பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது பதிவு ஒரு சிலருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும் இந்த பதிவு ஒரு புரிதலை கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)
///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///
இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிட இல்லை...அதும் தவிர அந்த பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதை குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று. நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறான புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இருப்பினும் மதுவை குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின் பிரச்சனையின் மூலக் காரணம் மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவை தொடுகிறார்கள் விடமுடியாமல் தொடருகிறார்கள்.
பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும். ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும் பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம். அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமூதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளை கொன்றாலும், சாட்சி சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரே தவிர கொன்றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்) அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள். கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் !
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைகுரியவர்களை தூற்றுவது சரியல்ல. பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்கு காரணம் என்ன என்று பார்க்கவேண்டும். அவள் குடிப்பதை தடுக்க அல்லது குறைக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால் பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது பெண்களின் புத்தியில் புதிதாக பதிந்துவிட்டது. குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்து கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை அடிமையாக நடத்தியதன் விளைவு இது. கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///
மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ? சமூகத்தின் மீது இதுவரை இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது அதுவே நம் வீட்டுப்பெண்ணாக இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம். ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள். திருத்துங்கள். வளமாகட்டும் நம் சமூகம்.
மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ? சமூகத்தின் மீது இதுவரை இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது அதுவே நம் வீட்டுப்பெண்ணாக இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம். ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள். திருத்துங்கள். வளமாகட்டும் நம் சமூகம்.
மது என்னும் அரக்கன்
உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளை சேகரிக்கும் பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி ! அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையை காரணம் காட்டுவது.
உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளை சேகரிக்கும் பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி ! அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையை காரணம் காட்டுவது.
என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம் உடுமலைபேட்டையில் நீங்கியது. செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும் ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடிக்கும் குடும்பங்களும் உண்டு. மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...
தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்த வர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது. அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.
சந்தோஷம் திரில் கிடைக்கும் என்பதற்காக குடிக்கத் தொடங்கும் படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில் பெண்ணை துகில் உரித்து வன்புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
நண்பர் பயப்படுகிற மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது. அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.
பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம் குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிகிட்டே இருக்கு'. என்று பேச்சோடு பேச்சாக சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம். அது உடை தொடங்கி குடி என்று தொடருகிறது. இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...
நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப் போகிறது.
எனது நிலைப்பாடு :-
பெண்களுக்கு ஒன்று என்றால் கண்மூடித்தனமாக பொங்குவதல்ல எனது வேலை... காலகாலமாக பெண் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை. பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த மனித சமுத்திரத்தின் வேரானவள் !
விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து பெண்ணை விமர்சிக்கலாம் நாகரீகமாக... பெண்ணை கிண்டல் செய்யலாம் நட்பாக... பெண்ணைப் பற்றி பேசலாம் வெளிப்படையாக...! ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.
பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும் பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே. ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தையை பெறும் பெண் குடிப்பது குழந்தையை பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளை பெற்று வளர்த்து 35/40 வயதை தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார் (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனை தான் என்று செய்யப் படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள் ஊக்குவிக்கக் கூடாது.
தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணை பற்றிய எந்த விமர்சனமும் எல்லை மீறி பெண்மையை கேவலப் படுத்தி துன்புறுத்தும் அளவிற்கு போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.
குறிப்பு :-
நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதை பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும் எழுதவும் வைப்பது நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!
***தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய தெரியும். ***
பதிலளிநீக்குIt seems to me you are somehow implying that women can be wiser than men?? :))
Just because a person is happened to be a woman, SHE CAN BE WISER???! She can only be as stupid as men!!
Here is the statistics of smoking in US
///Current Cigarette Smoking Among Adults in 2014 (Nation)
By Gender1
Men are more likely to be current cigarette smokers than women.
Nearly 19 of every 100 adult men (18.8%)
Nearly 15 of every 100 adult women (14.8%)//
பெண்ணுக்குப் பகுத்தறியத் தெரியும் என்கிறீர்கள். இதில் உள்ள 15% பெண்களை விதிவிலக்குனு சொல்லுவீங்களா?
இல்லைனா அமெரிக்கப் பெண்கள் வேற தமிழச்சிகள் வேற? ரெண்டு பேருக்கும் உடம்பில் வேற வேற ஹார்மோன்கள் ஓடுதுனு சொல்லப்போறீங்களா??
அப்போ ஆம்பளைகளும் இந்த 19% விதிவிலக்குனு சொல்லீட்டுப் போவார்கள்!
----------------
When it comes to drinking..ஆணும் பெண்ணும் சம அளவு குடிக்கிறாங்க. மேலை நாடுகளில்..
அப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்???
I dont think our argument is going to get anywhere! Dont mistake me, I am not upset or anything.
I disagree with your view that women are WISER than MEN and she can RATIONALIZE better than MEN.
And that your indirect claim that men should not worry about "wiser women" and that she knows better than men and all!
If men can get addicted to nicotine and alcohol, so can women! Thats what we see in developed nations! How can women be better or more rational than men??? If that is the case why do we see what we see in countries like US data about men/women drinking and smoking??
வணக்கம் வருண்
நீக்கு//It seems to me you are somehow implying that women can be wiser than men?? :))//
மறுபடியும் முதல்ல இருந்தா? :-)
//தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது.//
இந்த வரியில் புரிந்திருக்கனுமே நான் எதை மறுபடி மறுபடி புரியவைக்க முயலுகிறேன் என்று...
//அப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்???//
அப்படி இல்லை வருண் பகுத்தறிய முடியும் என்று சொன்னதன் அர்த்தத்தை நீங்கள் மிக தவறாக புரிந்துக் கொண்டீர்கள், பெண்களால் பகுத்தறிய முடியும் என்றால் ஆண்கள் முடியாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை...அப்டி சொல்வதும் மிக தவறு.
//அதுவும் தவிர இறுதியாக நான் சொன்னது பெண்களை பற்றிய பொதுவான பார்வையை பற்றியதாகும். கண்ணை மூடிக் கொண்டு ஆண்களை வசைபாடுபவள் அல்ல. என்னுடைய பெரும்பாலான பதிவுகளை படித்து வரும் நீங்கள் எப்படி என்னை இப்படி புரிந்துக் கொண்டீர்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
தவறான புரிதல் ஏற்பட்டபின் அதை மாற்றுவது கடினம். :-)
இனி தொடர்ந்து இது போன்ற பதிவுகள் எழுதுவேன் என நினைக்கிறேன்... தொடர்ந்து பேசுவோம்.
நன்றிகள் வருண்.
***மறுபடியும் முதலில் இருந்தா?*** என்று நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தால்க் கூட எனக்கு கவலை இல்லைங்க. :))))
நீக்குஏன் என்று கேளுங்கள்!
உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது. இல்லயென்றால், நீங்கள் சொல்வதெல்லாம் சரிங்கனு எதையும் சொல்லாமல் நான் போயிருப்பேன்!
உங்களை கடைசிவரை தவறாகப் புரிந்துகொள்வதால்.. எந்தப் பாதகமும் இல்லை. உங்க கருத்துக்களை நான் சரியாகப் புரிந்து கொண்டு இருந்தால், இதுபோல் என் கருத்தை முன் வைப்பது கடினம்.
ஆக, ஆணும் பெண்ணும் சரிசமம்தான் (நல்ல விசயங்கள் செய்வதிலும் சரி, கெட்ட விசயங்கள் செய்து நாசமாகப் போவதிலும் சரி, சரி சமம்தான்) என்பதை ஏற்பதில் எனக்கோ உங்களுக்கோ எப்பிரச்சினையும் இல்லை!
//உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது.//
நீக்குதவறான புரிதல் ஆகிபோச்சே னு மறுபடியும் புரிய வைக்க நானும் யோசித்து யோசித்து மெனக்கிட இதுவும் நல்லா இருக்கு.
ஒருவர் தன் கருத்துகளை சொல்வதற்கு(அது என்னை பற்றிய எதிர்கருத்தாக இருந்தாலும்) இங்கே இடமிருக்கிறது என்பதே ஒரு நிறைவை கொடுக்கிறது.
நன்றி வருண் , தொடர்ந்து பேசுவோம்
பதிலளிநீக்குவணக்கம்,
நன்றாக இருக்கு உங்க நிலைப்பாடு,,, எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,
,,,,,,,,,,பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது.,,,,,,,,,
இதைத் தான் வேண்டாம் என்று,,,,
நாமே இதனைப் பெரிதுபடுத்தி மனதளவில் யோசிக்கும் பெண்கள் தைரியம் கொள்ள இடம் வேண்டாம் என்று,,,,
நன்றிமா
// எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,//
நீக்குஉண்மை. அதனால் தான் நம்மை இன்னும் அதிகம் யோசிக்க வைக்கும் எதிர்வினைகளை சந்தோசமாக வரவேற்கிறேன் தோழி.
நன்றிகள்மா.
திரு. வருணின் கருத்துக்கு எழுத ஆரம்பித்து மிகச் சிறந்த பகிர்வாக மாறி இன்னும் எழுத வைத்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்... நிறைய எழுதியிருக்கிறீர்கள்... எழுத்துக்கு எதிரான கருத்துக்கள் வரும்போதுதான் நிறைய யோசிக்கவும் நிறைவாய் எழுதவும் முடியும்.
பதிலளிநீக்குவருணின் கருத்துக்கள் உண்மையைக் கூறும் கருத்துக்கள்.
அருமை.
உண்மைதான் குமார்.
நீக்குநன்றி
The liver suffers the same way, whether it is a man or a wiman that drinks ethyl alcohol.
பதிலளிநீக்குAlcohol dehydrogenase converts ethanol to acetaldehyde. It gives thr headache of hangover. Aldehyde dehydrogenase converts acetaldehyde to acetic acid. It spoils the intestine and stomach.
So, don't drink. Your liver doesn't like it. Your liver doesn't know if you have a pair of testicles or ovaries.