Tuesday, July 17

11:12 AM
33

இந்தியாவுல இருக்கிற நாலு பெரிய சிட்டிகள்ல வளர்ந்த காரணத்தால சென்னை தெரியும், மும்பை, கொல்கத்தா போயாச்சு...இந்த டெல்லி மட்டும் ரொம்ப நாளா பிடிபடாம இருந்துச்சு!! (இருக்குற ஏழு கண்டங்கள்ல 6 பார்த்துட்டேன் ஒன்னும் மட்டும் பார்க்கலன்னு சொல்ற மாதிரி என்னா ஒரு பில்ட்அப் !!கண்டுக்காதிங்க)டெல்லிய பார்க்கவும்  ஒரு வேளை வந்தது...கிளம்பிட்டேன்.

வெளியூர் எங்கேயாச்சும் போயிட்டு வந்தா ஒரு போஸ்ட் போடனுமாம். " நாம பதிவர்கள் அதனால  அனைத்தையும் பதிவு பண்ணியே ஆகணும்" னு ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியை பல நாள் பல தொடரா போடுற நண்பர் ஒருத்தர் போன்ல மிரட்டல் விட்டார். எனக்கு பயண கட்டுரை மாதிரி எழுத வராது. அதனால பயணத்தில் என்னை பாதித்த விசயங்களை மட்டும் இங்கே பதிகிறேன். 

ரசித்தேன்

அழகுனா அழகு அவ்ளோ அழகு !! என்னனு கேட்குறீங்களா ?! வடநாட்டு பெண்களைத்தான் சொல்றேன்...!! வழியெங்கும் அவங்களை திரும்பி திரும்பி ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன்...சலிக்கவே இல்லை...அசரவைக்கும் கோதுமை நிறம் அழகுதான்...ஆனாலும் அவங்க பண்ணுற ட்ரெஸ்ஸிங், அதுக்கு பொருத்தமா ஹேர் ஸ்டைல், லிப்ஸ்டிக் அசத்துறாங்க போங்க !! நாள் பூரா பார்த்துகிட்டே இருக்கலாம்...ஜீன்ஸ்,லெக்கின்ஸ் (சில டிரஸ் பேர் வேற தெர்ல) அப்டி இப்டின்னு எந்த டிரெஸ் போட்டாலும் கன கச்சிதமா இருக்கு...மாடர்னா இருக்கிறோம் அப்டின்ற அலட்டல் சுத்தமா தெரியல...ரொம்ப இயல்பா இருக்காங்க... என்னை அதிகமா பாதிச்சது முதல்ல இந்த அழகு பெண்கள் தான்!!

சிலிர்த்தேன்

ஷேர் ஆட்டோல ஒரு பயணம், வண்டில பயங்கர சத்தமா லாலாக்கு டோல் டப்பிமா ரேஞ்சுக்கு சாங்க்ஸ் அலறுது !! ஹிந்தினாலும் புரியும்(?) இது பஞ்சாபி  போல...ஒரே டமால் டிமில்னு சவுண்ட் !! கண்ட்ரோல் பண்ணி அமைதியா இருந்தேன், திடிர்னு நம்ம கொலைவெறி சாங்...அப்டியே மெய் சிலிர்த்து போச்சு... வண்டில இருக்கிறவங்க  உற்சாகமா தலையாட்டி கூடவே பாடுறாங்க...அப்போ சொல்ல தோணிச்சு ' இது எங்க ஊரு பாட்டுங்க' !! முதல்ல வண்டில  ஏறியதும்  ஒரு பொண்ணு "நீங்க மராட்டியா?" னு கேட்டா. நான் "இல்ல மதராசி" ன்னேன். அவ இப்போ "நீங்க மதராசி தானே கொலவெறினா  என்ன மீனிங் ?" நான் என்ன பதில் சொன்னேன்னு இங்க சொன்னா நீங்க அடிக்க வந்துடுவீங்க !

ஆனா பாருங்க இந்த பாட்டால தமிழ் மொழி அழிஞ்சு போய்டும் அப்டி இப்டி நு ஆளாளுக்கு சொன்னாங்க...(ஒருவேளை பாட்டு ஹிட் ஆகலைனா சொல்லி இருக்க மாட்டாங்கலோ ?!) தமிழ் பாட்டுன்னு தான் இந்த பாட்டு உலகம் எல்லாம் சுத்தி வருது...எப்படியோ இப்படி நம்ம தமிழ் வளருது(?)னு, தமிழுக்கு இப்படி ஒரு அடையாளம்னு மனசை தேத்திப்போம்...!

விழுந்தேன்

மெட்ரோ ட்ரெயின்ல போய் சுத்தி பார்க்கலைனா டெல்லி வந்ததே வேஸ்ட்னு பிரண்ட் சொல்ல, சரி போயிடுவோம்னு முடிவு பண்ணினோம்...ஏற்கனவே கொல்கத்தாவுல மெட்ரோ ட்ரைன்ல போன பழக்கம் இருக்கிற தெம்புல இருந்தேன். ஆனா அங்க ஒரு கண்டம் எனக்கு காத்திருக்குனு தெரியாம போச்சு...எஸ்கலேட்டரில் பல முறை போன அனுபவம் வேற இருக்கேனு ரொம்ப மிதப்பா காலை வச்ச அடுத்த நொடி உலகமே சுத்திச்சு...அட ஆமாங்க, எஸ்கலேட்டேர் மேலே போயிகிட்டே இருக்கு...ஆனா நான் மட்டும் மேலே போகல...என் உடம்பு அப்டியே பின்னாடி சாயுது...ஏன்னு ஒன்னும் புரியல...கைபிடிய இருக்கமா பிடிச்சும் நழுவிகிட்டே போகுது...ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியே இருக்கு என் தலை கீழே விழ...கிட்டத்தட்ட மல்லாந்து படுத்த மாதிரி ஒரு போஸ்...! என் பையன் மேலே போயிட்டு 'வாம்மா' ங்கிறான் என் நிலமை புரியாம...டக்குனு எஸ்கலேட்டேர் நின்னுடுச்சு...ஆ! னு ஒரே சத்தம், என்னடா கத்த வேண்டிய நான் கத்தல, வேற யார் கத்துரானு திரும்பி பார்த்தா பின்னாடி நாலு ஸ்டெப்ஸ் தாண்டி வரிசையா மூணு பேரு ஒருத்தர் மேல ஒருத்தர் மல்லாந்து விழுந்து கிடந்தாங்க...(பிரச்னை எங்கனு இப்பவரை புரியல !)

எழுந்தேன்

எஸ்கலேட்டேர் நின்ன பிறகும் என்னால முன்னோக்கி எழ முடியல...அப்போ மேலே இருந்து ஒருத்தர் இறங்கி வந்து கை நீட்டினார். 'தெய்வமே'னு டக்குனு அவர் கையை பிடிச்சிட்டேன்...அப்டியே தூக்கி நிக்க வச்சுட்டார்...'தேங்க்ஸ்'னு நான்   சொல்ல, பதிலுக்கு அழகா ஒரு ஸ்மைல். அவ்வளவு தான் போயே போய்ட்டார்...(டெல்லில  ஆண்களும் அழகுதான் !!):)

'ஏம்மா பார்த்து வர கூடாது, இப்டியா விழுவீங்க,வெரி பேட்' னு சொல்லி என் பையன் ஒரு லுக் விட்டான் பாருங்க...டெல்லி மெட்ரோ ட்ரெயின் காலத்துக்கும் மறக்காது !! 

வியந்தேன் 

ஊர் சுத்தமா பளிச்சுனு இருந்தது. எங்கும் குப்பையே இல்லை. (நான் பார்த்தவரை) துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற போர்ட் இருந்தது ரொம்ப பிடிச்சது....அதை மக்கள் சரியா பாலோ பண்ணுவதை  பார்த்து வியப்பா இருந்தது. அப்புறம் வழியெங்கும்  யூகலிப்டஸ் மரங்கள் (இந்த மரத்தின் மற்றொரு முகம் அங்குள்ள மக்களுக்கு தெரியுமா தெரியல!) நிறைய கண்ணில் பட்டது. நொய்டாவுல இருக்கும் போது ஷாப்பிங் போற வழியில ஒரு ரோட்டை காட்டி "இது நொய்டா(உ.பி), இதை தாண்டினா இதோ இது டெல்லி"னு பிரண்டோட கணவர் கை காட்டி சிரித்துக்கொண்டே சொன்னப்போது ரசித்து வியந்தேன்...சில அடி தூர இடைவெளியில் இரு மாநிலங்கள்! ஆம், எல்லைகள் இருக்கின்றன, அவை மனிதர்களை பிரிப்பதில்லை.....ஆனால் அவனாக சாதி மதம் இனம் என்று பாகுபாடு பார்த்து பிரிந்து நிற்க்கிறான் என்று மனதிற்குள் ஒரு ஆதங்கம் மின்னலாய் தோன்றி மறைந்தது.

மொத்ததுல ஊர் ரொம்ப பிடிச்சது...நிஜாமுதீன், மயூர் விஹார், ராஜீவ் சௌக், சாந்த்னி சௌக், கரோல் பாக், நொய்டா, கிரேட்டர் நொய்டா, மதுரா,ஆக்ரா, இந்த பெயர்கள் மட்டும் நல்லா மனசில பதிஞ்சு போச்சு.

நெக்ஸ்ட் செங்கோட்டை ! அங்க போனதும் ஒரு மிடுக்கு(!) ஓடிவந்து ஒட்டிகிச்சு. அதன் கம்பீரம் அத்தனை அழகு...அப்புறம் மதுரா,அங்க இங்கே சுத்தி அப்படியே யமுனா நதி கரையோரமா போயாச்சு...அங்கே அமைதியாய் தாஜ் மஹால் !!

கரைந்தேன் 

ரொம்ப நாளாக போகவேண்டும் என்று விரும்பிய இடங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அவ்ளோ பக்கத்துல பார்த்ததும் சந்தோஷத்தில் கொஞ்ச நேரம் பேச்சே வரல...என் மகனுக்கு இதன்  வரலாறை  சொல்லிக்கொண்டே கட்டிடத்தின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து கொண்டிருந்தேன்...அருகே செல்ல செல்ல இனம்புரியாத ஒரு பரவசநிலை...

ஷாஜஹான் மும்தாஜ் உறங்கும் இடத்தை அடைந்ததும் அதுவரை மனதிற்குள் வியந்த கட்டிடத்தின் பிரமாண்டம், கலை அழகு, கம்பீரம் எல்லாம் மறைந்து ஒரு ஆழ்ந்த அமைதி என்னைச்சூழ  அப்படியே நின்றுவிட்டேன்...ஒரு சிலருக்கு இது சமாதியாக, சிலருக்கு உலக அதிசயமாக, சிலருக்கு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக, சிலருக்கு காதல் சின்னமாக  இருக்கலாம்...இரு உள்ளங்களின் நேசங்களின் சங்கமம் இது. அந்த உணர்வை உள்வாங்கும் போதே மனிதனாய் பிறந்ததின் பொருள் புரியலாம்...அமைதியாக ஒரு தியான நிலைக்கு மனதை கொண்டு வந்து பார்த்தால், 'ஆண் பெண் கொள்ளும் நேசம் மட்டும் பெரிதில்லை காணும் அத்தனை உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற பாடத்தை தாஜ்மஹால் நம் காதோரம் சொல்லி தருவதை தெரிந்து கொள்ள முடியும்.உணரமுடியும் நான் உணர்ந்தேன்.  கண்களால் பருகி மனம் முழுதும் நிறைத்தேன் !! நரம்புகளில் குளிர் புன்னகை ஓடி உள்ளத்தை குளிர்வித்ததை அனுபவித்தேன்...உயிர்த்தேன்...மகிழ்ந்தேன்...!

பிறரிடம் பகிர இயலாத ஏதோ ஒன்றை வெற்றிகொண்ட நிறைவு !! 

திகைத்தேன்

வந்தவர்களில் பலரும் தாஜ்மஹால் முன் நின்று புகைப்படம் எடுப்பதில் தான் தீவிரமாக இருந்தார்கள்...உலக அதிசயம்னு சொல்றாங்களே அப்டி என்ன இதில் இருக்கிறது அதை பார்ப்போமே என்ற ஆர்வம் அவர்களிடம் அவ்வளவாக தெரியவில்லை. எந்த இடத்தில் நின்றால் புகைப்படம் நன்றாக அமையும் என்ற கவனம் தான் இருந்தது...அனேகமாக இன்றைய தினத்தில் எல்லோரின் கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் காமரா. படமாக எடுத்து தள்ளுகிறார்கள்...

கண்களால் ரசிக்க வேண்டிய காட்சிகளை நிழல் படமாக்கி கொள்வதில் அந்த காட்சி அன்னியமாகிவிடுகிறதே...கண் வலிக்கும் வரை பார்த்து பார்த்து ரசிக்கவேண்டும்...இன்றே வாழ்வின் கடைசி நாள் என்பதை போல சுற்றி இருக்கும் அழகை எல்லாம் ஆசை தீர அள்ளி பருக வேண்டும்...

பல வருடங்களாக பாடுபட்டு உருவாக்கிய ஒரு அழகை, அற்புதத்தை, அரிய பொக்கிஷத்தை அவசர அவசரமாக பத்து நிமிடத்தில் சுற்றி வருவதற்கு ஏன் அவ்வளவு தூரம் போவானேன்...புகைப்படத்தில் பார்த்துகொண்டால் போதுமானது...மனிதனின் இயந்திரத்தன வாழ்க்கை அழகை ரசிப்பதற்கும் அவசரப் படுகிறது !!

                           என்ன ஒரு கம்பீரம் !! (வண்டில போகிறபோது அப்டியே ஒரு கிளிக்)
தொலைத்தேன் 

வெளியூர் சென்றும் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்த பதிவுலக தம்பியர், அண்ணன்கள், நட்புகள் அதிலும் 'நீ ஜப்பான் போனாலும்(?) கால் பண்ணி பேசுவேன்'னு மிரட்டி ஒரு மணி நேரம்(ரோமிங்!!) :) பேசிய என் நெருங்கிய நண்பர் இவர்கள் எல்லோரும் அங்கிருந்த நாட்களுக்கு மேலும் வண்ணங்களை சேர்த்தார்கள்!!

எல்லாம் நல்ல படியாத்தான் போச்சு என் மொபைல் தொலையும் வரை...தொலைஞ்ச பத்தாவது நிமிஷம் தெரிஞ்சவங்க ஒருத்தர் போன்ல இருந்து என் கணவருக்கு கால் பண்ணினேன்..."உன் நம்பருக்கு அடிச்சு பார்த்தியா?"னு கேட்டார். "ஆமாம்ங்க , நாட் ரீச்சபிள் வருது" னேன். "அப்டியா சரி விடு யாரோ எடுத்துடாங்க, எடுத்ததும் சிம்மை கழட்டி இருப்பாங்க, மறந்துட்டு ரிலாக்ஸா கிளம்பி வா...இங்க நீ வர்றதுக்குள்ள வேற போன் ரெடி பண்ணிடுறேன்" என்றார்.. அவர் சொல்லிட்டார். ஆனா எனக்கு மனசு கேட்கல...எல்லோரோட நம்பரும், சில முக்கியமான தகவல்களும் போச்சேனு ஒரே பீலிங். சரி போகட்டும், இனி புதுசா முதல்ல இருந்து தொடங்கலாம்னு சமாதானம் பண்ணிகிட்டேன்.(வேற வழி ?!)

கேளுங்களேன் 

பக்கத்துக்கு ஊரோ, தூர ஊருக்கு பயணமோ எதாக  இருந்தாலும்  பயணங்கள் இனிமையானவை. பிரயாணத்துல இருக்கும் போது சிலர் 'வீட்ல கதவை சரியா பூட்டினமா , கேஸ் மூடினமா' யோசிக்க ஆரம்பிச்சு மறுபடி வீடு வந்து எல்லாம் சரியா இருக்குனு தெரியும்  வரை அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க. பயணம் எதுக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் நாம் பயணிக்கும் அத்தருணம் நமக்கானது மட்டும் தான். அந்த நேரத்தில் உங்களை உற்சாகபடுத்தி கொள்ள தவற விட்டு விடகூடாது... செல்லும் பாதையெங்கும் கொட்டி கிடக்கும் இயற்கையை ரசியுங்கள், உள்வாங்குங்கள்...அருகில் அமர்ந்திருக்கும் சக மனிதரை சிறு புன்னகையால் சிநேகியுங்கள். சுற்றுலா செல்வதென்றால் காட்சிகளை கேமெராவில் அள்ளுவதை குறைத்துக் கொண்டு இயற்கை அழகை, காட்சிகளை கண்களால் நன்றாக பருகுங்கள்... ஒவ்வொரு பயணமும் மறக்ககூடாததாக மாறட்டும்...மாறும் !! 

பிரியங்களுடன்
கௌசல்யாTweet

33 comments:

 1. பயணத்தைப் போலவே பதிவும் இனிமை...செல்லா முக்கியம்...விடுங்க...

  ReplyDelete
 2. நான் தான் ஃபர்ஸ்ட் கமேன்டறேன்.
  நல்லா இருக்கு. நானும் டெல்லி போனேன். ஆனா நம்மூர் மாநிற தமிழ் பொண்ணுங்க தான் களை சொட்ட சொட்ட இருக்காங்க (கானால் பேசும் கருநிற அழகு தேவதைகள்). வடக்கே போனா மைதா மாவுல புடிச்சி வச்ச பொம்மைங்க மாதிரி இருக்காங்க :-)))))

  ReplyDelete
 3. ரசித்தேன் அப்படிங்கிர பத்தி நாங்க எழுதினமாதிரியே இருக்கு :))))))))))

  மொபைல் தொலைச்சது, கீழ விழுந்ததுன்னு டேமேஜ் ஆகிர விச்யத்தை பகிர்ந்து நம்ம கெட்டப்ப விட்டுக்கொடுக்கலாமா ? :))))))

  ReplyDelete
 4. அட .. பசங்க ரசிக்குற மாதிரியே பொண்ணுங்கள பத்தி எழுதியிருக்கீங்களே. சீக்கிரம் டெல்லிக்கு போக டிக்கெட் ரெடி பண்ணனும். :)

  அழகா அனுபவங்களை எழுதியிருக்கீங்க. கடைசிப் பந்தியில் சொன்னது மிகச் சரி.

  ReplyDelete
 5. இனிய பகிர்வு....

  ஆனா உங்களோடு நான் டூ! எங்கூருக்கு வந்திருக்கீங்க! சொல்லியிருந்தா சந்தித்திருக்கலாம்....

  ReplyDelete
 6. @@ koodal bala said...

  //பயணத்தைப் போலவே பதிவும் இனிமை...செல்லா முக்கியம்...விடுங்க...//

  பயணம் மிக இனிமையாக இருந்ததால் தான் மொபைலை மறந்துவிட்டேன் பாலா...இல்லைனா ஊரை கூட்டி புலம்பி தள்ளி இருப்பேன் !!:)))

  ...

  நன்றி பாலா.

  ReplyDelete
 7. @@ Bhuvaneshwar said...

  //நம்மூர் மாநிற தமிழ் பொண்ணுங்க தான் களை சொட்ட சொட்ட இருக்காங்க (கானால் பேசும் கருநிற அழகு தேவதைகள்).//

  நம்மூர் பொண்ணுங்களை நான் குறைவா சொன்ன மாதிரி சொல்றீங்க...ஏன் இப்படி ?!! :)

  // வடக்கே போனா மைதா மாவுல புடிச்சி வச்ச பொம்மைங்க மாதிரி இருக்காங்க//

  ஆமாம் அழகு பொம்மைகள் !! :)ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு feeling புவனேஷ்...! :)

  ReplyDelete
 8. @@ நிகழ்காலத்தில் சிவா said...

  //ரசித்தேன் அப்படிங்கிர பத்தி நாங்க எழுதினமாதிரியே இருக்கு :))))//

  ஓ அதுசரி :)

  //மொபைல் தொலைச்சது, கீழ விழுந்ததுன்னு டேமேஜ் ஆகிர விச்யத்தை பகிர்ந்து நம்ம கெட்டப்ப விட்டுக்கொடுக்கலாமா ? :))))))//

  கெட்டப்பா அப்டினா என்ன சிவா ?!!:)))

  ...

  மகிழ்கிறேன். நன்றி.

  ReplyDelete
 9. @@ ஹாலிவுட்ரசிகன் said...

  //பசங்க ரசிக்குற மாதிரியே பொண்ணுங்கள பத்தி எழுதியிருக்கீங்களே. சீக்கிரம் டெல்லிக்கு போக டிக்கெட் ரெடி பண்ணனும்.//

  டிக்கட் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க, இன்னும் சில மேட்டர்ஸ் சொல்லணும் :)

  //கடைசிப் பந்தியில் சொன்னது மிகச் சரி.//

  நன்றிகள் ரசிகன்

  ReplyDelete
 10. @@ வெங்கட் நாகராஜ் said...

  //ஆனா உங்களோடு நான் டூ! எங்கூருக்கு வந்திருக்கீங்க! சொல்லியிருந்தா சந்தித்திருக்கலாம்....//

  உங்களை பற்றி விசாரித்தேன், கொஞ்ச நேரம் உங்களை பற்றி உங்கள் பயண கட்டுரைகள் பற்றி பேசினோம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அதுதான் சந்திக்க முடியவில்லை. சாரி.

  விரைவில் மற்றொரு முறை அங்கே வர வேண்டியது இருக்கிறது... அப்போது போட்டுடுவோம் ஒரு பதிவர் சந்திப்பு. :))

  நன்றிகள் வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 11. நம்மளுக்குமி விறுவிறுப்பான தேர்ந்தெடுத்து அருமையான பயணம் ஒன்று கூட்டிப்போனதிற்கு மிகவே நன்றி.வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!
  ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

  ReplyDelete
 12. //பிரயாணத்தில் இருக்கும் சிலர் ........ அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க//
  எல்லோர் வீட்டிலும் ராஜா வீட்டில் இருந்துகொண்டு, மகாராணியை தலைநகர் சென்று வர அனுமதித்தால், இந்தக் கவலைகள் எல்லாம் வராது தங்கையே!

  ReplyDelete
 13. பயணத்தின் நுகர்வு, பத்திகளில் பளீரிடுகிறது.

  ReplyDelete
 14. Mam, all your comments are right, especially Delhi girls and ladies, they have more freedom to do what they want.People want to enjoy life here.
  Thanks to Sreedharan, the MetroMan for the Metro implementation. An example for any Government servant in this country.
  Visit Delhi again and plan elaborate trip upto Vaishnova Devi temple. There are many places worth seeing near Delhi. Enjoy...

  ReplyDelete
 15. வீட்டைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் மொத்தமாக் கிளம்பிப்போனால்தான் கதவைச் சரியாப் பூட்டுனோமா என்ற கவலையைச் சுமக்கணும்.

  பயணக்கட்டுரை நல்ல 'சுருக்':-)))) சொல்ல நினைச்சதைச் சொல்லியிருக்கீங்க!

  பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

  ReplyDelete
 16. @@ Athisaya said...

  //நம்மளுக்குமி விறுவிறுப்பான தேர்ந்தெடுத்து அருமையான பயணம் ஒன்று கூட்டிப்போனதிற்கு மிகவே நன்றி.வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!//

  நன்றிகள் தோழி

  ReplyDelete
 17. @@ FOOD NELLAI said...

  //எல்லோர் வீட்டிலும் ராஜா வீட்டில் இருந்துகொண்டு, மகாராணியை தலைநகர் சென்று வர அனுமதித்தால், இந்தக் கவலைகள் எல்லாம் வராது தங்கையே!//

  சரியா பூட்டி வீட்டை பத்ரமா அவர் பாத்துபாரா அப்டின்ற கவலைதான் பெரிய கவலை தெரியுமா? அதுதான் அடிக்கடி கால் பண்ணி பத்ரமா பார்த்துக்கோங்கனு சொல்லிட்டே இருந்தேன் :))

  ...

  நன்றிகள் அண்ணா.

  ReplyDelete
 18. பயணம் எல்லாம் போய் இருக்கிக......ம்..நம்புறோம்

  படங்களுக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 19. @@ Anonymous said...

  //Mam, all your comments are right, especially Delhi girls and ladies, they have more freedom to do what they want.People want to enjoy life here.//

  yes! i know...it is true.

  //Thanks to Sreedharan, the MetroMan for the Metro implementation. An example for any Government servant in this country.//

  thats great !! hats off to him.

  //Visit Delhi again and plan elaborate trip upto Vaishnova Devi temple. There are many places worth seeing near Delhi. Enjoy...//

  sure ! sir, thank u for coming and sharing comments

  ReplyDelete
 20. @@ துளசி கோபால் said...

  //வீட்டைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் மொத்தமாக் கிளம்பிப்போனால்தான் கதவைச் சரியாப் பூட்டுனோமா என்ற கவலையைச் சுமக்கணும்.//

  ஆமாம். கிளம்புறதுக்கு முன்பே ஒன்னுக்கு இரண்டு முறை நல்லா செக் பண்ணிட்டு கிளம்பனும். அப்புறம் விதி விட்ட வழினு கவலைய விட்டுட வேண்டியதுதான் :)

  //பயணக்கட்டுரை நல்ல 'சுருக்':-)))) சொல்ல நினைச்சதைச் சொல்லியிருக்கீங்க!//

  ஆனாலும் கொஞ்சம் விட்டு போச்சு :)

  //பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!//

  எஸ் !! நன்றிகள்

  ReplyDelete
 21. @@ மனசாட்சி™ said...

  நன்றிகள்

  ReplyDelete
 22. எல்லா 'தேன்' களையும் ரசித்'தேன்'....
  இனிய பயண அனுபவம்....

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 9)


  பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete
 23. டில்லி நல்ல நகரம் போன வருஷம் டில்லி சென்று வந்தேன்.நீங்க சொன்ன அத்தனையும் நானும் ரசித்தேன்.

  ReplyDelete
 24. @@ திண்டுக்கல் தனபாலன்...

  மிக்க நன்றிகள்

  ReplyDelete
 25. @@ T.N.MURALIDHARAN said...

  //டில்லி நல்ல நகரம் போன வருஷம் டில்லி சென்று வந்தேன்.நீங்க சொன்ன அத்தனையும் நானும் ரசித்தேன்.//

  அட அப்டியா ? மகிழ்கிறேன்.

  உங்களின் வருகைக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 26. கொலைவெறி - வித்தியாசமான கண்ணோட்டம். தமிழ் இப்படி வளரும் என்பது உண்மை தானோ?

  டெல்லி போனீங்களே.. இந்தில எதுனா பேசினீங்களா?

  ReplyDelete
 27. @@அப்பாதுரை said...

  //கொலைவெறி - வித்தியாசமான கண்ணோட்டம். தமிழ் இப்படி வளரும் என்பது உண்மை தானோ?///

  உண்மை அதுதான் என்பதை போல தெரிந்தாலும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

  //டெல்லி போனீங்களே.. இந்தில எதுனா பேசினீங்களா?//

  இந்தி பேசினேன், ஆனா நான் பேசியது இந்தி யானு அவங்ககிட்ட தான் கேட்கணும்...!!
  :))

  எத்தனை நாள் ஆனாலும் உங்க கம்மென்ட் வந்து முடிச்சு வச்சதும் தான் அடுத்த போஸ்ட் போடுவேன் போல :))

  நன்றிகள்

  ReplyDelete
 28. உங்கள் பதிவு நடை அருமை, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. அழகான படங்களுடன் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

  Madam, I am sharing an award with you.

  Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

  Kindly accept it.

  vgk

  ReplyDelete

 30. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. சென்று பார்த்தேன் ... எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றிகள்.

   Delete
 31. அன்பு நண்பரே!/ அன்பு சகோதரி
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 32. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...