ஞாயிறு, மார்ச் 14

காளான் வளர்ப்பு

எப்படி வளர்ப்பது என்பதை பற்றி நான் விரிவாக கூற போவதில்லை. ஏன் என்றால் காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் ஏற்கனவே அதிக தளங்கள் உள்ளன. அதனால் அதை பற்றியே நான் மறுபடி கூறுவதை விட அதை எவ்வாறு சிறிய அளவில் வீட்டிலேயே வளர்த்து நம் சமையலுக்கு பயன் படுத்தலாம் என்று கூறுகிறேன். காளான் உணவு சத்து மிகுந்தது என்பதால் காய்கறி தோட்டம் போல் இதனையும் வளர்த்து வருகிறேன். மேலும் இதற்காக அதிகமாக மெனக்கிட வேண்டாம்.

தேவையான இடம்:



இதனை பொறுத்தவரை வளரும் சூழ்நிலை குளிர்ச்சியாக இருக்கவேண்டும். இதற்கு வீட்டின் ஒரு மூலையே போதும். மூன்று பக்கமும் கயறு கட்டி சனல் சாக்கை screen போல் தொங்கவிடவேண்டும். தரையிலும் மணலை(அல்லது சாக்கை) பரப்பி விடவும். இப்போது போதுமான அளவிற்கு படுக்கை தயார். பிறகு காளான் விதை போட பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒரு ஸ்டூல் மீது வரிசையாக வைக்கவும். இதனை நமது காளான் ரூமில் வைக்கவேண்டும். சுற்றி இருக்கும் சாக்கில் நன்கு தண்ணீரை தெளிக்கவேண்டும். அவ்வளவுதான் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தண்ணீர் தெளித்து ஈரப்பதம் குறையாமல் பார்த்துகொண்டாலே போதும்.


3 வது நாளில் இருந்து மொட்டுகள் வர தொடங்கும். மறுநாள் கவரை பிரித்து எடுத்து விடலாம், காளான் வளர தொடங்கி நன்கு பின்னி செட் ஆகி இருக்கும். மொட்டுகள் விரிய விரிய பறித்து கொண்டே இருக்கலாம். சொந்த வீட்டில் இருப்பவர்கள் compound ஓரமாக சிறிய ஓலை குடில் போட்டும் வளர்க்கலாம். விதைகள் நல்ல தரமானதாக வேண்டும் என்றால் உங்கள் ஊர் வேளாண் பண்ணைகளில் வாங்கலாம். காளான் சமையல் பற்றி தெரியவேண்டும் என்றால் சுவையான சமையல் என்ற பதிவை பாருங்கள்.





மண்புழு உரம் தயாரித்தல்




உரம் தயாரித்து விற்பனை செய்வது என்பது வேறு , ஆனால் நான் கூறபோவது வீட்டில் இருக்கும் காய்கறி, ரோஜா, மல்லி செடிகளுக்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி கொள்ளலாம் என்பதை பற்றித்தான்.

கடையில் விற்கும் காய்கறிகளில் அதிகமாக வேதி உரங்களின் தன்மை இருப்பதால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி என்ற ஒன்றே குறைந்து போய்விட்டது. அதனாலதான் ஏதோ நம்மால் முடிந்தவரை காய்கறிகளை மட்டுமாவது இயற்கையாக பயிரிட்டு பயன் பெறுவோம் என்பதற்காகத்தான் எந்த உரம் தயாரிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


இது ஒன்றும் பெரியவேலை இல்லைதான். ஆனால் விரும்பி செய்யவேண்டும். ஒரு பிளாஸ்டிக் அரிசி சாக்கில் நம் சமையலறை காய்கறி வேஸ்ட், முட்டை தோடு, காய்ந்த இலைகள் இவைகளை போட்டு கொண்டே வரவேண்டும். கொஞ்சம் நிரம்பியதும் மாட்டு சாணியை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவேண்டும். கொஞ்சம் வெல்லத்தையும் கரைத்து ஊற்றவும். முடிந்தால் உங்கள் தோட்டத்து மண்ணை கிளறினால் மண்புழுக்கள் தென்படும் (இல்லை என்றாலும் பரவாஇல்லை) அதை எடுத்து சாக்கினுள் போட்டு ஒரு குச்சியை வைத்து நன்கு கிளறி சாக்கின் வாயை கட்டுங்கள். 4 அல்லது 5 நாளில் புழுக்கள் இனப்பெருக்கம் அடைந்திருக்கும். பின் சாக்கின் வாய் திறந்து தண்ணீர் தெளித்து வந்தால் 2 மாதத்தில் முழுவதும் மக்கி உரமாக மாறி இருக்கும். இதற்கு இடையில் சேரும் காய்கறி வேஸ்ட் ஐ வேறொரு சாக்கில் போட்டுக்கொண்டே வந்தால் முதல் சாக்கில் உள்ள புழுக்களை மட்டும் பிரித்து இதில் போட்டு விடலாம்.




இப்படி தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும். இந்த உரத்தை மட்டுமே பயன்படுத்தி வளரும் காய்கறிகள் விரைவில் வாடுவது இல்லை, மேலும் அதிக அளவிலும் காய்கறிகள் காய்க்கும். நாம் பயன்படுத்தியது போக பிறருக்கும் கொடுத்து இதன் பயனை உணர்ந்து பாருங்கள். முக்கியமாக இப்படி வளரும் பாவக்காய் கசப்பது இல்லை.
தோட்டம் போட இடம் இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடி யிலும் , Appartment இல் பால்கனியிலும் கூட காய்கறிகளை பயிரிட முடியும். இதை பற்றிய விவரங்கள் எனது மொட்டைமாடி இல் தோட்டம் என்ற தலைப்பில் பாருங்கள்.

சனி, மார்ச் 6

தொட்டியில் ரோஜாக்கள் பகுதி 3

உரம் இடும் முறைகள்:


உரம் என்று சொல்லும்போது பெரிய அளவிற்கு ஒன்றும் இல்லை எல்லாம் நம் வீட்டில் கிடைக்கும் பொருள்கள் தான் காய்கறி, சிக்கன், மீன், மட்டன் இவைகளை கழுவிய தண்ணீரை ஊற்ற வேண்டும் அவற்றின் கழிவுகளை செடி ஐ சுற்றி உள்ள மண்ணை தோண்டி புதைத்து வைக்கலாம் . முடிந்தால் ஆட்டின் ரத்தம் ஒரு ஸ்பூன் கூட வேரில் ஊற்றலாம். டீதூள் வேஸ்ட், உடைத்த வேப்பங்கொட்டை தூள் இவற்றையும் போடலாம். மண்புழு உரத்தை நீங்களே தயார் செய்து போடலாம். இதன் தயாரிப்பு முறையை எனது மண்புழு உரம் தயாரிப்பு என்ற தலைப்பில் பாருங்கள். 

பிறகு செடி ஐ trim பண்ணி விடவேண்டும் அதாவது நன்கு வளர்ந்த பின்னர் முற்றிய கிளைகளை கொஞ்சம் அளவு விட்டு கட் பண்ணியும், பழுத்த இலைகளை கிள்ளியும் விடவும் . எல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி மண்ணை அடிமேல் கிளறி விடுங்கள் போதும். மாதிரி சின்ன சின்ன வேலைகள் செய்தாலே போதும். அதிக அளவில் பூக்களையும், அளவில் பெரிய பூக்களையும் நம் வீட்டில் பார்க்க முடியும். முக்கியமாக இந்த குறிப்புகள் அனைத்தும் என் அனுபவமே. எங்கள் வீட்டில் 12 வருடத்திற்கும் மேலாக ரோஜா செடிகளை வளர்த்து எங்கள் ஏரியாவின் அடையாளமாக எங்கள் பூக்கள் உள்ளன. புதிதாக செடி முறைகள் வளர்க்கும் ஆசை மட்டும் இன்னும் என்னை விட்டு போகவில்லை. வளர்த்து பாருங்கள் அப்புறம் நீங்களும் ரோஜாவை love பண்ண தொடங்கிவிடுவீர்கள்.


:

வெள்ளி, மார்ச் 5

தொட்டியில் ரோஜாக்கள் பகுதி 2

வளரும்போது கவனிக்கவேண்டியவை:

இனி தான் முக்கியமான விசயமே உள்ளது, இப்போது நான் சொல்லபோவதை பண்ணுவதுற்கு யாருக்கும் மனம் வராது. ஆனால் பின்னால் கிடைக்கும் பலனை பார்த்து கண்டிப்பாக என்னை பாராட்டுவிர்கள். என்ன over ஆ buitup பண்றேனா? விஷயம் இதுதாங்க ஆரம்பத்தில் வரும் மொட்டுக்களை பூக்க விடக்கூடாது அதாவது மொட்டுகளை கிள்ளி விடவேண்டும். இதுமாதிரி தொடர்ந்து குறைந்தது 3 மாதங்களாவது பண்ண வேண்டும். அதுக்கு மேலயும் பண்றது உண்மையில் நல்லது தான். காரணம் இதுதான் :


மொட்டுகளை பூக்க வைப்பதற்காகவே எல்லா சத்துக்களும் போய்விடும், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்காது. ஆனால் நாம் இவ்வாறு செய்யும்போது சத்துக்கள் எல்லாம் பல கிளைகளை புதிதாக வளர செய்யும். அடி தண்டும் பலப்படும் . ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூக்கள் வரும்.