Sunday, May 2

3:47 PM
4

 " நீண்ட பயணம் போகவேண்டும் என்று முடிவு  செய்த பின்னர்,
எந்த வழியாக   என்று பாதையை  தேடினேன்.....!
இப்போது பாதையையும் 
கண்டுகொண்டேன்!    ஆனால்
காலநிலை ஏற்றதாக  இல்லை,
பயணத்தை மட்டும் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டேன்...........! "  


( கவிதை இல்லைங்க!!)


பதிவுலக நண்பர்களுக்கு எனது சிறிய வேண்டுகோள் :


முதலில் எனது இடுகையை பாராட்டி நீங்கள் தொடர்ந்து அனுப்பிய ஈமெயில் மடல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  குறிப்பாக தாம்பத்தியம் பகுதி 2   வர ஏன் இந்த தாமதம் என்று என்னை அன்பாக கோபித்த அன்பு இதயங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .  தனி தனியாக உங்கள் அனைவருக்கும் மடல் எழுத இயலாததால்,  எல்லோருக்கும்  சேர்த்து இந்த சிறிய விளக்கம் கொடுப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


கோடைகாலம் என்னை system   பக்கமே போக விடுவது இல்லை, காரணம் வெயில் இல்லைங்க, என் இரண்டு பசங்கதான்!    டிவி தேமே என்று இருக்க கம்ப்யூட்டர் தான் அவர்களது முழு நேர பொழுதுபோக்காக இருக்கிறது. மின்சாரதுறையின் புண்ணியத்தில் பகலில்  மூணு மணி நேரம் மட்டும்தான் அதற்கு ரெஸ்ட்.


கொஞ்சம் இரவல் வாங்கித்தான் இதை எழுதுகிறேன். (தண்டமாக 200 ரூபாய்க்கு ஐஸ்கிரீம்  அழுதிருக்கேன்)   


உங்களிடம் பகிர்ந்துகொள்ள முக்கிய இடுகைகளை மனதில் பூட்டி வைத்துள்ளேன்.   கொஞ்சம் மெதுவாக வெளியிடுகிறேன், தாமதத்திற்கு பொறுத்துகொள்ளவும்.  தொடர்ந்து ஆதரவு கொடுங்கள், காத்திருக்கிறாள் உங்கள் அன்பு தோழி 
அருவியாக கொட்ட!!  
                                                
Tweet

4 comments:

  1. மெதுவா போடறேன்னு தூங்கிடாதிங்க.

    ReplyDelete
  2. jailani. உங்க பின்னூட்டம் படிச்சிட்டு கொஞ்ச நேரம் சிரிச்சிட்டே இருந்தேன்....... நன்றி சகோதரா . உங்களது பதிவுகளில் இழையோடிய நகைசுவை கலந்த உங்கள் எழுத்துக்கு நான் ரசிகை ஆகிவிட்டேன்.

    ReplyDelete
  3. evlo seekiram mudiumo avlo seekiram podunga

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...