Friday, January 14

11:36 AM
55வந்து விட்டது வழக்கம் போல்
வருடத்தின் அடுத்த பண்டிகை !

ஒட்டடை அடித்து பழையனவற்றை  கழித்து
வெளியே கொட்டி வீதியில் அசுத்தபடுத்துங்கள்,
நம் வீடு சுத்தமாகட்டும் !!?

கண்டதையும் கொளுத்தி போட்டு 
காற்றை மாசு படுத்துங்கள்
தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?

விவசாயத்தில் விளைந்த புதுநெல்லை வைத்து கொண்டாட 
அருகதை அற்றவன் தமிழன் என்று அரசு தருகிறதாம் 
இலவச  பொங்கல் பொருட்கள் !?

யானை கட்டி போரடித்த மரபு என்று பழங்கதை பேசிக்கொண்டு 
வீணாய் போகாமல் ரேசன் கடை முன் கையேந்துங்கள்  
சோழன் அன்றே செத்துவிட்டான் !?

உழைக்க வழி செய்து கொடுப்பதை விடுத்து  
உழைத்தவர்கள் உட்கார்ந்து பொழுது போக்க 
தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?

விவசாய நிலங்கள் பிற மாநிலத்தவரின் ரியல் எஸ்டேட்களாக 
மாறி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத 
சுயநல அரசு , கையாலாகாத மக்கள் !?

தீமையை கொளுத்த முயன்று தன்னையே 
கொளுத்தி கரிகட்டையான தமிழன் முத்துகுமார் 
மறைந்து மறக்கடிக்கபட்டு விட்டான்  !?

பச்சை தமிழனாய் பிறந்தது பாவம் என்று 
தாமதமாய் உணர்ந்து சிகப்பு தமிழனாய் 
கடல் தாண்டி அழிந்து கொண்டிருக்கிறான் !?

மீன் பிடிக்க போன தமிழனின் உயிர் பிடித்து செல்லும் 
வாடிக்கை இன்று வேடிக்கையாகி 
எமக்கு பழகிவிட்டது தினசரி செய்திகளும் !?
  
அக்கறையில்லை எதைபற்றியும், எம்மக்களுக்கு 
பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள் 
அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?

மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை 
கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து 
பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?

மாட்டு பொங்கல் !


பக்கத்து மாநில மக்களின் உடல் சதையை வளர்க்க அடிமாட்டை அனுப்புங்கள், அது வியாபாரம். பத்து மாடுகள் நிற்கும் இடத்தில் அம்பது மாடுகளை அடைத்து தலை வெட்டப்படும் முன்னரே உயிர் வதைக்கும் சித்திரவதையை செய்து கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு மற்றொரு பக்கம் அவற்றை அலங்கரித்து மாட்டுபொங்கலாம்...?!!மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?

காணும் பொங்கல் !

இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!

வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!

வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!

பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !
படங்கள் - நன்றி கூகுள்

Tweet

55 comments:

 1. நான்தான் முதலாவதா?


  கண்டதையும் கொளுத்தி போட்டு
  காற்றை மாசு படுத்துங்கள்
  தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?

  நச் வரிகள்! நல்ல கவிதை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. எல்லோருக்கும் இருக்கும் மன குமுறல் சகோ ...குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...........

  ReplyDelete
 3. //வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!// ஏதாவது சொல்லவே பயமாயிருக்கு... அதனாலே, நீங்க சொன்னதே ரிப்பீட்டு!!


  //பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !//

  ReplyDelete
 4. ”நச்” கவிதை....

  சொல்லி இருக்கும் விஷயம்... உண்மை... என்ன செய்யப் போகிறோம்...

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பளார்னு கண்ணத்துல அறைஞ்ச மாதிரி இருக்கு பதிவு. அடி வாங்கிக்கிட்டு அதுக்காக நன்றி சொல்றது இதுதான் முதல் தடவை! இருந்தாலும் சந்தோஷம்தான்!! பதிவுல மேற்கோள் காட்ட நிறையவே இருக்கு, ஆனா எனக்கு இந்த வரிகள் நல்வழி காட்டுகின்றன என்பதால்...
  //இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!//

  பொங்கல் வாழ்த்துக்களுடன் உங்களுக்கு ஒரு தலைவணக்கம்.....!!

  ReplyDelete
 6. //வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!//

  வேற என்ன செய்வது?????

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அக்கா, என்ன சொல்றதுனே தெரியல!!! நீங்க சொன்ன எந்த உண்மைகளையும் மறுக்கமுடியாது, மறக்கவும் முடியாது.... ஒவ்வொரு விஷயமும் ஆணியடிச்ச மாதிரி இருக்கு.

  //கண்டதையும் கொளுத்தி போட்டு
  காற்றை மாசு படுத்துங்கள்//

  அரசு தருகிறதாம்
  இலவச பொங்கல் பொருட்கள் !?

  ரேசன் கடை முன் கையேந்துங்கள்
  சோழன் அன்றே செத்துவிட்டான் !?

  உட்கார்ந்து பொழுது போக்க
  தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?

  பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள்
  அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?

  மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?

  வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
  தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!

  வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!
  //

  மேற்சொன்ன எதை ஜீரணிப்பது? பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல தடுக்கிறது இந்த நிதர்சனம்.
  நம் நிலையை நினைத்து மனம் கனக்கிறது...

  ReplyDelete
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. முன்னே மாதிரி இப்பெல்லாம் பண்டிகைகள் இருப்பதில்லை. காணும்பொங்கல் என்பது உறவினர்களை சந்தித்து இனிமையாக பழகுவது என்பது போய் வெளியே எங்கேயாவது சென்று வருவது என ஆகிவிட்டது. மாட்டுப் பொங்கல் கிராமங்களில் கூட முன்போல் முழுமையாக கொண்டாடப்படுவதில்லை! பல பண்டிகைகள் டிவியிலேயே கழிகின்றன!

  ReplyDelete
 10. கௌசி...நீங்கள் சொன்ன அத்தனையுமே உண்மையான பச்சைத்தமிழனுக்கு வலிக்கும்.
  ஆனால்...அவன் மனிதனாய் இருந்தால் மட்டுமே!

  ReplyDelete
 11. உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும். உரைக்காமல் இருக்க முடியாது. ஊதுகின்ற சங்கை ஊதிவிட்டீர்கள் , ஒலிக்க வேண்டியவர்கள் காதுகளில் ஒலிக்கும் என்ற நம்பிக்கைகளோடு "தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்" தங்களுக்கு.

  ReplyDelete
 12. தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. // வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!! //

  இது நல்ல காமெடி... நம்ம கடைலயும் இதே படம் தான்...

  ReplyDelete
 14. என்ன சலிப்போட கவிதா தொடன்குத்கு என்று பாத்தால்
  பின்னுக்கு சாட்டை அட்டி கொடுகிறது வரிகள்

  அருமையான படைப்பு

  பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. >>>மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை
  கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து
  பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?

  சூப்பர் லைன்ஸ்

  ReplyDelete
 16. @@ மாத்தி யோசி said...

  //நான்தான் முதலாவதா?//

  மாத்தி யோசிக்க வச்சிடீங்க முதலில் வந்து... :)))

  //நச் வரிகள்! நல்ல கவிதை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்//

  உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 17. @@ இம்சைஅரசன் பாபு.. said...

  //எல்லோருக்கும் இருக்கும் மன குமுறல் சகோ .//

  அதுதான் இங்கே வார்த்தைகளாய் வெளி வந்திருக்கு பாபு...

  ReplyDelete
 18. @@ middleclassmadhavi said...

  //ஏதாவது சொல்லவே பயமாயிருக்கு... அதனாலே, நீங்க சொன்னதே ரிப்பீட்டு!!//

  நீங்க பயபடுற மாதிரி நான் எதுவும் சொல்லலையே...!? :))))

  உங்களின் முதல் வரவிற்கு நன்றியும், உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 19. @@ வெங்கட் நாகராஜ் said...

  // சொல்லி இருக்கும் விஷயம்... உண்மை... என்ன செய்யப் போகிறோம்...//

  விடை இல்லாத கேள்வி போல் தெரிந்தாலும் அதற்கான விடையும் நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நினைவு படுத்தவே இந்த பதிவு.

  நன்றி சகோ. உங்களுக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை உங்கள் ஆதங்கத்தை படித்த பிறகு இருப்பினும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 21. வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை உங்கள் ஆதங்கத்தை படித்த பிறகு இருப்பினும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 22. @@ பத்மஹரி said...

  //பளார்னு கண்ணத்துல அறைஞ்ச மாதிரி இருக்கு பதிவு. அடி வாங்கிக்கிட்டு அதுக்காக நன்றி சொல்றது இதுதான் முதல் தடவை! இருந்தாலும் சந்தோஷம்தான்!!//

  என் தளத்திற்கு உங்களை போன்றோரின் வரவு பெருமை பட வைக்கிறது ஹரி. (யாருக்கும் பின்னூட்டம் அதிகமா போடமாட்டீங்கனு தெரியும் )

  எல்லோரின் மனதிலும் குமுறல்கள் இருக்கத்தான் செய்கின்றன ஹரி.

  இந்த பதிவு உங்களை அடிவாங்கும் அளவிற்கு கவர்ந்திருப்பதில் ரொம்ப சந்தோசம். :))

  உங்களின் இந்த வருகைக்கு நான்தான் நன்றி சொல்லணும்.

  உங்களுக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. @@ மாணவன் said...

  //வேற என்ன செய்வது?????//

  அதுதான் சொல்லிடீன்களே சகோ.

  இந்த ஒரு வரியில் உங்கள் உள்ள உணர்வுகள் புரிந்து விட்டது.

  வாழ்த்துக்கள் உங்களுக்கும்...நன்றி.

  ReplyDelete
 24. @@ கவிநா... said...

  //அக்கா, என்ன சொல்றதுனே தெரியல!!! நீங்க சொன்ன எந்த உண்மைகளையும் மறுக்கமுடியாது, மறக்கவும் முடியாது.... ஒவ்வொரு விஷயமும் ஆணியடிச்ச மாதிரி இருக்கு//

  மிக கசக்கும் உண்மைகள்...இருந்தும் மறைக்கவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்...!!

  //மேற்சொன்ன எதை ஜீரணிப்பது? பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல தடுக்கிறது இந்த நிதர்சனம்.
  நம் நிலையை நினைத்து மனம் கனக்கிறது..//

  வயதில் மிக சிறியவள் உனக்கு இந்த அளவிற்கு பாதித்து இருக்கும் என்று எண்ணவில்லை காயத்ரி.

  உன்னுடைய இயல்பான உணர்விற்கு என் வணக்கங்கள்.

  உனக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. @@ எஸ்.கே said...

  //முன்னே மாதிரி இப்பெல்லாம் பண்டிகைகள் இருப்பதில்லை. காணும்பொங்கல் என்பது உறவினர்களை சந்தித்து இனிமையாக பழகுவது என்பது போய் வெளியே எங்கேயாவது சென்று வருவது என ஆகிவிட்டது.//

  உறவினர்களை காணுவதற்காக(காணும்) ஏற்படுத்த பட்ட நாள் இப்போது
  இப்படி மாறிவிட்டது பரிதாபம் தான்.

  //மாட்டுப் பொங்கல் கிராமங்களில் கூட முன்போல் முழுமையாக கொண்டாடப்படுவதில்லை! பல பண்டிகைகள் டிவியிலேயே கழிகின்றன//

  உண்மைதான். பண்டிகைகள் எல்லாமே இனி வரும் தலைமுறையினருக்கு "முன்னொரு காலத்தில்........" என்பதாக மாறிவிடும்.

  பொங்கல் வாழ்த்துக்கள் எஸ்.கே.

  ReplyDelete
 26. @@ ஹேமா said...

  //கௌசி...நீங்கள் சொன்ன அத்தனையுமே உண்மையான பச்சைத்தமிழனுக்கு வலிக்கும்.
  ஆனால்...அவன் மனிதனாய் இருந்தால் மட்டுமே//

  ஹேமா உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் வலி என்னால் உணர முடிகிறதுபா...!

  ReplyDelete
 27. மனிதர்களுக்கு வலிக்கும் சகோ.. காசுக்கு விற்க்கும் எவருக்கும் வலிக்காது :(

  பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 28. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. @@ FOOD said...

  //உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும். உரைக்காமல் இருக்க முடியாது. ஊதுகின்ற சங்கை ஊதிவிட்டீர்கள் , ஒலிக்க வேண்டியவர்கள் காதுகளில் ஒலிக்கும் என்ற நம்பிக்கைகளோடு "தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்" தங்களுக்கு//

  உங்களின் இந்த முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

  இந்த பதிவை எழுதி முடித்ததும் ஒரு சிறு தயக்கம் இருந்தது...அதை புரிந்து கொண்டு பின்னூட்டம் இட்ட உங்களின் நல்லுள்ளதிர்க்கு என் வணக்கங்கள்.

  உங்களுக்கும் இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  //தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .//

  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 31. @@ Philosophy Prabhakaran said...

  //இது நல்ல காமெடி... நம்ம கடைலயும் இதே படம் தான்.//

  உங்க கடைக்கு வந்தேன், ரொம்ப யோசித்து பின்னூட்டம் இட்டு வந்தேன் பிரபாகர்... :)))))

  ReplyDelete
 32. அருமை,அருமை உங்கள் உத்வேகப் பொங்கல் வாழ்க.அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. @@ யாதவன் said...

  //என்ன சலிப்போட கவிதா தொடன்குத்கு என்று பாத்தால்
  பின்னுக்கு சாட்டை அட்டி கொடுகிறது வரிகள//

  நல்ல புரிதல் சகோ...

  நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. @@ சி.பி.செந்தில்குமார்...

  நன்றிங்க.

  உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. @@ sulthanonline said...

  //வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை உங்கள் ஆதங்கத்தை படித்த பிறகு இருப்பினும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..//

  இது நம் எல்லோரின் ஆதங்கம் தானே...அது ஒரு பக்கம் இருக்கட்டும். வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது மனதிற்கு இனிமைதானே.
  நன்றி

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. neengal sonna ellame 100% unmai.

  pongal wishes to you and your family.

  ReplyDelete
 37. @@ வினோ said...

  //மனிதர்களுக்கு வலிக்கும் சகோ.. காசுக்கு விற்க்கும் எவருக்கும் வலிக்காது :(//

  ம்...ஆமாம் வினோ மனித நேயம் விற்று...?!!

  என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 39. @@ வெறும்பய...

  உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. @@ asiya omar said...

  // உங்கள் உத்வேகப் பொங்கல் வாழ்க.//

  நல்லா இருக்கே உத்வேக பொங்கல் !!

  :))

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 41. @@ சுபத்ரா said...

  //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!//

  உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

  உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. பொங்கல் என்பது தமிழருக்கே உரிய பண்பாட்டினை எடுத்தியம்பும் ஒரு ஒப்பற்ற பண்டிகை. சமகால அரசியல் நிகழ்வுகளால் மேலும் கேலும் தமிழனின் பண்பாட்டிற்கும், உணர்விற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

  ஒவ்வொரு விழாவும் ஆரசியல்வாதிகளின் பார்வைகளில் ஓட்டு சேகரிக்கும் ஒரு நிகழ்வாகத்தான் பார்க்கபடுகிறது என்ற உண்மையினை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில்........

  தமிழன் என்றோர் இனமுண்டு....
  தனியே அவர்க்கோர் குணமுண்டு.........

  என்ற கூற்றின் ஆழத்தில் இருக்கும் உண்மையினை உணர்ந்து தமிழனும், தமிழும் எப்போதும் சிறப்பானது என்ற உணர்வோடு தமிழர் திருநாளை கொண்டாடுவோம்..!

  வாழ்க தமிழர் ! வளர்க அவரது பண்பாடும் கலாச்சாரமும்..!

  அனைவருக்கும் தமிழர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 43. உங்களின் உள்ள குமுறல் புரிகிறது....

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 45. பச்சை தமிழனை காணவில்லை

  கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் மிட்டாய் தரப்படும்

  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 46. உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 47. உங்கள் கருத்துக்கள் அழகான வன்மையுடன் திகழ்கிறது.அருமையான கருத்துக்கள்.தீர்க்கமான சிந்தனை.தொடருங்கள்.இந்த சிறந்த வலைப் பூக்கள் என்ற கேட்கெட் ஐ எப்படி இணைத்துள்ளீர்கள்.இயன்றால் தெரியப்படுத்தவும்
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 48. கவலைப்பட மட்டுமே நம்மால் முடியும். உலகத்தை மாற்ற முடியாது. நல்ல பதிவு.

  பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 49. என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  14.1.2010

  ReplyDelete
 50. கௌசல்யா....

  இந்த பதிவும், பதிவில் பொங்கலும் மிக மிக சூடாக உள்ளது...

  உங்களின் உள்ளக்குமுறலை எங்கள் அனைவரின் சார்பிலும் கொட்டித்தீர்த்ததாக எடுத்துக்கொள்கிறேன்..

  தோழமைகள் அனைவருக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  பொங்கலோ பொங்கல் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post.html

  ReplyDelete
 51. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 52. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. ஹேப்பி பொங்கல் க்ரீட்டிங்கஸ் :)

  ReplyDelete
 54. அழகான அருமையான கருத்துக்கள்.

  நச் வரிகள்!

  ReplyDelete
 55. எல்லாரையும் திட்டுறீங்கன்னு தெரியுது...ஆனாலும் கோபம் வரலை... ஏன்னா நிலமைய புட்டு புட்டு வெச்சுட்டீங்க... அழகான பதிவு தோழி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...