வளரும்போது கவனிக்கவேண்டியவை:
இனி தான் முக்கியமான விசயமே உள்ளது, இப்போது நான் சொல்லபோவதை பண்ணுவதுற்கு யாருக்கும் மனம் வராது. ஆனால் பின்னால் கிடைக்கும் பலனை பார்த்து கண்டிப்பாக என்னை பாராட்டுவிர்கள். என்ன over ஆ buitup பண்றேனா? விஷயம் இதுதாங்க ஆரம்பத்தில் வரும் மொட்டுக்களை பூக்க விடக்கூடாது அதாவது மொட்டுகளை கிள்ளி விடவேண்டும். இதுமாதிரி தொடர்ந்து குறைந்தது 3 மாதங்களாவது பண்ண வேண்டும். அதுக்கு மேலயும் பண்றது உண்மையில் நல்லது தான். காரணம் இதுதான் :
மொட்டுகளை பூக்க வைப்பதற்காகவே எல்லா சத்துக்களும் போய்விடும், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்காது. ஆனால் நாம் இவ்வாறு செய்யும்போது சத்துக்கள் எல்லாம் பல கிளைகளை புதிதாக வளர செய்யும். அடி தண்டும் பலப்படும் . ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூக்கள் வரும்.
மொட்டுக்களை கிள்ளும் முறை மல்லி செம்பருத்திச்செடிகளுக்கும் சரியாக வருமா என்று எழுதுங்கள் மேடம். செடிவளர்ப்புபற்றி நிறைய எழுதுங்கள் .நன்றி
பதிலளிநீக்கு