எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும் ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத் பெண்மை?! பெண்ணுரிமையை பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.
ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில் இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.
தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில் சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது. அதிலும் கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக படிக்க இயலவில்லை. முன்பு நண்பர் ஒருவர் எழுதிய கிராமத்து கதையில் சில வசைச் சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.
ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.
அதுபோன்ற ஒரு வலி, பதட்டம் கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா?
முற்போக்கு பெண்ணியவாதிகள்
சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும் பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித் தன்மையை விலை பேசுவது ஆண்களின் அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா பெண்ணியம்??!!
சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும் பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித் தன்மையை விலை பேசுவது ஆண்களின் அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா பெண்ணியம்??!!
ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும். சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில் 'எதுவுமே' இல்லை.
அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான், http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html
பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே பிறந்தவர்கள் அவர்கள். 'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி வாளையும் வீசக் கூடும்.
பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும் நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா கருத்து சுதந்திரம் ?
பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும் இருக்கிறது?
ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக் கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும் தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில் ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம் என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர் மன்னிக்க)
பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ?
பெண்கள் சாதாரணமாக பேசவும் எழுதவும் கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது...
இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.
பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக் காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என் எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.
பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள் !!!
pic - google
என்னாலேயே கொற்ற்வையின் பிதற்றலை வாசிக்க முடியலை. பெண்களை, சிம்புவைவிட ஒரு படி மேலே போயி கேவலப்படுத்தி இருக்கிறார் என்பேன்!
பதிலளிநீக்குஆக, நம்ம நம்பள்கி, சாரு நிவேதிதா எல்லாம் பரவாயில்லைனு ஆக்கிவிட்டார் இந்தக் கொற்றவை!
நான் பார்த்தவரைக்கும் இதுபோல் பலர், பெண்ணியம் பேசுவதும் சந்தர்ப்பவாதம் தான்.
சிறுவயதில் "தெருச்சண்டை" பார்க்கும்போது பெண்கள் ஒருவரை ஒருவர் இதுபோல் பேசி இழிவுபடுத்தி தங்கள் "ஃப்ரெஸ்ட்ரேஷனை" தீர்த்துக்குவாங்க. I believe, KoRRavai does the same! Hope "this" helps her to "cool" down a bit!
Here is the problem.. When people read koRRavai's blog with the help of your link, they will kind of put simbu and koRRvai in a "same level". This is because koRRavai tried to clean the septic tank and of course she fell into it and stinks too! She is somehow helps Simbu by being an "worst example" among women!
இவர் சிம்புவை இழிவு படுத்தியதைவிட பெண்களைத்தானரதிகமாக இழிவு படுத்தியுள்ளார். இந்த வகையறாக்கள் எல்லாம் ஒரு மாதிரியான சந்தர்ப்பவாதிகள்தான். சாரு நிவேதிதா, நம்பள்கி போல இந்தப் பெண்களும் இதை வைத்துத் தன்னை "பிரபலப்படுத்திக்கொள்ள" முனைகிறார்கள். இவர்களால் "சாதாரணப் பெண்களுக்கு" எந்த பிரயோசனமும் இல்லை! உபத்திரவம்தான் அதிகம்!
இதை வாசிச்சா நம்ப நம்பள்கி இன்னும் ஒரு 100 பதிவெழுதி பதிவுலகை நாசமாக்கிவிடுவார் என்கிற பயம் எனக்கு இப்போ.
கோவிச்சுக்காதீங்க, இந்தப் பதிவை நீங்க எழுதாமல் இருந்து இருக்கலாம். நான் இதைப் படிக்காமல் இருந்து இருப்பேன். :) டேக் இட் ஈசிங்க! :))
I am not sure, koRRavai will publish my response in her blog. Waiting for the "approval" :) You might consider doing it here, Mrs. Raj!
பதிலளிநீக்குHere it is!! :)
////கொற்றவை! நீங்க இப்போ இவ்விமர்ச்னத்தால் என்ன சாதிச்சு இருக்கீங்கனு தெரியுமா? சிம்பு பரவாயில்லை இந்தக் கொற்றவைக்கு னு உங்க பதிவை வாசிச்ச பலரை உணர வச்சிருக்கீங்க. சிம்புவை விட பெண்ணினத்தை ஒரு படி மேலே கேவலப் படுத்தி இருக்கீங்கனு சொல்லலாம். நீங்க எம்புட்டுப் பெரிய பெண்ணியவாதி, உங்க தகுதி என்ன? தராதரம் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இப்படித்தான் நான் உங்கள் பதிவை பார்க்கிறேன். ஒரு வைரஸ் இன்ஃபெக்டெட் ஆளை ட்ரீட் பண்ணும்போது "மாஸ்க்", கையுறை எல்லாம் அணிந்துகொள்ளணும். இல்லைனா வைரஸ் உங்களுக்கும் தாவிவிடும். இப்போ நீங்க, மாஸ்க், அகியுறை எல்லாம் போட்டுக்காமல் சிம்புவை "ட்ரீட்" பண்ணியதால் சிம்புட்ட இருந்த வைரஸ் கொற்ற்வையை இன்ஃபெக்ட் பண்ணிடுச்சு! :(
ஆமாங்க, பெண்களை சிம்புவை விட ஒரு படி மேலே போயி இழிவு படுத்தி இருக்கீங்க. நீங்க பெண் என்பதால் அந்த உரிமை உங்களுக்கு இருக்குனு எவன் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தான்னு தெரியலை! பெண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்லிக்கொண்டு பெண்களை இன்னும் இழிவு படுத்திய "பெண்ணிய சந்தர்ப்பவாதி" உங்க மேலே மாதர் சங்கம் ஒரு வழக்குத் தொடர்ந்தால் என்ன?னு எனக்குத்தோனுது!
ஆக, சிம்புக்கு நெறையா உதவி இருக்கீங்க உங்க "உளறல்" களால்! ///
உங்கள் கருத்தே என் கருத்தும். கொற்றவை பதிவைப் படித்த நண்பர் ஒருவர் சொன்னபொழுது அதிர்ந்துபோய் விட்டேன். பெண்ணியம் என்பது ஆண்களையும் பெண்களையும் சமமாக மதித்தல் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த பாடல் விசயத்திலும் அவர்கள் வீட்டுப்பெண்களை இழுத்தது மிகவும் கேவலமான செயல். பெண்ணியவாதிகள் இதனை உணர்ந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தப் பெண்கள் மீதும் தவறான அபிப்பிராயமே ஏற்படும். பொதுவெளியில் இயங்கும் எவருக்கும் பொறுப்பு அதிகம் என்பதையும் ஆமோதிக்கிறேன். தெளிவாக தீர்க்கமாக எழுதப்பட்ட பதிவு சகோதரி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை படிப்பவன். பின்னூட்டம் இட்டது இல்லை.
பதிலளிநீக்குஎன்ன ஆச்சர்யம்? தோசை எப்படி சுடுவது என்று ஒரு பதிவு போட்டாலே 50 பின்னூடங்கள் வரும், இந்த பதிவிற்க்கு ஒன்றும் இல்லை!
நீங்கள் எழுதிய பதிவுகளில் இதுவும் சிறந்த பதிவு! இதில் கூரியவை அத்தனயையும் உண்மை.
ஒரு கேள்வி? நான் ஒரு ஆண்! என்னால் இது மாதிரி http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html
ஒரு பதிவு எழுதினால், கலாசாரக் காவலர்கள் என்னை கொண்டுவிடுவார்கள். இருந்தும் ஏன் அடுத்த பதிவு...http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html..இந்த பதிவின் காப்பி பேஸ்ட் தான்ஷ்~
மிக அருமையான தெளிவான பார்வையுடன் எழுதப்பட்ட பதிவு தோழி ..ஹா ஹா சிம்புவை எதிர்த்து போட்ட பதிவிற்கும் மைனஸ் வாக்கு சில பெண்ணிய வியாதிகளை எதிர்த்து போட்ட பதிவிற்கும் மைனஸ் வாக்கு ..:) இதிலிருந்தே புரிகிறது எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்கள் சில தெளிவற்ற மக்கள் !
பதிலளிநீக்குசிம்பு கெட்ட வார்தை பேசினான் பெண்களை இழிவுபடுதினான் என்று பாய தயாராக இருக்கும் சட்டம் இந்த ஸோ called பெண்ணிய வியாதிகளின் மேல் பாயாமல் இருக்கின்றனவே !
பதிலளிநீக்குஇந்த முற்போக்கு சிந்தனை சுழலில் மாட்டிக்கொண்டு விழிக்கும் பெண்ணியம் பேசும் பெண்களுக்கு
பெண்ணியம் என்றால் என்னவென்று சத்தியமாக தெரியவில்லை என்றே நினைக்கிறேன் சக ஆணுடன் போட்டி போட்டு குத்து சண்டை டென்னிஸ் ஆடுவது இல்லை ஆன் எதை செய்தாலும் அதையே தானும் செய்வது இதுதான் பெண்ணுரிமை என்று தங்களை தாங்களே குழப்பி பிறரையும் நம்ப வைத்து கொண்டிருக்கிறார்கள் ..
மூச்சுக்கு மூச்சு ஆறாவது alphabet இல் துவங்கும் கேட்ட வார்த்தையை பயன்படுத்துவது பெருமை அதை வைத்து வயது வித்தியாசம் பாராம, அனைவரையும் திட்டலாம் எந்த நேரமும் எந்த சூழ்நிலையிலும் என்று பல பெண்ணியவாதிகள் நினைத்து கொண்டுள்ளார்கள் .shame on them .
அவர்களது பெற்றோர் முன்னாலோ அல்லது பெற்ற பிள்ளைகள் முன்னிலையிலொ இப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிப்பார்களா. உண்மையான பெண்ணியம் ..அறிவுபூர்வமா யோசிக்கும் ஆக்கப்பூர்வமா யோசிக்கும் கண்ணியம் காக்கும் பிற பெண்களின் கண்ணியத்தை காக்கும் .அவன் செய்தான்னு இவர்களும் அவனுடைய குடும்ப பெண்களை அபிநயம் பிடித்து ஆடுவீர்களா ?என்று கேட்பது உண்மையில் கேவலமான விஷயம் .
நிஜ பெண்ணியவாதிகள் அமைதியாக சாதிதுகொண்டிருப்பார்கள் இந்த cardboard soldiers தான் தேவையற்ற விதண்டாவதங்களில் பாபுலாரிட்டி தேடிகொண்டிருக்கிரார்கள் :( ..
கொற்றவை எழுதியது எழுத்தே அல்ல... அவ்வளவும் வக்கிரம்...
பதிலளிநீக்குஅவன் பாட்டில் ரெண்டு வரியில் வார்த்தை வைத்தான்... இவரோ வரிக்கு வரி வைத்திருக்கிறார்...
இந்த பெண்ணிய வியாதிகள் மீதெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதோ..
உங்கள் கட்டுரை மிக அருமை அக்கா...
முகநூலில் வாசித்தேன்...
I visited her blog and read her blog post on Beep Song, thanks to your help in giving the link here.
பதிலளிநீக்குWhether one is a feminist or anti-feminist, I don't bother. It makes no difference as I see what is written, not who has written and under which banner.
Everyone has the right to express her own feelings in the matter. She has as much as right as you to write this opposing blog post. I uphold hers as well as yours to express your respective opinion; respect too. Out of the two, one is definitely anti-social ! A correct: anti-Tamil society !
You are a religious person, aren't you? Your feelings reflect your mindset. She may not be a religious person: so she doesn't bother about what is good or bad. She will go to hell, sure. God will punish bad people by sending them to hell to rot for how long only He knows! He will reward us, the good people by dispatching us to Heaven. That was how my Sunday Class teacher terrorised me in my childhood days, which still haunt me.
No doubt, Silambarasan too will go to hell. He is a bad guy. Or spoilt brat w/o any hope of reformation, as Varun Sir has put it here.
Let's not spoil your Christmas mood by listening to such songs and reading such blogs. I am yet to listen to that song, though. I attempted but the voice was unclear. The Tamil word under hot debate wasn't audible at all. Maybe letter.
Merry Christmas! And a Happy and Pure New Year, Madame !
முதலில் பெண்ணியம் என்றால் என்ன என புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனக்கு புரிவதில்லை. சிறுவயதிலிருந்தே வெளி நாட்டில் வளரும் எனக்கே கூட இந்தியா, இலங்கை போன்ற தேசங்களில் பிறந்து அங்கேயே வாழும் பல பெண்கள் பெண்ணியம், பெண் சுதந்திரம் என எதை எடுத்துக்கொள்கின்றார்கள் என்பதே புரியவதில்லை.
பதிலளிநீக்குசிம்புவின் பாடல் ஒருவகை வக்கிரத்தனமானது எனில் அதை தூக்கி பிடித்து கொண்டு நீயாயம் கேட்கவென கொடி பிடித்தோர் அதை விட அதீத வக்கீரம் கொண்டவர்களாகவே பார்க்கின்றேன்.
இப்போவெல்லாம் பெண்கள் ஆண்களை எதிர்ப்பதும் இல்லை.பெண்ணியம் எனும் போர்வையில் அவர்கள் எதிர்ப்புக்கள் பெண்களை நோக்கித்தான் இருக்கின்றது.
Your first sentence is a good confession, which needs to be explained a little from my side. Your concluding line is a complete misunderstanding of what Feminism stands for. Sorry.
நீக்குFeminism is of two kinds, as I see it. Since it is not one, you get confused. One kind is volatile and emotional and wants to seek justice for women from the oppression of patriarchal society, and they use all kinds of ammunition they can lay hands on. Even if intellectually led, the ism's cadres may go overboard, as we see in Tamil feminists. Tamil feminists lack the intellectual icons like that of Germaine Greer or Mary Wollstonecraft of Rights of Women fame; or like the American feminist (she is now an octogenarian) Gloria Steinem.
Blame it on Tamil cultural milieu which does not allow an intellectual discourse on feminism; and as such, they don't have a towering intellectual iconic figures to look upon, here. If a Tamil Greer had taken up this present case, that would have silenced all critics and Kottravai and others of her ilk can hitch their star onto Greer wagon. The other kind is mild; but still protesting. Both kinds exist in the West.
Neither you, nor Madame Kausalya Raj nor any lady commenters here - are feminists of any one kind. Then? You follow your men as lords and masters out of conformity. You accept the code of Tamil patriarchal society and live in peace with your menfolk. To conform so as to please men. At the same time, you are enjoying the benefit of victories achieved by the Feminist movement: your voting right, laws to prevent sexual harassment in workplaces, your right to enter all fields of work almost, to name a few. Who gave all these to you? The Conformists?
I am not digressing from the subject of Simbu's song. That subject would be easily dealt with, effectively only by the feminist intellectual leaders.
TN need intellectual feminist leaders. Right now we have only the chattering cadres. That is due to the overwhelming patriarchy which uses religion to beguile Tamil women; hence I said, religious makes us slaves to men.
Tamil Feminism is arising, but they face opposition. If it is from men, that is welcome: as they are worthy foes to fight against. Alas! when it comes from the sorority itself, isn't like Judas Iscariot betraying the Jesus?
Hopefully, your protest will be disregarded and the caravan will move on.
Kulasekaran aka KAVYA!
பதிலளிநீக்கு***Whether one is a feminist or anti-feminist, I don't bother. It makes no difference as I see what is written, not who has written and under which banner.***
Really??!!!
Well, let us see!
***You are a religious person, aren't you?**
DOES it really matter??
I am against koRRavai's post too! Especially seriously condemned her UGLY LANGUAGE!!. I am neither a Christian nor a religious person. So, one's religious belief or disbelief has nothing to do with this issue!
I thought you said, you dont see who is writing and you only see what they are writing?? Right? Is that not what you just said ABOVE???
Now what are you doing NOW?
Labeling people as "religious", "agnostic", "atheist" and analyzing the issue based one's belief or disbelief??
What a HYPOCRITE you are! What will your next level of analysis? Based on what caste they belong to, huh?!!
****Maybe letter. ***
You mean 'later', I guess??!! Let me suggest something to you! When you are trying to be too sarcastic, dont you ever make this kind of "typos"! Because they will make you look like a clown. I dont think you wish to look like clown here. Right? :-)
Varun Sir!
நீக்குHow I look like to others is not under my control. If I look like a clown to you, or like a religious person to some one else, it is their right to have an independent view with which I can't interfere. Madame Kauslaya Raj is a devout Christian. Her blog welcomes us with a calm adoration of Jesus Christ. A fitting welcome on this day of welcoming the Son of God to the earth to live among us.
Such deep devotion creates her a kind of mindset which is reflected in this and other blog posts also. If the other woman going by the nickname Kotravai is also religious, definitely she could not have been a feminist of the style we see here. Alas, being religious is a blessing only to some of us :-(
It is a truth well acknowledged that religious minds are always conservative and here, in the context of feminism, their brand of feminism, as revealed in the blog post as well as the feedback comments of some ladies here, cannot be free: it is restricted with religious do-s and dont-s. Freedom and religion, like being a member of political party and public principles- cannot go together.
So EVR Periyar is dismissed here by Madame Kausalya Raj. I don't like the fellow. Because as Madame Kausalya Raj has put it, that fellow has spoilt the minds of many Tamil women by injecting his brand of feminism. Kottravai, Leena Manimegali et al are his victims.
***I don't like the fellow.***
பதிலளிநீக்குWell, I think moron Simbu worships your God everyday. All these mess was because of that "God worshiper" namely Simbu! He becomes stupider and stupider everyday as his mind is occupied with the "your God" and he does not know what is right and what is wrong as his God is misguiding him to "hell" So, you are going to blame EVR for that too??!!
Let me understand your logic here. Because you dont like EVR, you would bring him up in the middle of nowhere and claim that it is all his fault that these half-baked bimbos do not know how to address a serious issue with "politically correct" "non-offensive" language in their blog posts?? You blame EVR who did not even exist when these bimbos entered this world?? I think something wrong with your mindset here!! Better check it out before it is getting worse!
குடோஸ்! சகோதரி!! உங்களுக்கு ஒரு பொக்கே! அப்படியே எங்கள் மனக் கருத்துகளைப் பிரதிபலித்து கட்டுரை!! பெண்ணியம் என்பது என்ன என்று பல பெண்ணியவாதிகளுக்குத் தெரிவதில்லை. பெண்ணியவாதிகள் பலரும் பேசுவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகப்படுத்துவதே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அவர்கள் வீட்டுப் பெண்களை இழுத்தது என்பதெல்லாம் மிகவும் ஓவர். அசிங்கம். ஒரு சில பெண்களே பெண்களுக்கு எதிரி என்பது இதைத்தான் சொல்லுகின்றதோ..??!! தெளிவற்று இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அருமையான கட்டுரை சகோ...
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
தங்கள் எழுத்துக்களைத் தொடர்கிறேன் சகோ, தெளிவுடன். கேள்விப் பட்டுள்ளேன். பெண்ணே பெண்ணிற்கு எதிரி என்று, சரி தானே சகோ அது.
பதிலளிநீக்கு