முகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில் ஒன்றை பற்றியதே இந்த பதிவு.
முக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன் வந்து விழும்...இப்படி ஏகப்பட்டதுகள் சேர்ந்து அதுல நம்ம பிரண்ட்ஸ் கொடுத்த கமெண்ட்ஸ் பத்தி எங்க இருக்குனு கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி தேடனும்...என்னை(?) கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா(!) மிரட்டியும் பார்த்தாச்சு...யாரும் கேட்கிறதா இல்ல...
இந்த மாதிரியான நிலையில (கற்போம்) பிரபு ஒருநாள் 'அக்கா இந்த குரூப்ல சேருங்க'னு ஒரு லிங்க் அனுப்பினான்...'என்னடா இது சோதனை' சரி தம்பி சொல்றானேன்னு போய் பார்த்தேன்...'கேட்டால் கிடைக்கும்' னு தலைப்பு இருந்துச்சு...ஆயிரக்கணக்குல மெம்பெர்ஸ் இருந்தாங்க...ஆன்லைன் ஷாப்பிங் போலனு தோணிச்சு...என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சம் படிச்சு பார்த்தேன்...
அடடா...!! எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது? என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...!!
அடடா...!! எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது? என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...!!
'கேட்டால் கிடைக்கும்' அப்படினா ??
தலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...!!
தலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...!!
தங்களை பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்கள்...
"சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்னைகளை
தட்டிக்கேட்டுப் பழகுவோம். அப்போதுதான் ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால்
உருவாக்க முடியும்...!"
இந்த குழுமம் ஆரம்பித்து (31 july 2011) ஒரு வருடம் ஆகிறது...இதுவரை 1,495 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்...தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்...திரு கேபிள்சங்கர் அவர்களும் திரு சுரேகா அவர்களும் இணைந்து இதை ஆரம்பித்து இருக்கிறார்கள்...திட்டமிடல் கூட்டம் ஒன்றும் வைக்கிறார்கள் அதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டங்களை வரைமுறைப் படுத்திக்கலாம். வீதியில் இறங்கி உதவி செய்ய இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை என்பதை அங்கே பகிரப்படும் செய்திகளை வைத்து புரிந்து கொள்ளமுடியும்...
அரசு குழாய்ல தண்ணி வரலையா?, வாங்கின பொருளின் தரம் குறைவா இருக்கா ? கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா? அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா ?அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா ?இன்னும் நிறைய... இப்படி பல பல சிக்கல்கள்/பிரச்சனைகள் எதாக இருந்தாலும் இங்கே பகிரலாம்...ஒன்றை பகிர்ந்ததும் ஆளாளுக்கு ஓடி வந்து உதவுறாங்க...ஆலோசனை சொல்றாங்க...பிரமிப்பாக இருக்கிறது...!!
உறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத் தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே !!
உறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத் தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே !!
இத்தகைய சிறந்த ஒரு குழுமத்தை பற்றி என்னிடம் கூறி என்னை அதில் சேர சொன்ன பிரபுவுக்கு என் நன்றிகள்.
திரு சுரேகா அவர்களின் தளத்தில் இருந்து அவர்களின் அனுமதியுடன் இங்கே அப்பதிவு வெளியிடபடுகிறது...படித்து பாருங்கள்...
'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...
நல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...!!
'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...
நல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...!!
ASK...YOU WILL GET IT !!
**************************************************************************
திரு சுரேகா அவர்களின் பதிவு ----------------------------------------------
கேட்டால் கிடைக்கும்
– முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில்
நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29
அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.
Dear All,
I was unemployed for 5 months and despite the
advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid
the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a
single class until May 15. I decided to quit after asking for a class for multiple
times and everytime I get the same response saying it'll be scheduled from next
week (And it never was). So, I quit (saying that my brother is getting maried
and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now
I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May,
they say like the refund will be processed by the month end and initially they
said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they
said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said
the old employees were transferred and a new guy has taken care. He said that
the refund has been processed and I'll get the money today (29th June). When I
called today, they said the same story - month end process and you'll get that
by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly
belive that the money will be ready by July 4 or 6 - they'll have another
excuse for that anyway. Can someone help me getting this process a little faster?
I tried sending a feedback via the NIIT site, but after submitting the
feedback, "The page cannot be displayed" Error comes up! My Student
ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.
NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார்.
ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள்.
பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்க விரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும்
எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26,000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6,000த்தைக் கழித்துக்கொண்டு
மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம்
சொன்னார்.
நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,
'எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு
சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம்' என்றார்.
நான் உடனே..
'ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும்
கொடுங்க!' என்றேன்.
'இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர்
சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க
புக் கொடுத்துட்டோமே…' என்றார்.
'நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர்
பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும்
கொடுத்திடுங்க!' என்றேன்.
'அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார்' என்று மீண்டும் சொன்னார்.
நான் ஆரம்பித்தேன்.
பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா?' என்றேன்.
'என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ்' என்றார்.
'அப்போ, என்ஐஐடி-க்கு
மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு
வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த
விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை' என்று கொஞ்சம்
காட்டமாகப் பேசினேன்.
'நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார்' என்றார்.
பிறகு அடுத்த வாரத்தில்
மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான்
அழைத்து 'இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400
பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம்' என்றேன்.
நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார்.
‘சார்! நினைச்சே
பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும்
புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப
வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி'
என்றார்.
நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
கேட்டால் கிடைக்கும்.!
************************************************************************
பின்குறிப்பு:
குழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...
நன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்
http://www.surekaa.com/2012/07/blog-post_31.html
படம் - கூகுள்
குழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...
நன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்
http://www.surekaa.com/2012/07/blog-post_31.html
படம் - கூகுள்
நானும் எப்பவோ உறுப்பினர் ஆகி விட்டேன்...வாழ்த்துக்கள்...இந்த மாதிரி நிகழ்வுகளை சொன்னால் தான் மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்
பதிலளிநீக்குஎனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறது இதுவரை தெரியாது. எடுத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றிங்க. இப்பவே நானும் ரெக்வஸ்ட் அனுப்பிட்டேன்.
பதிலளிநீக்குஇந்த குழுமத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்துள்ளேன் ...இவர்களின் மூலம் பயனடைந்த நிறையப்பேர் இவர்களைப் பற்றி பெருமையாக முக நூலிலும் தங்கள் ப்ளாக்குகளிலும் வெளியிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.......
பதிலளிநீக்குமுக நூலை மிகவும் பிரயோசனமான வழியில் பயன்படுத்தும் அக் குழு குறுப்ப்னர் அனைவருக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
நல்ல விஷயம் பற்றி தெரிவித்ததுக்கு நன்றி....
பதிலளிநீக்குதொடரட்டும் திரு சுரேகா அவர்களின் தொண்டு.
அப்படியா
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி சரி நானும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறேன் இணைவதற்கு
இருவரும் நம் நண்பர்களே. நல்ல விஷயம் செய்கிறார்கள் தொடரட்டும்
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் நன்றிகளும் இந்தப்பதிவிற்காய்!சந்திப்பேர் சொந்தமே!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குRequest sent...waiting for the response..Thank you!
பதிலளிநீக்குநல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM. 7)
பதிலளிநீக்குஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
நல்ல விஷயம்! மனிதத்துவம் கொண்ட அந்த மனிதர்களுக்கு என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!
பதிலளிநீக்குநன்றி.. இதில் இணைவது மட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் சிறு சிறுதவறுகளை நீங்களும் தட்டிகேட்க ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றியே..
பதிலளிநீக்குநல்ல நோக்கத்திற்காக உருவாக்கப் பட்ட குழுமம் முன்னேறி செல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்...!
பதிலளிநீக்குகேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா பணம் கேட்கிறார்களா...?
பதிலளிநீக்குஎங்க அண்ணன் ஜோதிராஜையும் இந்த குழுமத்துல சேர்த்து விடுங்க, அடி பின்னிபுடுவார் பின்னி...!
@@ கோவை நேரம் said...
பதிலளிநீக்கு//இந்த மாதிரி நிகழ்வுகளை சொன்னால் தான் மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்//
உண்மை.
மிக்க நன்றிகள்
@@ பால கணேஷ் said...
பதிலளிநீக்கு//எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறது இதுவரை தெரியாது. //
சமீபத்தில் தான் எனக்கும் தெரியவந்தது.
அங்கே இணைத்தமைக்கு வாழ்த்துகள்
நன்றிகள் கணேஷ்
@@சிட்டுக்குருவி said...
பதிலளிநீக்கு//இவர்களின் மூலம் பயனடைந்த நிறையப்பேர் இவர்களைப் பற்றி பெருமையாக முக நூலிலும் தங்கள் ப்ளாக்குகளிலும் வெளியிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது...//
அநாவசியமான எவ்வித விளம்பரமும் இன்றி அருமையாக சமூகத்துக்கு தங்கள் பங்கினை கொடுத்து வரும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்களுக்கு என் நன்றிகள்.
@@ வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு// தொடரட்டும் திரு சுரேகா அவர்களின் தொண்டு.//
மிக்க நன்றிகள்
@@ மனசாட்சி™ said...
பதிலளிநீக்கு//சரி நானும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறேன் இணைவதற்கு//
நன்றிகள்
@@ மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//இருவரும் நம் நண்பர்களே. நல்ல விஷயம் செய்கிறார்கள் தொடரட்டும்//
நன்றிகள்
@@Athisaya...
பதிலளிநீக்குநன்றி அதிசயா
@@ koodal bala...
பதிலளிநீக்குநன்றி பாலா.
@@திண்டுக்கல் தனபாலன்...
பதிலளிநீக்குநன்றிகள்
@@வரலாற்று சுவடுகள்...
பதிலளிநீக்குநன்றிகள்
@@Cable சங்கர் said...
பதிலளிநீக்கு//இதில் இணைவது மட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் சிறு சிறுதவறுகளை நீங்களும் தட்டிகேட்க ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றியே..//
சரிதான்.
ஒவ்வொரு தனி மனிதனும் தவறுகளை தட்டி கேட்க முதலில் முன் வரவேண்டும், அதற்கு 'கேட்டால் கிடைக்கும்' குழுமம் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம் !!
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
நன்றிகள்
@@MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//எங்க அண்ணன் ஜோதிராஜையும் இந்த குழுமத்துல சேர்த்து விடுங்க, அடி பின்னிபுடுவார் பின்னி...!//
அட நீங்க வேற !! ஏற்கனவே இவரால பலர் ஹாஸ்பிடலில் இருக்காங்க...:))
ஒரு மேட்டருக்காக உங்களையும் வேற தேடிட்டு இருக்கிறார். நீங்க இந்தியா வந்தா உடனே சொல்லுங்க:))
...
வாழ்த்து சொன்னதுக்காக நன்றி சொல்லிக்கிறேன் மனோ.
அனைவருக்கும் வணக்கம்
பதிலளிநீக்கு'கேட்டால் கிடைக்கும்' குழுமம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை பற்றி நான் இங்கே கொஞ்சம் தான் சுட்டி காட்டி இருக்கிறேன். அங்கே சென்று படித்தால் முழுமையாக புரிந்துவிடும்...
ஆனால்
படித்து தெரிந்த பின்னரும் குழுமத்துக்கு சம்பந்தம் இல்லாத தகவல்களை/ தங்கள் தளத்தின் பதிவுகளை அங்கே ஷேர் செய்வதை பார்த்து மிக சங்கடமாக இருக்கிறது.
குழுமத்தினரின் நோக்கத்தை சிறிய அளவு கூட தொந்தரவு பண்ணக்கூடாத அளவில் நாம் நடந்து கொள்வது நாகரீகம்...
மேலும் அங்கே இணைந்து குழுமத்தின் எண்ணிக்கையை கூட்டுவது பெரிய காரியமல்ல...உத்வேகமாக செயல்படவேண்டும் !!
அப்படியே ஒத்துழைக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்குநல்ல விசயம். வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதவறுகளை தட்டிக்கேட்க ஒரு தளம் அமைவது மகிழ்ச்சி; ஆனால் உண்மையான குதூகலம் என்று எனக்கு வரும் தெரியுமா?
பதிலளிநீக்குஅந்த அவசியமே இல்லாத நிலை வரும் போது தான்.
மதிப்பெண் சார்ந்த இளமையும், பணம் சார்ந்த வாழ்க்கையும், பிறர் சார்ந்த முதுமையும் உள்ளவரை இது நடப்பது சந்தேகமே.
நெறிகளை, பண்புகளை தாய்ப்பாலோடும் சாதத்தோடும் பாடத்தொடும் நாம் ஊட்டினால் ஒருவேளை அது நடக்கலாம்.
வெறும் மதிப்பெண்களை மட்டுமே குறியாகக்கொண்ட பாடத்திட்டங்கள் அடுத்தவனை விட நான் ஒரு படி மேலே இருக்கவேண்டும் எனும் வெறியை ஊட்டும். அதற்கு தூபம் போட பெற்றோர்; அந்த தூபத்தை விசிறி விட மனிதம் இல்லாத இன்றைய பணம் சார்ந்த உலகம்;
ஆனால் தப்பே நடக்கப்படாது. நடக்கிற காரியமா?
அடுத்தவரை மதிக்க, அனைவரையும் அரவணைக்க, உறவுகளை நேசிக்க, இயற்கையையும் உறவாக நேசிக்க என்று நாம் பிள்ளைகளை பயிற்றுவிக்கிறோமோ அன்று நேர்மையான செழிப்பான சமுதாயத்தினை உருவாக்கும் பணியில் அடிக்கல் நாட்ட மண் வெட்டி மீது கை வைக்க நினைத்து விட்டோம் என்று பொருள்.
இத்தனை நாள் இதில் இணையாமல் இருந்ததற்காய் வருத்தப் படுகிறேன்...... விண்ணப்பிக்கிறேன் இணைத்துக் கொள்ளுங்கள் என்னையும்........
பதிலளிநீக்குஅட நம்மளுக்கு பிடிச்ச இடமல்லவா இப்போதே ஒட்டிக்கிறேன...
பதிலளிநீக்குநன்றி சகோஸ்
முகநூலில் இவ்வளவு நல்ல விசயங்கள் நடக்கிறதா? பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குCongratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் ராஜேஸ்வரி...விருது கொடுத்த கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்குநன்றி - நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு....
பதிலளிநீக்கு