வெள்ளி, ஜனவரி 21

PM 12:43
57செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும்  ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3  வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!"

ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம்,  அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். 

பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும்  நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது. 

மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. ஒருமுறை இதில் ஈடுபடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை இது.

சமீபத்தில் கூட சென்னையில் ஒரு வீட்டு ஓனரின் மகன் தங்கள் வீட்டில் குடி இருக்கும் இரண்டு  சிறு வயது குழந்தைகளிடம் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டு இருக்கிறான். அவர்களிருவரும் அண்ணன், தங்கை ஆவர். அவர்களின் தாய் காவல் துறையிடம் புகார் செய்ததின் பெயரில் இப்போது சிறையில். அவனுக்காக  யாரும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு  செய்து இருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன்பு கூட கோவையில் ஒரு சம்பவம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது...அதில் சம்பந்த பட்ட ஒருவனை போலீஸ் என் கவுண்டர் செய்தார்கள்  என்பதையும்  அனைவரும் அறிவர். 

மனிதர்களாக பிறந்த இவர்கள் ஏன் இப்படி மனம் மாறி முரண் பட்டு நடக்கிறார்கள் என்பதை பற்றிய ஆய்வுகளை படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

உளவியல் மற்றும் மருத்துவம் என்ன சொல்கிறது ?

* இந்த தன்மை பற்றி  உளவியல் அறிஞர்கள் பலவாறு விவரிக்கிறார்கள் . இது பீடோப்பீலியா என்னும் ஒரு வகை உளவியல் நோய்.  இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வயது வந்தவுடனே வந்து விடுமாம். பெரியவர்களுடன் அத்தகைய செயல்களில் ஈடு பட முடியாதவர்கள் அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படி  குழந்தைகளை பயன் படுத்திகொள்கிறார்கள். 

* மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் சிறு வயதில் இதே போன்ற ஒரு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்ககூடும் என்கிறது ஆய்வு.

*  மரபியல் காரணங்களும் இருக்கலாம் !! ஒரு குடும்பத்தில் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அடுத்து வரும் வாரிசுகளிடம் இத்தகைய எண்ணம் வருவதிற்கு வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்கள் சொல்லி இருந்தாலும், அத்தகைய மரபணு இன்று வரை கண்டுபிடிக்க படவில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல். 

* இவர்களை வெறும் குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் உளவியல் குறைபாடுள்ள நோயாளிகளாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இத்தகையவர்களை உளவியல் ரீதியாகவும் , மருந்து சிகிச்சைகளின் மூலமாகவும் குணபடுத்தலாம் என்றாலுமே அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டும், தவிரவும் இத்தகைய இச்சைகளை கட்டுபடுத்த இவர்கள் வாழ்க்கை முழுவதும் மிக கஷ்டப்பட்டு முயலவேண்டும் என்பதே...!? 

யோசியுங்கள் மக்களே !

ஆய்வுகள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் பெரியவர்களாகிய நாம் நம்மிடையே சாதாரணமாக நடமாடி கொண்டிருக்கும் இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே இந்த பதிவில் நான் உங்களிடம் எழுப்பும் ஒரு கேள்வி. 

இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தங்களது உறவினர்கள், பக்கத்து  வீட்டினர், பள்ளிக்கு அழைத்து செல்லும் நபர்கள் போன்றவர்களாலேயே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 

பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள். 

ஆண் குழந்தைகள் !

சிலர் நினைக்கலாம் நமக்கு தான் ஆண் குழந்தைகள் ஆச்சே என்று ! பெண் குழந்தைகளுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம் நேரும் என்றாலுமே ஆண் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு தப்புவதில்லை.  கயவர்கள்  அந்த நேரத்தில் யாரை எப்படினாலும் பயன் படுத்தி கொள்வார்கள்.  அவர்களது தேவை தற்காலிகமாக தங்களது எண்ணம் ஈடேரனும் அவ்வளவே.  

எதிர்காலத்தில் ?!

இதனால் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைய போகும் பாதிப்புகள் மிக அதிகம். பாதிக்க பட்ட குழந்தைகள் ஒருவேளை  இதில் இருந்து தப்பித்தாலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னணியில் இந்த பாதிப்பு காரணமாக  இருப்பது சம்பந்த பட்ட ஆண், பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம். 

நம்மால் என்ன செய்ய முடியும் ??

எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற போது இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இனிமேலாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம். 

* சிறு குழந்தைகளுக்கு குட் டச், பேட்  டச் பற்றி சொல்லி கொடுங்கள். 

* அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 

*  ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்...(எந்த புற்றில் எந்த பாம்போ...?!) 

*   சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். 

* பிறர் முத்தமிடுவதை அனுமதிக்க  கூடாது  என்று  சொல்லுங்கள். (நெருங்கிய  உறவினர்களாக இருந்தாலுமே !)  

கட்டாயம் சொல்லி கொடுங்கள் 

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நட்பாய் பழகி அவர்களுடன் பேசி அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது உடல் அமைப்பை பற்றியும், ஆண் பெண் உறவை பற்றியும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்  சொல்லி கொடுப்பது காலத்தின் கட்டாயம். மறவாதீர் !!     

இத்தகைய இழி செயலை நாம் கண்டிக்க வேண்டும். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்...இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி ஒரு விவாதம் கூட பதிவுலகில் நடத்தலாம். 

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பிரச்சனை பற்றி நண்பர் பத்மஹரி தனது புத்தகத்தில் விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை இணையத்தில் படிக்க இங்கே செல்லவும்.


படம் - நன்றி கூகுள் 


Tweet

57 கருத்துகள்:

 1. பெற்றோர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை...

  இந்த மாதிரி ரிஸ்க் ஆன சப்ஜட்டில் அற்புதமாக கட்டுரை எழுதும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. //ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்...(எந்த புற்றில் எந்த பாம்போ...?!)//

  நிச்சயம் கேட்க வேண்டும்... அவர்களை நாமும் பார்த்தால் கண்காணிக்க வேண்டும் அவர்கள் பார்வை எப்படி, பேச்சு எப்படி என்று...

  பதிலளிநீக்கு
 3. //பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும் நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது.

  மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. //

  நம்ம மக்கள் இலவசம் வாங்கி வாங்கியே கெட்டுப்போய்ட்டாங்க! சொந்தமா யோசிக்கிறதே இல்ல?! பிரச்சினைய விட்டுட்டு உணர்ச்சிவசப்பட்டுட்டு மத்தத அப்படியே காத்துல விட்டுட்டு அடுத்த செய்திக்கு போயிடுறாங்க. இது மாறனும்! "நோய் நாடி நோய்முதல் நாடி" அப்படீன்னு பிரச்சினைக்கான அடிப்படையை பார்த்து அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கனும். அது தனி மனித அளவுல ஏற்படுற விழிப்புணர்வாலதான் ஏற்படும். அதுக்கு இந்தப் பதிவு கண்டிப்பா பெரிய் உதவியா இருக்கும்னு நம்புறேன்! மிக முக்கியமான ஒரு பதிவு! வாழ்த்துக்களும், நன்றிகளும் உங்களுக்கு!
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  பதிலளிநீக்கு
 4. தேவையான விழிப்புணர்வு பதிவு.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா1:09 PM, ஜனவரி 21, 2011

  மிகச் சிறந்த கட்டுரை சகோ! குழந்தை வளர்ப்பது ஒரு கலை என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன், அது போல கவனமாக குழந்தைகளிடம் இது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்வதும் கலைதான். குழந்தைகள் வைத்திருக்கும் நம் நண்பர்களுக்கு இப்பதிவு மிகப் பயனுள்ளதாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 6. pedophilia ஒரு மோசமான பிரச்சினை. இதன் பிரச்சினையின் அளவு ஒவ்வொருரிடமும் மாறுபடும். சிலர் குழந்தைகளிடம் விளையாடுவது தவறாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு பல சமயம் இது புரியாது. கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகளும் அதைப் பற்றி முழுதும் தெரியாமல் போகிறது.

  இது போன்ற சமயங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பை விட மனநல பாதிப்பே அதிகம். அதுவும் அது பல காலம் இது நீடிக்கும்.

  இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினம்தான் ஆனால் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்!

  பதிலளிநீக்கு
 7. //பெற்றோர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை...//
  //தேவையான விழிப்புணர்வு பதிவு.//
  YES SIR!

  பதிலளிநீக்கு
 8. பிரச்சனையையும் சொல்லி காரணத்தையும் சொல்லி என்ன செயலாம் என்றும் எழுதி உள்ளீர்கள் இதுதான் சிறந்த படைப்பின் முக்கிய விடயங்கள் அருமையான அலசல்

  பதிலளிநீக்கு
 9. மிகவும் அவசியமான தேவையான கட்டுரை அளித்ததற்கு மிக்க நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 10. ரொம்பவும் அவசியமானப் பதிவு. 'குட் டச்', 'பேட் டச்' பத்தி குழந்தைகளுக்கு சொல்லித்தர்றதுக்கு முன்னாடி பெற்றோர்களும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. மிக அருமையான அவசியமான் பதிவு.

  பதிலளிநீக்கு
 12. @@ Sriakila
  //'குட் டச்', 'பேட் டச்' பத்தி குழந்தைகளுக்கு சொல்லித்தர்றதுக்கு முன்னாடி பெற்றோர்களும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.//

  மிக சரியாக சொல்லி இருக்கீங்க தோழி, பல பெற்றோர்களுக்கே இது தெரிவது இல்லைதான்.

  நான் இதை பற்றி எனது தாம்பத்தியம் பதிவில் நிறைய சொல்லி இருப்பதால் தான் இங்கே சொல்ல வில்லை.

  உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி அகிலா

  பதிலளிநீக்கு
 13. உண்மைதான் நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 14. குழந்தைகள் மீதான வன்முறைகள் வண்புணர்ச்சி போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு வெளியே வரமுடியாத தண்டனைச் சட்டங்கள் நிறைவேறும் பட்சத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறும் என்று நினைக்கீறீர்களா? செய்ய வேண்டும் என்று நினைப்புள்ளவர்களுக்கு அவர்களின் மரபு சமாச்சாரங்கள் மறந்து போய் மாட்டிக் கொண்டால் என்ன தண்டனை என்று மனதில் வந்து போகும்.

  பதிலளிநீக்கு
 15. இரண்டு நாட்களுக்கு முன்புக் கூட சட்டங்கள் கடுமையாக இருக்கும் அமீரகத்தில் (என்று நினைவு ) இதே மாதிரி சம்பவம் நடந்ததாக நினைவு. நீங்கள் சொல்லி இருப்பது போல் குட் டச் பேட் டச் பழக்கவேண்டும். புதியவர்கள் அல்ல , நன்கு தெரிந்தவர்களிடம் கூட அதிகம் கவனத்துடன் இருக்க பழக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 16. >>>>இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம்.

  கரெக்ட் கவுசல்யா

  பதிலளிநீக்கு
 17. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தலைப்பை எடுத்து எழுதுவது உங்கள் சிறப்பு அக்கா...

  //பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள்.//

  ம்ம்ம் நல்ல ஆழ்ந்து சிந்திச்சு எழுதி இருக்கீங்க அக்கா...

  இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வும், பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையையும் உணர்வதுதான்.

  நன்று அக்கா....

  பதிலளிநீக்கு
 18. உங்களைப் போல எழுதுபவர்கள் ஒரு முப்பது வருடங்கள் முன்னால் இல்லாமல் போய்விட்டார்கள். எங்கள் குடும்பம் சேலத்தில் இருக்கும் போது, பக்கத்து வீட்டுக் குழந்தை இந்த மாதிரி பாதிக்கப் பட்டது.
  அதற்குச் சொல்லக் கூடத் தெரியவில்லை. சமீபத்தில் அந்த பெண்ணையும் அவள் அம்மாவையும் பார்த்த போது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. அந்தக் குழந்தை நல்ல படியாக மணந்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறான். மனநல மருத்துவரிடம் அப்போதே இந்த அம்மா அணுகி இருக்கிறாள்.

  இது போல விழிப்புணர்வைக் கொடுக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 19. தினமும் செய்தித்தாளில் இந்த செய்தி இல்லாத நாளே இல்லைங்கற அளவு கொடுமையாகி விட்டது.எல்லாருமே உஷாராக இருக்கவேண்டிய நிலமை.என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 20. இந்த விசயத்தைப் பத்தி யோசிக்கவோ, நினைக்கவோ பிடிக்காத ஒரு ஜன்மம் நான். நிலா ரசிகனுடைய "அப்பா சொன்ன ந்ரிக்கதை"க்கு முதல் பரிசு கொடுத்தபோது எரிச்சல அடைந்ததும் நான் மட்டும்தான்.

  இது ஒரு வியாதியா இருக்கட்டும், இல்லைனா என்னவாவும் இருக்கட்டும், கடவுள்னு ஒரு ஆளு இருக்கார் ல அவர் எல்லாயிடத்திலும் இருந்து வேடிக்கை பார்க்கிறாராம். அவருக்கு எல்லாமே தெரியுமாம். அவரு இதுபோல் அறியாக் குழந்தைகளையாவது காப்பாத்தலாம் இல்லையா?! இல்லைனா அவரு எதுக்கு? வேடிக்கை பார்க்க மட்டும்தானா?

  பதிலளிநீக்கு
 21. பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.

  நேரம் இருப்பவர்களுக்கு படிக்க ஒரு சிறுகதை:பெரியவர் ஆசி

  பதிலளிநீக்கு
 22. சகோ கௌசல்யா,,.நல்ல விழிப்புணர்வு பதிவு,.பாராட்டுக்கள்..

  இந்த பின்னூட்டம் சகோ ஹுஸைனம்மா அவர்களின்,இதை சார்ந்த பதிவுக்கு இட்டது..அது இப்பதிவுக்கும் பொருந்தும் என நினைப்பதால் இங்கும்..

  பிஞ்சுகள் கண்கலங்குவதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியாது..பெரும்பாலும் ஷாப்பிங் மால்களில்,பார்க்கும் பிள்ளைகள் ஏதும் அறியாமல் ஏன் இங்கு வந்தோம் என தெரியாமல்,தாய் தந்தையின் கவனமின்றி கதறிக்கொண்டிருக்கும் காட்சியே என் மனதை உறுக்கிவிடும்.

  சமீபத்தில் நடந்த கோவை குழந்தைகள் கொலை என்னை எந்த அளவு பாதித்து என்பதும் அதற்கான என்கவுண்டர் எனக்கு எத்துனை மகிழ்வை தந்தது என்பதும் எனக்கும்,என்னை படைத்தவனுக்கும் மட்டுமே தெரியும்,

  பிள்ளைகளை அதீத கவனத்துடனும்,இது போன்ற பாதகர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வுகளையும் கொடுத்து வளர்க்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்..

  johney,johney yes papa,
  என்றே கற்றுக்கொடுத்து வளரும் பிள்ளைகளுக்கு,வாழ்க்கை சில வேலைகளில் no சொல்லும் போதும்,இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

  இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
  செய்வார்களா?

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 23. தற்போதுதான் பெற்றோராகி இருக்கும் என் போன்றோர்க்கு உகந்த அலசல்...
  மிக்க பயனுள்ள படைப்பு... நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 24. அவசியமான விழிப்புணர்வான பதிவு கௌஸ்..

  பதிலளிநீக்கு
 25. நல்ல விழிப்புணர்வு பதிவு,

  இதுபோல் பதிவுகளின் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படும்

  பதிலளிநீக்கு
 26. THANKS A LOT KOUSALYA.
  THIS WOULD BE REALLY USEFUL FOR MANY PARENTS.

  பதிலளிநீக்கு
 27. மிக மிகத் தேவையான பதிவு கௌசி.பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 28. கவனிக்கப்பட வேண்டிய விசயமும்.. தேவையான பதிவும்..

  பதிலளிநீக்கு
 29. இது போன்ற இடுகைகள் சற்றே கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற அபாயத்துக்கு மிகவும் அண்மையில் இருப்பன. ஆனால், தெளிவாக, கோர்வையாக, எளிமையாக, எவ்வித நகாசு வேலையும் இல்லாமல் உண்மையாக எழுதியிருப்பதற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்! அண்மைக்காலத்தில் நான் வாசித்த சிறந்த இடுகைகளில் இதுவும் ஒன்று! தொடரட்டும் உங்களது பணி!

  பதிலளிநீக்கு
 30. \\அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள்.\\
  சபாஷ் சகோதரி! சரியான நேரத்தில், மிக சரியான பதிவு. விழிப்புணர்வு விஷயங்கள் வித்தியாசமாய் வருகின்றது உங்கள் பார்வையில்.

  பதிலளிநீக்கு
 31. நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 32. @@ சங்கவி said...

  //நிச்சயம் கேட்க வேண்டும்... அவர்களை நாமும் பார்த்தால் கண்காணிக்க வேண்டும் அவர்கள் பார்வை எப்படி, பேச்சு எப்படி என்று..//

  முக்கியமாக அடிக்கடி தங்கள் குழந்தைகளின் பள்ளியின் பக்கம் சென்றுவரவேண்டும்.

  கருத்திற்கு நன்றி சதீஷ்.

  பதிலளிநீக்கு
 33. @@ பத்மஹரி said...

  //"நோய் நாடி நோய்முதல் நாடி" அப்படீன்னு பிரச்சினைக்கான அடிப்படையை பார்த்து அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கனும். அது தனி மனித அளவுல ஏற்படுற விழிப்புணர்வாலதான் ஏற்படும்.//

  இந்த பிரச்சனையின் மூலத்தை உங்கள் புக் படித்தே நான் தெரிந்து கொண்டேன். அதற்காக உங்களுக்கு நன்றி இங்கே சொல்லி கொள்கிறேன்.எது ஒன்றும் நடக்கும் முன்னரே அதனை பற்றி குழந்தைகளிடம் சொல்லி வைத்து விடுவத்தின் மூலமே தவறு ஏற்படுவதை சிறிது தடுக்க முடியும் என்று எனக்கு தெரிகிறது.

  உங்கள் வருகை மகிழ்வை கொடுக்கிறது ஹரி.

  பதிலளிநீக்கு
 34. @@ Chitra...

  நன்றி தோழி.  @@ Balaji saravana...

  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 35. @@ எஸ்.கே said...

  //அவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பை விட மனநல பாதிப்பே அதிகம். அதுவும் அது பல காலம் இது நீடிக்கும்.//

  பாதிக்க பட்டவர்கள் சுலபத்தில் இதை மறப்பது கடினம். வாழ்நாள் முழுதும் மனதில் உறுத்தலை எற்படுத்திகொண்டும், தங்கள் குடும்பத்தில் கவனத்தை செலுத்த முடியாமலும் போய்விடுகிறது.

  பெற்றோர்களால் மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை இதில் இருந்து காப்பாற்ற முடியும்.

  நன்றி எஸ்.கே.

  பதிலளிநீக்கு
 36. @@ middleclassmadhavi...

  நன்றி.


  @@ யாதவன்...

  நன்றி சகோ.


  @@ அமுதா கிருஷ்ணா...

  வருகைக்கு நன்றி தோழி.  @@ இரவு வானம்...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 37. @@ ஜோதிஜி said...

  //குழந்தைகள் மீதான வன்முறைகள் வண்புணர்ச்சி போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு வெளியே வரமுடியாத தண்டனைச் சட்டங்கள் நிறைவேறும் பட்சத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறும் என்று நினைக்கீறீர்களா?//

  இவர்கள் செய்யும் இந்த மறைமுக காரியங்கள் பெரும்பாலும் வெளியில் வருவது இல்லையே...வாராது என்ற தைரியத்தில் தான் பலரும் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒருவேளை தண்டனை கடுமையாக்கபட்டால் சிறிது அச்சம் ஏற்படலாம்.

  //செய்ய வேண்டும் என்று நினைப்புள்ளவர்களுக்கு அவர்களின் மரபு சமாச்சாரங்கள் மறந்து போய் மாட்டிக் கொண்டால் என்ன தண்டனை என்று மனதில் வந்து போகும்.//

  ம்...கண்டிப்பாக...!

  நன்றி ஜோதிஜி.

  பதிலளிநீக்கு
 38. @@ T.V.ராதாகிருஷ்ணன்...

  நன்றி சகோ.


  @@ எல் கே said...

  //இரண்டு நாட்களுக்கு முன்புக் கூட சட்டங்கள் கடுமையாக இருக்கும் அமீரகத்தில் (என்று நினைவு ) இதே மாதிரி சம்பவம் நடந்ததாக நினைவு. //

  நானும் கேள்வி பட்டேன்...தண்டனை கடுமை என்று தெரிந்தும் துணிந்து தவறு செய்தவனை என்ன வென்று சொல்வது !?

  பெற்றோர் கவனமாக இருந்து கொள்வது தான் நல்லது.

  நன்றி கார்த்திக்

  பதிலளிநீக்கு
 39. @@ சி.பி.செந்தில்குமார்...

  நன்றிங்க.


  கவிநா...

  //இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வும், பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையையும் உணர்வதுதான்.//

  ரொம்ப சரியா சொல்லி இருக்கிற காயத்ரி. நன்றி.

  பதிலளிநீக்கு
 40. அருமையான அலசல கெளசல்யா! சமீபத்தில் இங்கே இது மாதிரி ஐந்து வயது பெண் குழந்தைக்கு நடந்த பாதிப்பு எல்லோரது மனசிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. படிக்கும் நமக்கே இந்த பாதிப்பு என்னும்போது, அந்த குழந்தை, அதன் பெற்றோர் மனங்களில் எத்தைகைய பாதிப்பு இருக்கும்? சமயத்தில் நிறைய கவனம் வைத்திருந்தும் முற்றிலும் எதிர்பாராதவர்களால்கூட இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவமானம், வெட்க உணர்ச்சி இவற்றாலும் குழந்தைகள் தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமிடையே மிக நல்லதொரு சினேகிதம் இருந்தால் இது மாதிரி எதிர்பாரா நிகழ்வுகளை பகிர்வது மட்டுமல்ல, அவை ஏற்படாதவாறு தடுத்துக்கொள்ள‌வும் முடியும்!

  பதிலளிநீக்கு
 41. @@ வல்லிசிம்ஹன் said...

  //உங்களைப் போல எழுதுபவர்கள் ஒரு முப்பது வருடங்கள் முன்னால் இல்லாமல் போய்விட்டார்கள். எங்கள் குடும்பம் சேலத்தில் இருக்கும் போது, பக்கத்து வீட்டுக் குழந்தை இந்த மாதிரி பாதிக்கப் பட்டது.
  அதற்குச் சொல்லக் கூடத் தெரியவில்லை. சமீபத்தில் அந்த பெண்ணையும் அவள் அம்மாவையும் பார்த்த போது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. அந்தக் குழந்தை நல்ல படியாக மணந்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறான். மனநல மருத்துவரிடம் அப்போதே இந்த அம்மா அணுகி இருக்கிறாள்.//

  அனுபவத்தை இங்கே பகிர்ந்ததுக்கு முதலில் நன்றி சகோ. நீண்ட நாள் கழித்து வந்து இருக்கிறீர்கள்...நலம் தானே ?

  நீங்கள் சொன்ன விசயத்தில் அந்த பெண்ணின் அம்மாவை மிகவும் பாராட்டனும்...இவர்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்...

  பதிலளிநீக்கு
 42. @@ asiya omar said...

  //தினமும் செய்தித்தாளில் இந்த செய்தி இல்லாத நாளே இல்லைங்கற அளவு கொடுமையாகி விட்டது//

  சில நாட்களில் இது ஒரு சாதாரண நிகழ்வாக கூட மாறிவிடும் போல...?!! :((

  அதற்கு முன் பெற்றோர்கள் விழித்து கொள்வது நல்லது.

  பதிலளிநீக்கு
 43. @@ வருண் said...

  //கடவுள்னு ஒரு ஆளு இருக்கார் ல அவர் எல்லாயிடத்திலும் இருந்து வேடிக்கை பார்க்கிறாராம். அவருக்கு எல்லாமே தெரியுமாம். அவரு இதுபோல் அறியாக் குழந்தைகளையாவது காப்பாத்தலாம் இல்லையா?! இல்லைனா அவரு எதுக்கு? வேடிக்கை பார்க்க மட்டும்தானா?//

  வாங்க வருண். ரொம்ப சலிப்பாக பேசுகிறீர்கள்...ஏன் என்று தெரியவில்லை.

  இந்த விசயத்திற்கு கடவுளை ஏன் இழுக்குரீங்க ? அதுக்கு தான் பெற்றோர்கள் இருக்குறார்களே ?! அவங்க தங்கள் குழந்தைகளை சரியா பார்த்து வளர்த்தாலே போதும்...

  பெற்றோரின் சரியான வளர்ப்பு இல்லாததும் இந்த மாதிரியானவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு ஒரு காரணம் தான்.

  எப்படி எடுத்து கொண்டாலும் நல்ல பெற்றோர் அமையாவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறிதான்.

  நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 44. @@ அப்பாதுரை கூறியது...

  //நேரம் இருப்பவர்களுக்கு படிக்க ஒரு சிறுகதை:பெரியவர் ஆசி//

  உங்களின் பின்னூட்டம் இப்போது ஒரு பதிவு எழுத வைத்துவிட்டது.

  இந்த கதை படித்தேன்...சொல்ல வார்த்தையில்லை, அப்படியே இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

  உங்கள் உணர்வை இங்கே வெளிபடுத்தியதுக்கு வணங்குகிறேன் சகோ.

  பதிலளிநீக்கு
 45. @@ RAZIN ABDUL RAHMAN said...

  நீங்க குறிப்பிட்ட பிறகு ஹுஸைனம்மா அவர்களின் பதிவையும் படித்தேன்...நன்றி

  //இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
  செய்வார்களா?//

  நல்ல ஒரு யோசனையை எடுத்து வைத்துள்ளீர்கள். உங்களின் உள்ள குமுறல்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி ரஜின்.

  பதிலளிநீக்கு
 46. @@ சி. கருணாகரசு said...

  //தற்போதுதான் பெற்றோராகி இருக்கும் என் போன்றோர்க்கு உகந்த அலசல்//

  அவசியம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை இந்த பதிவு...

  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 47. @@ ஆனந்தி.. said...

  நன்றி தோழி.


  @@ Jaleela Kamal...

  நன்றி தோழி.  @@ angelin...

  நன்றி தோழி.  @@ ஹேமா...

  நன்றி ஹேமா  @@ வெறும் பய...

  நன்றி ஜெயந்த்.


  @@ தோழி பிரஷா...

  நன்றி பிரஷா.


  @@ சசி குமார்...

  நன்றி சசி.


  @@ பாலா...

  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 48. @@ சேட்டைக்காரன் said...

  //இது போன்ற இடுகைகள் சற்றே கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற அபாயத்துக்கு மிகவும் அண்மையில் இருப்பன//

  மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் எழுதினேன், அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு என்னை வாழ்த்தியது உண்மையில் பெருமையாக இருக்கிறது.

  உங்களை போன்றோரின் இத்தகைய ஊக்கம் தான் என்னை எழுத வைத்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

  உங்களின் நீண்டநாட்களுக்கு பிறகான இந்த வருகைக்கும் உங்களின் புரிதலுக்கும் என் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 49. @@ FOOD...

  தொடரும் உங்களின் வருகை எனக்கு அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 50. @@ மனோ சாமிநாதன் said...

  //அவமானம், வெட்க உணர்ச்சி இவற்றாலும் குழந்தைகள் தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமிடையே மிக நல்லதொரு சினேகிதம் இருந்தால் இது மாதிரி எதிர்பாரா நிகழ்வுகளை பகிர்வது மட்டுமல்ல, அவை ஏற்படாதவாறு தடுத்துக்கொள்ள‌வும் முடியும் ///

  மிக சரியாக சொல்லி இருக்கீங்க அக்கா...நானும் அந்த செய்தி கேள்வி பட்டேன்...வருத்தமாக இருந்தது. குழந்தைகளை நம்மை விட்டு தூரம் போய்விடாமல் பார்த்து கொள்ளனும்...நீங்க சொல்ற மாதிரி நட்பு பாராட்ட வேண்டும்.

  கருத்திற்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 51. தொடரட்டும் உங்கள் தரமான பதிவு.வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 52. VIjay TVyil Indru SATYAMEV JAYTE 2ND EPISODELEYUM IDHA PATHI NALLA SOLLIYIRUNDHARGAL,

  Nalla ubayogamulla pathivu

  Thodarattum ungal pathivugal

  Vazhthukkal

  பதிலளிநீக்கு
 53. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

  http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8668.html

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...