Monday, July 19

9:11 AM
36





நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பார்த்தால் முக்கியமானதும் கொடூரமானதும் ஒன்று உண்டென்றால் அது பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள்தான்.  மூன்று வயது தொடங்கி நடக்கும் இந்த கொடூரம் அந்த குழந்தையை சுற்றி இருக்கும் நபர்களாலேயே பெரும்பாலும் நடைபெறும்.  ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இன்றும் நம்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்மிகத்தில், தெய்வ நம்பிக்கை மற்றும் பண்பாடு, கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது என்று நாம் பெருமை பட்டு கொண்டு இருக்கிற இதே நாட்டில்தான் இந்த அருவருப்பான ஒழுங்கீனங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

பெண்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதில் ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது கட்டாயம் சிறு அளவிலாவது சுற்றி இருக்கும் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உட்பட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில்  அவர்களுக்கு அது தவறு என்று உணரமுடியாத பட்சத்தில் தெரியாமல் போய் இருக்கலாம், அல்லது இப்போது மறந்து இருக்கலாம்.  ஆனால் ஆண்களின் அந்த தொடுதல் தவறானது என்பதை புரியக்கூடிய வயது இல்லை என்பதுதான் ஒரே காரணம். 

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த கொடுமை என்று இல்லை,  சிறு ஆண் குழந்தைகளும்  இக்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஜீரணிக்க முடியாத விஷயம்தான் என்றாலும் இந்த கொடுமைகள் தாமதமாகவே வெளி உலகிற்கு தெரிய வருகின்றன, பல வராமலும் போய் விடுகின்றன. 10, 12  வயது நிரம்பிய சிறுவர்கள் ஆண்களால் மட்டும் அல்ல சில பெண்களாலுமே  பாதிக்க படுகிறார்கள். இதனை பற்றி இன்னும் விரிவாக சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன்.  (ஆனால் கற்பனை இல்லை , நான் கேள்விபட்ட அருவருப்பான நிஜம் ) 

சில பெண்கள் திருமணம், கணவனின் முதல் தொடுதல் என்று வரும் போது அருவருப்புடன்  பயந்து விலகுவது, ஆண்களால் சிறு வயதில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாதிப்புதான் காரணமாக இருக்கும்.  பல திருமணங்கள் தொடங்கிய கொஞ்ச நாளில் முறிந்து போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் துணிந்து வெளியே சொல்வதும்  இல்லை. அந்த பெண்ணின் பாதிக்கபட்ட மனநிலையை  சரி படுத்தவும், சம்பந்த பட்டவர்கள் முயலுவதும்  இல்லை.


சிறு குழந்தைகள் பாலியல் கொடுமை  


பால் மனம் மாறாத சிறு குழந்தைகளை சிதைத்து சின்னாபின்னப்படுத்த கூடிய அளவிற்கு மனிதம் மிருகமாகி விட்டது நிதர்சனம். சிதைந்து போனபின் அந்த குழந்தையின் உடலில் உயிர் இருக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை.  அந்த குழந்தையை பெற்றவளின் இதயம் நொறுங்கி போகாதா ?  அந்த மிருகத்தை பெற்றவளின் நிலை இதை விட கொடுமைதான்.  ஏன் ஏன் இந்த கொடூரம்.....?


இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ?
மனிதனின் உணர்வை மீறிய செயலா ?
இந்த செயல் ஒருவேளை மனசிதைவால் நடக்கிறதா ?
அந்த மனசிதைவு ஏன் ஏற்படுகிறது ?


இப்படி கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம்.  ஆனால் பதில்...?! அப்படியே பதில் கிடைத்தாலும் அதனால் அடையபோவது என்ன? ஒன்றும் இல்லை. இழந்தது இழந்தது தான். இறந்தகாலத்தை மறுபடி நிகழ்காலமாக மாற்றும் விந்தை நடந்தால்  மட்டுமே இந்த பதில்களால் ஆதாயம் .


நடந்த எதையும் மாற்ற முடியாது ஆனால் முடிந்தவரை இனி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா ?  ஆண், பெண் குழந்தை எந்த பாலினமாக இருந்தாலும் சிறு வயதிலேயே சில விசயங்களில்  பெற்றோர்கள் கவனமாக இருந்தாலே போதும்.  நான்  மறுபடி சொல்லபோவது வேறு ஒன்றும் இல்லை,  திருமணம் பொம்மை விளையாட்டும் இல்லை, குழந்தை பேறு தற்செயல் சமாச்சாரமும் இல்லை.  குழந்தை பெறும்வரை கணவன், மனைவி இருவரின்  கருத்து வேறுபாடுகள் பெரிதாக யாரையும் பாதிக்க போவது இல்லை, ஆனால் குழந்தை பிறந்தபின் உங்களது இருவரின் கவனமும், அக்கறையும் அந்த குழந்தையின் மேல் அதிகம் இருப்பது காலத்தின் கட்டாயம்.


பணம் பொருள் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் என்று இருந்தால் தயவு செய்து குழந்தை பெற்று (கொல்லாதீர்கள்) கொள்ளாதீர்கள். உங்கள்  பணத்தேவை முடிந்ததும் (முடியுமா ?) பெற்று கொள்ளுங்கள்.


தவறான தொடுதல்கள் 


சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்து கொள்வது பெற்றவர்களின் தலையான கடமைதான்.  சூழ்நிலையின் மேல் குறை சொல்லி தப்பித்து கொள்வதை போல் பாவம் வேறு இல்லை.  மூணு வயதில் இருந்தே குழந்தைகளிடம் , (ஆண், பெண் ) பிறரிடம் பழகும் விதங்களை சொல்லி கொடுக்க வேண்டும். மற்றவர்கள் , அவர்கள் நெருங்கிய உறவினர்களாக  இருந்தாலுமே BAD TOUCH, GOOD TOUCH  பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும்.  (சில பெற்றோர்களுக்கே இதன் அர்த்தம் புரிவது இல்லை)  எங்கு தொடுவது சரி என்றும் , தவறான மறைவான இடங்கள் எவை என்றும் சொல்லி வைக்க வேண்டும். அப்படி அந்த இடங்களில் யாராவது தொட்டால் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதை அன்பாக அறிவுறுத்துங்கள்.


குழந்தைகளை  பள்ளிக்கூடம் அழைத்து செல்லுகின்ற வாகனஓட்டிகளை பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி விசாரித்து வையுங்கள்.    நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் நீங்களும் பேசி நட்பை வளர்த்து கொள்ளுங்கள்.  ஆசிரியர்கள் உங்கள் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் அடிக்கடி கேட்டு தெளிவாகி கொள்ளுங்கள் (எந்த புற்றில் எந்த பாம்போ ? )


இந்த கேள்விகள் உங்கள் குழந்தைகள் பதினாறு வயதை தாண்டும் வரை கூட கேட்கலாம்  தப்பில்லை. ( அவர்கள் வளர்ந்தாலும் குழந்தைகள் தான் ) உங்கள் கவனம் இந்தப்படியே இருந்தால் பல சிறுமியரின் பால்யம் இன்பமாகவே இருக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின் எதிர்வரும் திருமணத்தையும் விரும்பி எதிர்பார்பார்கள்.


அப்படி இல்லாமல் சிறுவயதில் தவறான தொடுதலால் அவர்கள் மனதளவில் பாதிக்க பட்டு இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கை சோபிக்காது, விளைவு அவர்களின் தாம்பத்தியம் மனநல மருத்துவ வாசலிலும் , அல்லது  கோர்ட் வாசலிலும் தான்  போய் நிற்கும், தவிர்க்க முடியாது...?!!


அக்கறை உள்ள  பெற்றோர்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்,  ஆனால் பெற்றோர்களின் கருத்து வேறுபாடால் தனித்து விட படுகின்ற குழந்தைகளின் நிலை....?!!   
தொடர்ந்து பார்போம்.....


தாம்பத்தியம் தொடரும்....
Tweet

36 comments:

  1. மிக மிக அவசியமான பதிவு . நாம் வளர்ப்பதில் கவனம் தேவை

    ReplyDelete
  2. //பால் மனம் மாறாத சிறு குழந்தைகளை சிதைத்து சின்னாபின்னப்படுத்த கூடிய அளவிற்கு மனிதம் மிருகமாகி விட்டது நிதர்சனம். சிதைந்து போனபின் அந்த குழந்தையின் உடலில் உயிர் இருக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை. அந்த குழந்தையை பெற்றவளின் இதயம் நொறுங்கி போகாதா ? அந்த மிருகத்தை பெற்றவளின் நிலை இதை விட கொடுமைதான். ஏன் ஏன் இந்த கொடூரம்.....? //

    கொடுமைதான் தோழி..

    ReplyDelete
  3. மிக மிக அவசியமான பதிவு...

    thodarungal.

    ReplyDelete
  4. இது என்ன அப்பாவே சில பெண்களை பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்று நான் படித்து இருக்கிறேன்..இது மிக கொடுமை

    ReplyDelete
  5. தைரியமாக எழுதியதற்கு பாராட்டுக்கள்

    கண்டிப்பாக பிள்ளைகளுக்கு தொடுதலை பற்றிய சிறு அறிவை சொல்லித்தர வேண்டும்,அதைப்போல் பெற்றோர்கள் தான் முழு கவனத்துடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும்

    அப்போது தான் இது போன்ற கொடுமைகள் சுருங்கும்

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. இனி வரும் காலங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு இது போய்விடும்..

    உங்கள் கட்டுரை ஒரு நல்ல எச்சரிக்கை...

    ReplyDelete
  7. ஆனாலும் இந்த சமூகம் மாறத்தான் வேண்டும்...

    சில தாய்மார்கள் குழந்தைகள் இது போன்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறினாலும் அந்த நபரின் மீது கொண்ட முட்டாள்தனமான நம்பிக்கையில் குழந்தைகளை சாடுகின்றனர்..
    இதற்கு என்ன செய்வது?

    ReplyDelete
  8. Miga arumaiyana padhivu.. anaivarukkum avasiyamanathu& athiyavasiyamanathu.

    ReplyDelete
  9. அவசியமான பதிவு!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. குழந்தை பெற்று (கொல்லாதீர்கள்) -good lines.congrats.social welfare contribution

    ReplyDelete
  11. மிக நன்றாக எழுதி இருக்கிங்க.

    ReplyDelete
  12. மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . இதில் இன்னும் நான் சில பாகங்கள் படிக்க வில்லை . விரைவில் வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. குழந்தைகளை கொடுமைக்குளாவது மிக நெருங்கிய உறவுகளால். பயத்தினால் ..அதை சொல்வதில்லை .
    எதுவானாலும்.மனந்திறந்து பேசபழக்கணும் .அவசியமான் பதிவு.

    ReplyDelete
  14. கௌஸ், உண்மைதான். எல்லா நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கு.

    ReplyDelete
  15. கோவை குமரன்...

    தொடர் வருகைக்கு நன்றி சதீஷ்.

    ReplyDelete
  16. சே. குமார்...

    நன்றி

    ReplyDelete
  17. சௌந்தர்...

    நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். நன்றி சௌந்தர்

    ReplyDelete
  18. ஜில்தண்ணி - யோகேஷ்...

    முதல் வருகைக்கு நன்றிங்க. பெற்றவர்கள் கவனமாக இருக்ககூடிய கால கட்டம் இது..

    ReplyDelete
  19. கே ஆர் பி செந்தில்...

    நன்றிங்க

    ReplyDelete
  20. pinkyrose...

    முதல் வருகைக்கு நன்றி.

    சிறு குழந்தைகள் என்று எண்ணாமல் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் போது கவனிக்காமல் பிறகு பிரச்சனை எல்லை மீறி போனதும் தலையில் அடித்து அழுவதில் நியாயம் இல்லைதான் .

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  21. Gangaram...

    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. தெய்வசுகந்தி...

    உண்மை தோழி. அவசியமான விசயங்கள்தான். நன்றி

    ReplyDelete
  23. சி.பி.செந்தில்குமார்...

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  24. Priya...

    thanks for coming friend.

    ReplyDelete
  25. பனித்துளி சங்கர்...

    //இதில் இன்னும் நான் சில பாகங்கள் படிக்க வில்லை . விரைவில் வாசித்துவிடுகிறேன்//

    முழுவதும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் .

    நன்றி nanbare.

    ReplyDelete
  26. நிலாமதி...

    நன்றி தோழி.

    ReplyDelete
  27. vanathy...

    உண்மைதான் தோழி. ஆனால் பெற்றோர்கள் இதில் கொஞ்சம் கவனமா இருந்தால் போதும், குற்றங்களை குறைக்க முடியும்.

    நன்றி tholi.

    ReplyDelete
  28. மிக மிக அவசியமான பதிவு தோழி..நீங்க சொன்ன எல்லா கருத்தும் சரியானது தான்..எல்லா பெற்ற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது ...

    ReplyDelete
  29. kodumainga.. yaraium namba mudiyarathu illa

    ReplyDelete
  30. எதார்த்தங்களை எழுத்தாக்கவும்....! சத்தியங்களை சொல்லவும்....விழிப்புணர்வூட்டும் செய்திகளைப் பகிரவும்....தில் வேணும்..........


    உங்கள் தில்.......ரொம்ப அசாத்தியமானது....! Really got attracted!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. dheva...

    thanks for coming and commented, friend.

    ReplyDelete
  32. இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ?
    மனிதனின் உணர்வை மீறிய செயலா ?
    இந்த செயல் ஒருவேளை மனசிதைவால் நடக்கிறதா ?
    அந்த மனசிதைவு ஏன் ஏற்படுகிறது ?//////////அன்புடன் வணக்கம் ..இந்த பதிவு மிக அருமை வளர் இளம் குழந்தைகளை உள்ள பெற்றோர் அவசியம படிக்கவேண்டியது இதற்கு காரணம் இன்றைய உணவு பழக்கம் மிக அதீத அசைவ உணவு ...நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவே மிக சிறந்தது உப்பை குறைத்து .காரம் குறைவான உணவு உண்ணும் போது உணர்வுகள் எப்படி மட்டுப்பட்டு இருக்கிறது!!!! என்றாவது அசைவம் என்று இருந்தது போயே தற்போது எங்கு பார்த்தாலும் அசைவ உணவு கடைகள் .அதிலும் கொடுமை 3 வயது தனது மகளை. அழைத்து கொண்டு மட்டன் கடயில் ஆடு வெட்டுவதை பார்த்து கொண்டே அதன் சதைகளை வாங்கும் காட்சி ..ஈவு இரக்கம் என்பது அந்த குழந்தைக்கு வருமா??? அழுகிய சதைகளை உண்ணும் மனிதனுக்கு எப்படி நல்ல புத்தி வரும்.. சகோதரி எனது கருத்து தவறாக இருந்தால் மன்னித்து கொள்க !!!

    ReplyDelete
  33. hamaragana...

    /அதிலும் கொடுமை 3 வயது தனது மகளை. அழைத்து கொண்டு மட்டன் கடயில் ஆடு வெட்டுவதை பார்த்து கொண்டே அதன் சதைகளை வாங்கும் காட்சி ..ஈவு இரக்கம் என்பது அந்த குழந்தைக்கு வருமா??? அழுகிய சதைகளை உண்ணும் மனிதனுக்கு எப்படி நல்ல புத்தி வரும்.. சகோதரி எனது கருத்து தவறாக இருந்தால் மன்னித்து கொள்க !!!//

    உங்களை ஏன் இவ்வளவு நாளாக காணும் என்று தேடினேன்... ஆடி தபசு நல்ல படியாக முடிந்ததா?
    நீங்கள் பெரியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா?

    நீங்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ? குழந்தை அந்த காட்சியை பார்க்கும் போது சலனமற்றுதான் பார்க்கும்.....இப்போதுதான் நம் வீட்டிற்குள்ளையே தொலைக்காட்சி என்ற குட்டிசாத்தானை வைத்து இருக்கிறோமே....அதில்தான் எல்லா வன்முறை காட்சிகளும் வந்து விடுகிறதே.... அதனால் காட்சிகள் பழகி விடுவதால் பிற உயிர்களிடம் பற்று என்பது குறைந்துதான் விடுகிறது, அதே நேரம், அதை எல்லாம் பார்த்து ஒரு தெளிவுக்கு வந்து விடுகிறார்கள். இந்த மாதிரி புற சூழல்களில் பெற்றவர்கள் தான் மிகவும் கவனமாக எது சரி, எது தவறு என்று சுட்டி காட்ட வேண்டும்.

    மாமிசம் சரி இல்லைதான்...சில விசயங்களுக்கு மனித மனம் வசப்பட்டு விடுகிறது...மாற்றுவது சிரமமே....

    நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வாருங்கள் . நன்றி.

    ReplyDelete
  34. அன்புடன் வணக்கம் சகோதரி. தபசு அருமையாக இருந்தது இந்த வருடம் கூட்டம் மிக அதிகம். தரிசிக்க ஆர்வம் இருந்தது என்றால் ஒரு நடை வந்திருக்கலாமே??. நாங்கள் அழைக்கவில்லையோ என வரவில்லைய? .இது போன்ற திருகோவிலுக்கு வரும் அன்பர்களை எனக்கும் எனது அன்பிற்கிநியவளுக்கும் உபசரிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு .இவளை மனைவுயாக கிடைப்பதற்கு நான் செய்த புண்ணியம்!!!சமயம் வரும்போது சொல்கிறேன் !. உண்மை சகோதரி .!!!!!.அடுத்த முறை எங்கள் ஊர் வரவேண்டும் என்றால் ஒரு தகவல் கொடுத்து வருக ganalatha05@gmail.com.. நன்றி!!.. அதாவது அசைவ உணவு பழக்கம்:::
    நான் பார்க்கும்போது அந்த குழந்தை நாக்கில் எச்சில் ஊற பார்த்து கொண்டிருந்தது என கண் முன் நின்ற காட்சி மனதை விட்டு அகலவில்லை::மனிதன் உண்ணும் எந்த ஒரு மிருகமும் """"ஒழுங்கரா""""(immoral life) வாழ்க்கைதான் வாழ்கிறது நீங்களே என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் அதன் சதைகளை உண்ணும் மனிதன் அதன் குணமாகவே மாறும் நிலை!!! ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இது போன்ற செய்திகள் உண்டா ?? மிக குறைவு.. அதற்காகத்தான் நமது முன்னோர்கள் அசைவ உணவு ஓதிக்கினார்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...