Tuesday, March 1

10:41 AM
53


வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மெயில், போன், சாட் மூலம் என்னை நலம் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை முதலில் இங்கே தெரிவித்து கொள்கிறேன். பதிவுலகம் மூலம் நிறைய அன்பை சம்பாதித்து இருக்கிறேன் என்பதை விலகி இருந்த நாள்கள் எனக்கு புரிய வைத்து விட்டது.கடந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு சம்பவங்களுடன் கழிந்தது. அதில் பதிவுலகம் தொடர்பான ஒரு இனிமையான நாள் ஒன்றை மறக்க இயலாது...

தோழி விக்னேஸ்வரியை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நேசமித்ரன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை எனக்கு தோழி பரிசளித்தார். பின் மூன்று நாள் கழித்து எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக புத்தகத்தை  புரட்டினேன்...

எனக்கு இலக்கிய செறிவுடைய கவிதைகளை ஒரு முறை படிக்கும் போது புரிவது மிக சிரமம் (நம்ம தமிழ் புலமை அப்படி ?!) இவரது இந்த கவிதைகளை படிக்கும் போது முதலில் சுத்தமாக புரியவில்லை. ஆனால் அப்படி எதை பற்றிதான் எழுதி இருக்கிறார் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது உண்மை. மீண்டும் ஏற்கனவே படித்ததை மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். படைப்பை மீண்டும் மீண்டும் படித்து பொருள் புரிந்து கொள்ளும் போதே அந்த படைப்பு நிறைவு பெறுகிறது, மனதிலும் பதிந்து விடுகிறது. இதுதான் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்று நினைக்கிறேன். 


படிக்க படிக்க வாசிப்பின் ஆர்வமும், உத்வேகமும் அதிகரிப்பதை புரிந்து கொண்டேன்,இமைகொட்டாமல் அதில் லயிக்க தொடங்கினேன். வரிகளை பற்றிய கற்பனைகள், மனதிற்குள் வலம் வருவதை என்னால் உணரமுடிந்தது...இப்படி ஒரு விசித்திரம் இவரது எழுத்தில் நிகழ்வது அற்புதம். கவிதையை பலமுறை படித்தே தீர வேண்டிய கட்டாயத்தை மறைமுகமாக உணர்த்தும் படிமங்கள் அவை !! 

கவிதையின் பொருள் புரிய இலக்கியம், இசை,கணிதம், விஞ்ஞானம்,வரலாறு,உடலியல், உளவியல், மொழியியல், வேதியியல், புவியியல் இன்னும் எத்தனை இயல்கள்   இருக்கிறதோ... அவற்றை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது இவரது கவிதைகள் அதை நமக்கு கற்றுகொடுத்துவிடும்...! நோவா பேழை,வாதை, விலா எலும்பில் விந்து வைத்திருந்தவன் இப்படி இவர் எடுத்தாலும் வார்த்தைகளின் பொருள் புரிய கொஞ்சம் பைபிள் படித்திருக்க வேண்டும்...! (வேதம் எனக்கு பரிச்சயம் என்பதால் புரிந்தது !)

தமிழின் மீதான  காதல் என்பதை விட 'சொற்களின் மீதான காதல்' தான் அதிகம் தெரிகிறது. 


கவிதையும் நானும் !


* சொற்களின் பொருள் புரிந்துகொள்ளாமல் விட்டேனா பார் என்று என் ஆழ்மனம் கவிதைகளிடம் பகிரங்கமாக சவால் விடும் புதுமை !


* கவிதையின் இலக்கணம் என்பது ஆச்சரிய குறியீடு, இன்ன பிற ஜோடனைகள் என்ற என் புரிதலை உடைத்து போடும் லாவகம் !


* தெரிந்த பழகிய வார்த்தைகள், சொற்களை கவிதையாக்கி பார்ப்பதில் என்ன புதுமை என்று முகத்திற்கு நேராய் கை நீட்டும் துணிவு !


* பள்ளி,கல்லூரி வயதை தாண்டி, வெகுதூரம் வந்துவிட்ட என்னை, மீண்டும்  மாணவியாக்கி, கற்று தந்து மகிழும் சுவாரசியம் !


* சொற்களை தேட எடுக்கும் பிரயாசங்கள் அற்புதம் என்றால் கவிதை குழந்தை பிறந்ததும் அடுத்த பிரசவத்திற்கான தேடல்கள் அதிசயம் !


* கவிதையை புரிந்து கொள்ளும் நேரத்தில் பல தளங்களை படித்து/படிக்காமல் பின்னூட்டம் இட்டு நண்பர்களின் வருகை, நம் தளத்திற்க்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற சில சராசரி பதிவர்கள் எண்ணம்  பற்றி கண்டுகொள்ளாத மௌனம்!


* காதலி/காதலன் குணம் சில நேரங்களில் புதிராய் இருந்தும் புரிந்து கொள்ள முயற்சி செய்வதை போல், என்னையும் புரிஞ்சு கொள்ள முயற்சி பண்ணுங்களேன் என்ற கவிதையின் அன்பான கெஞ்சல்/கொஞ்சல் !       


எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன், உங்கள் பார்வையில் என்ன வேண்டுமானாலும் பொருள் கொண்டுகொள்ளுங்கள்...தவறில்லை என்று தாராளமாக அனுமதி கொடுக்கிறார் ! வாசகனின் எண்ணத்திற்கும் கருத்திற்கும் இவர் கொடுக்கும் மரியாதை அளப்பரியது என்று இவரது பிற பதிவுகளை படித்தபோது எனக்கு தெரிந்தது.  


ஒரு எழுத்தாளரின் கவிதைகள் என படிக்க தொடங்கி...இது ஒரு படைப்பாளியின் 'அற்புத படைப்புகள்' என்று மூடிவைத்தேன் புத்தகத்தை !!

புத்தகத்தை மூடி வைத்த சற்று நேரத்தில் அவருடன் தொலைபேசியில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பேச தொடங்கியதும் மனதோடு மட்டும் கௌசல்யா தானே நீங்க' என்றதும் இப்படி ஒரு அறிமுகம் எனக்கு கொடுத்த இந்த பதிவுலகத்தை எண்ணி மகிழ்வாக இருந்தது. கவிதைகள் பற்றிய என் கருத்துக்களை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டார். என் எளிய தமிழ் எழுத்தின் மேல் எனக்கிருக்கும் வருத்தத்தை சொன்ன போது, 'அதைப்பற்றி ஏன் கவலை படுறீங்க...நிறைய நல்ல புத்தகங்கள் படிங்க' என்று சில எழுத்தாளர்களின் பெயர்களை கூறினார். 


தமிழச்சியாக பிறந்து விட்டு இவரது கவிதைகளையும், உரைநடைகளையும் படிக்கும் போது தமிழ் எனக்கு மிக அன்னியமாக தெரிவதை எண்ணி வருந்துகிறேன். இப்படி நான் மட்டும் இல்லை என்னை போன்றோரே இங்கே அதிகம் என்று நினைக்கிறேன். (தமிழை சரியாக படிக்காதது  நம் தவறா ? இல்லை சென்னை போன்ற நகரத்தில் ஆங்கில வழியில் படித்ததின் விளைவா ?? தாய்மொழிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவேண்டியது யார் கடமை ? என்று பல கேள்விகள் அவசியமின்றி அந்நேரத்தில் மனதில் எழுந்தது !!) 


இவருடனான முதல் அறிமுகத்திலேயே தமிழின் மீதான பற்றும் அக்கறையும் ! மேலும் வெகு நாள் பழகியதை போன்ற இயல்பான உரையாடல்கள்! எனக்கு வியப்பாக இருந்தது அன்றைய பொழுது முழுவதும் !


தற்போது கோவில்களை பற்றிய வரலாற்று குறிப்புகளையும், அங்குள்ள சிலைகள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் தொகுத்து வருவதாகவும் பின் இது தொடர்பான நூல் ஒன்றையும் எழுத உள்ளார் என்று நினைக்கிறேன். அவரது இந்த சீரிய பணி முழுமையாய் நல்லமுறையில் நிறைவேற என் வாழ்த்துக்கள்...

அவர் எழுதிய கவிதைகளில் இரண்டு கவிதைகள் மட்டும் உங்களின் பார்வைக்காக...

"பழமை*புதுமை, தொன்மை*நவீனம் கலந்த அதீத புனைவுத் தன்மைக்கொண்ட அழகான கவிதைகள்" 


அல்சியோன் நாட்கள் நோய் நாட்களின் தூசி துடைத்து
நகரும் பள்ளி தலை உயர்த்தியது 
மூளை சாய்ந்த செயற்கை காலின் 
பெருவிரலில்

வயலின் தந்தியில் விரையும் எறும்பு
நின்று உணரிகள் விரிக்கும் தடம் செய்த விரல்
நிறம் மாறும் முள் வளர்ந்து


பிரேத சோதனை மர கத்தி
அகழ் பேஸ் மேக்கர் வசம்
விண்ணூர்திகளின் கறுப்புப் பெட்டி
சமிக்ஞைகள்


ஆலிவ் தளிர் ஏந்திய பறவையின் குரலில்
ஆர்க்மிடிசின் மகா நிர்வாணச் சொல்


தீபகற்பத்து சீசா மூக்கு டால்பின்
அல்சியோன் நாட்களுடன் வரும்
தசாப்தத்தின் பைனரி
விடியலில் !
***************


நாசிச திமிர்
திணை மாற்றும் தீபகர்ப்பப் புன்னகையில்
மஜ்ஜையில் பிரசவிக்கும்
மல்பெரிக் காடு.


நார்சிச வனம் மாற்றும்
நாசிசத் திமிர்.


மதுவில் மிகுந்த மரண 
யாத்திரை குளிகைகள்
மருகும் மெழுகின்
விழித் திரள்.


பிறை வளர்த்து ஆபிரகாமின்
பலி பீடத்துக்கு அனுப்பும்
டிராகன் நாக்கு


டி ஸ்கேல் மேஜரில்
ஒலிக்கும் பியானோவின்
கறுப்புக் கட்டைகள் தரும்
நெட்டி முறிப்பு


தகனத் துறை எலும்புகள்
நதிப் படுகை நரக நகர்வுகள்


இருள் திறவு ஈமச் சுடர்
களரி முன்னோட்டம்.


ஒளி முகை 
உரத்த பறவைகள்
பாடல் இரண்டும்
இணைந்திசை
குரல்வழி கடக்கும்
கோபுர பறவைகள். 
************


தோல் சாட்டைக்கு மறுத்திருக்கலாம்
நேற்று நாயாக்கி பார்த்த
பின் நவீனத்துவ
பெண்ணுடன்.


'கிகோலோ' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் இந்த வரி புரிந்தால் தலைப்பின் பொருள் புரியும். சமூகத்தில் இப்படி ஒரு சாதி/இனம்(சாதி என்று சொன்னால் அதன் வீரியம்  புரியும்  என்று நினைக்கிறேன்)இருப்பது மேல்தட்டு மக்களுக்கு தெரியும் என்பது என் புரிதல். 


*************


ஒரு ஸ்பெஷல் டச் இந்த வரிகள் !!
உள்ளங்கையை தின்னக் 
கொடுத்து விட்டு 
ரேகைகள் மீதம் வைத்திருக்கின்றன 
இலைகள் !          
'வாழ்வின் முடிவு பரியந்தம் தொடர வேண்டும் நண்பரின் எழுத்துலக பணி' என்ற பிராத்தனை, வேண்டுகோளுடன், மகாசமுத்திரத்தில் ஒரு துளியை ருசித்த மகிழ்வில் முடிக்கிறேன்.
பின் குறிப்பு 


இந்த பதிவு ஒரு கவிதை புத்தகத்தின் விமர்சனம் அல்லது பதிவர் அறிமுகம் அல்ல. விமர்சனம் செய்யகூடிய அளவிற்கு நான் இன்னும் கற்று கொள்ளவில்லை என்பதே உண்மை.  கவிதைகளின் மேல் எனக்கு இருக்கும் ஈடுபாடும்,இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்கு நேசமித்ரன் அவர்களின் இந்த புத்தகம் உதவியது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


அவரை பற்றி பலருக்கும் நன்கு தெரியும், தெரியாதவர்களுக்காக அவரது தளத்தின் லிங்க் நேசமித்ரன் கவிதைகள்  


புதிய பதிவர்களுக்கு இவரது கவிதைகள் ஒரு இனிய அனுபவமாக இருக்கும். இயன்றால் இவரது தளம் சென்று அதை உணருங்கள். என்னை நனைத்த மழை நிச்சயம் உங்களையும் நனைக்கும்...வாழும் காலத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட கூடிய சாபம் பல தமிழ் ஆர்வலர்களுக்கு உண்டு. அதனால் தேடி கண்டுப் பிடித்து அவர்களை இன்னும் 'அதிகமாக எழுத' உற்சாக படுத்துவோம்.


தமிழும், தமிழனும் வளரவேண்டும்...சந்தோசமாக வாழவேண்டும்...!!    பிரியங்களுடன் 
கௌசல்யா
சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் கழுகின் இன்றைய பார்வை...

சுயதொழில் தொடங்குவோம் வாருங்கள்....!!


Tweet

53 comments:

 1. //பள்ளி,கல்லூரி வயதை தாண்டி, வெகுதூரம் வந்துவிட்ட என்னை, மீண்டும் மாணவியாக்கி, கற்று தந்து மகிழும் சுவாரசியம் !//

  கலக்குங்க, கலக்குங்க...

  ReplyDelete
 2. நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு

  நேசமித்திரனை படித்ததில்லை

  இனிமேல் படித்து தெரிந்து கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 3. நேசமித்ரன் கவிதைகளை நானும் படித்திருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கும்.....கவிதை படித்து உங்கள் அனுபவங்ககளை பகிர்ந்து கொண்டமைக்கு.. நன்றாக இருந்தது...

  உங்கள் டெம்லேட் மாற்றியிருப்பது நன்றாக இருக்கிறது...

  ReplyDelete
 4. கவிதைகள் அருமை! அவரின் கவிதைகள் தனித்துவமானவைதான்!

  ReplyDelete
 5. மீண்டும் வருக, கௌசல்யா! நீங்கள் வேலைப்பளு நிமித்தமாக பதிவுலகம் பக்கம் வரவில்லை என்று நினைத்தேன். அருமையான கவிதை புத்தகத்தில் மூழ்கி விட்டீர்கள் என்று தெரிகிறது. நேசமித்திரன் சாரின் கட்டுரைகளும் கவிதைகளும், அவரின் பதிவில் வாசித்து இருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் மிளிரும். ஏனோ, சமீப காலமாக அவர் நிறைய எழுதுவதில்லை. அவருடன் பேசும் வாய்ப்பு, உங்களுக்கு கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. //ஒரு எழுத்தாளரின் கவிதைகள் என படிக்க தொடங்கி...இது ஒரு படைப்பாளியின் 'அற்புத படைப்புகள்' என்று மூடிவைத்தேன் புத்தகத்தை !!// ஹைக்கூ விமர்சனம்!

  ReplyDelete
 7. நேசமித்ரன் கவிதைகளை படித்ததில்லை
  இனிமேல் படித்து தெரிந்து கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 8. // பள்ளி,கல்லூரி வயதை தாண்டி, வெகுதூரம் வந்துவிட்ட என்னை, மீண்டும் மாணவியாக்கி, கற்று தந்து மகிழும் சுவாரசியம் !//

  இந்தப்பதிவு என் மனதோடு பதிந்து விட்டது சகோ
  நேசமித்திரனின் கவிதைகள் படித்ததில்லை
  கண்டிப்பாக படிக்கிறேன்
  பதிவுக்கு மிக நன்றி :)

  ReplyDelete
 9. அருமையான பதிவு... கவிதைகள் மிக நன்றாக உள்ளது... உங்களது பணி தொடரட்டும்....

  ReplyDelete
 10. அருமையான பதிவு... கவிதைகள் மிக நன்றாக உள்ளது... உங்களது பணி தொடரட்டும்....

  ReplyDelete
 11. ஏங்க, இப்படி (தமிழ்)மழை சாரலோட பயங்கரமா அடிக்கும்னு முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா கொடையாவது எடுத்து வந்திருப்பேன். இப்ப பாருங்க, தொப்பலா நனைஞ்சுட்டேன் ;-)
  மீண்டும் வலையுலக பயணம் தொடங்கியமைக்கும், தொடர்வதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்க தமிழ், அதை பயன்படுத்திய விதம், எல்லாம் பலபல மடங்கு அதிகமாயிருக்குதுங்க. பெரிய மாற்றம் உங்க எழுத்துல... நீங்க இனி உங்க தமிழ் பத்தி வருத்தப்படவே வேணாம். சும்மா பின்னிப்பெடலெடுக்குறீங்க....

  பதிவு சூப்பரு.....

  இனி நேசமித்திரன் அவர்களை படிக்கிறேன்.... நன்றி.
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  ReplyDelete
 12. hmmm fine yaar......

  ReplyDelete
 13. திரும்பவும் வந்தாச்சா வாழ்த்துக்கள் அக்கா இனி பழைய படி தூள் கிளப்புங்க

  ReplyDelete
 14. அருமையான பதிவு...

  //தமிழும், தமிழனும் வளரவேண்டும்...சந்தோசமாக வாழவேண்டும்...!! //

  correct... athey...

  ReplyDelete
 15. "வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்"

  நாங்களும் தான்

  மதியோடையில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து இங்கே வந்தேன் .

  ReplyDelete
 16. கவுசல்யா மேடம்...

  மீண்டும் மாணவியாகி தமிழில் நனைந்ததில் மிக்க சந்தோஷம்...

  தோழி விக்னேஸ்வரி தந்த நேசமித்திரன் கவிதை புத்தகம் மிகவும் அருமை என்று நினைக்கிறேன்...

  நல்ல தமிழை படிக்க நினைப்பவர்க்கு நல்ல நூல்கள் தேடி வரும் என்பதற்கு நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவே ஒரு சான்று...

  //படைப்பை மீண்டும் மீண்டும் படித்து பொருள் புரிந்து கொள்ளும் போதே அந்த படைப்பு நிறைவு பெறுகிறது, மனதிலும் பதிந்து விடுகிறது.//

  அழகா சொல்லிட்டீங்க...

  வாழ்த்துக்கள் மேடம்....

  ReplyDelete
 17. உணவு உலகத்தில் உலா வந்ததை அறிந்து ஆவலுடன் "மனதோடு மட்டும்" பார்த்தேன்,சகோ. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வந்துள்ளதை ஒரு நீண்ட பதிவின் மூலம் உணர்த்தி உள்ளீர்கள். பயணம் தொடரட்டும். "வாசல்" எப்போது திறக்கும்?

  ReplyDelete
 18. >>>>எனக்கு இலக்கிய செறிவுடைய கவிதைகளை ஒரு முறை படிக்கும் போது புரிவது மிக சிரமம்

  hi hi ஹி ஹி எனக்கு எந்த கவிதை படித்தாலும் புரியறதில்லை..# தம்பி நீ இன்னும் வளரனும்

  ReplyDelete
 19. >>>..வாழும் காலத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட கூடிய சாபம் பல தமிழ் ஆர்வலர்களுக்கு உண்டு.

  எவ்வளவு பெரிய உண்மை இது .. ஜஸ்ட் லைக் தட் சொல்லீட்டூ போய்ட்டீங்க.. அருமை மேடம்

  ReplyDelete
 20. ஒரு சிறந்த அறிமுகத்திற்கு நன்றி சகோ! :)

  ReplyDelete
 21. ஒரு மாத இடை வெளியில் உங்க ப்ளாக் டெம்ப்ளேட் எல்லாம் மாறி இருக்கு ..நன்றாக இருக்கு ..
  தமிழ் பற்றி நிறைய எழுதி இருக்கீங்க ..நானும் டியூஷன் போகணும் ..நீங்க எந்த வாத்தியார் கிட்ட படிச்சீங்க ..

  ReplyDelete
 22. சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேம்.. :)

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரி, ஒரு நீண்ட விமர்சனப் பாணியிலான பதிவு. அருமையாக அலசியிருக்கிறீர்கள். இந்தக் கவிஞரைப் பற்றி இன்று தான் உங்களின் வலைப் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. நேசனின் கவிதையை மண்ணில் புரண்டு எழும்பி தலையைப் பிச்சு எடுத்து,கடைசியில் அவரிடமே கேட்டுத் தெளிந்து வியப்புறும் நேசனின் ரசிகை நான்.வாழ்த்துகள் அவருக்கு.விமர்சித்த உங்களுக்குப் பாராட்டுகள் கௌசி !

  ReplyDelete
 25. உங்களின் மீள் வருகைக்கு என் வணக்கம்.....

  உங்க வலைதலைப்பு தமிழில் மின்னுகிறது.... மிக அழகாக...

  வாழ்த்துக்களும் வணக்கமும்.

  ReplyDelete
 26. வாங்க தோழி நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான் பதிவுடன்,இனி பார்க்கிறேன்

  ReplyDelete
 27. //தமிழும், தமிழனும் வளரவேண்டும்...சந்தோசமாக வாழவேண்டும்...!!//

  இது போதுங்க...

  ReplyDelete
 28. இவரது கவிதைகளை படித்து புரிந்துகொள்ள முயன்று தோற்றவர்களில் நானும் ஒருவன்...

  ReplyDelete
 29. மீண்டும் வருகைக்கு மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்க.புதிய நல்ல பல படைப்பை தந்து அசத்துங்க கௌசல்யா.

  ReplyDelete
 30. @@ சங்கவி...

  நன்றி சதீஷ்.  @@ VELU.G...

  நிச்சயம் படிங்க...புது அனுபவம் பெறுவீர்கள். நன்றி.


  @@ சௌந்தர்...

  நன்றி.  எஸ்.கே...

  உண்மைதான் எஸ்.கே. நன்றி.

  ReplyDelete
 31. @@ Chitra said...

  //மீண்டும் வருக, கௌசல்யா! நீங்கள் வேலைப்பளு நிமித்தமாக பதிவுலகம் பக்கம் வரவில்லை என்று நினைத்தேன். அருமையான கவிதை புத்தகத்தில் மூழ்கி விட்டீர்கள் என்று தெரிகிறது.//

  ம்...நல்ல கிண்டல் சித்ரா. :)) வேலை சம்பந்தமா ஊர் சுத்திட்டே இருந்தேன். இன்னும் சில மாதங்களுக்கு அப்படித்தானே இருக்கும் என்று நினைக்கிறேன்.

  நீங்கள் அவர் கவிதைகளின் ரசிகை என்று புரிகிறது சித்ரா. மகிழ்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 32. @@ middleclassmadhavi...

  ரசனைக்கு நன்றி.


  @@ S Maharajan...

  அவசியம் படியுங்கள் நண்பரே.  @@ Harini Nathan...

  உங்கள் மனதில் பதிந்த பதிவை எண்ணி மகிழ்கிறேன் ஹரிணி. நன்றி.  @@ Jaffar sathick...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 33. //உள்ளங்கையை தின்னக்
  கொடுத்து விட்டு
  ரேகைகள் மீதம் வைத்திருக்கின்றன
  இலைகள் ! //

  ந‌ச்சென‌ இருக்கும் வ‌ரிக‌ள்

  ReplyDelete
 34. வருக!

  மேலோட்டமாகப் படித்தேன். கவரும் கவிதைகள். திரும்பி வருகிறேன்.

  ReplyDelete
 35. @@ பத்மஹரி...

  நீங்கள் நட்பின் காரணமா மிகைபட்டு சொல்றீங்க...இருந்தும் உங்களின் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன்.

  அனுபவம் நமக்கு தினமும் பல பாடங்களை கற்றுகொடுத்து கொண்டிருக்கிறது. இறுதிவரை நாம் அனைவருமே பயின்று கொண்டே இருக்க போகிறோம்.இது உண்மை தானே...?

  நேசமித்ரன் அவர்களிடம் இருந்து சொற்கள் பிரயோகத்தின் ஒரு வித்தியாசமான நடையை தெரிந்து கொண்டேன்...

  ரசனைக்கு நன்றி ஹரி.

  ReplyDelete
 36. @@ kaveesh...

  thank u friend.


  @@ சசிகுமார்...

  நான் வந்துவிட்டேன். வாழ்த்துக்கு நன்றி சசி.  @@ சே.குமார்...

  நன்றி குமார்.  @@ angelin said...

  //மதியோடையில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து இங்கே வந்தேன் .//

  பிறருக்கு பின்னூட்டம் இடுவதில் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா ? பின்னூட்டம் இட சலிப்பவர்கள் இதை நோட பண்ணிக்கோங்க :))

  நெடு நாள் கழித்து உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்கிறேன் ஏஞ்சல். உங்களை இங்கே வரவச்ச மதிசுதாவிற்கு நன்றி.

  ReplyDelete
 37. @@ R.Gopi said...

  //நல்ல தமிழை படிக்க நினைப்பவர்க்கு நல்ல நூல்கள் தேடி வரும் என்பதற்கு நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவே ஒரு சான்று..//

  கோபி இந்த ஒரு புத்தகம் மட்டும் இல்லை, வேறு இரண்டு நண்பர்கள் எழுதிய புத்தகமும் எழுதியவர்களின் மூலமே எனக்கு பரிசாக கிடைத்திருக்கிறது. மற்றொரு சந்தர்பத்தில் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

  ரசித்து பதிவை படித்ததுக்கு நன்றி.

  ஆமாம் அது என்ன மேடம் சொல்லி ரொம்ப பெரிய ஆளாக்குரீங்க ? just call me kousalya, o.k ?

  :))

  ReplyDelete
 38. @@ FOOD said...

  //உணவு உலகத்தில் உலா வந்ததை அறிந்து ஆவலுடன் "மனதோடு மட்டும்" பார்த்தேன்//

  அட, கவிதை மாதிரியே இருக்கே படிக்கும் போது...

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 39. @@ சி.பி.செந்தில்குமார் said...

  //hi hi ஹி ஹி எனக்கு எந்த கவிதை படித்தாலும் புரியறதில்லை..# தம்பி நீ இன்னும் வளரனும்//

  அப்புறம் வாசல் வந்து கமெண்ட் பண்ணறது எல்லாம் சும்மாவா ? எனக்கு என்னவோ நீங்க ரொம்ப வளர்ந்துடீங்கனு தோணுது...!! :))

  நன்றி செந்தில்.

  ReplyDelete
 40. @@ Balaji saravana...

  நலமா பாலா...?

  நன்றி.


  @@ இம்சைஅரசன் பாபு.. said...

  //ஒரு மாத இடை வெளியில் உங்க ப்ளாக் டெம்ப்ளேட் எல்லாம் மாறி இருக்கு ..//

  ஆமாம் பாபு டெம்பிளேட் மாத்த ஒரு மாசம் ஆகிருக்கு. :))

  //நன்றாக இருக்கு ..//

  நன்றி

  //தமிழ் பற்றி நிறைய எழுதி இருக்கீங்க ..நானும் டியூஷன் போகணும் ..நீங்க எந்த வாத்தியார் கிட்ட படிச்சீங்க ..//

  உங்களுக்கும் ரொம்ப தெரிஞ்சவர் தான்...பேர் சொன்னா அவருக்கு பிடிக்காதே...ஆனா உங்களுக்கு தெரியனுமேனு சொல்றேன்...

  அவர் பெயர் தேவா !

  பீஸ் ரொம்ப ஜாஸ்தி, உங்களுக்கு வசதி இருந்தா கேட்டு பாருங்க. சொல்லி தருவார்.

  :)))

  ReplyDelete
 41. @@ மாணவன்...

  ரொம்ப நன்றி


  @@ நிரூபன்...

  உங்களின் வருகைக்கு நன்றி. அவரை பற்றி புதியவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் விருப்பம் நீங்க சொன்ன பிறகு நிறைவேறியதாக மகிழ்கிறேன்.

  ReplyDelete
 42. @@ ஹேமா said...

  //நேசனின் கவிதையை மண்ணில் புரண்டு எழும்பி தலையைப் பிச்சு எடுத்து,கடைசியில் அவரிடமே கேட்டுத் தெளிந்து வியப்புறும் நேசனின் ரசிகை நான்//

  என்ன ஹேமா இப்படி ? நீங்க சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது...! அவர் கவிதையின் ஒரு தீவிரமான ரசிகை என்று புரிகிரதுபா.

  மறுபடியும் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன் தோழி.

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 43. @@ வேடந்தாங்கல் - கருன்...

  உங்க பேர் பார்த்ததும் பறவைகள் நினைவுக்கு வருகிறது.

  வருகைக்கு நன்றி.


  @@ சி.கருணாகரசு said...

  //உங்க வலைதலைப்பு தமிழில் மின்னுகிறது.... மிக அழகாக...//

  உங்களுக்கு இப்போது திருப்தி தானே...தமிழின் ஆர்வம தெரிகிறது நண்பரே. நன்றி .

  ReplyDelete
 44. @@ Jaleela Kamal...

  நீண்ட நாள் கழித்து வந்தும் என்னை நினைவு வைத்து வந்த உங்களுக்கு நன்றி தோழி. மகிழ்கிறேன்.

  ReplyDelete
 45. @@ அன்பரசன்...

  //இவரது கவிதைகளை படித்து புரிந்துகொள்ள முயன்று தோற்றவர்களில் நானும் ஒருவன்...//

  மீண்டும் மீண்டும் படிக்கும் போது நிச்சயம் புரியும் அன்பரசன். நீங்களும் அவர் ரசிகர் என்பதில் மகிழ்கிறேன்.

  ReplyDelete
 46. @@ asiya omar...

  ரொம்ப சந்தோசம் தோழி...வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் எழுத கூடிய அளவில் தான் வேலைகள் இருக்கிறது. எழுதும் பதிவை உருப்படியா எழுதணும் என்று அதிக மெனக்கிட வேண்டி இருக்கிறது :))

  நன்றி தோழி.

  ReplyDelete
 47. @@ jothi...

  வருகைக்கும் அவரின் கவி வரிகளை ரசித்ததிர்க்கும் நன்றிகள்.

  ReplyDelete
 48. @@ அப்பாதுரை...

  வாங்க. திரும்பி வரேன்னு சொன்னீங்க எப்பனு சொல்லலையே...? :))

  நன்றி சகோ.

  ReplyDelete
 49. நல்ல வழிகாட்டுதல்கள் வரப்பெற்றோம்... நேசமித்ரன் பதிவுலகிற்கு சென்று பார்க்க...

  ReplyDelete
 50. அருமையான பதிவு...

  ReplyDelete
 51. மீண்டும் எழுத வந்தீர்கள்; நன்று.

  கவிதைகளை நான்கைந்து முறை படிக்க வேண்டியிருந்தது - சுவையாக இருப்பது ஒரு புறம் இருக்கட்டும்; தேவையில்லாத ஆங்கில உரசல்களோ என்று தோன்றியது. நீங்கள் சொல்லியிருப்பது போல் தமிழின் அன்னியம் தோன்றக்காரணம் இவர் சொல்லாடலின் பொருள் புரியாத அன்னிய உரசல்கள் என்று நினைக்கிறேன். 'ஆலிவ் தளிர்' 'ஸ்க்ரீன் சேவர் மௌனம்' போன்றவை கவிதைக்கு ஒரு வண்ணம் சேர்ப்பது உண்மை என்றாலும் பொருட்செறிவில் 'அட' போட வைக்கவில்லை. மன்னியுங்கள். சுட்டிக்கு நன்றி. தொடர்ந்து படிப்பேன்.

  இருக்கட்டும்... இந்தக் கவிதைக்கு என்ன பொருள்? சும்மா வார்த்தை விளையாட்டா அல்லது பொருளிருக்கிறதா? (என் அறிவு அடிமட்டத்துக்கும் கீழே என்று வையுங்கள் :)

  >>ஆலிவ் தளிர் ஏந்திய பறவையின் குரலில் ஆர்க்மிடிசின் மகா நிர்வாணச் சொல்

  ReplyDelete
 52. நேசமித்திரன் சொல்வது போல் 'நாம் புரிந்து தன் தீர வேண்டும் என்பதில்லை' - இதன் நேர்மை எனக்குப் பிடித்திருந்தாலும் புரியாமல் படிப்பதிலும் நேர்மையில்லையே என்று தோன்றுகிறது. இரண்டுமே போலியா?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...