முன் குறிப்பு:
ஒரு வழியா 50 பதிவை தாண்டியாச்சு...! இனி சதம் அடிப்பதை பற்றிதான் ஒரே கவலை...!! (அதுக்குனு ஒரு பதிவ மூணா பிரிச்சு போடும் குறுக்கு முயற்சி ஏதும் செய்றதா இல்லை, என்று உறுதி கூறுகிறேன்) நான் அரைசதம் அடித்ததை பெருமையுடன் வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்........, அல்வா கொடுக்கணும் என்றுதான் ஆசை...?! ஆனால் இருட்டு கடையில் ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். ரெடி பண்ணதும் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்போம் இந்த போஸ்ட் எழுதி முடிப்பதற்குள் வருகிறதா என்று.
தலைப்பை பற்றிய சிறு விளக்கம்
இதுவரை சில நல்ல விசயங்களைத்தான் எழுதி இருக்கிறேன் என்று திடமா நம்புகிறேன். இனியும் அப்பணி செவ்வனே தொடரும்...! நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிற விரும்பத்தகாத சில நிகழ்வுகளை கண்டனங்கள் என்ற தலைப்பில் பகிரலாம் என்று உள்ளேன். அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களை, அதை பற்றிய என் ஆதங்கங்களை இந்த தமிழ் கூறும் பதிவுலகத்திற்கு தெரிய படுத்த எண்ணுகிறேன். நான் எழுதும் கண்டனங்களுக்கு எதிர் பின்னூட்டம் வந்தாலும் அதை புன்னகையுடன் எதிர் கொள்வேன் (அப்படியாவது உங்களை யோசிக்க வைத்து இருக்கிறேனே...?! )
முதல் கண்டனம் - நைட்டீயா ? மேக்ஸ்சியா ?!
எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )
நைட்டி என்ற பெயருக்கே அவமானம்
அழகான , சௌகரியமான ஆடையை தயாரித்து அதற்கு நைட்டி என்று பெயரும் வைத்தவர்கள், இப்போது அது படும்பாட்டை நினைத்தால் நொந்து விடுவார்கள். பகலில் வெளியில் வேலைக்கு செல்பவர்களும் , வீட்டில் இடுப்பொடிய வேலை செய்கிற பெண்களும், இரவில் தூங்க போகும் போதாவது தங்களை கொஞ்சம் ரிலாக்சாக வைத்து கொள்வதற்காக, 6 முழ புடவையை மாற்றி சிம்பிளாக, தளர்வான இந்த உடையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கபட்டது. (ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வாக்கியம் ?!!) இரவில் போட வேண்டும் என்பதால் தான் நைட்டி என்றே பெயர் வைத்தார்கள்..!! ( என்னவொரு கண்டிபிடிப்பு... கிளாப்ஸ் ப்ளீஸ்)
நம்ம பெண்களும் தொடக்கத்தில் அப்படித்தான் பயன்படுத்தினார்கள் (இப்ப பாடு படுத்துறாங்க ) அப்புறம் போக போக பகலில் வீட்டில் அணிய தொடங்கினார்கள் . இந்த ஆண்களும் மனைவியிடம் மெதுவாக " நாம் தனியா இருக்கிறப்போ பரவாயில்லைடா , அம்மா, அப்பா இருக்கிறப்போ அவங்க முன்னாடி போகும்போது மட்டும் புடவையை மாத்திக்கோமா " என்று சொன்னார்கள். அப்புறம் புடவை மாத்த நேரம் இல்லை என்று மேலே அழகா ஒரு துப்பட்டா போட்டால் போதும் என்று ஆனது. அப்புறம் கேட்கணுமா நம்ம மாதர்குல மாணிக்கங்களை......? இதுதான் நமது தேசிய உடை என்று கோஷம் போடாத குறையாக வெளியிலும் போட்டுட்டு போக தொடங்கி விட்டார்கள்.
கொடுமையான விசயங்கள்
இங்கே உதாரணத்துக்கு இரண்டு விசயங்களை சொல்கிறேன். படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க நான் வருத்தபடுறது நியாயமா இல்லையா என்று ...?!
பெண்கள் முதலில் இந்த உடையுடன் வாசல் வரை வந்தார்கள், அப்புறம் வாசலை தாண்டினார்கள், அப்புறம் பக்கத்தில் இருக்கிற கடைதானே...!, இதுக்கு போய் புடவை மாத்தவா என்று போனார்கள்....?! அப்படியே பக்கத்தில் இருக்கிற கிளினிக் தானே.....??! என்று சென்றே விட்டார்கள்....?? (அதுவும் ஸ்கூட்டியில்..!!) . என்ன கொடுமைங்க இது ? (கிளினிக்கில் லேடி டாக்டர் கிட்ட வயிறு வலி என்று போனால் அவங்க எப்படி டெஸ்ட் பண்ணுவாங்க ...?!) ஓ.கே நான் கேட்கல விடுங்க ( யோசிக்கிறப்ப கஷ்டமா இருக்கு இல்ல? அப்ப நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்? )
இதை எல்லாம் விட 2000 ௦ பிள்ளைகள் வரை படித்து கொண்டு இருக்கிற பள்ளிகூடத்துக்கு தங்கள் குழந்தையை இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து விடுகிற பெண்களை நைட்டில பார்த்து பிரமிச்சு போயிட்டேன்...!! இந்த காட்சி வேற எங்கேயும் இல்லை படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருக்கிற நம்ம சிங்கார சென்னையில் தான்....!!? வாழ்க தமிழ் கலாசாரம்....!!
இரண்டாவது
சமீபத்தில் சென்னையில் எனது உறவினர் மகனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து எல்லோருமாக சேர்ந்து ஒரு 10௦ பெண்கள் புடை சூழ பயங்கர பந்தாவாக 2 காரில் சென்றோம். இதில் போகும்போது இந்த மைசூர் சில்க்குக்கு பதிலா காஞ்சிவரம் கட்டி இருக்கலாமே என்று பையனோட அம்மாவை குறை வேற ( கிண்டலாத்தான் ) சொல்லிட்டு இருந்தோம்.
நாங்கள் எங்க வந்திட்டு இருக்கிறோம் என்று பெண்ணோட அண்ணன் போன் செய்து கேட்டுட்டே இருந்தார். ( பெண்ணோட அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் பெண் அண்ணன் வீட்டில் இருந்து வேலைக்கு போயிட்டு இருந்தாள் ) இதை பார்த்த நான் வரவேற்ப்பு செம கிராண்டா இருக்கப்போகுது என்று பெருமை வேறு பட்டுக்கொண்டேன். 'அடடா பூ வாங்கலையே' என்று வழியில் பூ வாங்கி ஒன்றுபோல சூடி கொண்டோம்.
பெண் வீட்டை நெருங்கி விட்டோம் , பெண்ணோட அண்ணன் டிப்டாப்பா வாசலில் நின்று வரவேற்றார். நாங்கள் அப்படியே அசந்து உள்ள போனோம், அங்கே பெண்ணோட அண்ணி வந்து நின்னு வணக்கம் சொன்னதும் எல்லோரும் அப்படியே ஆடி போய்ட்டோம் ...??!! ( இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்...ம் .. ம் ) என்னத்த சொல்ல , அண்ணி தேசிய உடையில் (நைட்டி) இருக்காங்க...( அது கொஞ்சம் பளிச்சுன்னு இருந்தாலும் பரவாயில்ல , சாயம் போய், கசங்கி ஒரு மாதிரியா இருந்தது )
அதற்கு பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு பொண்ணு ( நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் ) கொண்டு வந்த காப்பிய குடிச்சிட்டு கிளம்பி வந்திட்டோம். எனக்கு மனசு கேட்காமல் பெண்ணோட அண்ணாகிட்ட கிளம்பும்போது தனியா 'ஏன் இப்படின்னு' கேட்டேவிட்டேன். அவரும் ரொம்ப கூலா அவங்க வேலைக்கு போறதால வீட்டில் இப்படித்தான் இருப்பாங்க , அவளுக்கு இதுதான் comfortable என்றார். (ஆனா புதுசா போன நமக்கு...?)
நம்ம பெண்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க..?? புதிதாக ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நாம எப்படி இருக்கணும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து விட்டதா? மற்றவர்களின் முகசுளிப்பை கூட அலட்சியபடுத்துவது ஏன்..?? எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது அற்புதமான தமிழ் பண்பாடு..? மேலை நாடும் பொறாமை படும் நமது விருந்தோம்பல் ஒழுங்கு இப்போது எங்கே...?
எங்கள் வசதிக்கு ஒரு ஆடை உடுத்த கூட எங்களுக்கு உரிமை இல்லையா ? என்ற அனாவசியமான விதண்டாவாதம் பேசுவது அநாகரீகம்... எது உரிமை ? மற்றவர்களின் முகசுளிப்புடன் கூடிய பார்வையில் வலம் வருவது தான் உங்கள் உரிமையா ? பெண்ணுரிமை என்பதின் உண்மையான அர்த்தம் தெரியாத அறிவிலிகள் தான் இங்கே இப்போது பெருகி கொண்டு இருக்கிறார்கள். நமக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது , அதை தாண்ட எண்ணுவதே தவறு என்னும் போது, தாண்டியவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது ...?? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
இந்த மாதிரி சுய சிந்தனை இல்லாதவர்களை எண்ணியே எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....
**************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்
தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
***************
**************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்
தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
ஹேமா
Jayadeva
Jey
இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
***************
சாட்டையடி .. இதையே நாங்க சொன்ன ஆணாதிக்கவாதி என்று சொல்வார்கள். உங்களை பிற்போக்குவாதி என்று சொல்ல வாய்ப்பு உள்ளது... மிகத் தெளிவாக, துணிச்சலாக உங்கள் மனதில் உள்ளதை சொல்லி இருகிறீர்கள். அதற்க்கு என் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஎன்னா இவ்வளவு கோவம்..
ReplyDelete//எனக்கு கேட்ட கோவம்//
ReplyDeleteயாருகிட்ட கேட்ட கோவம்
//(ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வார்த்தை...?!!)///
எங்க ஊருல அதை வாக்கியம் என்று சொல்லுவோம்
இப்படிக்கு
தலைவன்
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவோர் சங்கம்
//( (மணப்பெண்)நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் )//
ReplyDeleteஇனி வரும் காலத்தில் நைட்டியாக மாறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது, எப்படி இருந்தாலும் கல்யாணத்திற்கு பின் இதில் தான் பார்க்கப்போகிறீர்கள்..அதனால் தான் இப்படி என்று சொன்னாலும் வியப்பு அடைய வேண்டியது இல்லை. நச்..பகிர்விற்கு நன்றி......
LK...
ReplyDeleteஎனது அடுத்த கண்டனமே இந்த ...வாதி , அந்த....வாதி என்பதை பற்றிய சாடல் தான்...?!
தவறை தவறு என்று சொல்வதற்கு தனியாக துணிச்சல் எதற்கு ? இதை சொல்றது எங்க உரிமைங்க, அதுதாங்க பெண்ணுரிமை...! :)))
கே.ஆர்.பி. செந்தில்...
ReplyDeleteஇது கோபம் என்பதை விட எனது நீண்ட நாள் ஆதங்கம் நண்பரே. நன்றி
மங்குனி அமைச்சர்...
ReplyDeleteநான் மாத்திட்டேனே... ! தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி அமைச்சரே.
வந்ததுக்கு சந்தோசம்... அல்வா சாப்பிடீங்களா?
//தவறை தவறு என்று சொல்வதற்கு தனியாக துணிச்சல் எதற்கு ? இதை சொல்றது எங்க உரிமைங்க, அதுதாங்க பெண்ணுரிமை...! :/
ReplyDelete:)))))
கோவை குமரன்...
ReplyDeletevarukaikku nanri :)
தோழி உண்மையே சொல்லட்டுமா எனக்கு இந்த" நைட்டி"பிடிக்கவே பிடிக்காது ...நானும் பார்த்திரிக்கேன் நிறையே பேர் இது உடுத்திட்டு தான் கடை ,பள்ளிக்கூடம் அப்பிடி பல இடங்களிலும் சுத்தறாங்க ..அதில் என்ன comfortable அவங்களக்கு கிடைகரதேன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியலே ..
ReplyDeleteநைட்டி யூஸ் பண்ணாதே ன்னு நான் சொல்லல்லே ஆனா அவங்கவங்க வீட்டுக்குள்ளே இருக்கட்டும்.
நல்ல தான் இருக்கு உங்க கோவம் ஆனால் எங்கு இருந்து திருந்த போறாங்க ....
ReplyDeleteஇந்த மாதிரி சுய சிந்தனை இல்லாதவர்களை எண்ணியே எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....//
தொடர்ந்து எழுதுங்கள் அக்கா நிச்சயம் நான் எதிர் பார்ப்பேன்
ஒழுங்க வீட்டுக்கு அல்வா பார்சல் வரவேண்டும்..
//(மணப்பெண் நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் )//...நல்லவேளை:)
ReplyDeleteபாராட்டுக்கள்... எனக்குள்ளும் தோன்றிய எண்ணங்களை நீங்கள் வார்த்தைகளாக்கியதற்கு! உண்மையிலேயே சில பெண்கள் இந்த விஷயத்தில் திருந்த வேண்டும்!திருந்துவார்களா...?
கௌஸ், இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகி எதுவுமே நடக்கப் போவதில்லை. நைட்டி போடுகிறவர்கள் அதை விடப்போவதில்லை. கடைக்கு, பள்ளிக்கு, பெண்பார்க்க, இன்னும் கொஞ்ச நாட்களில் வேலைக்கு கூட நைட்டியில் போனாலும் அதிசயமில்லை.
ReplyDeleteஇங்கு எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு இந்தியப் பெண் மிகவும் மெல்லியதாக ( உள்ளாடைகள் தெரியுமளவிற்கு ) நைட்டி அணிந்து கொண்டு ஒரு நாள் தெருவில் நடந்து போனார். இந்த ஜென்மங்கள் எல்லாம் தாங்களாகவே திருந்தினால் ஒழிய ... வேறு எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை.
இது தான் உங்கள் ஊரில் அல்வாஆஆஆஆஆ? பார்க்க ரசம் போல இருக்கு. எனக்கு ரசம் வாண்டாம். எல்கே க்கு குடுங்கோ.
உண்மையை நச்சுன்னு எழுதியிருக்கீங்க. இந்த ஆதங்கம் எனக்குள்ளயும் இருக்கு. தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.
ReplyDeleteஅல்வா சூப்பர்:-))
எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
ReplyDeleteஎதிராக//
ஆங்....
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலையே?
இது ஒரு பழைய பாடல் வரி.. இவ் வரிகளை இவ் விடத்தில் சொல்வதை விட No coment's.
என்னத்த சொல்ல, அம்மனிக விசயத்துல, நான் கொஞ்சம் எட்டி நின்னு வேடிக்கை பாத்துட்டு போரேன். இல்லைனா, டை பாத்து கும்மிருவாங்க.
ReplyDeletewell said.nightie ippo pagal ty aagi vittadhu(thanks leoni).appuram ippa two piece nighty ellam vandhu vittadhu.neengal kooruvadhu 100 percent unmai. manadhil pattadhai urimaiyodu sonnatharku nandri sagothari.
ReplyDelete:)))))))))
ReplyDeleteபேஸ் புக்கிலேயே நைட்டி போட்டுகிட்டு வலம் வர ஆரம்பிச்சாச்சு பதிவர்கள்...
:))
எல்லாம் எதுக்கு னு புரியலையா?..
விளம்பரம் தான்..
இல்லன்ன இருக்கவே இருக்கு கவிதை என்கிற பேரில் அந்தரங்கம்..
என்ன சொல்ல பெண்கள் முன்னேறுகிறார்களாம்..:)
நல்ல கருத்துரு (concept) ஒன்றை பதிவாக்க தொடங்கியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்து முறை (writeup) வெகுவாய் ஒழுங்கு பட்டிருக்கிறது. என்ன ஒன்னு உங்களுக்கு bracket கௌசல்யானு பட்டபேரு கொடுத்துடலாம் போல! ஆனா அதுவும் சுவாராஷ்யம்தான். நைட்டி பற்றிய கண்டனம் எனக்கு உடன்பாடானதே. ஆனால் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட கேள்வியை நான் உங்கள் முன் வைக்கிறேன். மற்றவர்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது நமக்கு அது பிடிக்காமல் போனால் அது அனைத்து நேரத்திலும் நியாயமாய் இருக்குமா. ஒருங்கிணைத்த பொதுவிதிகள் - மற்றவர்கள் பாதிப்படையாத போது - சமுதாயத்திற்கு தேவையா. அது சாத்தியமா. நைட்டி பற்றிய உங்கள் பார்வை சரியானது. தூங்குவதற்கு உகந்த உடையளவில் மட்டும் இந்தநாட்களில் அவை இல்லை மாறாக அது வாழ்வின் செயல்பாட்டு உடையாக மாறி வெகு காலமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. நைட்டியைப்போட்டுக் கொண்டு மேலே மாராப்புக்காக ஒருதுண்டை போட்டுக்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்யும் ஒரு இயல்பான பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதன் நீட்சியில் பெண்கள் இந்த உடையில் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்லத்தொடங்கி விட்டார்கள் போல. இது சற்று அதீதம்தான். ஆனாலும் பொதுஇடத்தில் ஒரு பெண் நைட்டியுடன் காண நேர்ந்தால் நமது மனம் ஏன் சங்கடம் கொள்ள வேண்டும் என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. நிறைய எழுதுங்கள். தொடர்ந்து விவாதிக்கலாம்.
ReplyDeletethanks.
sandhya...
ReplyDelete//நைட்டி யூஸ் பண்ணாதே ன்னு நான் சொல்லல்லே ஆனா அவங்கவங்க வீட்டுக்குள்ளே இருக்கட்டும்.//
இதைத்தான் நான் சொல்கிறேன் தோழி. நன்றி.
சௌந்தர்...
ReplyDeleteஇனி உங்களை இங்கு பார்க்க முடியாது என்று எண்ணினேன். கழுகில் பிசி இல்ல, அதை சொன்னேன். வந்ததுக்கு நன்றி.
அல்வா பார்சல் பண்ணினேன் ... இன்னும் கிடைகலையா சௌந்தர்....?!!
Priya...
ReplyDelete//பாராட்டுக்கள்... எனக்குள்ளும் தோன்றிய எண்ணங்களை நீங்கள் வார்த்தைகளாக்கியதற்கு! உண்மையிலேயே சில பெண்கள் இந்த விஷயத்தில் திருந்த வேண்டும்!திருந்துவார்களா...?//
கொஞ்சமாவது மாறினால் நன்றாக இருக்கும். வருகைக்கு மிக்க நன்றி தோழி.
//இங்கு எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு இந்தியப் பெண் மிகவும் மெல்லியதாக//
ReplyDeleteடென்ஷன் பன்றாங்களே தோழி...
நாம இருக்கும் விதமா இருந்தாலே பெண்களுக்கு ஏற்பட கூடிய சில பிரச்சனைகளை தவிர்க்கலாம்பா. அப்புறம் அவன் இப்படி கிண்டல் பண்றான் , இவன் கையை பிடிக்கிறான் என்று வருத்தப்பட வேண்டி இருக்காது.
அல்வாதான் சூடா ஆவி பறக்க இருக்கிறதால அப்படி தெரியுது..? ரசத்தில யாராவது இந்த கரண்டிய போடுவாங்களா...!!? ( வேற ஒன்னும் இல்ல சமாளிபிகேசன் ) LK க்கு சுகராம் வேண்டாமாம். :))
தெய்வசுகந்தி...
ReplyDelete//தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.
அல்வா சூப்பர்:-))//
கண்டிப்பாக... உங்களின் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கிறது தோழி. நன்றி.
அல்வா எடுத்துகிட்டதுக்கு :))
தமிழ் மதுரம்...
ReplyDelete//யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலையே?
இது ஒரு பழைய பாடல் வரி.. இவ் வரிகளை இவ் விடத்தில் சொல்வதை விட No coment's.//
இதுவே நல்ல கமெண்ட்ஸ் தான். நன்றி நண்பரே.
Jey...
ReplyDeleteஇப்படி நீங்க சொன்னதுக்கே டைம் பார்க்க தொடங்கியாச்சு... பார்த்து கவனமா இருங்க :))
நன்றி
wishes kousalya you have taken good initative writing about these things
ReplyDeleteஉண்மையை நச்சுன்னு எழுதியிருக்கீங்க.
ReplyDeleteமிகத் தெளிவாக, துணிச்சலாக சொல்லி இருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
புன்னகை தேசம்...
ReplyDeleteமுதல் முறையாக வந்துள்ளீர்கள். மிக்க நன்றி வருகைக்கும், கருத்துக்கும்..!!
Anonnymous...
ReplyDelete//appuram ippa two piece nighty ellam vandhu vittadhu.neengal kooruvadhu 100 percent unmai. manadhil pattadhai urimaiyodu sonnatharku nandri sagothari.//
thank u for ur comments
adhiran...
ReplyDelete//பொதுஇடத்தில் ஒரு பெண் நைட்டியுடன் காண நேர்ந்தால் நமது மனம் ஏன் சங்கடம் கொள்ள வேண்டும் என்கிற ஒரு கேள்வி இருக்கிறது.//
வேலைபளுக்கு இடையில் வந்தமைக்கு மிக்க நன்றி.
பொது இடத்தில தன் வீட்டு பெண்ணை இரவு உடையில் பார்க்கும் அந்த வீடு ஆண்களுக்கு குறிப்பாக அப்பா, கணவன், சகோதரன், மகன் வேண்டுமானால் சங்கடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் பெண்மையை உணர்ந்த மற்ற பெண்கள் கண்டிப்பாக முகம் சுளிக்கவே செய்வார்கள் என்பதே உண்மை.
the arguments continued...........
திவ்யாம்மா...
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழி.
சே.குமார்...
ReplyDeleteநன்றிங்க. :))
நியாயமான கேள்வி...டமில்(தப்பா டைப் அடிகல) பெண்களிடம் பதில் இருக்குமா...
ReplyDeleteராசராசசோழன்...
ReplyDeleteஇப்பதானே கேள்வி கேட்டு இருக்கிறோம், பதில் இனி வரும்.
நன்றி friend.
அல்வாவுக்கு நன்றி.. அதிலும் இருட்டு கடை அல்வான்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்..
ReplyDeleteநைட்டி பத்திய பதிவு சூப்பர்.. சரியான கேள்வி தான்..
நைட்டி(nightie ) இப்போது...
டே-டி(daytie ) ஆகி விட்டது.. :-))
கௌசல்யா, உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
ReplyDeleteபெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html