செவ்வாய், மார்ச் 16

8:30 PM
7

தலைப்பை படித்ததும் என்ன ஒரு குடும்பப்பெண் இதை தவறில்லை என்று சொல்றாளே என்ற  சந்தேகம் எழுகிறதா? உங்கள் சந்தேகம் நியாயம் தான். ஆனால் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது என்னவென்றால், கள்ளகாதல் என்ற வார்த்தைதான் தவறு என்கின்றேன்.

ஆமாம் அது என்ன காதலில் நல்ல காதல், கள்ள காதல்!?. கல்யாணத்திற்கு முன் வரும் காதல் நல்ல காதல் என்றால் அதற்கு ஏன் அத்தனை எதிர்ப்பு, கொலைவெறி. நல்ல காதல்தானே என்று சேர்த்து வைக்கவேண்டியது தானே. நம் சமூகத்தை பொறுத்தவரை காதலே தவறு என்பதுதான் எழுதப்படாத சட்டம் அப்படியிருக்க கல்யாணத்திற்கு பின் வரும் காதலை மட்டும் கள்ளகாதல் என்று ஏன் கொச்சை படுத்தவேண்டும், பத்திரிக்கைகளும், media க்களும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.

முன்பு எவை எல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ அவை எல்லாம் இப்போது பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என்று சப்பைகட்டு கட்டப்பட்டு வரும்போது இது மட்டும் ஏன் இன்றுவரை தவறு என்றே சொல்லப்பட்டு வருகிறது.சொல்லப்போனால் 
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது சந்தோசம் என்கிறபோது மற்றவர்களுக்கு 
மட்டும் ஏன் வருத்தம்?  ஏன் நமக்கு இந்த மாதிரி 
சினேஹம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமா? அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்  நுழைவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.  

இந்த உறவு உடலை மட்டும் சார்ந்து  வருவது இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  குடும்ப வாழ்வில் இழந்த ஏதோ ஒன்றை பெறுவதற்காக தேடப்போய் இறுதியில் தவறான உறவில் வந்து நின்று விடுகிறது.  இந்த உறவும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு relaxation .  அவர்கள் பார்வையில் இது தவறில்லை.  ஏன் இந்த தலைப்பு வைத்தேன் என்பது தொடர்ந்து படிக்கும் போது புரியும் என்று நினைக்கிறேன்.சமூகத்தின் மேல் எனக்கும் அக்கறை உண்டு என்பதால் இதைப்  பற்றி அதிகமாக  எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த  வசதியான குடும்பங்களில் நடக்கும் இத்தகைய
விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலம் சில
மூடிய மன கதவுகளை திறக்கமுடியும் என்று நம்புகிறேன்.

மீண்டும் நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன். 



Tweet

7 கருத்துகள்:

  1. இல்ல Madam நீங்க சொல்லுவது மகா தவறு இது ஒரு நல்ல விசயமே இல்ல.. எல்லோரிடமும் எல்லாம் இருப்பதில்லை ஒருவரிடம் அறிவிரிந்தால் அவரிடம் அன்பு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் இன்னொருவரிடம் அன்பு அதிகமிருந்தால் அவரிடம் அறிவு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் இந்த உலக வாழ்வில் 100 % திருப்தி அடைந்தவர்கள் யாருமிருமில்லை அவ்வாறு யாரும் சொன்னால் அது சுத்த பொய்.

    மேலும் தன மனைவிக்காக மற்றும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு ஆண்களும் வெளியில் படும் கஷ்டங்கள் கொஞ்சமா.. அதை உங்களுக்கு சொல்லவே தேவையில்லை உங்களுக்கே நல்ல தெரியும் அப்படியிருக்க இவள் இன்னொருவனிடம் கள்ளக்காதல் கொள்கிறாள் என்றால் இதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும் நீங்கள் சொல்லும் கருத்து சினிமா வசனம் போல்தான் இருக்கிறது.. யாராக இருந்தாலும் உங்கள் கணவனிடமோ மனைவ்யிடமோ குறைகள் கண்டால் நீங்கள் தனிமையில் இருக்கும் நேரத்தில் அதை நல்ல விதமாக எடுத்து சொல்லுங்கள் மீண்டும் அதே தப்பை தொடர்ந்தால் படுக்கையை விட்டும் தூரமாக்குங்கள் அவ்வாறும் திருந்தாவிட்டால் காயம் வாரதலவுக்கு தண்டனை கொடுங்கள் மேலும் திருந்தவில்லை என்றால் நீங்கள் விரும்பினால் விவாகரத்து கோருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. //ஆமாம் அது என்ன காதலில் நல்ல காதல், கள்ள காதல்!?. கல்யாணத்திற்கு முன் வரும் காதல் நல்ல காதல் என்றால் அதற்க்கு ஏன் அத்தனை எதிர்ப்பு, கொலைவெறி. நல்ல காதல்தானே என்று சேர்த்து வைக்கவேண்டியது தானே. நம் சமூகத்தை பொறுத்தவரை காதலே தவறு என்பதுதான் எழுதபடாத சட்டம் அப்படியிருக்க கல்யாணத்திற்கு பின் வரும் காதலை மட்டும் கள்ளகாதல் என்று ஏன் கொச்சை படுத்தவேண்டும், பத்திரிக்கைகளும், media க்களும்
    வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை ஏன் பெரிதுபடுத்த
    வேண்டும் என்பது தான் என் ஆதங்கம். //

    எனக்கும் அதே கேள்விதான்???????????????????????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் நாகரீகத்திற்கு மாறுபட்ட கருத்து...அம்மா செத்துப்போன மகனிடம் சென்று, என்னை உன் தாயாக நினைத்துக்கொள் என்று ஒரு பெண் சொல்ல முடியும்.

      அப்பா செத்துப்போன மகளிடம் சென்று, என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் என்று ஒரு ஆண் சொல்ல முடியும்.

      அண்ணன், தம்பி, தங்கை என்று எந்த உறவை இழந்தாலும் மாற்று உறவாக ஒருவரை காட்டி சமாதானப்படுத்த முடியும். ஆனால் கணவனோ, மனைவியோ இழந்தோரிடம் சென்று "என்னை உன் தாரமாக நினைத்து கொள்" என்று ஆறுதல் கூட சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது தகாத உறவு என்று சொல்லி நெரிப்படுத்தியது சிலப்பதிகாரம்.

      கணவன் இறந்த பிறகு கூட இன்னொரு நபரை சேர்வது தவறு என்று வாழ்ந்த என் தமிழ் மண்ணில் புருஷன் இருக்கும் போதே இன்னொரு புருஷன் கூட பழகலாம் என்று பகிரங்கமாக தீர்ப்பு சொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?...

      "கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
      ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று இணை அடி தொழுது வீழ்ந்தனள் மடமொழி."
      - #சிலப்பதிகாரம்.

      இழுத்து மூடிவிட்டு போங்கய்யா... ☆☆☆

      நீக்கு
    2. 2010 ல் எழுதிய பதிவை தற்போது படித்து கருத்தும் இட்டதற்கு முதலில் எனது நன்றிகள் !!

      ஆனால் பாருங்க அறிமுக பதிவை மட்டும் படிச்சிட்டு அரைகுறையாக புரிந்துக் கொண்டு விட்டீர்கள். தீர்ப்பு எங்கங்க சொன்னேன்??!! :-)

      இன்னும் மூணு பாகம் இருக்கு மொத்தமாக படித்துவிட்டு பிறகு உங்களின் கருத்துகளை அல்லது விமர்சனங்களை கூறுங்கள் ...பதில் கூறுகிறேன்.

      நீக்கு
  3. அம்மா செத்துப்போன மகனிடம் சென்று, என்னை உன் தாயாக நினைத்துக்கொள் என்று ஒரு பெண் சொல்ல முடியும்.

    அப்பா செத்துப்போன மகளிடம் சென்று, என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் என்று ஒரு ஆண் சொல்ல முடியும்.

    அண்ணன், தம்பி, தங்கை என்று எந்த உறவை இழந்தாலும் மாற்று உறவாக ஒருவரை காட்டி சமாதானப்படுத்த முடியும். ஆனால் கணவனோ, மனைவியோ இழந்தோரிடம் சென்று "என்னை உன் தாரமாக நினைத்து கொள்" என்று ஆறுதல் கூட சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது தகாத உறவு என்று சொல்லி நெரிப்படுத்தியது சிலப்பதிகாரம்.

    கணவன் இறந்த பிறகு கூட இன்னொரு நபரை சேர்வது தவறு என்று வாழ்ந்த என் தமிழ் மண்ணில் புருஷன் இருக்கும் போதே இன்னொரு புருஷன் கூட பழகலாம் என்று பகிரங்கமாக தீர்ப்பு சொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?...

    "கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
    ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று இணை அடி தொழுது வீழ்ந்தனள் மடமொழி."
    - #சிலப்பதிகாரம்.

    ☆☆☆ கட்டுப்படுத்தத்தான் நீதிமன்றம் தேவையே தவிர கட்டவிழ்த்து விடுவதற்கு தேவையில்லை. இழுத்து மூடிவிட்டு போங்கய்யா... ☆☆☆

    பதிலளிநீக்கு
  4. என் உடல்சுகம் என் மனசு சுகம் மட்டும்தான் முக்கியம்னு நினைப்பவர்க்குமட்டும்தான் கள்ளகாதல் சரிபட்டுவரும் கல்யாணத்திற்கு முன் வருவது நல்ல காதல் கல்யாணத்திற்கு பிறகு நீ காதலிக்கனும்னா டைவர்ஸ் பண்ணிட்டு காதலிச்சுட்டே இரு உனக்கு உன் சுகம்மட்டும்தான் முக்கியம்னா குழந்தை பெத்துக்காதே மூதேவி தெருபொறுக்கி கல்யாணம் பண்ணிக்காதே இன்னொருவர் வாழ்க்கையை பாழடிக்காதே ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி தே அசிங்கமா திட்டிட போறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான ஆலோசனை. இதை உங்க பெயர் போட்டு சொல்லி இருந்தால் நன்றி சொல்லி இருப்பேன். தலைப்பை மட்டும் படிச்சிட்டு திட்டுறத விட இந்த தொடர் முழுவதையும் படித்துவிட்டு பதிவின் நோக்கம் எது என்பதை தெரிந்துக் கொண்டு திட்டலாமா வேண்டாமா என யோசியுங்கள் :-)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...