உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
வடை எனக்குதான் படிச்சிட்டு வரேன்
பதிலளிநீக்குஎனக்கு தெரியாத நிறைய விசயம். இப்படி இந்த மரத்தால் இவ்வளவு கெடுதல் இருக்கிறதா... நல்ல விழிப்புணர்வு...நல்ல பதிவு
பதிலளிநீக்குகெளசல்யா....
பதிலளிநீக்குநிஜமாதான் சொல்றீங்களா...ரொம்ப ஷாக்கா இருக்குங்க....! இராம நாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிகைப்பட்ட காட்டு கருவேல மரங்கள் இருகின்றன.....இந்தப் பகுதிகளும் எப்போதும் வரண்டு தான் போய் இருக்கிறது,.... நீங்க சொல்றதின் லாஜிக்கும் கிடைக்குது.....
ம்ம்ம்ம்ம்....ஏன் தமிழக அரசு விழிப்ப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் உடனே இறங்க கூடாது.....!
பயன்ள்ள தகவல் தோழி வாழ்த்துக்கள்!
நல்ல கருத்து முடிந்த வரையில் இதை எல்லாரிடமும் பரப்ப வேண்டும்
பதிலளிநீக்குஇந்த மரம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகள் வந்துகொண்டுதானிருக்கின்றன..
பதிலளிநீக்குஆனாலும் யாரும் இதை அழிப்பதில்லை..
வேப்ப மரம் இப்போதுதான் அதிக அளவில் வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்...
மிக ப்துமையான தகவல்...தூத்துகுடி மாவட்டத்திலும் இது அதிகம் உண்டு...இதைப்பற்றி இப்போதுதான் கேள்விபடுகிறேன்... நல்ல பதிவு நன்றி அக்கா...
பதிலளிநீக்குஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய பகிர்வு... சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் குறைந்தது நாலு பேரிடமாவது இந்த விஷயத்தை ( விஷத்தை ) கொண்டு செல்வோம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தொடர்ந்து நல்ல விசயங்களை பதிவுலகத்தின் பார்வைக்கு கொண்டு வாருங்கள்.....
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
பதிலளிநீக்கு...... என்னங்க... இதில் விளையாட்டு எதுவும் இல்லையே? இத்தனை விஷயங்கள் இருந்தும் - யாரும் கவலைப்பட்டதாகவே தெரியலியே..... இந்த மெத்தனப் போக்கு ஒழியும் வரை - பிரச்சினைகள் எப்படி தீரும்?
பயனுள்ள தகவல்..
பதிலளிநீக்குநன்றி...
LK...
பதிலளிநீக்குகண்டிப்பாக உங்களுக்குத்தான். :))
சௌந்தர்...
பதிலளிநீக்குஎனக்கும் இந்த விஷயம் இப்போதுதான் தெரியும், அந்த அளவிற்கு நம்மிடம் அறியாமை இருக்கிறது சௌந்தர். நன்றி.
dheva...
பதிலளிநீக்குபடித்தவர்கள் நமக்கே இப்போதுதான் தெரிகிறது கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள்?! இதை பற்றி உங்கள் கழுகில் சொல்லுங்கள் பலருக்கும் தெரியட்டும்.
வருகைக்கு நன்றி தேவா.
LK...
பதிலளிநீக்குமுடிந்தவரை சொல்லவேண்டும். :))
கே ஆர் பி செந்தில்...
பதிலளிநீக்குமரங்களை புதிதாக வைப்பதை விட இதை அழிப்பதுதான் மிக மிக அவசியம். நன்றி செந்தில்.
ganesh...
பதிலளிநீக்குபலருக்குமே புதிய தகவல்தான் நண்பரே. நன்றி
jothi...
பதிலளிநீக்கு//தொடர்ந்து நல்ல விசயங்களை பதிவுலகத்தின் பார்வைக்கு கொண்டு வாருங்கள்.....//
உங்களின் ஆதரவு இருக்கும் வரை கண்டிப்பாக எழுதுவேன். நன்றி நண்பரே.
Chitra...
பதிலளிநீக்குவாங்க சித்ரா. நலமா? மறுபடியும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி .
விளையாட்டு இல்ல தோழி, உண்மைதான். இப்போதுதான் பதிவுலகத்திற்கு வந்து இருக்கிறது , இனி மற்றவர்களையும் சென்று அடையும் என்று நம்புகிறேன்.
நன்றி தோழி.
கோவை குமரன்...
பதிலளிநீக்குநன்றி.
ஆஹா.. முள்ளு மரத்துல இவ்ளோ விஷயம் இருக்கா??
பதிலளிநீக்குநம்ம ஊரு பக்கம் எல்லாம், இது தானே நிறைய வளர்ந்து கிடக்கு :-((
தகவலுக்கு நன்றி.. அவசியமான பதிவுங்க..
இந்த மரத்தை பத்தி இவ்ளோ விஷயம் நீங்க சொல்லி தான் புரிஞ்சது ..அவரவர் ஊரில் இருக்கற இந்த விஷ மரத்தை வெட்டி போட்டு வேப்ப மரம் நட்டா நல்லா இருக்கும் ...பயனுள்ள பதிவு தோழி ..நன்றி
பதிலளிநீக்குகௌசல்யா,
பதிலளிநீக்குதலைப்பு அதிர்ச்சி தந்தது. இடுகையைப் படித்தபின் நிம்மதி. பயனுள்ள, விழிப்புணர்வு தரும் இடுகை. கிராமத்து நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ஸ்ரீ....
கௌசல்யா,
பதிலளிநீக்குதலைப்பு அதிர்ச்சி தந்தது. இடுகையைப் படித்தபின் நிம்மதி. பயனுள்ள, விழிப்புணர்வு தரும் இடுகை. கிராமத்து நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ஸ்ரீ....
பதிவும் அருமை...தளத்தில் பயன்படுத்திய எழுத்துருக்களும் வண்ணமும் அருமை..
பதிலளிநீக்குஅருமையான பதிவு, கௌஸ்.
பதிலளிநீக்குஇதைப்பத்தி இவ்ளொ தெளிவ இல்லைன்னாலும் ஏதொ கொஞ்சம் ஒரு டைம் சொன்னப்ப எல்லாரும் சிரிச்சாங்க...:(
பதிலளிநீக்குஅவங்கள்ட்ட இத காமிக்கனும்
very good information
பதிலளிநீக்குவெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'////
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் வந்ததாக படித்த நியாபகம்
புதியக் கருத்து. நல்ல பதிவு.!
பதிலளிநீக்குஎனக்கு அந்த மரத்தைப் பிடிக்கவேப் பிடிக்காது. சில நாட்கள் விவசாய நிலத்தைப் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் தானாகவே வளர்ந்து விடும். தரிசாகிப் போய் விடும். மீண்டும் அந்த நிலத்தை விவசாயத்திற்குத் தயார்ப் படுத்துவது மிகக் கொடுமையான வேலை. வேர் அவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் ஊடுருவிப் போய்விடும் நன்குத் தோண்டி எடுக்க வேண்டும் என்றுக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.
அதன் விறகுகள் எளிதாக சமைக்க உதவும். ஒரே ஒரு கட்டையை எரிய வைத்தால் சமைத்து முடித்து விடலாம் என்பார்கள். அதனை விறகுக்காக வெட்டுவதும் கூட கடினம். கிளைகள் ஒழுங்கில்லாமல், பின்னிக் கொண்டு இருக்கும். முள்ளும் சற்று விஷத்தன்மை கொண்டது. குத்தினால் வலி பின்னி எடுக்கும்.
கடும் வறட்ச்சியினால் பூமியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும், வறட்சியிலும் செழித்து வளரும் என சொல்லி (ஏமாற்றி) வெளி நாட்டுக்காரன் நம் நாட்டு வறண்ட நிலங்களில் ஹெலிகாப்டர் மூலம் இந்த காட்டு கருவேல மர விதைகளை தூவியதாக படித்து இருக்கிறேன்..!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரியானது...!
இந்த மரம் ஒரு சைத்தானை போன்றது..இந்த மரங்களை வெட்டுவதோடு அல்லாமல் வேரோடு எரித்து விட வேண்டும்..!
இந்த மரங்கள சுலபமா வெட்டி வீசிட முடியாதுங்க. கிளைகளை வெட்டி வேரையும் வெட்டி நல்லா வெயிலுல காயவிட்டு எரிக்கனும். கொஞ்சமா வேர் மண்ணுக்கு அடியில இருந்தாலும் மீண்டும் வர ஆரம்பிச்சுடும். அதே ஒரு மழை பேஞ்சா போதும் ஒரே வாரத்துல மீண்டும் முழச்சிடும். வேர் அழிக்குறதும் சுலபமா முடியாது. இதுக்கு அரசாங்கம் பணத்த தனி ஒதுக்கீடு செஞ்சு செயல்படுத்தினாத்தான் முடியும்.
பதிலளிநீக்குதோழி கெளசல்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பதிவு போட்டதுக்கு...
பதிலளிநீக்கு...
Ananthi...
பதிலளிநீக்குதெரியாமல்தான் இருக்கிறோம் என்ன செய்வது?
நன்றி தோழி.
தலைப்ப பாத்ததும் பயந்துட்டேன்... படிச்சதும் விசயம் புரியுது... நல்ல பதிவு கௌசல்யா
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணி...
பதிலளிநீக்குநன்றி தோழி.
சகோதரி,
பதிலளிநீக்குசூல் கொண்ட மேகங்கள் கால்கொண்டு இறங்கிட மரகதப்படிகளாம் மரங்கள்
என்றிருந்த எனக்கு,தங்கள் எதிர்மறையான தலைப்பைப்பார்த்ததும் அதர்ச்சி!
எதிர்மறையான
தலைப்பை வைத்து,ஆக்கபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
நன்றி!
ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
எதிர்மறைப்பதிவோனு நினைச்சேன்.
பதிலளிநீக்குஇயற்கை ஆர்வலர்க்கான பதிவுதான்.வாழ்க.
எங்க ஊருல இந்த மரங்கள் அதிகம். எவ்வளவு வெட்டினாலும் வளரும்? எரிச்சுராலாமா ?
பதிலளிநீக்குசகோதரி... மிகவும் சமூக நோக்கோடு எழுதப்பட்ட நல்ல பதிவு. என் நண்பன் மூலம் மின்னஞ்சல் வழியாக பெற்றேன். அவசியமென தோன்றியதால் எனது வலையிலும் பதிவேற்றினேன். மிக்க நன்றி பதிவுக்கும் தகவலுக்கும்.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பணி.
பார்வேர்டு மெயிலில் எனக்கு தாய்லாந்தில் இருந்து வந்ததால் நானும் இதை அப்படியே எனது வலையில் காப்பியுள்ளேன். இதன் பிறகுதான் நண்பர் சௌந்தர் உங்களுடைய பதிவு எனச் சொன்னார்.
பதிலளிநீக்குவலையிலும் எனது விளகக்த்துடனேயே அளித்துள்ளேன்.
நம்மை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி.
வாய்ப்பாடி குமார்...
பதிலளிநீக்குநண்பருக்கு வணக்கம். இந்த பதிவு மெயிலின் மூலம் பலருக்கும் சென்று கொண்டு இருப்பது தெரியும். நல்ல விஷயம் பலருக்கும் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. நான் எதிர்பார்த்ததும் இதைத்தான்..
அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நன்றி.
நன்றி தோழி.. அருமையான கட்டுரை.. இந்த தகவலுக்கான மூலம் (Source) கிடைக்கப்பெற்றால் இன்னும் நன்றாக இருக்கும்.. கிடைக்க செய்வீர்கள் என்று நம்புகிறேன்.. நன்றிகள் பல..
பதிலளிநீக்குYou gave many good facts.
பதிலளிநீக்குBut you didn't mention any source for all these facts?
தங்கத்தமிழன்...
பதிலளிநீக்குkskumar...
வருகைக்கு நன்றி.
இந்த மரத்தை பற்றிய சில விவரங்கள் தினத்தந்தியில் 'ரௌடி மரம்' என்ற தலைப்பில் வெளி வந்திருந்தது. தவிரவும் சில கிராம மக்களின் வாயிலாகவும் சில தகவல்களை கேட்டு அறிந்தேன். கேரளாவில் இந்த மரங்களை அடியோடு வேரருக்கபட்டன என்பதை அறிந்துகொண்டபின் தான் நம்மிடையே ஏன் அந்த விழிப்புணர்வு இல்லை என்ற கேள்விக்காக எழுதப்பட்டது தான் இந்த கட்டுரை. இந்த மரத்தை பற்றிய முழு விவரங்களையும் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன்.
உங்களை போன்றோரின் ஆர்வத்தை மதிக்கிறேன். முடிந்தவரை இந்த தகவல்களை பலரிடம் கொண்டு செல்லுங்கள்.
நன்றி.
கெளசல்யா....
பதிலளிநீக்குஉங்க பதிவுனு தெரியாது....நண்பன் ஒருத்தன் இத எனக்கு மெயில் அனுப்பி இத என் பதிவிலிடுமாறு சொன்னதால நானும் சரி நல்ல விசயம்னு தானேனு நாலு பேருக்கு போய் சேரட்டும்னு விசாரிக்காம போட்டுட்டேன். அன்பர் LK வந்து என் பின்னூட்டத்தல சொன்னதுக்கு அப்புறம் தான் இது ஏற்கனவே உங்க பதிவுனு தெரிஞ்சிக்கிட்டேன்....தவறுக்கு வருந்துகிறேன்...நீங்க அத நீக்க சொன்னா நீக்கிடுறேன்..நன்றி
டுபாக்கூர்கந்தசாமி...
பதிலளிநீக்கு//நானும் சரி நல்ல விசயம்னு தானேனு நாலு பேருக்கு போய் சேரட்டும்னு //
இதுதான் என் நோக்கமும்...இந்த மெயில் வலைத்தளம் முழுதும் சுத்தி வந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு வருத்தம் இல்லை மகிழ்ச்சிதான். என்னிடம் பலரும் இதை பற்றி சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.
உங்கள் மூலமாவும் இந்த நல்ல விஷயம் பரவுவது தவறில்லை. அதை எடுக்க வேண்டியதும் இல்லை. புரிந்துகொண்டு எனக்கு தெரிவித்ததுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
Useful Information..
பதிலளிநீக்குVery nice Post...
Anbarasan...
பதிலளிநீக்குthank u sir.
எளிமையான, அவசியமான, விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம், பாதிப்புக்களை ஆழமாக விளங்கச்செய்யும் பதிவு! கருவேலமரம் குறித்த, இதுவரை எனக்குத் தெரியாத, அதிர்ச்சிகரமான பல கருத்துக்களை உங்கள் மூலம் அறிந்தமைக்கு, நன்றிகள் பல தோழி கௌசல்யா அவர்களுக்கு!இந்த மரம்தொடர்பான சாதக பாதகங்கள் குறித்த முழுமையான அறிவியல் பதிவொன்றை (மேலிருப்பானில்) எழுதத்தூண்டுகிறது உங்கள் பதிவு. விழிப்புணர்வுக்கும், பகிர்வுக்கு மிக்க நன்றி! இம்மாதிரியான மேலும் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்....
பதிலளிநீக்குபத்மஹரி,
http://padmahari.wordpress.com
me the first
பதிலளிநீக்கு50..........
பதிலளிநீக்குபயன்ள்ள தகவல் தோழி வாழ்த்துக்கள்!cholla vaythu ellai,,
vanakangal..tholi.
please send your email address to my email id- r.annathurai@gmail.com
பதிலளிநீக்குகடந்த 2005 ஆம் ஆண்டில் கவனகர் முழக்கம் இதழ் மூலம் இது குறித்த விழிப்புணர்வு பெற்று, அது முதல் பள்ளிகள், கல்லூரிகள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் இது குறித்து பேசி வருகிறேன்.
பதிலளிநீக்குஇது குறித்து கோவை விவசாய பல்கலை கழகத்தில் விசாரித்ததில், "அப்படியா!" என நம்மையே கேட்கிறார்கள்.
அப்போதே நண்பன் வேலுவின் வலைப்பூவில் வெளியான இந்த கட்டுரையின் இணைப்பு http://vel2vel.blogspot.com/2005/10/blog-post.html
மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.
@@ ரசிகன்...
பதிலளிநீக்குமுதலில் உங்களுக்கு என் நன்றிகள். 2005 ல இருந்தே நீங்க இதை பத்தின விழிப்புணர்வு கொடுத்து வருவதை பற்றி ஆச்சர்யபடுகிறேன்...
படித்த நம்ம மக்களுக்கு கூட இன்னும் இதை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அரசாங்கம் இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதும் கேள்வி குறிதான்.
இம்மரம் தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துள்ளேன், கூடிய விரைவில் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பதாக இருக்கிறேன்.
உங்களுக்கு இயன்றால் இது குறித்த விவரங்கள், ஆதாரங்கள் இருப்பின் எனக்கு மெயில் செய்தால் மிகுந்த நன்றி உடையவளாக இருப்பேன்.
நன்றிகள்.
காமராஜர் காலத்தில், அமெரிக்காக்காரன் வானத்தில் தூவி விட்ட விதிகள்தான் இந்த வேலிகருவேல மரம. அதற்க்கு முன் கிடையாது.திடீரென்றுதான் பரவியது.தலைநகர் டில்லி நகரத்துக்குள்ளேயே பார்க்கலாம்.முகவை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப்போன சமயத்தில், விறகுக்காகவும் கரிதுண்டுகளுக்காகவும் இதை வளர்த்தார்கள்.காலில் முள் குத்தினால் வெஹு நேரம் கடுகடு என்று இருக்கும். மற்றபடி நான் அறிந்தவரையில் பெரும் ஆபத்து ஏற்பட்டதாக தெரியவில்லை. நன்றி.
பதிலளிநீக்குஇந்த கட்டுரையை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடுங்கள்.நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2012/02/blog-post_10.html
ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
பதிலளிநீக்குஇந்த உண்மை இப்பதாங்க தெரிய வருது பயனுள்ள பகிர்வு மக்களை சென்றடைய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . நாமும் முயல்வோம் . மதுமதியின் அறிமுகம் கண்டு வந்தேன் வாசித்தேன் .
அருமையான தகவல்கள் அடங்கிய
பதிலளிநீக்குசிறந்த விழிப்புணர்வு பதிவு.
நன்றி !
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=91335
பதிலளிநீக்குNO DOUBT THAT THIS TREE HAS TO BE ERDICATED. உடம்பு முழுதும் விஷம்
பதிலளிநீக்கு"இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது" I AM NOT IN AGREEMENT WITH ABOVE STATEMENT. It is True that Many of our POOR PET CATTLES ARE DEPENDING ON THESE SEEDS FOR ITS PROTEINS. இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!! I still found in many villages this tree is being used to tieup their cattles BUT No such experience could be asceratined. Many peoples are depending on making money out of this tree by making " charcoal".Further wish to add ,one tree meets its 95% of requirements from artmospher and remaining 5% from its roots . Only to suck the Soluable nutrients from soil , plants need roots and for developing this roots , plant kingdom is working round the clock spending its 95% energy.
வணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
பதிலளிநீக்குஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.
thanks for sharing this useful post
பதிலளிநீக்குநாம் காலை எழுந்த உடன் டெல்லிமுள் கண்னுக்கு தெரிந்ததூரம் உள்ளதை இன்றே வெட்டி எடுக்க நாமும் நமதுஅரசும் பாடுபடவேண்டும்
பதிலளிநீக்குஇன்று டெல்லி முள் முழுவதும் வெட்டி எடுப்போம்
பதிலளிநீக்கு16 .06.2020முதல் தமிழக முதல்வர் இதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நன்றி
பதிலளிநீக்குதொடர்புக்கு 94435458632
முள்அகற்றவும்
பதிலளிநீக்கு