மத்திய, மாநில அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.....இது இப்போதைக்கு அவசியமா என்பதே எனக்குள் எழும் ஒரு கேள்வி. இதனை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள் உங்களின் மேலான ஆலோசனைகளுக்காக இங்கே !
மத்திய அரசு
மத்திய நிதித்துரை, மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60 இல் இருந்து 62 க்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. மொத்தம் இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் ஊழியர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள் . இவர்கள் ஓய்வு பெறும் போது ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற சலுகைகள் என பல ஆயிரம் கோடிகள் வழங்க வேண்டும்.
* இவர்களுக்கு ஓய்வு கொடுப்பதின் மூலம் பெரும் நிதி சுமை ஏற்படும்
* அந்த இடத்திற்கு புதிய ஆட்களை தேர்ந்து எடுக்க செலவு.
அதற்கு பதில் இவர்களை, கூட இன்னும் இரண்டு வருடங்கள் பணி நீட்டிப்பு செய்வது நல்லது என்று நிதித்துறை காரணங்களை அடுக்குகிறது. இப்படி செய்வதால் நிதிசுமையை இந்த வருடம் சமாளித்து விடலாம், ஆனால் இரண்டு வருடம் நீட்டிப்பதின் மூலம் தொடரும் செலவுகளை என்ன செய்வார்கள்......?! நீட்டித்த வயது வரம்பை மறுபடி குறைத்து விடுவார்களா.....?!!
மாநில அரசு
மத்திய அரசு போல மாநில அரசில் பணியாற்றுவோரின் ஓய்வுறும் வயதை 58 இல் இருந்து 60 க்கு நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதுவும் இப்போது நடைபெறப் போகிற இடைக்காலக் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று செய்திகள் உறுதி படுத்துகின்றன.
ஆனால் இதில் அரசின் சுயநலம் தான் இருக்கிறது. இந்த ஆண்டில் 2 லட்சம் பேர் ஓய்வு பெற உள்ளனர், அவர்களின் ஓட்டு வங்கியை கைப்பற்ற இப்படி ஒரு வழி என்பதுதான் உண்மை.
இப்படி மத்திய, மாநில அரசுகள் தங்களின் சுயநலதிற்க்காகவும், நிதிசுமையை காரணம் காட்டியும் இப்படி ஓய்வுறும் வயதை நீட்டிப்பது சரியன்று என்பது என் கருத்து.
படித்த பட்டதாரிகள் - பரிதாபம்
ஓய்வுறும் வயதை நீட்டிப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தாமதபடுகிறது இல்லை மறுக்கபடுகிறது.....படித்துவிட்டு அரசாங்கம் வேலை கொடுக்கும் என்ற கனவில் காத்திருப்பவர்களின் நிலை என்ன???
தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை மட்டும் 49,85,289 பேர் !!?? (49 லட்சத்து 85 ஆயிரத்து இருநூற்றி எண்பத்தைந்து )
இந்த கணக்கு 2004 ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்டது...இப்போது 2011.....?!!
இன்றைய இளைஞர்கள் நன்றாக படித்து கல்லூரி படிப்புடன், கணினி படிப்பு போன்ற பிற தகுதிகளையும் வளர்த்து வைத்து இருக்கிறார்கள்...உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பிலும் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்க வேலை என்பது பலருக்கு எட்ட கனியாகவே இருந்து விடுகிறது. அரசாங்க வேலை கிடைத்ததும் திருமணம் என்ற உறுதியில் பலரும் இருப்பதால் திருமணமும் தள்ளி போய், காலம் கடந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.
சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் வெளிநாட்டு வேலைக்கு செல்லலாம் என்று வயல், வீடு விற்று பணம் ஏற்பாடு செய்து சிலர் சென்றாலும், அதிலும் பலர் சரியான வழிகாட்டுதல் தெரியாமல், தவறானவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் . வெளிநாடு சென்ற நம் இளைஞர்களும் தங்களது திறமையை, அடுத்த நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவிடுகிறார்கள்....?!
நம் அரசாங்க அலுவலகத்தில் இளைஞர்கள் இருக்கிறார்களா என்று தேட வேண்டி இருக்கிறது.
இன்று மின்னல் வேகத்தில் போய்கொண்டிருக்கிற,வேகமான உலகத்தில வயதானவர்களை மட்டும் முன் நிறுத்தி எதை சாதிக்க முடியும் ??
அரசியலில் ஏன் இல்லை ஓய்வு ?
எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம்.
மத்திய, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என்று அனைத்திலும் ஓய்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கிறது.... பெரிய அறிவார்ந்த நீதிபதிகள், திறமையான ராணுவ அதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் போலிஸ் துறை உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த அரசியலில் மட்டும் ஏன் அப்படி ஒன்று இல்லை ?? இதை பற்றி ஏன் யாரும் கேள்வி எழுப்புவதும் இல்லை....?!!
பாராளுமன்றம், சட்டமன்றம் எங்கு பார்த்தாலும் ஒரே வயதானவர்களின் தளர்வான நடைகளின் அணிவகுப்பு. மிக கொடுமைங்க.....!? இளைஞர்கள் எங்கே போனார்கள் ?! அவர்களுக்கு அரசியல் தெரியாதா ??! தகுதி இல்லையா ?? வயது முதிர்ந்தவர்களிடம் அனுபவம் இருக்கும் மறுப்பதற்கில்லை, ஆனால் வெறும் அனுபவம் மட்டுமே இந்த நவீன காலத்திற்கு போதும் என்று சொல்ல இயலாது. இன்றைய காலத்திற்கு ஏற்ப திறமையான, நன்கு படித்த, உத்வேகத்துடன் கூடிய, கால மாற்றத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய இளைஞர்கள் தான் தேவை.
சமீபத்தில் நமது குடியரசு தினம் அன்று தமிழக தலைநகரில் நடந்த கொடி ஏற்றும் வைபவத்தின் போது நம்ம கவர்னரையும், முதல்வரையும் பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. (இதை இன்னும் தெளிவாக விளக்குவது அவ்வளவு மரியாதையாக இருக்காது)
வயதானவர்களை ஏன் இப்படி அனுபவம், கௌரவம் என்ற பெயரில் பதவியில் அமர்த்தி அவர்களை துன்பப்படுத்தணும். அதற்காக அனுபவஸ்தர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதல்ல. அவர்களின் தகுதி, திறமை ,அறிவு, அனுபவம் இவற்றை வைத்து அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஆலோசனை குழு என்று ஒன்றை அமைக்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்ட வயதுடன் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அவர்களும் தங்கள் வயதோதிகத்தை மனதில் வைத்து தானாக முன் வந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்...?!
அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்ட வயதுடன் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அவர்களும் தங்கள் வயதோதிகத்தை மனதில் வைத்து தானாக முன் வந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்...?!
புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள், புதிய எண்ணங்கள், புதிய தீர்வுகள், புதிய உலகம் காண பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
வயதுமுதிர்ந்தவர்களே ! இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் !! இந்தியா (இனியாவது)ஒளிரட்டும் !!!
பதிவுலக நட்புகளுக்கு என் வணக்கங்கள்.... என் முந்தைய பதிவிற்கு உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பின்னூட்டம் போட்டிருந்தீர்கள் . மிகுந்த வேலை பளுவின் காரணமாக உங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் போய்விட்டது. அதற்காக முதலில் என்னை மன்னியுங்கள்.
ReplyDeleteஉங்களது பின்னூட்டங்கள் பதிவுகளை எழுத எனக்கு அதிக உத்வேகத்தை கொடுக்கிறது என்பதை நான் பெருமையாக சொல்லி கொள்வேன்.
ஒவ்வொரு பின்னூட்டமும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை நன்கு அறிவேன். இனி பதில் கொடுக்க இயன்றவரை முயற்சிக்கிறேன்...பிழை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
பிரியங்களுடன்
கௌசல்யா
சரியான நேரத்தில் மிகச் சரியாக
ReplyDeleteபதியப்பட்ட பதிவு.
எந்தக் குழப்பமும் இல்லாமல் மிகத் தெளிவாக
உங்கள்(எங்கள்)கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
//அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்ட வயதுடன் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அவர்களும் தங்கள் வயதோதிகத்தை மனதில் வைத்து தானாக முன் வந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்//
ReplyDeleteநீங்க இப்படி எல்லாம் சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தானே நாங்க தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்து வைசிருகோம் ..இளைஞர்கள் எல்லோரும் அங்க போய் புத்தியை தீட்டி அரசியலுக்கு வருவாங்க .ஹி ........ஹி
என்னை மாதிரி உங்களை நெஞ்சு குமுரிகொண்டு இருக்கும் பெற்றோர்கள் நிறைய பேர் .தமிழ் நாட்டில் மொத்தம் 65லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து விட்டு காத்து இருக்கிறார்கள் .எல்லா அரசு வேலைகளுக்கும் பரீட்சை வைத்து தான் செலக்ட் பண்ணுறாங்க .........பள்ளி ஆசிரியர் வேலை மட்டுமே பனி மூப்பு அடிபடையி வேலைக்கு எடுக்க படுகிறார்கள் .அப்போ எதற்கு இந்த வேலை வாய்ப்பு அலுவலகம் .
ReplyDeleteஅரசு ஊழியர்களை ஒரு காட்ச்சி ஒட்டு வங்கியாகவே கருதுகிறது அந்த ரெண்டு லட்சம் ஊழியர்களின் குடும்பமும் அவர்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள் என்ற எண்ணம ..அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று சொல்ல்வது ஒரு பக்கம் இருந்தாலும் அடி தடி உள்ளவர்கள் தான் இதற்க்கு சரி படும் .
இளைஞர்கள் வர வேண்டும் என்றால் அரசியல் வாதிகளுக்கு பட்ட படிப்பு அவசியம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதற்க்கு இந்த அரசியல்வாதிகள் கண்டு பிடித்த முறை தான் open university degree.
ஆனால் இளைஞர்கள் இந்த முறயில் படித்தால் இதே அரசியல் வாதிகள் ஒரு சட்டம் இயற்றி open university ல படிச்ச அரசு வேலை கிடையாது என்கிறது .....இதற்க்கு எல்லாம் எப்போ விடை கிடைக்குமோ அப்போ தான் இளைஞர்கள் அரசியலுக்கு வர முடியும் என்று எண்ணுகிறேன்
கட்சியில் எத்தனை வயது வேண்டும் என்றாலும் தலைவராக இருக்கட்டும் ஆனால்.... முதல்வர் பதவி...பிரதமர் பதவி M.L.A பதவி இதற்கெல்லாம் ஓய்வு பெரும் வயது வரம்பு வைக்கவேண்டும்
ReplyDeleteசூடான பதிவு மூலம், உங்களின் கருத்துக்களை தெளிவாக சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteநல்ல பதிவு மற்றும் கருத்து! நன்றி.
ReplyDeleteபெரியவர்களின் வழிகாட்டுதலோடு இளைஞர்கள் ஆட்சி செய்வது நல்லதுதான்!
ReplyDeleteமிகச்சரியான அலசல். அரசும் அரசு இயந்திரமும் முதியோர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதின் லட்சணம்தான் எல்லாம அவர்களைப்போல் தள்ளாட்டத்திலேயே போகிறது. மிகவும் தெளிவான பதிவு.
ReplyDeleteநல்ல கருத்துக்கள் தான்... பூனைக்கு யாரு மணி கட்ட?
ReplyDelete//சௌந்தர் said...
ReplyDeleteகட்சியில் எத்தனை வயது வேண்டும் என்றாலும் தலைவராக இருக்கட்டும் ஆனால்.... முதல்வர் பதவி...பிரதமர் பதவி M.L.A பதவி இதற்கெல்லாம் ஓய்வு பெரும் வயது வரம்பு வைக்கவேண்டும்//
கண்டிப்பாக பாஸ் கிழட்டு பசங்க தொல்ல தாங்க முடியலப்பா
மிகச் சிறப்பான பதிவு சகோ! ஒவ்வொரு படித்த குடிமகனிடம் இருக்கும் கேள்வியை தெளிவாய் பதிவிட்டுள்ளீர்கள்!
ReplyDeleteநல்லவிழிப்புணர்வு பதிவு கவுசல்யா
ReplyDeleteசரியான பதிவு
ReplyDeleteஉங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்
\\புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள், புதிய எண்ணங்கள், புதிய தீர்வுகள், புதிய உலகம் காண பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.\\
ReplyDeleteநல்ல பதிவு.
சரியான பதிவு
ReplyDeleteசாரி, எனக்கு ஓட்டு போடும் வாய்தில்லை...ஹெ ஹெ///இதனால் இந்த பதிவுக்கு Just Present Ma'm!!
ReplyDelete:)
superb and fantastic post.
ReplyDeleteஒன்று செய்வோம். வருடா வருடம் வயதானவர்களில் பாதி பேரை.. வேண்டாம்.
ReplyDeleteஇந்தச் சட்டத்திற்கு மறுபக்கம் உண்டே? பிள்ளைகளை நம்பிக் காலம் தள்ள வேண்டிய நிலையை இரண்டு வருடங்களுக்கு ஒத்திப் போட அந்த முதியவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிறதே? பெண்கள் திருமணக்கடனை அடைக்க இன்னும் இரண்டு வருடங்களுக்கு சம்பாதிக்க ஒரு வழியாகிறதே?
சட்டம் வந்தால் இன்றைய இளைஞர்களுக்கும் பயன்படுமே - இன்னும் சில வருடங்களில்? இளைஞர்களாகவே இருப்பார்கள் என்று தோன்றவில்லை :)
ஓய்வுபெறும் வயதைக் நீடிக்கும் சட்டமும் வேண்டும்; அரசாங்க வேலைகளில் முப்பத்து மூன்று சதவிகிதம் படித்துப் பட்டம் பெற்று வந்தவர்களின் முதல் வேலை வாய்ப்பாகும் சட்டமும் வேண்டும்.
நம் அரசியல் தலைவர்களைப் பாருங்கள் - ஓய்வைப் பற்றி இவர்களா பேசுவார்கள்?!
தவறான கருத்து...
ReplyDeleteஇன்று இளைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்பு ,ஓய்வு வயதில் இருப்பவர்களுக்கு இல்லை...
எனவே அவர்களுடன் போட்டி போடுவது தவறு...
//சௌந்தர் said...
ReplyDeleteகட்சியில் எத்தனை வயது வேண்டும் என்றாலும் தலைவராக இருக்கட்டும் ஆனால்.... முதல்வர் பதவி...பிரதமர் பதவி M.L.A பதவி இதற்கெல்லாம் ஓய்வு பெரும் வயது வரம்பு வைக்கவேண்டும்
//
yes. it's true.
//வயதுமுதிர்ந்தவர்களே ! இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் !! இந்தியா (இனியாவது)ஒளிரட்டும் !!!//
ReplyDeleteஅறுபது வயதுக்கு மேல இருப்பவர்கள் அரசியலை விட்டு ஓய்வு பெறவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
பார்வையாளன் சொல்வது சரியே.
ReplyDeleteஇளைஞர்களுக்குப் போட்டி முதியவர்கள் அல்ல.
Ramani...
ReplyDelete//உங்கள்(எங்கள்)கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்//
உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிங்க.
இம்சைஅரசன் பாபு...
ReplyDeleteபாபு மிக தெளிவாக, விரிவாக உங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கீங்க...அரசியல்வாதிகள் மனது வைத்தால் குறைகளை எல்லாம் நிறைகளாக மாற்றலாம். படித்தவர்கள் அரசாங்க வேலைக்கு காத்திருந்து விட்டு ஏதோ கிடைத்த வேலைக்கு படிப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்...எங்கள் ஊரில் பட்டபடிப்பு முடித்த சிலர் இரவில் (திருட்டுத்தனமாக ) கூலிக்கு மண் அள்ளி போட லாரிக்கு போவதை கேள்விப்பட்டு இருக்கிறேன்.
வேலை வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள் அப்படினா 65 லட்சம் பேர் எப்படி ??! முரண்.
@@ சௌந்தர் said...
ReplyDelete// முதல்வர் பதவி...பிரதமர் பதவி M.L.A பதவி இதற்கெல்லாம் ஓய்வு பெரும் வயது வரம்பு வைக்கவேண்டும்//
நல்ல யோசனைதான்...ம்...நடக்கணுமே....!! கருத்திற்கு நன்றி சௌந்தர்.
@@ Chitra...
ReplyDeleteநன்றி சித்ரா.
@@ வெங்கட் நாகராஜ்...
நன்றி சகோ.
@@ எஸ்.கே said...
//பெரியவர்களின் வழிகாட்டுதலோடு இளைஞர்கள் ஆட்சி செய்வது //
நன்றாக இருக்கும்...நன்றி எஸ்.கே
@@ இனியவன் said...
ReplyDeleteநன்றி சகோ.
@@ Arun Prasath said...
// பூனைக்கு யாரு மணி கட்ட?//
பதில் இல்லாத கேள்வி...! வேறென்ன நம் இயலாமை...?!
நன்றி அருண் பிரசாத்.
@@ sulthanonline...
நன்றி சகோ