Tuesday, March 20

11:49 AM
23


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.


எங்கும் படபடவென்று தன சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கிராமங்களிலும் காணமுடிவதில்லை. 


உலக சிட்டுக்குருவிகள் தினம்  

அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தினத்தை ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறோம். வெறும் நினைவுகளை மட்டுமே அசை  போட்டு கொண்டிருக்கும் இந்நிலை நிச்சயமாக மனித வாழ்க்கைக்கு நிறைவை தராது. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் மனிதனை விட்டு விடைபெற்று சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன...?! பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அன்ன பறவையை காவியங்களில் பார்த்திருக்கலாம், அவை கற்பனைதானோ !?

எங்கும் மனிதர்கள்...ஒருவரோடு ஒருவர் இடித்துகொள்ளும் அளவிற்கு பெருகிவிட்டார்கள்...அதனால் பிற உயிரினங்கள் தங்களுக்கான இடம் பறிபோய்விட்டது என்ற வருத்தத்தில் அழிந்து போய் கொண்டிருக்கின்றனவோ என்னவோ...?

மனிதன் சற்றும் யோசிக்காமல் மரங்களை வெட்டுகிறான், மணலை அள்ளி ஆறுகளை அழிக்கிறான், சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறான், பசுமை காடுகளை பாலைவனமாக மாற்றிவிட்டன...நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன...

இயற்கை ஆர்வலர்கள் இதனை பாதுகாக்க தற்போது கணக்கெடுப்பதாக இருக்கிறார்கள்...! கண் கெட்ட பின்.......என்றாகிவிட்டது. சக உயிரில் அக்கறை இல்லாதவர்கள் சக மனிதனை எவ்வாறு மதிப்பார்கள் என தெரியவில்லை...

அழிய என்ன காரணம் ?!


செல்போன் கதிரியக்கத்தால் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மை பாதிக்க படுவதாக சொல்லபட்டாலும் மாசுபட்ட சுற்றுப்புறசூழலும், முன்பு எங்கும் சிந்தி சிதறி கிடந்த  உணவு தானியங்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காணமுடிவதில்லை. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் புழு பூச்சிகளை அழித்துவிடுகிறது, குஞ்சு குருவிகளுக்கு இவை நல்லதொரு உணவு. 

சோடியம் விளக்குகளாலும் அழிகின்றன என சொல்கிறார்கள். ஆனால் இவை மட்டும் தான் உண்மையான காரணங்களா என தெரியவில்லை. மனிதரின் அலட்சியம் ஒன்று மட்டும்தான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. ஒரு பொருள் காணவில்லை என்றானபின் தான் அதன் மேல் அதிக அக்கறை வந்து தேட தொடங்குகிறோம்...அது போன்றுதான் மனிதனை எப்போதும் சுத்தி சுத்தி வந்து வளையமிட்ட சிட்டுக்குருவிகளை சட்டை செய்யாமல் இருந்தோம்...வெகு தாமதமாக அவை குறைந்து போனதை உணர்ந்து 'அடடா இப்படி ஆகிபோச்சே என்ன செய்யலாம்' என தவிக்கிறான் மனிதன்...?!    

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்...


சிட்டுகுருவிகளுக்காக ஒரு செல்ட்டர் ஒன்று அமைத்து வளர்க்கலாம் (முக்கியமாக செல்போன் டவர் இல்லாத இடத்தில் )என யோசித்தேன். அவ்வாறு வளர்க்கலாமா ? இது போன்ற கூண்டுகளில் அவை வளருமா? என பலரிடமும் ஆலோசனை கேட்ட பின்னே முயற்சிகள் மேற்கொண்டேன்.   வெளியிடங்களில் அவை அழிந்துவருகின்றன என்பதால் இயன்றவரை ஒரு பத்து குருவிகளையாவது பாதுகாக்கலாம் என சொந்த ஊரில் மரங்கள் அடர்ந்த எங்களின் பண்ணை வீட்டில் பெரிய மரங்களை உள்ளடக்கி பிரமாண்ட கம்பி வலை கூண்டு ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் செய்து விட்டேன். பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்ககூடிய அளவில் இருக்கவேண்டும் எனவும் அதன் உள்ளேயே பறவைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றை தினமும் வைத்து பராமரிக்கவேண்டும் என்ற அளவிலே நிர்மாணித்தேன்...!  


ஆனால்...


சிட்டுகுருவி தேவை என பலரிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக கேட்டு கொண்டிருக்கிறேன். கிராம புறங்களில் இதற்கென இருப்பவர்களிடம் சொல்லி வைத்தேன், பிடித்து தாருங்கள் பணம் கொடுத்து பெற்றுகொள்கிறேன் என்று...இதுவரை ஒரு சிட்டுக்குருவியும் கிடைக்கவில்லை...?!!   


காணக் கிடைக்கவில்லை என்ற பதில்களை விட எங்கே தேடுவது என்பதே கேள்வி குறியாகிவிட்டது. நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு இனம் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு   வந்துவிட்டது...நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்...!  


தேடுதல் தொடரும்...கிடைக்கும் வரை...!!!


பின் குறிப்பு 


உலக சிட்டுக்குருவிகள் தின வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் இந்நாளில் மீதம் இருக்கும் இயற்கையின் அரிய உயிரினங்களையாவது அழிய தொடங்கும் முன்பே அவற்றின்  மீது அக்கறை செலுத்த தொடங்குவோம்...!


படங்கள் - நன்றி கூகுள்


Tweet

23 comments:

  1. இன்றைய தினத்திற்கான அருமையான பகிர்வு.நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்.பாருங்கள்.

    http://shadiqah.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.அந்த இரண்டு குருவிகள் உள்ள படத்தில் ஒரு குருவி இறந்து விட பக்கத்தில் இருந்து கூவிய குருவி படமாம் அது.மிகவும் புகழ் பெற்ற புகைப் படம்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு கெளசல்யா. முன்பெல்லாம் அவை தங்குவதற்கு ஏற்ற வசதியை தோட்டத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் தானாகவே வந்துவிடும். இப்போது அப்படியில்லை போலும். பெங்களூரில் சின்ன மரக் கூண்டுகளை பறவைகளுக்காக மரங்களின் உயரமான கிளைகளில் கட்டிவிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இயற்கையான சூழலில் அவற்றைப் பேண நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி விரைவில் கைகூடட்டும். குருவிகள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  4. நானெல்லாம் எனக்குப் பிடித்த குருவிகள் இனம் அழிந்து வருகிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் நல்லதொரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். இந்த நல்லெண்ணத்திற்காகவேனும் குருவிகள் கிட்டட்டும்! இன்று பலரது தளத்தில் குருவிகளின் இழப்பை வேறு வேறு வடிவங்களில் படிக்கப் படிக்க மனதில் கனம் அதிகமாகிறது என்பது நிஜம்!

    ReplyDelete
  5. செல்போன் போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் பல உயிர்களை மாய்க்கின்றன.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி.... பாராட்டுகள்... இப்போதெல்லாம் குருவிகளைப் பார்க்கவே முடிவதில்லை என்பதில் எனக்கும் வருத்தம்......

    ReplyDelete
  7. மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.

    சிந்தித்துச் செயல்படும் மனிதனின் சுயநலம் எத்தனை உயிரினங்களின் அழிவுக்கு வித்திடுகிறது பாருங்கள்...

    ReplyDelete
  8. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

    சிங்காரச் சிட்டுக்குருவி

    மூங்கில்களால் ஆன க்ருவிக் கூடுகள் பெங்களூருவில் காணலாம்..

    ReplyDelete
  9. இப்போ கிராமங்களிலும் காண்பது அரிது ..
    நல்ல பகிர்வுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  10. மரங்களும் பசுமையும் குறைந்தது, கான்க்ரீட் வளர்ந்தது இவை காரணமே தவிர மற்றவையின் பாதிப்பு குறைவே என்று நம்புகிறேன். குருவிகள் எங்கே தங்கும்?

    புழு பூச்சிகள் குறைந்ததா? சந்தோஷம் :) மண்புழுக்கள் காணாமல் போனதற்கு மழை, நீர்நிலைகள் வற்றியதும், கான்க்ரீட் கட்டிடங்கள் வளர்ந்ததும் காரணம். ஈயம் கலக்காத பெட்ரோல் உபயோகிப்பதால் எத்தனையோ நன்மைகள் உண்டாகின்றன.

    ... இந்தியாவில் சிட்டுக்குருவி லேகியம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் பிடித்து விற்பதாகவும் படித்திருக்கிறேன் :)

    ReplyDelete
  11. சின்ன சின்ன விஷயங்கள்.சிறப்பான பார்வை.

    ReplyDelete
  12. @@ ஸாதிகா said...

    //இன்றைய தினத்திற்கான அருமையான பகிர்வு.நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்.பாருங்கள்.//

    பார்த்தேன் தோழி...நல்ல விரிவான பகிர்வு.

    நன்றிகள்

    ReplyDelete
  13. @@ Asiya Omar said...

    //நல்ல பகிர்வு.அந்த இரண்டு குருவிகள் உள்ள படத்தில் ஒரு குருவி இறந்து விட பக்கத்தில் இருந்து கூவிய குருவி படமாம் அது.மிகவும் புகழ் பெற்ற புகைப் படம்.//

    ம்...மிக நெகிழ்ச்சியான ஒரு காட்சி !!

    ...

    நன்றி தோழி.

    ReplyDelete
  14. @@ ராமலக்ஷ்மி said...

    //முன்பெல்லாம் அவை தங்குவதற்கு ஏற்ற வசதியை தோட்டத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் தானாகவே வந்துவிடும். இப்போது அப்படியில்லை போலும். பெங்களூரில் சின்ன மரக் கூண்டுகளை பறவைகளுக்காக மரங்களின் உயரமான கிளைகளில் கட்டிவிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இயற்கையான சூழலில் அவற்றைப் பேண நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி விரைவில் கைகூடட்டும். குருவிகள் கிடைக்கட்டும்.//

    ஆர்வமுள்ளவர்கள் இப்போதும் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தினமும் உணவும், நீரும் வைத்து வருவதை பார்த்திருக்கிறேன்.

    இயன்றவரை நாமும் ஒரு சிறிய பங்களிப்பை செய்யவேண்டும் தோழி. உங்களின் வார்த்தைகள் எனக்கு நிறைவை கொடுகிறது.

    நன்றிகள் தோழி.

    ReplyDelete
  15. @@ கணேஷ் said...

    // இந்த நல்லெண்ணத்திற்காகவேனும் குருவிகள் கிட்டட்டும்! இன்று பலரது தளத்தில் குருவிகளின் இழப்பை வேறு வேறு வடிவங்களில் படிக்கப் படிக்க மனதில் கனம் அதிகமாகிறது என்பது நிஜம்!//

    நானும் பல தளங்களில் பார்த்தேன்...ஒன்றை இழந்த பின் தான் அதன் மீதான கவனம் அதிகரிக்கிறது. :(

    ...

    நன்றிகள் கணேஷ்

    ReplyDelete
  16. @@ விச்சு said...

    //செல்போன் போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் பல உயிர்களை மாய்க்கின்றன.//

    செல்போன் மட்டுமே காரணம் இல்லை என கருதுகிறேன். நமது வாழ்வு முறை மாறிவிட்டதே காரணம். கான்கிரீட் கட்டிடங்களில் கூடுகளை கட்ட வழியின்றி இனபெருக்கம் குறைந்து போனது. இன்னும் பல...!

    ...
    நன்றிகள் விச்சு.

    ReplyDelete
  17. @@ வெங்கட் நாகராஜ் said...

    // இப்போதெல்லாம் குருவிகளைப் பார்க்கவே முடிவதில்லை என்பதில் எனக்கும் வருத்தம்.....//

    அவற்றின் கீச்சு கீச்சு சத்தம் ஓய்ந்தே போனது...

    ...

    நன்றிகள் வெங்கட்நாகராஜ்

    ReplyDelete
  18. @@ இராஜராஜேஸ்வரி said...

    //சிந்தித்துச் செயல்படும் மனிதனின் சுயநலம் எத்தனை உயிரினங்களின் அழிவுக்கு வித்திடுகிறது பாருங்கள்...//

    ஆமாம். சிறு உயிரினங்களின் மீது சிறிது அக்கறை செலுத்தினால் கூட போதுமானது.

    ...

    நன்றிகள் தோழி

    ReplyDelete
  19. @@ அரசன் சே said...

    //இப்போ கிராமங்களிலும் காண்பது அரிது ..//


    வருகைக்கும் கருதிட்டமைக்கும் நன்றிகள் அரசன்.

    ReplyDelete
  20. @@ அப்பாதுரை said...

    //மரங்களும் பசுமையும் குறைந்தது, கான்க்ரீட் வளர்ந்தது இவை காரணமே தவிர மற்றவையின் பாதிப்பு குறைவே என்று நம்புகிறேன். குருவிகள் எங்கே தங்கும்? //

    மிக சரியே.

    //புழு பூச்சிகள் குறைந்ததா? சந்தோஷம் :) மண்புழுக்கள் காணாமல் போனதற்கு மழை, நீர்நிலைகள் வற்றியதும், கான்க்ரீட் கட்டிடங்கள் வளர்ந்ததும் காரணம். ஈயம் கலக்காத பெட்ரோல் உபயோகிப்பதால் எத்தனையோ நன்மைகள் உண்டாகின்றன.//

    புழு பூச்சிகள் குறைந்தது என்றால் சந்தோஷபடுகிரீர்கள்...அதனால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ?? :))
    மாசுபட்ட காற்று, வேதி உரங்களால் பாழ்பட்ட,ஈரத்தன்மை குறைந்த நிலம் இதில் அவை எங்கே எப்படி வளர ? :)

    //இந்தியாவில் சிட்டுக்குருவி லேகியம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் பிடித்து விற்பதாகவும் படித்திருக்கிறேன் :)//

    நான் சிட்டுகுருவி கேட்டு போனபோது அதுக்கு தான் கேட்கிறேன்னு நினைச்சி இருப்பாங்களோ ?! :))

    சிட்டுகுருவி குறைஞ்சு போனதுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்குமோ ?!

    ...

    நன்றிகள் அப்பாதுரை :)

    ReplyDelete
  21. @@ FOOD NELLAI said...

    //சின்ன சின்ன விஷயங்கள்.சிறப்பான பார்வை.//

    அண்ணா மார்ச் 20 குள்ள எப்படியாவது ரெடி பண்ணிடலாம்னு பார்த்தா முடியலையே... :)

    இந்த கமெண்ட் போட்டபோ அதை பத்தி கொஞ்சம் நினைசீங்களா?? :))

    ...

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  22. THANK GOD, MY COUNTRY (MALAYSIA) STILL HAVE FEW. RET

    ReplyDelete
  23. எனக்கு சிறு வயதில் இருந்தே சிட்டு குருவி மேல் அலாதி ஈர்ப்பு உண்டு. எங்கே அவைகளை பார்த்தாலும்... நின்று... ஒரு நிமிடம் ஆவலோடு... பார்த்து மனதுக்குள் ஒரு மெலிய உற்சாகத்தை அனுபவித்து செல்வேன்... நல்ல பதிவு "காணக் கிடைக்கவில்லை...! சிட்டுகுருவி !!".. நன்றி.

    - அன்புடன் ஆண்ட்ரூ.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...