வியாழன், ஜனவரி 27

12:09 PM
27
தமிழனாய் பிறக்க வேண்டும் என்று யாரும் தவம் இருக்கவில்லை...இருந்தும் பிறந்துவிட்டு ஏன் பிறந்தோம் என்று எண்ணி வெந்தே உருக்குலைந்து அழிந்து போய் கொண்டிருக்கிறான்.

"தமிழன் என்று சொல்லடா, தலை அறுபட்டு சாவுடா"

கடல் கடந்த தீவில் தான் தமிழன் செத்து கொண்டிருக்கிறான்  என்றால் இங்கிருந்து மீன் பிடிக்க கடலுக்கு போகும் தமிழனும் வேட்டையாடப் படுகிறான்.

இலங்கை அரக்கர்களின் உயிர் பறிக்கும் வெறி என்று தீரும்....?? 

இராவணன் ஒருவனை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்தது பழைய கதை..... இப்போது தீவெங்கும் நிறைந்து கிடக்கும் பல இராவணன்களை     அழிக்க ஏன் எந்த கடவுளும் இதுவரை அவதாரம் எடுக்கவில்லை....கடவுளுக்கும் உயிர் பலி பிடித்து போய் விட்டதோ ??

வேதனைபட்டே  சலித்துவிட்டது !!?

என்றோ ஒருநாள்  என்றால் வருத்தப்படலாம், கண்ணீர் விடலாம்.... இதுவே  வாடிக்கை என்றால் சலிப்பாக இருக்கிறது வருத்தப்படவும்.....?!! அரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதவும்.....?!!

தமிழக மீனவன் இலங்கை மீனவர்களாலும், இலங்கை கடற்படையினராலும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும் போதும், இன உணர்வால் தமிழகம் துடிப்பதும், மத்திய அரசுக்கு குரல் கொடுப்பதும், அறிக்கைகள் மாறி மாறி பறப்பதும், ஒரு வார காலத்திற்கு பரபரப்பாக இருக்கும். வழக்கம் போல இலங்கை அரசு "இனிமேல் இதுபோல் நடக்காது" என்று உறுதி (?) அளிப்பதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி (செத்தவனுக்கும் சேர்த்துத்தான்...?!) வைக்கப்படும்.

வழக்கம் போல போராடி வெறுத்துப்போன மீனவர்களும் தங்களை ஆசுவாசபடுத்திக்கொண்டு தொடர்ந்து கடலுக்கு செல்வார்கள், உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல்....!? (பாழும் வயிறு இருக்கிறதே ??)

சில நாட்களுக்கு முன் ஜெகதாபட்டினத்தில் இருந்து சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்  தனமாக சுட்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டார்.  'சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கள் கப்பலே செல்லவில்லை' என்று இலங்கை தூதர் சொல்கிறார். உயிர் பிழைத்த இருவரும் சுட்டவர்கள் இலங்கைப்படையினர் தான் என்று சொல்கிறார்கள்...பொய் பேசுவது அரக்கர்களுக்கு சாதாரணம் தானே ?!!

முரண்பாடு

பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து  பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதுதான் நாம் ?!! ஆனால் இனி ஒருத்தரையாவது நம்ம கடற்படை சுட்டு கொல்லணும்... அப்போது தான்  இழப்பின்  வலி அவர்களுக்கும்  புரியும் என்கிற கோபம் வருகிறது.

இன்னும் அதிகமாக நமது எல்லையில் கடற்படை கப்பல்கள் சுற்றி வரவேண்டும்.....அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கிகள் ரவைகள்(குண்டுகள்) நிரப்பப்பட்டு  இருக்க வேண்டும்....அதைவிட அவைகளுக்கு கோபத்தைக்  காட்ட தெரியணும்.....! வெறுப்பை உமிழ தெரிய வேண்டும்....!!

நமது எல்லை !

வரையறுக்க பட்டுள்ள இந்திய எல்லைக்குள் தான் நம் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சில பதட்டமான பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இலங்கை தெரிவித்த பின்னும், அந்த பக்கம் செல்ல அஞ்சி ஒருவரும் செல்வதில்லை. இருந்தும் நமது எல்லைக்குள் வந்து சர்வ சாதாரணமாக சுட்டு விட்டு செல்கிறார்கள். மீன் வேட்டைக்கு  போன இடத்தில் மனிதன்  வேட்டையாட  படுகிறான்  ?!!

ஐந்து நாட்களுக்கு முன் வேதாரண்யம் பகுதியில் உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடல்படையினர், மூவரையும் கடலில் குதிக்க சொல்லி இருக்கின்றனர்...அதில் இருவர் குதித்து விட ஜெயக்குமார் என்ற மீனவர் தனது ஒரு கை ஊனமாக இருப்பதால் நீந்த இயலாது, தன்னை விட்டுவிடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார், சிறிதும் மனம் இறங்காத கல் நெஞ்சக் காரர்கள் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி இறுக்கி கொன்றுவிட்டார்கள்.

இவ்வளவிற்கும், கோடியக்கரையில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் தான் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள் , இலங்கை கடல் எல்லை 15 வது கடல் மைலில் இருந்துதான் தொடங்குகிறது \. எவ்வளவு தைரியமாக நமது பகுதிக்குள் வந்து வேட்டையாடுகிறார்கள்...?! நம்பிக்கை நம் அரசின் மீதும் (கண்டுக்க மாட்டாங்க ?) எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் தமிழனின் மீதும் (நாதியற்றவன் ?)

தமிழன் ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் !? இந்த கொடூர செயலுக்கு ஏன் இன்னும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. தடுத்து நிறுத்த முடியா கோழைகள் அரசா, தமிழனா ?? ஏழை மீனவன் உயிர் என்ற இளப்பமா ? மாநில அரசு வெறும் முகாரி ராகம் பாடினால் மட்டும் போதாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரமாக என்று தான் முடிவு எடுக்க போகிறார்களோ தெரியவில்லை தேர்தல் வேற நெருங்கி வருகிறது.....??!

பிப்ரவரி மாதத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க போகிறது என்று சொல்கிறார்கள்.(நிறைய தமிழன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டிருக்க போகிறது அங்கிருக்கும் துப்பாக்கிகள்...?!!)

தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரசு நட்புறவு பாராட்டுகிறது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை.....?! இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் சிறையடைப்பு, நாளை இங்கிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும் சிறையடைப்பு என்ற நிலை வரும் முன் பிழைத்து கொள்ளுங்கள் என் மக்களே !!

ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும்   பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !?'

பதிவுலக நண்பர்களே நாம் கண்டனம் என்று  தெரிவிக்காவிட்டாலும்  பரவாயில்லை .....ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....விழாவிட்டாலும் பரவாயில்லை.....'நம் இனத்திற்காக குரல் கொடுத்தோம்' என்று திருப்தியடையட்டும்  நம் இயலாமை.....?!!  படம் - நன்றி கூகுள் Tweet

27 கருத்துகள்:

 1. //ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....//

  வேண்டாம் கௌசல்யா! என்ன தான் குரல் கொடுத்தாலும் அது தண்ணீர்குள் முழ்கி கொண்டு கரையை நோக்கி கத்துவது போலத்தான்"
  "என்றாவது விடிவு வரும்"
  என்ற நம்பிக்கையில்???????????????
  இருப்போம்...............

  பதிலளிநீக்கு
 2. நாதியற்ற தமிழன்? மட்டுமல்ல மானமும் ,ரோசமும்
  இல்லா மரக்கட்டைகள் நாம்.

  துனிசியா,எகிப்து போன்ற நாட்டைப் பார்த்து நாம் தெளிவடைய
  வேண்டும்.

  நம் வரியை பெற்று நமக்கே வலியைக் கொடுக்கும் ஆட்சி தேவையா?

  பதிலளிநீக்கு
 3. //மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும்//

  உண்மை...
  உங்கள் பதிவு அருமை.
  நம் தமிழனுக்காக நாம் குரல் கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
 4. //தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரசு நட்புறவு பாராட்டுகிறது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை.....?! இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் சிறையடைப்பு, நாளை இங்கிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும் சிறையடைப்பு என்ற நிலை வரும் முன் பிழைத்து கொள்ளுங்கள் என் மக்களே !!//
  உஷாரைய்யா உஷாரு....தேர்தல் வருது உஷாரு!!!

  //ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும் பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !?'//
  இது சவுக்கடியா இல்லை சாட்டையடியா....? எதுவா இருந்தாலும் நெத்தியடி!!

  //பதிவுலக நண்பர்களே நாம் கண்டனம் என்று தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை ....ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....விழாவிட்டாலும் பரவாயில்லை.....'நம் இனத்திற்காக குரல் கொடுத்தோம்' என்று திருப்தியடையட்டும் நம் இயலாமை.....?!! //
  இதனாலதான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! கலக்குங்க....
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக குரல் கொடுத்தே ஆகவேண்டும் சகோதரி! ஆனால் நாம் கொடுக்கும் குரல் யாருடைய காதிலும் விழாது என்பதுதான் நிஜம்! ' தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' என்று இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் தந்தை செல்வா ஒருமுறை மனம் நொந்துபோய் சொல்லியிருந்தார்! அவர் இலங்கைத் தமிழர்களுக்குத்தான் சொன்னார்! ஆனால் அது இப்போது தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்துகிறதே!

  பதிலளிநீக்கு
 6. ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான் அக்கா அப்புறம் எப்படி இவனுங்க காப்பாதுவானுங்க என்று நம்புவது என் தமிழன் உயிரை துடிக்க துடிக்க கொன்ற இந்த பாழாப்போன அரசு நமக்கு தேவையா.....
  சிந்தியுங்கள் நண்பர்களே .............

  பதிலளிநீக்கு
 7. இந்திய தேசத்தின் வரைபடத்தில் தமிழகம் இருக்கிறதா என்று ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது சமீபகாலமாய்


  தற்போதைய மத்திய அரசின் பார்வைகளின் இந்தியத்தனம் இல்லை என்ற காரணத்தினால் தொடந்து காழ்ப்புணர்ச்சியோடு செயல்கள் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.

  கடுமையான கண்டனத்துக்குரிய இச்செயல்களைப்பற்றி கண்டு கொள்ளமல் தமிழக ஆளும் கட்சியும் மெளனம் சாதித்துக் கொண்டு இருப்பது அவலத்தின் உச்சம்...

  தேர்தல் வருகிறது....அங்கே இருக்கிறது சூட்சுமம்..ஆனால் என் மறத்தமிழன்... சரியாக கோட்டை விடும் இடமும் அதுதானே....?????

  மனித மூளைகளுக்குள் இவ்விடயங்கள் தைத்து அது வாக்களிக்கும் போது நினைவுக்கு வந்து நேர்மையாக வாக்களித்தால் சரிதான்...!

  பதிலளிநீக்கு
 8. நம்ம எல்லைக்குள்ள வந்து நம்ம ஆட்களை கொலை செய்யறாங்க. இதைப்பாத்துக்கிட்டு அரசாங்கமும் சும்மா இருக்குதுன்னா இதுலேர்ந்தே தெரியுதே.. அவ்ங்களுக்கு ஓட்டு மட்டும்தான் முக்கியம்ன்னு.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா2:49 PM, ஜனவரி 27, 2011

  உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வந்தது ஆச்சரியம்.
  //பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள்.//
  இது மாதிரி இலங்கை தரப்பில் நடந்ததாக செய்திகள் வந்தன.
  //மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடல்படையினர் மூவரையும் கடலில் குதிக்க சொல்லி இருக்கின்றனர்.அதில் இருவர் குதித்து விட ஜெயக்குமார் என்ற மீனவர் தனது ஒரு கை ஊனமாக இருப்பதால் நீந்த இயலாது தன்னை விட்டுவிடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார். சிறிதும் மனம் இறங்காத கல் நெஞ்சக் காரர்கள் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி இறுக்கி கொன்றுவிட்டார்கள்.//
  அந்த இருவர் கூறியது உண்மையானதா?
  வரையறுக்க பட்டுள்ள இந்திய எல்லைக்குள் தான் நம் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள் என்று சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பது பற்றி அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதுதான் நாம் ?!! ஆனால் இனி ஒருத்தரையாவது நம்ம கடற்படை சுட்டு கொல்லணும்... அப்போது தான் இழப்பின் வலி அவர்களுக்கும் புரியும் என்கிற கோபம் வருகிறது.//

  இது தான் மனிதாபிமானம். மனித இனத்திற்கு உள்ள நல்ல குணம். இந்த இடத்தில் சிங்கள இனவெறி கொண்ட சிறிலங்கா மீனவர்களை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன். முன்பு தமிழர்களை வெட்டிச் சாய்த்தார்கள். தற்போது தாய் தமிழக உறவுகள் மீது??

  என்ன செய்வது? அண்மையில் ஒரு இணையத்தளத்தில் படித்தேன். இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை சிறப்புப் பயிற்சி வழங்குகிறதாம். என்ன சொல்ல?

  தமிழக மீனவர்களை.... பண்ணவா பயிற்சி என்று யோசித்துக் கொண்டேன். இனி இந்த கடற்படைக்கு இவர்களின் வழியில் தான் தீர்வு வழங்க வேண்டும்.

  நாதியற்ற தமிழன்.. மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி அனுப்பியே தமிழ் நாட்டில் இனிக் காகித்திற்குப் பஞ்சம் வரப் போகிறதாம். கலைஞர் இனு அடுத்த கடிதம் அனுப்ப தயராகுவார்.

  தமிழர்களைத் தான் கண்டு கொள்ள யாருமில்லையே!

  பதிலளிநீக்கு
 11. எந்த ஆட்சி வந்தாலும் இது மாறாது சகோதரி! அவர்களது வாக்குகளை வாய்க்கரிசிக்கு வாங்கியாச்சு....ஒரு மீனவன் இறந்தால் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும்! அவ்வளவுதான் அவர்கள் கவலை...இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசினால் இந்திய இறையாண்மைக்கு குந்தகம்! குடிமக்களை காக்காத எந்த நாட்டு இறையாண்மையும் காப்பாற்றபடுவதில்லை....இது வரலாறு! ஆனால் தமிழனுக்கு அந்த தைரியமும் இருக்காது! டாஸ்மாக்ல குவாட்டர் அடித்துவிட்டு, இலவச டிவில செத்தவன் பொணத்த பாத்து ச்சு...கொட்டிட்டு இலவச அரிசிய பொங்கி தின்னுட்டு படுக்கவேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
 12. நல்ல அலசல்

  கண்டிப்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 13. தொடர்ச்சியான அரசியல் நாடகங்கள் அரங்கேறுகிறதே தவிர, தமிழனின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்வதாகக்கூட தெரியவில்லை. கட்சத்தீவினை மீட்கும் வரை தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 14. இதற்க்கு எவ்வாறு பதில் சொல்லவதென்று தெரிய வில்ல தோழி :(
  ஆனால் எங்கும் எதற்கும் தமிழன் நாதியற்றவனாய் ஆகிவிட்டான் :(.
  சொல்லப்போனால் முதலில் தமிழன் பதவிக்காகவும் சொத்துகாகவும், அரசியல் லாபத்திற்ரகாகவும் தமிழ் இனத்தையே காவு கொடுக்க துணைப் போகின்றான் என்பது தான் கொடுமை

  //ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும் பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !//?
  முற்றிலும் உண்மை தண்ணீரில் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் ????????????????????????

  பதிலளிநீக்கு
 15. ரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதவும்.....?!!


  ....என்னத்த சொல்ல...... யாரிடம் முறையிட....

  பதிலளிநீக்கு
 16. என்ன... இப்படி பயமுறுத்துறீங்க?
  >>>ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து..

  பதிலளிநீக்கு
 17. அய்யா வந்தாலும் இதேதான்... அய்யா வந்தாலும் இதேதான்... மத்தியிலும் அதே கதைதான்... இதற்க்கெல்லாம் முடிவே இல்லையா...?

  பதிலளிநீக்கு
 18. இது மிகவும் கொடுமை. இந்தக் கொடுமைகளை அரசு கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை.

  குரல் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு இதற்கு செவி சாய்ப்பதே இல்லை. இருந்தாலும் மக்கள் நாம் நம்முடையக் கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்வோம்!

  பதிலளிநீக்கு
 19. @@ S Maharajan கூறியது...

  //என்ன தான் குரல் கொடுத்தாலும் அது தண்ணீர்குள் முழ்கி கொண்டு கரையை நோக்கி கத்துவது போலத்தான்"
  "என்றாவது விடிவு வரும்"
  என்ற நம்பிக்கையில்//

  நீங்கள் ஒரு ஆதங்கத்தில் இப்படி சொல்கிறீர்கள். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது போல் முயன்றால் முடியும் நண்பரே.

  இப்படி பட்ட நம்பிக்கை கொள்வோம் சரியா?

  பதிலளிநீக்கு
 20. @@ எண்ணத்துப்பூச்சி said...

  //நம் வரியை பெற்று நமக்கே வலியைக் கொடுக்கும் ஆட்சி தேவையா//

  தமிழனின் பொறுமை எல்லை மீறும் போது அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற ஒரு அச்சம் நம்மை கண்டு கொள்ளாதவர்களுக்கு வரவேண்டும், வர செய்யவேண்டும்.

  அதற்கு நமக்குள் ஒற்றுமை வேண்டும்.

  நீங்கள் கேட்ட கேள்வி தேர்தலின் போது எல்லோரின் மனதிலும் ஏற்படவேண்டும்.

  ஆனால் எல்லோரும் அப்படித்தானே இருக்கிறார்கள் ஒருத்தருக்கு மற்றொருவர் சளைத்தவர் கிடையாது.

  பதிலளிநீக்கு
 21. @@ சே.குமார் said...

  //நம் தமிழனுக்காக நாம் குரல் கொடுப்போம்.//

  நன்றி குமார்...தமிழனிடம் ஒற்றுமை வந்துவிட்டால் நம்மை யார் என்ன செய்ய முடியும் ?

  பதிலளிநீக்கு
 22. @@ பத்மஹரி...

  உங்களுக்கு பதில் நான் கடைசியில் சொல்கிறேன் ஹரி. :))

  பதிலளிநீக்கு
 23. @@ மாத்தி யோசி said...

  // ஆனால் நாம் கொடுக்கும் குரல் யாருடைய காதிலும் விழாது என்பதுதான் நிஜம்//

  இந்த இடத்தில் தாம் நாம் தவறு செய்கிறோம், பல கைகள் தட்டும் போது அந்த சத்தம் வெகு தூரத்துக்கு கேட்டுதான் ஆகும்.

  எல்லாவற்றிற்கும் தேவை ஒரு பிரச்னை என்று வரும் போது சாதி, மதம்,அரசியல் கடந்து தமிழன் என்ற ஒரே கோட்டில் நிற்க வேண்டும்.

  இந்த ஒற்றுமை மட்டும் நமக்குள் வந்துவிட்டால் இலங்கையாவது ஒண்ணாவது ?!

  இன்னும் நாம் எழவில்லை என்றால், கடலுக்குள் நடப்பது நாளை சீனாவின் துணையுடன் நாட்டுக்குள் வந்து விடும்.

  பதிலளிநீக்கு
 24. @@ சசிகுமார்...

  //ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான் அக்கா அப்புறம் எப்படி இவனுங்க காப்பாதுவானுங்க என்று நம்புவது என் தமிழன் உயிரை துடிக்க துடிக்க கொன்ற இந்த பாழாப்போன அரசு நமக்கு தேவையா...//

  அரசு தேவையா என்று யோசிக்க இன்னும் கொஞ்சம் காலம் இருக்கு சசி.

  நமது இப்போதைய அவசர தேவை மீனவர்களின் துயர் துடைக்க படணும். அதற்கு அரசை தூண்டிவிட வேண்டும்.

  நாம இப்ப பேசிட்டு இருக்கிற இந்த நேரத்தில் கூட ஒரு மீனவன் கொல்லப்படலாம் ?!

  பதிலளிநீக்கு
 25. பெயரில்லா7:28 AM, ஜனவரி 29, 2011

  சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.>

  ,

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...