பதிவுலகத்தில் சினிமா துறையை பற்றியும் புதிதாக வெளியாகும் சினிமாக்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதபடுகின்றன. பதிவுலகத்தில் இருந்துகொண்டு பதிவர்கள் பற்றியும் , பதிவுகள் பற்றியும் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு. இனி இது போல் தொடந்து பதிவுகள் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.....?!! அவ்வாறு விமர்ச்சிக்கும் போது நிறைகள், குறைகள் இரண்டும் அலசப்படும். (எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தாலும் இப்போதைக்கு என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை...!!?)
பதிவர் - ஒரு சின்ன அறிமுகம்
முதலில் இந்த வாரம் என்னிடம் வகையாக வந்து மாட்டியவர் எங்க ஊர்க்காரர் ஒருவர் தான். இவர் ரொம்ப பெரிய ஆள். நாள் தவறாமல் செய்திதாளில் வலம் வருபவர்...அதை விட அதிகமாக ஊர் முழுவதும் வலம் வருபவர்...! இவர் ஒரு இடத்திற்கு வந்தால் அங்கே ஏதோ விபரீதம் (சம்பந்த பட்டவங்களுக்கு...!?), நல்ல காரியம் (மக்களுக்கு...!?) நடக்க போகிறது என்று அர்த்தம். சினிமாவில் ஹீரோ அதிரடியா சாகசம் பண்ணினா உடனே நாம அடிக்கிற விசில் என்ன ? கைதட்டல் என்ன ? ஆனா இவர் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை அதிரடியாக செய்து கொண்டு வருகிறார்.
(இடது புறம் நிற்பவர்)
யார் இவர் ?
இவரது பெயர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் . திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பொது சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லனும் என்கிற தீராத வேட்கையுடன் இருக்கிறவர்.
இவரது நண்பர் திரு. ஜோசப் சார் அவர்களின் விருப்பத்தின் காரணமாக வலையுலகில் கால் பதித்து எழுதி வருகிறார் . பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை அனாயசமாக சொல்லி தெளிவு படுத்துகிறார்.
எத்தகைய பதிவுகள் ?!
உணவு பொருள்களில் கலப்படம் எவ்வாறு எல்லாம் கலக்கப்படுகிறது, எந்த பொருளில் என்ன கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது ? அவற்றை எப்படி கண்டறிவது ? எப்படி தவிர்ப்பது என்று பல விசயங்களை பற்றியும் எழுதி வருகிறார். நெல்லையில் இவர் தலைமையில் செய்யப்படும் ஆய்வுகள், இவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை பற்றியும் அதை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், வீடியோக்களையும் பதிவில் இணைத்திருக்கிறார்.
இரண்டு நாளுக்கு முன்பு ஆங்கிலத்திலும் பதிவுகளை வெளியிட எண்ணி புதிதாக ஆங்கில மொழி பேசும் தளம் ஒன்றும் தொடங்கி இருக்கிறார். தமிழில் பதிவிடும் போதெல்லாம் அப்படியே ஆங்கிலத்திலும் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார். தமிழ் தெரியாதவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
அதன் லிங்க் http://way2foodsafety.blogspot.com/
அனைத்து பதிவுகளுமே நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருநூறு பதிவுகளை எட்ட போகிறார்...எந்த பதிவு முக்கியம் என்று குறிப்பிட்டு சொல்வது மிக கடினம்.
* தயிரில் கலப்படம் என்ற பதிவை படித்து ஆச்சரியம் ஆகிவிட்டது...அந்த பதிவின் லிங்க்
* இவரது இந்த பதிவை பார்த்தால் ஆப்பிள் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை வருவது நிச்சயம்.
* இவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சாம்பிள் இதோ, http://unavuulagam.blogspot.com/2010_11_01_archive.html
* தூதுவாளை மிட்டாயில் கலப்படம்...மிக கொடுமைங்க இது. பாதிக்கபடுவது குழந்தைகள் என்கிற போது மனம் பதைக்கிறது...இதையும் படிங்க http://unavuulagam.blogspot.com/2010/11/blog-post_14.html
சிறிய டீ கடை முதல் பெரிய ஹோட்டல் வரை சென்று ஆய்வு செய்து உணவு பொருளில் கலப்படம் செய்ய பட்டோ அல்லது சுகாதார மற்ற வகையில் வைக்க பட்டிருந்தாலோ உடனே அதிரடியாக எதிரான நடவடிக்கை எடுக்கிறார். பல கடைகள் சீல் வைக்க பட்டு இருக்கின்றன. இவர் ஆய்வு செய்கிறார் என்றால் பல கடைகளின் உரிமையாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்.
உலகத்திற்க்கே அல்வா கொடுக்கிற திருநெல்வேலியில் இருக்கிற அல்வா கடைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை.....! சமீபத்தில் ஒரு பிரபல கடையை அடைத்து சீல் வைத்தவர்.
நேரில் இவரிடம் பலரும் கேட்கும் கேள்விகளில் முக்கியமான ஒன்று,
இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும் போது மிரட்டல் வராதா ?? அடியாட்கள் வரமாட்டார்களா ?? என்று
அதற்கு இவரின் அதிரடி பதில் " வராமல் என்ன, வரத்தான் செய்யும், அதையும் சமாளிக்க தெரிய வேண்டும், அதுதான் சாமார்த்தியம்" என்பது தான்.
விருதுகள்
இவரது சீரிய பணிக்காக பல விருதுகள் வாங்கி கொண்டே இருக்கிறார்...!! எண்ணிக்கை அவருக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.
ஒரு பதிவில் விருது வாங்கியதை பற்றி குறிப்பிட்டு இந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றாலுமே பதிவிற்கு வருகை தரும் நண்பர்கள் தரும் ஊக்கம் ஒரு அலாதி மகிழ்ச்சிதான் என்று சொல்லி இருப்பார்.
ஒரு வேண்டுகோள் நண்பர்களே
தனது ஓய்வில்லாத வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, பதிவுகளை எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்கிற இவரது ஆர்வம் பாராட்டபடகூடியது.
இவர் நமது தளத்துக்கு வருவாரா, பின்னூட்டம் இடுவாரா என்று யோசிக்காமல் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை கருதி இந்த நல்ல மனிதரை நாம் உற்சாகபடுத்த வேண்டும்.
நல்ல அதிகாரிகள் நம்மிடையே இல்லையே என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும், நமக்கு இப்போது அறிமுகமாகிற இவரை உற்சாகபடுத்துவத்தின் மூலம் சிறிது நிம்மதி நமக்கு ஏற்படுவது நிச்சயம்.
நேரம் கிடைக்கும் போது அவசியம் எல்லோரும் இவரது தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
நல்ல விஷயம், நல்ல மனிதர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி முதலில் பாராட்டுவது பதிவுலகம் தான் என்பதை மற்றவர் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது.
நிறைகள், குறைகள் :
இவரது தளத்தை பொறுத்தவரை நிறைகள் தான் நிறைய இருக்கிறது...குறைகள் எதுவும் தெரியவில்லை. குறைகள் ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள், அதை ஏற்று கொண்டு சரி செய்து கொள்ள கூடிய உயரிய நல்ல பண்பு கொண்டவர்.
லேட்டஸ்ட் செய்தி
நேற்று நெல்லை நகரில் இருந்த அனைத்து கட்சி சம்பந்த பட்ட போர்டுகள் (விளம்பர பலகைகள் ) அகற்றபட்டன.
பின் குறிப்பு
ஒரு வழியாக முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர் !!?
பிரியங்களுடன்
கௌசல்யா
கௌசல்யா
நல்ல முயற்சி. புதுமையான உங்கள் சிந்தனையில் பூத்த முதல் பூ அருமையான தொண்டில் பூத்திருக்கிறது. பாராட்டுக்கள். உங்களுக்கும், அவருக்கும். தொடருங்கள்.
பதிலளிநீக்குஉங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அக்கா..
பதிலளிநீக்குஅவருக்கு ஊக்கம் அளிப்பதின் மூலம அவரது பணி இன்னும் சிறக்க செய்ய முடியும்
மிக நல்ல செய்தி ,பதிவர் அறிமுகம் சூப்பர்.வாழ்த்துக்கள்.முதல் அடியே பலமாக இருக்கு.அடுத்து யார் அந்த பிரபலம்.
பதிலளிநீக்குஉண்மையிலயே நல்ல முயற்சி அவர் செய்யறது... நானும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன்
பதிலளிநீக்குமிக நல்ல செய்தி ,பதிவர் அறிமுகம் சூப்பர்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குUNGAL INTHA MUYARCHIKU EN VALTHUKAL
ஆஹா...
பதிலளிநீக்குதங்கள் சேவை எங்கள் அனைவருக்கும் தேவை என்பதாக இந்த புதிய முயற்சி இருக்கிறது...
தாங்கள் மேலும் இது போன்ற பல பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும், படிக்க காத்திருக்கிறோம்...
வாழ்த்துக்கள் கௌசல்யா...
உங்களின் அலசல் அற்புதம்...
பதிலளிநீக்குநல்ல பதிவரை அறிமுகபடுதியமைக்கு மிக்க நன்றி ////
சிறப்பான முயற்சி சகோ! அறிமுகத்துக்கு நன்றி :)
பதிலளிநீக்குஅவருக்கு என சல்யூட்
பதிலளிநீக்கு//ஒரு வழியாக முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர்.//
இதுக்கு பேரு க்ளுவா????????
உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அக்கா. தொடருங்கள்.
பதிலளிநீக்குபுதிய பிரயோசனமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குநன்றாக சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்
விதாயசமான முயற்சி ...தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள் .....
பதிலளிநீக்கு////ஒரு வழியாக முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர்.////
அதே மாதிரி ரொம்ப ஈசி க்ளு கொடுத்து இருக்கீங்களே ....(இப்படியா பட்ட க்ளு வ இனி படிப்பியா.....படிப்பியா...வாய்ல நாலு வாட்டி அடிச்சுக்கோ ...நான் என்னை சொன்னேன் )
உண்மையிலேயே சொல்றேன் அக்கா இது போன்று யாராவது பதிவு போட மாட்டார்களா இன்னும் எவ்வளவோ பயனுள்ள பதிவர்களை உலகறிய செய்ய மாட்டார்களா என்று யோசித்து கொண்டிருந்தேன். இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா தொடருங்கள் உங்கள் பணியை.
பதிலளிநீக்குநல்ல முயற்சி.. தொடருங்கள்..
பதிலளிநீக்குநல்ல முயற்சி. நல்ல அறிமுகம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ஒரு நல்ல பதிவரை எங்களுக்கு அடயாளம் காட்டிய உங்களுக்கு என் வணக்கம்.
பதிலளிநீக்குஎவ்வளவோ பணிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த பதிவுகள் எழுதும் அந்த மதிப்புக்குரிய பதிவருக்கு என் வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.
உங்களின் இந்த சிறப்பான முயற்சி தொடர்ந்து சிறக்கட்டும்.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
உங்களின் இந்த நற்பணியை வரவேற்கிறேன்.....
பதிலளிநீக்குஉங்க கட்டுரை மிக அழகிய நடையில் தெளிவானத்தமிழில் வாசிக்க இனிமையாக இருக்குங்க .... இப்படி நல்லதமிழ் நடையில் தெளிவுற எழுது உங்களோட வலைப்பக்கத்தில் தலைப்பை... “மனதோடு மட்டும்” என் நம் தமிழில் வைத்தால் மிக சிறப்பாக இருக்கும்... அது மிக நல்ல அடையாளத்தையும் உங்களுக்கு கொடுக்கும் என்பது என் நம்பிக்கை...
தயவு செய்து பரிசீலனை செய்யுங்க... நன்றி.
முயற்சிக்கும் அது வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல முயற்சி தொடருங்கள்.
பதிலளிநீக்குபெருமதிப்பிற்குரிய பதிவர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கம்.
பதிலளிநீக்குஅக்கா, நல்லதொரு எண்ணத்தில் உதித்த இந்த பதிவு, இன்னும் தொடர வாழ்த்துக்கள்....
சிறப்பான ஒரு அறிமுகம்..
பதிலளிநீக்குஇது புதுமையா இருக்கு அக்கா . அதிலும் ஒரு சிறப்பான பதிவர அறிமுகம் செஞ்சிருக்கீங்க .. தயிரில் கலப்படம் , தூதுவளை மிட்டாயில் கலப்படம் போன்ற விசயங்கள் எனக்கும் ஆச்சர்யத்தைத் தருகிறது .. நானும் அவரது வலைப்பூவில் பார்வையிடுகிறேன் !
பதிலளிநீக்குஅட இப்படி ஒரு ஆளா உண்மையிலே இவரை பாராட்டனும் இப்படி ஒருவர் பதிவரா இருப்பது நமக்கு எல்லாம் பெருமை....இவரை தேடி கண்டுபிடித்து உங்களுக்கு என் பாராட்டுகள் தொடருங்கள் முதல் விமர்சனம் நன்றாக இருக்கிறது.....
பதிலளிநீக்கு..க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர். அட டா என்ன இவ்வளவு ஈஸியா ஒரு க்ளு நான் சொல்லவா யாருன்னு இல்லை சொல்லமாட்டேன் நான் வேண்டும் என்றால் இன்னொரு க்ளு தரேன் அவர் ஒரு பதிவர்....
ரொம்ப அருமையான அறிமுகம். இவரை பற்றி நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம். தொடருங்கள் கௌசல்யா.
பதிலளிநீக்குvalththukkal
பதிலளிநீக்குநல்ல அறிமுகம்
பதிலளிநீக்குகேபிள் சஙக்ர்.
நான் தவறாமல் (பதிவுலக லீவில் செல்லும் நாட்கள் தவிர) வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுகளில், இவருடையதும் ஒன்று. நம்மூரு மணம் கமழ இருக்கும். மிகவும் பயனுள்ள குறிப்புகளும் இருக்கும். அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி. உங்களுக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த பதிவர்களை அறிமுகப்படுத்தும் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்;...
பதிலளிநீக்குgood post. Never been to that blog, but will try to read very soon.
பதிலளிநீக்குசமூகப் பொறுப்புணர்ச்சியுடன் எழுதுவோர் மிகக்குறைவே. இவர் உங்கள் நண்பர் என்பதில் உங்களுக்குப் பெருமை - உங்களை அறிந்ததில் எங்களுக்குப் பெருமை. (எப்படி ஒட்டிக்கிட்டு போகுது பாத்தீங்களா?)
பதிலளிநீக்குஅட இப்படிப்பட்டவங்கக் கூட பதிவுலகத்துல இயங்கிக்கிட்டு இருக்காங்களா என்ன? சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு இங்கே ஒரு அங்கமா இருக்குறதுல! கண்டிப்பா அவர ஊக்குவிப்பேன்! பாராட்டுக்களும் நன்றிகளும் உங்களுக்கு! வித்தியாசமான முயற்சிகளும் நடுநிலையான உங்கள் அணுகுமுறையும், உங்கள் வலைப்பூவுக்கும், இந்த வலையுலகத்துக்கும் அழகு சேர்க்கிறது! தொடரட்டும் விமர்சனங்கள்....
பதிலளிநீக்கு@@ தமிழ்க் காதலன்...
பதிலளிநீக்குஅழகான பாராட்டுகள் நன்றி
@@ கணேஷ்...
உண்மை தான் கணேஷ் நன்றி.
@@ asiya omar...
//முதல் அடியே பலமா இருக்கு //
அடியா?? யாருக்கு தோழி ? :))
அடுத்த பிரபலம் சஸ்பென்ஸ் !!
@@ Arun Prasath said...
பதிலளிநீக்கு//உண்மையிலயே நல்ல முயற்சி அவர் செய்யறது... நானும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன்//
உண்மைதான் அருண், கண்டிப்பா சொல்லுங்க நன்றி.
@@ S Maharajan...
வாங்க நண்பரே...நன்றி.
@@ R.Gopi said...
//தங்கள் சேவை எங்கள் அனைவருக்கும் தேவை என்பதாக இந்த புதிய முயற்சி இருக்கிறது...//
கண்டிப்பா நீங்களும் ஒரு நாள் விமர்சனத்தில் மாட்டுவீங்க...அப்பவும் இதே மாதிரி சொன்னா சரி தான் கோபி. :))
@@ அரசன் said...
பதிலளிநீக்குஅலசலை ரசித்ததிர்க்கு நன்றி
@@ Balaji saravana...
நன்றி பாலா. வேலை ஜாஸ்தியா??
@@ அருண் பிரசாத் said...
//இதுக்கு பேரு க்ளுவா????//
ஆமாம். அப்படித்தானே போட்டு இருக்கிறேன். :)))
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ யாதவன்...
நன்றி சகோ.
@@ இம்சைஅரசன் பாபு.. said...
பதிலளிநீக்கு//அதே மாதிரி ரொம்ப ஈசி க்ளு கொடுத்து இருக்கீங்களே ....(இப்படியா பட்ட க்ளு வ இனி படிப்பியா.....படிப்பியா...வாய்ல நாலு வாட்டி அடிச்சுக்கோ ...நான் என்னை சொன்னேன் )//
நல்லா அடிச்சாச்சா... இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசம் பாபு...
:)))
@@ சசிகுமார் said...
பதிலளிநீக்கு//உண்மையிலேயே சொல்றேன் அக்கா இது போன்று யாராவது பதிவு போட மாட்டார்களா இன்னும் எவ்வளவோ பயனுள்ள பதிவர்களை உலகறிய செய்ய மாட்டார்களா என்று யோசித்து கொண்டிருந்தேன்.//
நன்றி சசி. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் சொல்லலாமே சசி.
:)))
@@ பதிவுலகில் பாபு...
பதிலளிநீக்குநன்றி பாபு.
@@ வெங்கட் நாகராஜ்...
நன்றி சகோ.
@@ சி. கருணாகரசு said...
//எவ்வளவோ பணிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த பதிவுகள் எழுதும் அந்த மதிப்புக்குரிய பதிவருக்கு என் வாழ்த்துக்கள்...//
உங்கள் வாழ்த்துக்கு முழு தகுதியானவர் இவர். நாமும் அவர் தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும்.
//“மனதோடு மட்டும்” என் நம் தமிழில் வைத்தால் மிக சிறப்பாக இருக்கும்.//
தொடக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துவிட்டேன்,இனி டெம்பிளேட் மாத்தும் போது தமிழில் வைக்கணும் என்று இருக்கிறேன் சகோ. விரைவில் மாத்தி விடுகிறேன்.
உங்களின் இந்த ஆர்வத்திற்கு மகிழ்கிறேன் நன்றி.
@@ மாணவன்...
பதிலளிநீக்குநன்றி சகோ.
@@ ஆமினா said...
நன்றி தோழி.
@@ மாதேவி...
உங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழி.
@@ கவிநா...
நன்றி காயத்ரி.
@@ அமைதிச்சாரல்...
நன்றி சகோதரி.
@@ கோமாளி செல்வா...
இன்னும் பல ஆச்சரியங்கள் அவர் பதிவை பாதிக்கும் போது ஏற்படும் செல்வா.
@@ சௌந்தர் said...
பதிலளிநீக்கு//அட இப்படி ஒரு ஆளா உண்மையிலே இவரை பாராட்டனும் இப்படி ஒருவர் பதிவரா இருப்பது நமக்கு எல்லாம் பெருமை....//
கண்டிப்பா நமக்கு இது ஒரு பெருமை தான் சௌந்தர்.
//இவரை தேடி கண்டுபிடித்து உங்களுக்கு என் பாராட்டுகள் தொடருங்கள் முதல் விமர்சனம் நன்றாக இருக்கிறது//
தினசரியில் பார்த்து தான் இவரை பற்றி தெரிந்து கொண்டேன்.
@@ Starjan ( ஸ்டார்ஜன்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
@@ கோநா...
உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
@@ Chitra...
பதிலளிநீக்குஉங்களின் பின்னூட்டம் நான் அங்கே பார்த்து இருக்கிறேன் சித்ரா.
நன்றி தோழி.
@@ Philosophy Prabhakaran...
பதிலளிநீக்குஇவரை மட்டும் தான் ஒரு அறிமுகம் மாதிரி எழுதி இருக்கிறேன், ஆனா இனி வருவது விமர்சனமாக தான் இருக்கும்...குறை, நிறை எல்லாம் ஒரு அலசு அலசலாம்னு இருக்கிறேன் பிரபாகர்...
லிஸ்ட்ல நீங்களும் இருக்கலாம். :)))
@@ vanathy said...
பதிலளிநீக்கு//good post. Never been to that blog, but will try to read very soon.//
கண்டிப்பா படிங்க வாணி, நமக்கு நிறைய பிரயோஜனமாக இருக்கும்பா.
@@ அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் எழுதுவோர் மிகக்குறைவே. இவர் உங்கள் நண்பர் என்பதில் உங்களுக்குப் பெருமை - உங்களை அறிந்ததில் எங்களுக்குப் பெருமை. (எப்படி ஒட்டிக்கிட்டு போகுது பாத்தீங்களா?)//
நீங்க நலமா ??
ரொம்ப நாளா ஆளை காணும். உங்களின் விரிவான கமெண்ட் இல்லாம பதிவு கொஞ்சம் டல் தான்.
( ஒரு மாசமா உருப்படியா ஒன்னும் எழுதல என்கிறது வேற விஷயம்...?!!)
உண்மையில் இந்த பதிவை எழுதி முடிக்கும் வரை இவர் எனக்கு நண்பர் இல்லை. நல்ல மனிதர் என்பது மட்டும் தெரியும்.
(இப்போ இவரது சகோதரி ஆகிவிட்டேன் என்பது ஒரு முக்கியமா மகிழ்ச்சி எனக்கு, அதை உங்ககிட்டயும் சொல்லிட்டேன். :)))
@@ பத்மஹரி said...
பதிலளிநீக்கு//அட இப்படிப்பட்டவங்கக் கூட பதிவுலகத்துல இயங்கிக்கிட்டு இருக்காங்களா என்ன? சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு இங்கே ஒரு அங்கமா இருக்குறதுல!//
இதை தெரிஞ்சிகிட்ட போது சந்தோசமா இருக்குல ஹரி. எனக்கு இவர் பதிவுகளை படிக்கும் போது அப்படிதான் தோணிச்சு.
//கண்டிப்பா அவர ஊக்குவிப்பேன்! பாராட்டுக்களும் நன்றிகளும் உங்களுக்கு!//
உங்களுக்கு என் நன்றிகள்.
// தொடரட்டும் விமர்சனங்கள்..//
கண்டிப்பாக தொடரும்...நீங்களும் தயாரா இருங்க ஹரி...
:)))
@@ shortfilmindia.com said...
பதிலளிநீக்கு//நல்ல அறிமுகம்
கேபிள் சங்கர்//
முதலில் என்னை மன்னிக்க வேண்டும்...உங்கள் கமெண்டை பப்ளிஷ் பண்ணாமல் இருந்துவிட்டேன்...
உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நன்றிகள் பல.
தொடர்ந்து வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
அன்பின் கௌசல்யா - அருமையான அறிமுகம் - இங்கு அறிமுகப் படுத்தப் பட்ட அனைத்து சுட்டிகளையும் சுட்டி, சென்று, பார்த்து,படித்து, மறுமொழிகள் இட்டு மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு