக்கு இவரது கவிதைகள் ஒரு இனிய அனுபவமாக இருக்கும். இயன்றால் இவரது தளம் சென்று அதை உணருங்கள். என்னை நனைத்த மழை நிச்சயம் உங்களையும் நனைக்கும்...வாழும் காலத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட கூடிய சாபம் பல தமிழ் ஆர்வலர்களுக்கு உண்டு. அதனால் தேடி கண்டுப் பிடித்து அவர்களை இன்னும் 'அதிகமாக எழுத' உற்சாக படுத்துவோம்.
தமிழும், தமிழனும் வளரவேண்டும்...சந்தோசமாக வாழவேண்டும்...!!
பிரியங்களுடன்
கௌசல்யா