Monday, August 23

6:53 AM
17இதை இந்த பதிவில்  படித்தேன். பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..


பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.


பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....


அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:


தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434 
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

 பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...


இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..


இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்.எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...


செய்வீர்களா நண்பர்களே.!!!!

Tweet

17 comments:

 1. கோரிக்கையை ஏற்று பதிவு போட்டதற்கு :)))

  ReplyDelete
 2. உங்கள் வலைபூ வினை சமீபத்தில் தான் கண்டேன். சிறந்த பதிவுகள்.. எழுதினோம் என்று ஏதோ எழுதி பெருமை கொள்ளும் பலரினைப் பார்த்திருக்கிறேன்.. உங்கள் பதிவுகளை பார்க்கும் போது.. நான் இப்படி ஏன் யாரும் இல்லை என்று கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிய முடிந்தது.

  ReplyDelete
 3. we pray that she reunites with her family soon.

  ReplyDelete
 4. இந்த குழந்தை விரைவில் தனது அம்மா விடம் சென்று அடைய வேண்டும். உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 5. அந்த படத்தில் குழந்தை சொல்லி உள்ள்து படித்தால்ல் ரொம்ப கலங்குது.

  சீக்கிரம் அனைவரின் பிராத்தனை அந்த குழந்தையை பெற்றோரிடம் கொண்டு சேர்க்கட்டும்.

  ReplyDelete
 6. பூஜா சீக்ரமா அவ அம்மா அப்பா கிட்டேசென்று அடைய கடவுள் கிட்டே பிரார்த்தனை பண்ணறேன் ...

  ReplyDelete
 7. விரைவில் அக்குழந்தை தன் தாய் வீடு அடையட்டும்

  ReplyDelete
 8. forward செய்துவிட்டேன்
  நன்றி கௌசல்யா!

  ReplyDelete
 9. நண்பரே இது உண்மையான தகவல் அல்ல..இது குறித்து விபரம் அறிய...இந்த இணைப்பைப் பாருங்கள்...

  http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_23.html

  ReplyDelete
 10. நான் இப்போதுதான் வெளிஊர் சென்று திரும்பினேன்.. இந்த தகவலில் தவறு இருக்கிறது என்று தெரிகிறது. அதற்காக மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. சகோதரி! இது ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த செய்தி! இன்னும் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாதபோதிலும், அந்தக் குழந்தை பெரிய மனது கொண்ட ஒரு தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு....

  http://www.hoax-slayer.com/105-17.shtml

  ReplyDelete
 12. பிள்ளையை பிரிந்த தாய் மனது எப்படி தவிக்குமோ.. சே.. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. குழந்தையை கடத்திய கயவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?...

  கண்டிப்பாக எல்லோரும் உதவி செய்யமுன் வரவேண்டும்..

  ReplyDelete
 13. குழந்தை விசயத்துல கூட விளையாடுகிறாங்களே.. என்ன மனுசங்க.. நானும் இதை உண்மையென நம்பி பதிவு வெளியிட்டேன். பின்னர் உண்மையறிந்து உடனே டெலிட் செய்துவிட்டேன்..

  ReplyDelete
 14. பத்து வருடங்களாக இந்த மெயில் சுத்தி கொண்டிருக்கிறதே!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...